Tuesday, October 05, 2010

கன்னித்தாய் ( அ.க.ஆ.ஐ. 1. தொடர்ச்சி)

வீட்டைச்சுத்தி வெறும் பூச்செடிகள்தான். அட....ஒரு ரோஜாவோ, மல்லியோ, இல்லே பிச்சிப்பூவோ வச்சுருக்கக்கூடாது? தோட்டமாம் தோட்டம். நிறைய நந்தியாவெட்டைச் செடிகள், நாலைஞ்சு செவ்வரளி, ஒரே ஒரு பிள்ளையார்ப்பூன்னு சொல்லும் தங்கரளி. 'தலையில் பூச்சூட்டிக்க முடியாத மூணு பேர்' இருக்கும் வீட்டில் எல்லாப் பூக்களும் இறைவனுக்கே!

அதுக்காக அப்படியே எல்லாத்தையும் 'அவனுக்கே' சாத்த முடியுமா? நான் போகும் நாட்களில், சரமாக் கட்டுன ஒத்தை நந்தியாவெட்டையை நாலு முழம் தலையிலே வச்சுக்குவேன். கனம் கூடுன பூவால் தலைமயிர் அப்படியே இழுத்துக்கிட்டு வலிக்குமுன்னாலும் பூப்பிசாசுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. காலையில் அம்மம்மாவுக்கு பூக்கட்டும்வேலை ஒன்னு புதுசா மொளைச்சுப் பலவருசம் ஆச்சு. தெலுங்குக்கீர்த்தனைகள் பாடிக்கிட்டே பூத் தொடுப்பாங்க. நான் போனால் பூப்பறிக்க ஒரு கூடையை எடுத்துக்கிட்டுப்போய் எல்லாச் செடியையும் மொட்டை அடிச்சுட்டுத்தான் வருவேன். நான் இல்லாத நாட்களில் கொஞ்சமாப்பறிச்சுச் சாமிகளுக்குப் போடுவாங்க.

இருக்கற மூணு அம்மம்மாக்களில் ரெண்டு பேரைப் பார்க்க எனக்குக் கொடுத்துவைக்கலை. பெரியக்கா சொல்வாங்க, நான் பிறக்குமுன்னேயே பெரிய அம்மம்மா (நாகரத்தினம் & பங்காரக்காவின் அம்மா) இறந்துபோயிட்டாங்களாம். அவுங்களைப் பத்தி எனக்குத் தெரிஞ்சதெல்லாம் மாதுளம் முத்துக்கள் போல இருக்கும் பெரிய கெம்புக்கல் தோடுதான். பெரியக்கா அதை வர்ணிச்சுச் சொல்றதைக் கேட்டுக்கேட்டு எனக்கு அடங்காத ஆசை அதன்மேல். குடும்பத்துலே யாரு ஆட்டையைப் போட்டாங்களோ தெரியலை. கடைசிவரை அதைப் பார்க்கக் கிடைக்கலை.

எங்கியோ ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தப்ப ஒரு பாட்டி போட்டுருந்ததைக் காமிச்சு நீ கேட்டுத் துளைப்பியே அந்தக் கம்மல் இப்படித்தான் இருக்கும். ஆனா எங்கம்மாவுது இன்னும் அழுத்தமான கலருன்னு சொன்னாங்க அம்மம்மா. இதுவும் பெருசுதான். பாட்டி காதுலே இருந்து எங்கே அறுந்து விழுந்துமோன்ற வகையில் தொங்கிக்கிட்டு இருந்துச்சு, பின்னால் அகலமா ஒரு கூம்பு டிஸைனில் திருகாணி . அதுலே இருந்து ஒரு பட்டைக் கம்பி காதின் கீழ்ப்பாகத்தை வளைச்சுவந்து கம்மலின் முன்பக்கத்தோடு ஒட்டி இருக்கு. எனக்கு ஆண்டீக் பொருட்கள் அதிலும் நகைகள்ன்னா பைத்தியம். இந்த பைத்தியம் பிடிச்சது கூட பெரியக்காவின் வர்ணனைகளால்தானோ என்னவோ!

நினைவு தெரிஞ்சு மனசுலே இருக்கும் காட்சி என்னன்னா.... வீட்டுக்குள்ளே நுழையறோம். முற்றத்துலே பெரிய பேஸின் ஒன்னுலே சோத்தைப் பிசைஞ்சு உருட்டி சுத்திவர உக்கார்ந்துருக்கும் குஞ்சுக் குளுவானுங்க, ரெண்டு பெரிய ஆம்பிளைங்க, மூணு பொம்பளைங்களுக்கு கை முத்தையா உருண்டைகளை விநியோகம் செய்யும் ஒரு தலைவெளுத்த அன்னபூரணி. இத்தனைபேரான்னு கண்ணு விரியப் பார்த்தப்ப, எங்கம்மாதான் 'என்ன முழிக்குறே? இதான் உங்க அம்மம்மா'ன்னு அறிமுகம் செஞ்சு வச்சாங்க.

அந்தப் பசங்க எல்லோரும் எங்க சித்திகளின் குழந்தைகள். ரெண்டு ஆம்பிளைகள் எங்க பெரிய மாமாவும், கடைசிச் சின்ன மாமாவும். வேற ஏதோ வேலையா வந்தாலும் இங்கே 'ச்சேத்திமுத்த' விநியோகம் நடக்குதுன்னா சட்னு வந்து கூடவே உக்கார்ந்து கை நீட்டுவாங்க நம்மூட்டுப் பெரிய ஆளுங்க. பங்காரக்கா அலையஸ் அம்மம்மாவுக்கு அப்படியே உச்சி குளிர்ந்துரும்.

ஏற்கெனவே மெட்ராஸில் இருந்த சித்திகளின் பிள்ளைகள் அம்மம்மான்னு கூப்புட்டுக்கிட்டு இருந்ததால் நானும் அப்படியே கூப்புட வேண்டியதாப் போச்சு. ஆனா எங்க பெரியக்கா, சின்னக்கா, அண்ணன் எல்லோரும் எங்க அம்மாவைக் காப்பியடிச்சு பங்காரக்கான்னே கூப்புட்டுக்கிட்டு இருந்தாங்க.


அம்மம்மாக்கள் மூவரும் கட்டுன வீடு ரொம்ப சிம்பிள் டிஸைனா இருக்கும். வாசலில் உசரம் குறைஞ்ச திண்ணைகள் ரெண்டு பக்கமும். நடுவிலே வாசப்படிக்குள் நுழைஞ்சால் கண்ணுக்கு நேரா இன்னொரு வாசல். இங்கே சின்னதா ஒரு ஹால். ரெண்டு பக்கமும் ரெண்டு அறைகள். இடது பக்க அறைதான் பூஜை ரூம். அங்கேதான் அம்மம்மாவின் கட்டிலும். வலதுபக்க அறையில் சாமான்களா அடுக்கி வச்சுருப்பாங்க. வாசக்கதவுக்கு நேரா கூடத்தில் இருக்கும் இன்னொரு வாசலுக்குள்ளெ போனால் சாய்வா கூரை இறங்கி இருக்கும் தாழ்வாரம். அதுலே ஒரு கோடியில் சமையல். இன்னொரு கோடியில் ஒரு நாடா டேப் பின்னிய கட்டில். .

நடுவிலே திறந்த முற்றம். சுத்திவர கவுத்துப்போட்ட 'ப' போல சுவர் கட்டி இருக்கும். பின்வாசலுக்குக்குன்னு அங்கே ஒரு கதவு முந்தி இருந்துச்சாம். அப்புறம் அதைக் கல்வச்சு மூடிச் சுவர் எழுப்பிட்டாங்க. நான் பார்க்கும்போது அங்கே வாசல்கீசல் ஒன்னும் இல்லை. அந்தக் கோடியில் ஒரு பக்கம் பாத்ரூம். இன்னொரு பக்கம் கக்கூஸு.

காந்திக்கல்வி அடிப்படையில் படிச்சதால் அந்த ஸ்டைல் கழிப்பறையாக் கட்டிட்டாங்க. வீடு இருக்கும் இடம் ஒரு சின்ன மேட்டுப்பகுதி என்றதால் எல்லாம் பொருத்தமாவே அமைஞ்சு போச்சு. முன்பக்கத் தோட்டத்திலே கீழே முடியும் சரிவில் ஒரு கிணறு. இது வீடுகட்டி ரொம்ப வருசத்துக்கப்புறம் தோண்டுனது.

சுவத்தோரம் சாத்தி வச்சுருக்கும் இன்னொரு கயித்துக்கட்டில்தான் என்னோட ஃபேவரிட். நல்ல ப்ளாண்டா இருக்கும் வெள்ளைக்கார தலைமயிர் நிறத்தில் லேசா பொன்னை இழைச்சதுபோல ஒரு கயிறு. புளிச்சநாருன்னு பெயராம். அதைவச்சுப் பின்னி இருப்பாங்க. தொட்டுத்தடவுனா...அப்படியே கை வழுக்கிக்கிட்டுப் போகும். பாத்திரம், துணிமணி, வத்தல், வடாம், மாவு மில்லுக்குப்போகும் மசாலா சமாச்சாரங்கள், சீயக்காப்பொடி அரைச்சுக்க வேண்டிய பொருட்கள் இப்படி எதாவது வீட்டு சாமான்களைக் காயவைக்க இது இல்லேன்னா சரிப்படாது. மத்த நேரத்தில் சுவத்தோரத்தில் சாஞ்சு நிக்கும். நான் போனேன்னா அதை முதல்லே எடுத்து முற்றத்தின் நடுவில் போட்டுக்குவேன். அதுலே படுத்துக்கிட்டுக் கதை படிக்கும்போது ஜாலியா இருக்கும்


நாகரத்தினம் அம்மம்மாவை நான் பார்த்த நினைவே இல்லை. எனக்கு ஒரு வயசா இருக்கும்போது போயிட்டாங்களாம். அவுங்க சாவுக்கு எங்கம்மாகூட வரமுடியாத இக்கட்டுலே இருந்து. கடமை முடிச்சு ரயிலு பிடிச்சுக் கிளம்பிப் பட்டணம் வரும்போது காரியத்துக்கு மொதநாள் ஆகி இருந்துச்சு:( எங்கம்மா பலமுறை சொல்லி வருத்தப்பட்டுருக்காங்க.

பெற்றால்தான் பிள்ளையா..... இதுங்கெல்லாம் உன் பிள்ளைகள்தான்னு தங்கச்சி கையில் பொறுப்பை ஒப்படைச்சுட்டு நிம்மதியாப் போய்ச் சேர்ந்துட்டாங்க எங்க சொந்த அம்மம்மா நாகரத்தினம். கன்னித்தாயா இருந்து அக்கா பிள்ளைகள் எல்லோரையும் கவனிச்சுப் பார்த்துக்கிட்டாங்க தங்கச்சி. கடைசிப் பொண்ணைத் தவிர எல்லோருக்கும் கலியாணம் ஆகி இருந்துச்சு. அஞ்சு பொண்களில் ரெண்டு பேர் அம்மம்மாவின் கூடவே இருக்காங்க. ஒரு சித்தி உள்ளூரிலேயேத் தனிக் குடித்தனம்.

அம்மம்மா வீட்டில் இருக்கும் ரெண்டு சித்திகளில் ஒருத்தர் கைம்பெண். கடைசிச் சித்திக்குக் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்துக்கிட்டு இருக்காங்க. விதவைச் சித்திக்கு ஒரு பையன். என்னைவிட மூணுவாரம் மூத்தவன்.

இந்த மூணுபேர் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. இதுலே கடைசி மாமா மட்டும் அப்பப்ப வந்து அஞ்சு பத்துன்னு கடன் கேப்பார். எங்கிட்டே ஏதுடான்னு சொல்லி மூக்கால அழுதுட்டு அஞ்சுன்னா ரெண்டு இல்லை மூணு, பத்துன்னா அஞ்சுன்னுதான் ஒரு கணக்கா அம்மம்மா கொடுப்பாங்க.. சம்பளம் வந்தவுடன் தந்துருவேன் பங்காரக்கான்னு சொல்லி வாங்கிப் போறதுதான். சம்பளம் வந்த முதல் பத்து நாளைக்கு பங்காரக்கா வீட்டுப்பக்கம் தலைகூட வச்சுப் படுக்க மாட்டார். குடும்பத்துலே கட்டக்கடேசின்றதால் தாத்தா காலத்துலே அதிகமாச் செல்லம் கொடுத்துக் கெட்டுப் போனவர். பெரிய அம்மம்மாக்கள் இருந்தப்ப அவுங்க சிறுகச்சிறுகச் சேர்த்து இடுப்பிலே செருகிவச்சுருக்கும் சுருக்குப்பைக் காசெல்லாம் இவர்தான் அடிச்சுக்கிட்டுப் போவார். அந்தப் பழக்கம் இன்னும் விட்டுப்போகலை.

குடும்ப பாரம் சுமக்கமுடியாம தலையை அழுத்தும்போது, 'நானே சந்நியாசி. எனக்கெதுக்கு இப்படி ஒரு சம்சாரம்'ன்னு அம்மம்மா கண்ணீர் விடறதைப் பார்க்கும்போது எனக்கு ஒன்னும் தோணாம முழிச்சுக்கிட்டு இருந்துருக்கேன். இப்போ அதெல்லாம் மனசுலே ரீவொய்ண்ட் ஆகும்போது எனக்கே மனசு பாரமாப் போயிருது.

சாயங்காலத்தில் விளக்கேத்துனதும் என்னை உக்காரவச்சு பாட்டுச் சொல்லிக்கொடுப்பாங்க. சங்கீதத்தின் அருமைதெரியாத ஜடமா அப்போ இருந்ததால் எப்படிடா தப்பிக்கலாமுன்னு வழிபார்த்துக்கிட்டு உக்காந்துருப்பேன். யாராவது வரமாட்டாங்களான்னு மனசு தவிக்கும்.

அம்மம்மா டீச்சரா வேலை பார்த்தப்ப முதலில் இருந்தே ஒன்னாப்பு டீச்சர்தான். கூடவே பள்ளிக்கூடத்துக்கு பாட்டு டீச்சரும் இவுங்கதான். அந்த ஊர்லே பலரும் அம்மம்மா வகுப்புலேதான் கல்வியை ஆரம்பிச்சு இருக்காங்கன்றதால் ....... கல்யாணம், அவுங்க பிள்ளைகளுக்குக் காது குத்து, வீட்டுலே நடக்கும் விசேஷங்கள் இப்படி வந்து அழைச்சுட்டுப் போவாங்க. இதுக்கு நடுவிலே வேலை கிடைச்சுருச்சு, பட்டம் வாங்கிட்டது இப்படி சேதி சொல்லிட்டுப்போக வரும் மக்களும் அதிகம். ஊருக்கெல்லாம் பாட்டுச் சொல்லி தந்தவங்ககிட்டே பாட்டுச்சொல்லிக்க அந்தப் பேத்திக்குச் கொடுப்பனை இல்லை. நான் சங்கீதத்தின் அருமையைத் தெரிஞ்சுக்கும் காலத்தில் சொல்லித்தர அம்மம்மா இல்லை:(

பாட்டுன்னா அப்படி ஒரு ஆசை அவுங்களுக்கு. அந்தக் காலக்கட்டத்தில் உள்ளூரில் தனிக்குடித்தனம் இருக்கும் சித்தி வீட்டில் ஒரு மர்ஃபி ரேடியோ அதான் வால்வு மேஜிக் ஐ எல்லாம் வச்சு இருக்குமே அது வாங்கி இருந்தாங்க. நாங்க சித்தி வீட்டுக்குப் போயிட்டு வந்தவுடன் முதல் கேள்வி 'ரேடியோ பாடுதா?'ன்றதுதான். 'பாடிக்கிட்டுத்தான் அம்மம்மா இருந்துச்சு. எங்களைப் பார்த்ததும் படக்ன்னு ரேடியோவை ஆஃப் பண்ணிட்டாங்க'ன்னுவேன். முதலில் இதை உண்மைன்னு நினைச்சுக்கிட்டவங்க முகம் வாடிப்போச்சு. எனக்கே பாவமா இருந்துச்சு. நமக்கும் ஒரு மர்பி ரேடியோ வாங்கிடணுமுன்னு சொல்லுவாங்க. பர்பி ரேடியோகூட வந்துருக்கு அம்மம்மான்னு கலாட்டா செய்வேன்.



சித்தி வீட்டுக்குப்போனாலும் 'கச்சேரி இல்லையா? எப்போ வருது'ன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அதெல்லாம் காலையிலும் ராத்திரியிலும்தான்னு சொல்வோம். அண்ணன் தான் அம்மம்மாவின் ஆசையைக் கடைசியில் நிறைவேத்துனார். வீட்டுக்கு ரேடியோ வந்தன்னிக்கு அம்மம்மா முகத்துலே அப்படி ஒரு மகிழ்ச்சி.

தினமும் காலையில் மங்கள இசை வருமுன்னே எழுந்து நல்ல வால்யூமிலே வச்சுருவாங்க. தூக்கத்துலே எங்கியோ இருக்கும் என்னை 'டும் டும் டுடும்'ன்னு தவில்சப்தம் தட்டி எழுப்ப தூக்கிவாரிப்போட்டு கண் முழிச்சுக்குவேன். இப்பெல்லாம் அவுங்களுக்குத் தூக்கமே சரியா வர்றதில்லை. பாதி ராத்திரியில் பாத்ரூம் போகன்னு எழுந்து கூடத்தில் கன்னாபின்னான்னு கிடக்கும் எங்களையெல்லாம் தாண்டிப்போகும்போது சிலசமயம் கை, காலை மிதிச்சுடறாங்க. நாங்களும் படுத்தா படுத்த இடத்தில் இருக்கமா? உருண்டு உருண்டு படுக்கையைவிட்டு உருண்டு வீடெல்லாம் சுத்தி வருவோம். சில சமயம் விழித்திருக்கும் சித்தி,(மைமகாராஜனில் மனோரமா சொல்வது போல 'சக்கு, ஜாக்ரதகா வச்சேவா') 'ச்சூஸி போக்கா. தீபம் வேஸ்கோ'ன்னுவாங்க. இருட்டுலே எங்கே ச்சூஸி போறது?

இப்பெல்லாம் பாதி ராத்திரியில் எழுந்து போய் திரும்ப வந்து படுத்தா ரொம்ப நேரம் தூக்கம் வராமப் புரண்டுகிட்டு இருக்கேன். மனசுலே என்னென்ன நினைப்புகளோ வந்து படுத்துது. அம்மம்மாவைப் பத்தி எழுத நினைச்சப்ப...... அந்தக் கால இரவுகளில் அவுங்க மனசுலே என்னென்ன எண்ணம் ஓடிக்கிட்டு இருந்துருக்கும்? எப்பேர்ப்பட்ட சமூகக்கட்டுபாடுகள் இருந்த காலத்தில் தன்னை நினைச்சு அவுங்க எவ்வளோ துக்கப்பட்டுருக்கணும்? சாமி அறையில் ஒருநாள் 'ப்ரோச்சேவாரெவருரா.....' பாடும்போது கண்களின் ஓரத்தில் லேசான ஈரம் பளபளக்க தொண்டை கம்ம பாதியில் நிறுத்துனது என்னமோ இப்ப நினைவுக்கு வந்து தொலைக்குது. .

காலையில் மார்கோ சோப் போட்டுக் குளிச்சு, பூஜைகளை முடிச்சு, வேகவேகமா ஒரு வாய் அள்ளிப்போட்டுக்கிட்டு, வெள்ளை ரவிக்கையும், சின்ன பார்டர் உள்ள புடவையுமா உடைமாற்றி, தலையை வாரி சின்னதா Bபன் முடிஞ்சுக்கிட்டு வேர்த்து ஊத்தும் முகத்தையும் கழுத்தையும் துடைச்சு, குடிகூரா பவுடரை தாராளமாக் கழுத்தில் அப்பிக்கிட்டு போகும் அம்மம்மா ரிட்டயர் ஆன சில வருசங்களில்................ .

அடுத்தமுறை கடைக்குப்போகும்போது குடிகூரா பவுடர் இருக்கான்னு பார்க்கணும்,இல்லே?

பாருங்க ஒரு கதையை மூணு நாள் சொல்ல வேண்டியதாப்போச்சு..




42 comments:

said...

அன்பின் துளசி

எத்தனை ஆண்டுகள் - கொசு வத்தி சுத்தீட்டீங்க - அம்மம்மா பத்தி - வழக்கம் போல துளசியின் திறமை- கிண்டல் நகைச்சுவை கலந்து - பளிச்சிடுகிறது.

ஆமா எப்பூடி நெனெவு இருக்கு ????

சரி சரி யானை மெமரி

நல்வாழ்த்துகள் துளசி
நட்புடன் சீனா

said...

ஆஹா... துளசிஜி, ரேடியோ போட்டோவை எங்க புடிச்சீங்க! அதைப் பாத்ததும் மனசுக்குள்ளே டொரடொரடொரடொய்ங்... விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு... தேன் கிண்ணம் ந்னு குரல் கேக்குது!

http://kgjawarlal.wordpress.com

said...

குடும்பத்துலே யாரு ஆட்டையைப் போட்டாங்களோ தெரியலை. கடைசிவரை அதைப் பார்க்கக் கிடைக்கலை.

----------------------------

படிச்சு விவிசிரிச்சேன்...:))

said...

யானை மெமரி

சரியான வார்த்தை.

said...

ரேடியோ..ரொம்ப நாளைக்கப்புறம் பாக்க கிடைச்சிருக்கு.நீங்க பாக்க நினைச்ச கம்மல் மாதிரி, என் பொண்ணும் அந்த மாதிரி கம்மல் போட்டவங்களை பாக்கணும்னு ஒரே அடம். இதை படிச்சுட்டு அவகிட்ட சொன்னேன்..அவங்களும் இப்படி தான் தேடிகிட்டு இருக்காங்கன்னு.

said...

அன்பு துளசி, அம்மம்மாவை அப்படியே கண்முன்னால் கொண்டு வந்துவிட்டீர்கள்.மார்கோ சோப் வாங்கலாம்னு தோன்றுகிறது.உலகில் எத்தனை அம்மம்மாக்களின் தியாகத்தில் எத்தனை பேர்கள் வளர்ந்திருக்கிறார்களோ.
முன்னோர்களை வணங்கும் சமுதாயம் வளரும்.
போன ஜன்மத்தில் நீங்கள் யானையாகத்தான் இருந்தீர்கள்:)

said...

நல்ல விவரிப்பு துளசி..
பழைய நகை பழைய நகை தான் :)

எங்க ஆச்சியும் காலையில் ரேடியோ போட்டிருவாங்க பக்திபாடல்கள்..

said...

இந்தத் தொடரை படிக்க படிக்க நான் அம்மம்மாகிட்ட வளர்ந்த நாட்கள் கொசுவத்தியா சுத்துது. அம்மம்மா அம்மம்மாதான்.

said...

தொடரை படிக்கும்போது விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு செல்லும் நினைவு வருகிறது டீச்சர்.

said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

said...

டீச்சர்..இந்த மாதிரி ரேடியோ ஒண்ணு பெரியம்மா வீட்டிலையும் பார்த்திருக்கிறேன். அக் காலத்தில் ஒரு துணியால் மூடி வைத்திருப்பார்களாம். கேட்கவே சிரிப்பாக இருந்தது. :-)

நந்தியாவட்டைப் பூ என்றால் என்ன டீச்சர்? படம் இருக்கா?

said...

வாங்க சீனா.

யானைக்கு(ம்) பலசமயங்களில் அடி சறுக்கிருது இப்பெல்லாம்:(

அம்மம்மா பத்தி இன்னும் நிறையச் சொல்லலாம். ஆனா போதுமுன்னு விட்டுட்டேன்.

said...

வாங்க ஜவஹர்.

இது சுட்டபடம்தான். ஆண்டவர் அருளினார்.

தேன்கிண்ணம் மறக்கமுடியுமா?

ஹாஸ்டல் வாழ்க்கையில் ராத்திரி தூங்கும் சமயம் ட்ரான்ஸிஸ்டரை தலையணைக்கு ஓரமா வச்சுக்கிட்டு தூங்குவோம். பத்துமணிக்கு லைட்ஸ் ஆஃப் என்றதால் அமைதியா இருக்கணும். வார்டன் வந்துட்டாங்கன்னா........ சொல்லி வச்சமாதிரி அசந்த தூக்கத்தில்(!!) இருப்போமா.... அந்தம்மா எல்லாத்தையும் ஆஃப் பண்ணிட்டுப் போவாங்க:-) ரவுண்ட்ஸ் முடிஞ்சதும் ஆன் பண்ணிக்கணும்:-)))

said...

வாங்க சாந்தி.

நிறைய நகைகள் இப்படிப் போயிருச்சுப்பா. என்னோட சின்னப்பிள்ளை காலத்து நகைகள் கூட என்னாச்சுன்னு தெரியலை:(

said...

வாங்க ஜோதிஜி.

கொசுவத்திக்கு நாந்தான் ஹோல்ஸேல் ப்ளாக்கர் உலகத்திலே:-))))

said...

வாங்க சிந்து.

ப்ரின்ஸ்லே ஆண்ட்டீக் நகைகள் இருக்குன்னு போனால் அதுலே அப்படிச் சிவந்த கெம்பு எல்லாம் இல்லைப்பா.

ரொம்ப சுமாராத்தான் இருக்கு. ஒரு பதக்கம் தேடிக் கிடைக்கலை.

செட்டிநாடு நகைகள் செஞ்சு தரும் கடை ஒன்னு தி.நகர் பாண்டிபஜாரில் இருக்குன்னு போனா....நம்ம அதிர்ஷ்டம் மூடிக்கிடந்துச்சு அது.

said...

வாங்க வல்லி.

சின்ன வயசுலே மானாத்தான் இருந்தேன். தொடைகளில் புள்ளிகள்கூட இருந்து அதை நிரூபிச்சது. ஓட்டமும் அப்படித்தான்.

இப்போதான் (அசல்) யானை. சைஸும் அப்படியே:-)))))

said...

வாங்க கயலு.

ரேடியோ உபத்திரவம் இல்லாத பொழுதுபோக்குப்பா. கேட்டுக்கிட்டே வேலைகளை அலுப்பில்லாமல் செய்யலாம். இந்த டிவிதான் நேரம் விழுங்கி:(

எல்லா அம்மம்மாக்களும் வாரிசுகளை எழுப்ப ரேடியோவைத்தான் பயன்படுத்திக்கிட்டு இருந்துருக்காங்க போல:-)))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

அதே அதே....

பெரிய பெரிய குடும்பங்களைக் கட்டிக் காப்பாத்துவதில் அம்மம்மாக்களுக்கு ஈடுஇணை ஏதுப்பா!!!!

said...

வாங்க சுமதி.

பேரப் புள்ளைகளுக்கு பாட்டிவீடு போக எவ்வளவு குஷியா இருக்கும் இல்லே!!!!

said...

வாங்க ஸ்வேதா,

ஆஹா......... அப்டீங்கறீங்க?

செஞ்சுருவோம்!

said...

வாங்க ரிஷான்.

இந்தப் பூக்களில் அடுக்கு வகை, ஒற்றை இதழ் வகைன்னு ரெண்டு இருக்கு.

கண்வலிக்கு இந்த அடுக்கு வகையை கண்ணில் ஒற்றிக்கிட்டே இருந்தால் ஜில்லுன்னு இருக்கும் நோயும் சீக்கிரம் போயிரும்.

ஒற்றை வகை கூகுளார் கொடுத்தார். பதிவில் போட்டுருக்கேன் பாருங்க. இலங்கையில் வேறு பெயராக இருக்கலாம்.

இதே குடும்பத்தில் ரஜனிகந்தான்னு ஒன்னு அடுக்குவகைகளில் இருக்கும்.மணம் சும்மா அப்படியே ஆளைத் தூக்கிட்டுப்போகும்.

said...

எங்க வீட்லயும் ஒரு ரேடியோ இருந்தது.. அது தண்ணிபோட்டா நல்லா சத்தமா பாடும். அதாவது, தரையில் ரெண்டு சொட்டு தண்ணீரை விட்டு அதுல எர்த் ஒயரை எடுத்துவெச்சா நல்லா ஊருக்கே கேக்குறமாதிரி பாடும். எடுத்துவுட்டுட்டா, ஈனஸ்வரத்தில் பூனைமாதிரி முனங்கும் :-))))

ரஜினிகந்தா, பொக்கே கடைகளில் இப்போ நிறையகிடைக்குது :-)))

said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_06.html

said...

Dear Madam! I want to express my views in sweet Tamil. But since I am a LKG in using Blogs (You are the first person for me),I don't know how to type in Tamil! Any how it is very nice to see your comments for even a smaller thing we used to see in day to day affairs.Thanks.

said...

வாங்க அமைதிச்சாரல்.

தண்ணி போட்டால் பாடும் ரேடியோ:-))))))

ரஜனிகந்தா கிடைக்குதா!!! ஆஹா...
இங்கே சண்டிகரில் நம் கோவில்களில் சாமிக்கு ஒத்தை நந்தியாவெட்டைப்பூ மாலைகள் போடறாங்க.

said...

வாங்க வித்யா.

நன்றிப்பா. உடனே அங்க வரமுடியலை. மின்சாரம் நின்னுபோச்சு:(

said...

வாங்க சந்திரசேகர்.


கலப்பை பிடிச்சா தமிழை உழுதுறலாம்.

http://seasonsnidur.wordpress.com/2009/12/16/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A/

இதைப்படிங்க.

கலப்பையை கணினியில் இறக்குங்க. அதன்பின் எல்லாம் சுகமே!

புரியலைன்னா உங்க ,மெயில் ஐடியுடன் பின்னூட்டம் ஒன்னு அனுப்புங்க. பப்ளிஷ் செய்யமாட்டேன். அங்கே விரிவாகப் பேசலாம்.

said...

//அவுங்களைப் பத்தி எனக்குத் தெரிஞ்சதெல்லாம் மாதுளம் முத்துக்கள் போல இருக்கும் பெரிய கெம்புக்கல் தோடுதான்.//

பழைய ஒரு தலைமுறைக்கு இந்த தோடு ரொம்ப பிரசித்தம் டீச்சர்!எங்க அம்மம்மா காதுல கூட இப்படியொரு தோடு இருந்ததை பார்த்திருக்கேன்.நீங்க சொன்ன அதே யாரு ஆட்டயப்போட்டாங்கன்னே தெரியல.

said...

லைசென்ஸ் ராஜ்ல மர்பி ரேடியோ வச்சிருக்கிறவங்க பெரிய ஆளு!இல்ல:)

said...

நன்றி டீச்சர்..
இந்தப் பூ இங்கிருக்கு..அடுக்கு வந்ததுவும் தான்.. சிங்களவர்கள் விகாரைக்குப் போகும்போது ஒரு தட்டு நிறைய இதைக் கொண்டு போய்ப் பூஜை செய்வார்கள். நாங்கள் இதைத்தான் பிச்சிப் பூ என்று சொல்கிறோம் இங்கு.. :-)

said...

அம்மம்மா கதை முடிஞ்சிடுத்தா. அடடா
எனக்கு எங்க அம்மமா ஞாபகம் வந்திடுச்சு. அவங்க இறந்த தகவலை மாமாக்கள் தந்தியில் சொல்லி அது வந்து நாங்க கிளம்பி பொய் செரதுக்குள்ளே ஆயிடுச்சு காரியம். இதே சோகம் தான் எங்கம்மாவுக்கும் எங்களுக்கும். என் கொசுவத்தி கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கு .

நான் நீங்க மலபார் பக்கமான்னு கேட்டதுக்கு ஒரு கதையே சொல்லி பத்மனாபப் பெருமாள் பக்கம் இல்லை பாலாஜிப் பெருமாள் பக்கம் நு சொல்லிட்டா மாதிரி இருக்கு.

said...

நீங்க போட்டிருக்கிற ரேடியோ படத்தைப் பார்க்கும்போது
எங்க பாட்டி வீட்டில் இருந்த ரேடியோதான் ஞாபகத்துக்கு வருது.
பதிவு நல்லா இருக்கு ..
மலரும் நினைவுகள்ல கொண்டுபோய் விடுது. நன்றி.

said...

வாங்க ராஜநடராஜன்.

இந்தத் தோடு அந்தக் கால பேஷன் ஐட்டமா எல்லோர் வீட்டிலும் இருந்துருக்கு போல!

நம்ம வீட்டுக்கு மர்ஃபி வந்தப்ப ராஜ் போயிருச்சு. காமராசர் ஆட்சி

said...

ரிஷான்,

பிச்சிப்பூன்னு நாங்க சொல்வது வேற ஒன்னு. மல்லிகையில் அது ஒரு வகை.

மல்லி இலைக்கும் நந்தியார் வெட்டை இலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

இது இங்கே சண்டிகரிலும் நிறைய இருக்கு. கோவிலுக்கு மாலை கட்டறாங்க. ஹிந்தியில் பேரு கேக்கச் சொல்லி இருக்கேன் குருக்களிடம்.

said...

ரிஷான்,

பிச்சிப்பூன்னு நாங்க சொல்வது வேற ஒன்னு. மல்லிகையில் அது ஒரு வகை.

மல்லி இலைக்கும் நந்தியார் வெட்டை இலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

இது இங்கே சண்டிகரிலும் நிறைய இருக்கு. கோவிலுக்கு மாலை கட்டறாங்க. ஹிந்தியில் பேரு கேக்கச் சொல்லி இருக்கேன் குருக்களிடம்.

said...

வாங்க விருட்சம்.

அம்மம்மா இங்கே வந்தப்ப... மத்ராஸ் பட்டினம் தமிழ்நாட்டுக்குன்னு தனியா ஒன்னும் இல்லை. அப்புறம்தான் ராஜதானி பிரிச்சாங்களாம்.

நான் பொறந்தது தமிழ்நாட்டுலேதான்:-)

அந்தக் காலத்துலே போக்குவரத்து அவ்வளோ சுலபம் இல்லை.

said...

வாங்க ஜிஜி.

நாங்க கேரளாவில் இருந்தப்ப கீழ் வீடுலே (ஹவுஸ் ஓனர்) பாட்டி வீட்டுலே கூட இப்படி ஒரு ரேடியோ இருந்துச்சு.

சாயந்திரம் எட்டுமணிக்கு ஒரு நாடகம் வரும். எட்டரை வரை. கீழே போய் அதைக் கேட்டுட்டு அது முடிஞ்சதும் சாப்பாடு. 9 மணிக்கு ஐலண்டு எக்ஸ்ப்ரெஸ் நம்மூட்டைக் கடக்கும். அதை வேடிக்கைப் பார்த்துட்டுத் தூக்கம். அப்படி ஒரு டைம்டேபிள்:-)

said...

அம்மம்மாக்களின் கதைகள் ஆகா இனிக்கிறது.

எனது அம்மாவிற்கு அடுக்கு நந்தியாவட்டம் பூ ரொம்பப்பிடிக்கும்.தலையில் வைத்திருப்பார்.

said...

ஒற்றை நந்தியாவட்டையை ஹிந்தியில், 'சாந்தினி'ன்னும், மராட்டியில் 'தகர்(tagar)ன்னும் சொல்லுவாங்க..

said...

வாங்க மாதேவி.

இந்த மலருக்கு மருத்துவ குணம் உண்டாம்ப்பா. தலையில் சூடினால் நல்லதுதான். ஆனால் ரொம்ப வச்சுக்க முடியாது. கனமான பூ.

said...

வாங்க அமைதிச்சாரல்.

சாந்தினி!!!! எவ்வளோ பொருத்தமான பெயர், இல்லே!!!!