Monday, October 11, 2010

நம்ம கோவிலில் நவராத்திரி விழா

கார்த்திக் எந்தப் பண்டிகையும் விடறதே இல்லை. தமிழ்நாட்டைவிட்டு இவ்வளவு தூரத்தில் வந்துட்டாலும் இங்கிருக்கும் நம் மக்களுக்குப் பார்த்துப்பார்த்து எல்லாம் செய்வதில் பயங்கர ஆர்வம். அப்படி இருக்கும்போது நவராத்திரி விழாவை விட முடியுமா?

அட்டகாசமாக் கொலு வச்சாச்சு. சண்டிகரில் நடக்கும் 'கோவில் கொலு' இது ஒன்னு மட்டும்தான். இந்த ஒன்பது நாட்களுக்கும் கலை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சி முடிஞ்சதும் மூலவருக்கு ஆரத்தி எடுத்துட்டு எல்லாருக்கும் சாப்பாடு. தினம் ஒரு சுண்டலும் உண்டு.
ஸ்ரீ கிருஷ்ணமாரியம்மன் சந்நிதிமுன் தினமும் விளக்குப் பூஜை உண்டு.

முதல்நாள் மஹிளா மண்டலியின் பஜன்.
இரண்டாம் நாள் குழாந்தைகளின் பஜனைப்பாடல்கள். ஸ்ரீ சீதாராம் ரமேஷ் என்ற ஹனுமன் பக்தர் தலைமை தாங்கி நடத்தினார். (இவரைப்பத்தி பதிவு ஒன்னு போடணும். அது அப்புறம்)

பஜனை முடிஞ்சதும் கூடுதல் நிகழ்ச்சியா கோலாட்டம், நடனங்கள் எல்லாம் இருந்தன.

ரம்யா ராஜசேகர்

பட்டுக்கோட்டை பேபி ஹரிதா சிவஞானம்
மூன்றாம் நாள் பரத நாட்டியம். அம்பது குழந்தைகள் ஆடினார்கள். ரெண்டு சிறுவர்களும் நடனம் கத்துக்குறாங்க. இங்கே உள்ளூரில் நாட்டியப்பள்ளி நடத்தும் திருமதி ஜயலக்ஷ்மி ரமேஷ் அவர்களின் மாணவிகள். அழகான நாட்டிய உடைகளில் ஜொலிச்ச குழந்தைகளைப் பார்த்ததே மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.
நடனப்பள்ளி ஆசிரியர், ஜயலக்ஷ்மி ரமேஷ்



கோவில் காரியதரிசி ஆல் இன் ஆல் ராஜசேகர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு ரொம்பப் படிச்சுப்போச்சுங்க. இதைத்தான் நான் நம்ம நியூஸி தமிழ்ச்சங்கத்திலும் ஒவ்வொரு விழாவிலும் வலியுறுத்திச் சொல்வேன்.

மேடை நிகழ்ச்சிகளில் நேர்த்தி என்பது வேணுமுன்னாலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக்கும் ஆர்வம் இருக்கு பாருங்க அதுதான் அதி முக்கியம்..

பார்ட்டிஸிபேஷன் ஈஸ் வெரி இம்பார்ட்டெண்ட் than பெர்ஃபெக்ஷன்.

பெர்ஃபெக்ஷன் ஆட ஆடத் தானே வரும்.

சண்டிகர் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் வேலையும் இடைக்கிடையில் ......

வெற்றிவேல் முருகனுக்கு ...................... ஹர் ஹர் ஹரா......... அப்படியே இந்த அரோஹரா போட எல்லோரும் கத்துக்கிட்டாங்க.

நம்ம ராஜசேகரும் குழந்தை திவ்யாஞ்ச்சியும். நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கிட்டு இருந்த குழந்தை, தானும் ஆடணுமுன்னு சொல்லி வீட்டுக்குப்போய் அழகா உடையெல்லாம் மாற்றி அலங்கரிச்சு மறுபடி கோவிலுக்கு ஓடி வந்ததை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கட்டுக்கோப்போட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைச்சு நடத்தறார் நம்ம ராஜசேகர். இவரைப்பத்தியும் ஒரு நாள் விஸ்தாரமாப் பார்க்கலாம்.
பங்கேற்கும் சிறுவர் சிறுமியருக்கு நம்ம 'கார்த்திகேயஸ்வாமி' ஒரு நினைவுப்பரிசும் வழங்கறார். பெரியவர்கள் சிலரை ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிக்கு மேடையில் அழைச்சு அவுங்க கையால் பரிசு கொடுக்கச் செய்யறார். ஒரு நாள் நம்ம கோபால். தாராளப்பிரபு சும்மா நிக்கும் சிறுவர்களைக் கூப்பிட்டுத் தர்றார்ப்பா. பாவமாப் பார்த்துக்கிட்டு நின்னாங்களாம்!

இதுலே எனக்குச் சம்மதமில்லை. இப்படிக் கொடுத்தால்...... நாளைக்கு மேடைஏறி நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம் எப்படி வரும்? சும்மா வேடிக்கை பார்த்தால் போதுமுன்னு பிள்ளைகள் நினைக்க மாட்டாங்களா? கஷ்டப்பட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிள்ளைகளுக்கு மட்டும் கொடுப்பதுதானே மரியாதை?




இவர் சொல்றார், இப்படிக் கொடுத்தால் இன்னொரு முறை மேடையேறி நிகழ்ச்சி நடத்த ஆர்வம் வருமாம்!

நெசம்மாவா?

இது என்ன சைக்காலஜியோ????

35 comments:

said...

துண்டு போட்டு வச்சுட்டேன் :-)

said...

அப்பாடா... இன்னிக்கு முதல் ஆளா வகுப்புக்கு வந்துட முடிஞ்சது :-)

கோபால் அண்ணா செஞ்சது சரிதான் டீச்சர்.. பார்த்துட்டிருக்குறவங்களுக்கு சின்னதா ஏதாச்சும் பரிசு தரலாம்.. கலந்துக்குறவங்களுக்கு பெரிய பரிசு.. அப்பதான் பார்த்துட்டிருக்குறவங்களுக்கும் அடுத்த தடவை பெரிய பரிசு வாங்கணும்னு ஆர்வம் வரும் இல்லையா? இரண்டு தரப்புக்கும் ஒரே பரிசு கொடுத்தாத்தான் தப்பு. :-)

said...

Unmai thaan teacher,

Participants parisu kudutha, kuzhandhaigalukku athuvae oru nalla inspiration'madhari thaan.

Seri, sundal fotos engae kanom ?

- Sri

said...

தமிழ் ரத்தம் உடம்பிலே ஓடும்போது அவருக்கு மட்டும் “கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்” பட்டம் வாங்க ஆசையிருக்காதா? வருங்கால முதல்வர் கோபால் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் (எலக்சன் டைம்ல கொஞ்சம் பாத்து செய்ங்க)

பி.கு: அவருக்கு அப்பிடி என்ன வயசாயிடுச்சின்னு சந்தடி சாக்குல அவரை “பெரியவர்கள்” லிஸ்டுல சேத்துட்டீங்க? (நாராயண நாராயண)

said...

லைட்டிங்கில்ப்ரமாதமா இருக்கே கொலு..

முகமூடியின் பின்னூட்டம் :))

said...

//... தாராளப்பிரபு சும்மா நிக்கும் சிறுவர்களைக் கூப்பிட்டுத் தர்றார்ப்பா...//

ஆகா, வாழ்க்கைல ஒரு ஷீல்டு கூட வாங்கலியேனு வருத்தபட்டேன், இப்படி ஒரு சந்தர்ப்பம் இருக்கா....

கோபால் சார் அடுத்த நிகழ்ச்சி எங்க, எப்ப... இப்பவே முன்பதிவு செஞ்சிட்டேன்.:-)

said...

நான் இன்னும் ப்ளாக் பண்ணிட்டு தான் இருக்கேன். www.pasug.blogspot.com படிங்க. இப்போ நாக்பூர்ல இருக்கேன். ராஜா சேகர் ஏற் போர்சில் எனக்கு 3 என்ட்ரி சீனியர். கேட்டதா சொல்லுங்க.

said...

pls see my website also
www.saivaneri.org

said...

அழகு தேவைகள்
அழகு ராணிகள்
அருமை படங்கள்
அசந்து போனேன்.

said...

அழகு தேவதைகள்.

said...

வாங்க ரிஷான்.

//இரண்டு தரப்புக்கும் ஒரே பரிசு கொடுத்தாத்தான் தப்பு. :-)//

அதேதான் நானும் சொல்றேன். சின்னதா ஒரு சாக்லேட், முட்டாய்ன்னு கொடுக்கலாம். அதுவுமில்லாம கோவில் எத்தனை நினவுப்பொருள் வாங்கி வச்சாங்கன்னு தெரியாம இன்னிக்கே வேடிக்கை பார்க்கும் பசங்களுக்குக் கொடுத்தா மற்ற எட்டு நாட்களும் பங்கேற்கும் கலைஞர்களுக்குப் பத்தாமப்போச்சுன்னா என்ன செய்வது? எல்லாம் ஒரு கணக்காத்தானே இருக்கும்.

இன்னிக்கு நாங்க ரெண்டு பேரும் பரிசு கொடுக்க அழைக்கப்பட்டோம்.
கோவில் நிர்வாகிகளில் ஒருத்தர் இவரிடம் ஒவ்வொன்னா எடுத்துக் கொடுத்ததைப் பார்த்து எனக்கு சிரிப்போ சிரிப்பு:-)

said...

வாங்க ஸ்ரீநிவாஸன்.

ஏற்கெனவே படங்கள் அதிகம் என்பதால் சுண்டலை நானே தின்னுட்டேன்:-)

said...

வாங்க முகமூடி.

உங்க வாய் முகூர்த்தம் , நேற்று நானும் பெரியவர்கள் லிஸ்டிலே சேர்க்கப்பட்டேன்:-)


ஆமாம்...கை ஏன் சிவக்காது...... அடுத்தவங்க செஞ்சு வச்சதைத்தானே கொடுக்கறோம்:-))))

said...

வாங்க கயலு.

ஆம்பளைங்க வச்ச கொலுப்பா அது. ஜிலுஜிலுன்னு இருக்கக் கேட்பானேன்:-)

கடைத்தேங்காய் & வழிப்பிள்ளையார் நினைவு வருதா!!!!

said...

வாங்க நன்மனம், 'வாங்க'
இன்னும் 5 நாள் பாக்கி இருக்கு. சீக்கிரமாக் கிளம்பி வாங்க:-)

said...

வாங்க பசுஜி.

ஆஹா.... எப்படி சொந்தக்காரங்க ஆயிட்டோம் பாருங்க. கட்டாயம் இன்னிக்கு கோவிலில் ராஜசேகரிடம் சொல்றேன்.

உங்க பதிவுகள் தமிழில் இல்லையா? அதையும் கொஞ்சம் வளருங்களேன்.

சைவநெறியைப் பார்த்தேன். நம்ம பதிவுலக நண்பர் ஒருவர் (ஞானவெட்டியான் என்ற பெயர்) அவருக்கும் உங்க சுட்டியை அனுப்புகிறேன்.

said...

வாங்க ஜோதிஜி.

எல்லாமே 'அ'ன்னா எதைச்சொல்ல எதைவிட:-))))

said...

கொலு,.. ஜிலுஜிலு :-)))

said...

கொலு மிக மிக அருமை. நாட்டியம் அதனினும் அருமை..பத்மாசூரி.

said...

நவராத்திரி ஜகஜோதியா இருக்கு...கண்கொள்ளா காட்சியா தான் இருக்கு டீச்சர்.

said...

கொலு,பரதநாட்டியம் எல்லாமே நல்லா இருக்கு டீச்சர்:))))

said...

ஆஹா மிகவும் பிரமாதம்.

said...

beautiful navarathiri golu
thank you mam.

said...

இதுதான் நவராத்திரின்னு சொல்ல வச்சிட்டீங்க.
வட இந்தியாவின் ஒரு பகுதியில் தமிழர்களின் ஒற்றுமை ஆச்சரியப்பட வைக்கிறதுப்பா.
அதுவும் விளக்கு பூஜை பிரமாதம்மா. குழந்தைகளின் உடையும் நடனமும் BHஆவமும் சூப்பர். பெரியவங்க ரெண்டுபேரையும் வணங்கிக்கறேன்.

said...

கொலு.நடனம் அனைத்தும் சூப்பர்.
குழந்தைகளின் நடனம் மனத்தை இழுக்கிறது.

said...

வாங்க அமைதிச்சாரல்.

பளபளன்னும் இருக்கு. இன்னொரு கோவிலில் இருந்து கிடைச்ச கலர்போன நந்திக்கு மின்னும் வெள்ளையில் பெயிண்ட் செஞ்சு இப்போ ஜொலிப்பு கூடுதலா ஆகி இருக்கு!

said...

வாங்க பத்மாசூரி.

நன்றி நன்றி.

தமிழில் பின்னூட்டம் எழுத ஆரம்பிச்சதுக்கு பாராட்டுகள்.

said...

வாங்க சிந்து.

ஊரே ஜொலிக்குதுப்பா. நவராத்ரி வடக்கர்களுக்கும் ரொம்ப விசேஷமாம்.

said...

வாங்க சுமதி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க ராதாகிருஷ்ணன்.

இன்றைய நிகழ்ச்சி இன்னும் பிரமாதமா இருக்கப்போகுதாம்.

கலாக்ஷேத்ரா மாணவியின் நிகழ்ச்சி.

said...

வாங்க தனாசின்னதுரை.

நலமா? எங்கே ரொம்ப நாளா ஆளைக் காணோம்?

said...

வாங்க வல்லி.

நம்ம கோவில் குருக்கள் கிருஷ்ணமாரியம்மனுக்கும் விஷ்ணு துர்கைக்கும் தினமும் ஒரு அலங்காரமாச் செய்கிறார். அதைப் பார்க்கவே கோவிலுக்குப் போகலாம்!!!!

ஆமாம் இந்தப் பெரியவர்களைத்தானே சொல்றீங்க? ஆசிகள் உண்டாம். மாரியே சொல்லிட்டாள்.

said...

வாங்க மாதேவி.

குழந்தைகள் நல்லா சின்ஸியரா ஆடுனாங்கப்பா. எனக்கும் ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.

said...

இதுலே எனக்குச் சம்மதமில்லை. இப்படிக் கொடுத்தால்...... நாளைக்கு மேடைஏறி நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம் எப்படி வரும்? சும்மா வேடிக்கை பார்த்தால் போதுமுன்னு பிள்ளைகள் நினைக்க மாட்டாங்களா? கஷ்டப்பட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிள்ளைகளுக்கு மட்டும் கொடுப்பதுதானே மரியாதை?
--------------------------
உண்மைதான். திறமைசாலிகள், போட்டியாளர்கள் தான் ஊக்கிவிக்கப்பட வேண்டும்.

said...

வாங்க அரவிந்தன்.

பதில் சொல்ல லேட்டாப்போச்சு. மன்னிக்கணும்.

வேடிக்கை பார்க்கும் குழந்தைகளுக்கு ஒரு சாக்லேட் கொடுக்கலாம். பரிசுப் பொருளைத் தூக்கித்தருவது கூடாது என்பதுதான் என் கட்சி.

சரிதானே?