Wednesday, December 08, 2010

ரங்ஸின் நிலையும் தங்ஸ்களின் (இன்றைய) நிலையும்

மதுவன தரிசனம் முடிச்சுக்கிட்டு வெளியே வந்து சந்தில் இறங்குனா நேரெதிரா கொட்டுமுழக்கோடு மாட்டு வண்டியில் காளி பவனி வர்றாள்.
அடுத்து நம்மை 'கொண்டு போனது' நந்த பவன், ஒடுக்கமான சந்துக்குள்ளே ப்ராச்சீன் மந்திர். சந்தின் ஆரம்பத்தில் எதிரும் புதிருமா மூணு கட்டிடங்கள். மூணிலும் முழுக்க முழுக்க வெள்ளை ஆடை அணிஞ்ச விதவைகள். பகவான் பஜனாஷ்ரம்.
தினப்படியா ஒரு வாட்டி ( வாட்டி என்றது ஹிந்திச் சொல். சின்னக் கிண்ணம்) அரிசி, ஒரு வாட்டி கோதுமை மாவு, மற்ற செலவுகளுக்கு அஞ்சு ரூபாய் ஒவ்வொருத்தருக்கும் தருவாங்க. ஒருவேளைதான் உணவு என்ற 'விதி' வேற இருக்காம். இதை வச்சு தினசரி வயித்துப்பாட்டைப் பார்த்துக்கனும். பசியில் ஓயாமல் இரைச்சல் போடும் வயிற்றுத் தீயை எப்படி அணைப்பாங்க?
ஏற்கெனவே மனதால் செத்துப்போனவர்களின் உடம்பைக் கொஞ்சம்கொஞ்சமா சாகடிக்கும் நியமங்கள். ஒரே புகலிடம் கடவுள். அதுக்காக கும்பிட்டாச்சுன்னு இருக்க முடியாது. காலையிலே ஒரு நாலு மணி நேரம், மாலையிலே ஒரு நாலு மணி நேரம் பஜனைப் பாடல்களை 'சாமிக்கு முன்னால்' உக்கார்ந்து பாடணும். கண்ணன் மனம் குளிர வைக்கும் நவீன கோபிகைகள் :(

விதவைகள் எல்லா வயசிலும் இருப்பாங்க இல்லே? சின்ன வயசுக்காரங்க ஆஸ்ரத்தின் உள்ளே இருப்பாங்க போல. ரொம்ப வயசான சிலர் வெளிவாசல் படிக்கட்டில் உக்கார்ந்துருந்தாங்க. புது ஆட்களைப் பார்த்ததும் சட்ன்னு கைகூப்பி வணங்கி கையை நீட்டறாங்க. அவுங்க வயசென்ன நம்ம வயசனென்ன? நெஞ்சு பதறி அப்படியே வயித்துக்குள்ளே ஒரு வேதனை:(

ரெண்டாயிரம் பெண்கள் இருக்காங்களாம். விதி முடியும்வரை வாழ்ந்துதானே ஆகணும் என்ற விரக்தி கண்களில் தெரியுது. என்னடா இந்தக் கொடுமை:( பெண் ஜென்மம் இத்தனை படணுமா? அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தால் பேசாம 'சாமி'யாப் பிறக்கணுமுன்னு சாமிகிட்டே வேண்டிக்கணும்.

பெண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளை - பழமொழி
ரங்ஸுக்கும் தங்ஸுக்கும் நீதி வெவ்வேறு:(

இவுங்ககிட்டே இருக்கும் சொல்ப பண வசதிகளையும் சொத்துபத்துக்களையும் ஏமாத்தி அமுக்கிட்டு இப்படி அனாதையாத் துரத்திவிட்ட சொந்தபந்தங்களை என்ன செஞ்சால் தகும்?

நந்த பவன் அப்படி ஒன்னும் விசேஷமா இல்லை. கோகுலத்தில் பார்த்தமே அதே போல ஒரு சந்நிதி. நல்ல வேளையா உக்கார்ந்து நகர வேணாம். நடந்துபோய் சந்நிதிமுன் உக்கார்ந்துக்கலாம். அங்கே நடந்தது போலவே இங்கும். டொனேஷனா ஒரு தொகை கொடுத்துட்டு வந்தோம் பஜனாஷ்ரம் பராமரிப்புக்கு. நந்தபவன் படி ஏறுனதும் முகப்புச் சித்திரமா காளிங்கனை வதம் செய்யும் கண்ணனின் இரு பக்கங்களிலும் காளிங்கனின் மனைவிமார் நால்வர், கணவனை விட்டுறச்சொல்லி மன்றாடுறாங்க. இல்லைன்னா அவுங்களும் விதவைகளாகி இந்தப் பாடு படணுமே:(

நாக லோகத்தில் என்னென்ன நியமங்களோ? யாரு கண்டா??

சந்நிதிக்கு எதிர் புறச் சுவரில் சின்ன மாடத்துலே ராதா கிருஷ்ணா சிலை அலங்காரத்துடன் வச்சுருக்காங்க. மாடத்துக்குள்ளே தலையை நீட்டிப் பாருங்கன்னார் அங்கிருந்த பண்டிட். நீட்டுனா இடமும் வலமும் நிலைக்கண்ணாடி பதிச்சு அதுலே கணக்கில்லாத ராதையும் கிருஷ்ணனுமா நமக்கு சகஸ்ர ரூபம் காமிக்கிறாங்க. இந்தப் பக்கம் ஒரு பளிங்கு துளசி மாடத்தில் துளசி இருக்காள்.

இன்னிக்கு ரொம்ப சுத்தியாச்சு. மீதியை நாளைக்கு வச்சுக்கலாமுன்னு கைடுக்குண்டான காசைக் கொடுத்துட்டு நமக்கு வண்டிவரை போக சைக்கிள் ரிக்ஷா கிடைக்குமான்னு பார்த்தால் கைடே இருபது ரூபாய்க்கு ஒன்னை பேசி முடிச்சுட்டார்.

ராதே ராதேன்னு ( நானும்தான்) வழி விடச்சொல்லிக் கேட்டுக்கிட்டே கடைத்தெருவழியா வர்றோம். பூவுலகின் அனைத்து பாகங்களிலும் இருந்து வந்த இஸ்கான் பக்தர்களின் நடமாட்டம் ஏராளமா இருக்கு வழியெங்கும். அழகாப் புடவையும் ப்ளவுஸுமா நெற்றியில் கோபிச்சந்தனம் ஜொலிக்க ஒரு பரவசநிலையில் இருக்கும் முகபாவனையோடு ............ பக்தின்னா இப்படியில்லெ இருக்கணும். சாக்கடையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை!!!!

சல்வார் கமீஸ், கோபிகை ஸ்கர்ட், எல்லாமே ரொம்பப் பொருத்தமா இருக்கு அவுங்களுக்கு. த்வாபர யுகத்தில் இவுங்கெல்லாம்தான் கோபிகைகளா இருந்துருப்பாங்களோ!!!

காரை நிறுத்துன இடத்துக்குப்போனால் நம்ம வண்டியைக் காணோம். தெருமுனையில் நம்மைப்பிடிச்ச கைடுகளைக் கேட்டுப்பார்க்கலாமுன்னு போனால் ( அந்த சைக்கிள் ரிக்ஷாவிலேயேதான் இருக்கோம் இன்னும்) அங்கே நம்ம கைடு இருக்கார். நமக்கு முன்னாலே எப்படி இங்கே வந்தார்? அதுவும் நடந்து? போகட்டும் ஆச்சரியப்பட இப்போ நேரம் இல்லை. வண்டியைத்தேடணும் முதலில்....

ப்ரதீப்பை செல்லில் கூப்பிட்டால் லைன் கிடைக்காம சைலண்ட்டா இருக்கு..

ஒருவேளை உள்ளே தள்ளி நிறுத்தி இருக்கலாமுன்னு அதே சைக்கிள் ரிக்ஷாவிலே தேடிக்கிட்டு சந்து சந்தாப் போறோம். குரங்கு, பன்றி, ஆடு, மாடுன்னு அங்கெல்லாம் சமரசம் உலாவும் இடமா இருக்கு. எப்படியோ இன்னொரு சந்துலே நுழைஞ்சு மெயின் ரோடு(????) பக்கம் வந்தா கார் பார்க்கிங்னு ஒரு போர்டு. உள்ளே ஒரு ஏழெட்டு வண்டிகள் நிக்குது. கூட்டத்தின் இடையில் நம்ம வண்டியின் சைடு போஸைப் பார்த்து நான் கண்டு பிடிச்சுட்டேன்.

ட்ரைவரைக் காணோம். நாங்க ரிக்ஷாக்காரருக்கு கொஞ்சம் அதிகமாக் காசு கொடுத்ததும் அவருக்கு மகிழ்ச்சி. நமக்கும்தான்...வண்டியைக் கண்டுபிடிச்சுட்டொம்லெ;-) கார் பார்க் நடத்தும் நபர் நமக்கு சேர் எல்லாம் கொடுத்து உபசரிச்சார். அவர்கிட்டே பேச்சுக்கொடுத்து இன்னும் சில கோவில்கள் எங்கெ இருக்குன்னு விசாரிச்சு வச்சேன். கொஞ்ச நேரத்துலே கையில் ஒரு பொதியோடு ப்ரதீப். வளையலாம்! ம்ம்ம்ம்ம் இருக்கட்டும். வேண்டப்பட்ட ஆளு வாழ்க்கையில் நுழைஞ்சுருக்கு போல!

காஞ்ச் மந்திரைத் தேடிப்போனப்ப ..... அழகான கோபுரம் நம்ம பக்கத்து ஸ்டைல் கண்ணில் பட்டது. நேரா வண்டியை அங்கே கொண்டு நிறுத்திட்டுப் பார்த்தா ரங்காஜி மந்திர்.
முகப்பு புதுவிதமா அரண்மனை வாசல் போல் இருக்கேன்னு பார்த்தால் .... இது ராஜஸ்தானி கட்டிடக்கலை. 1845 லே சேட் கோவிந்த் தாஸ் கட்டின கோவில். அப்போ இதுக்கு வெறும் 45 லட்சம்தான் செலவு. ஆறு வருசம் ஆகி இருக்கு கட்டி முடிக்க.

வாசலைக் கடந்து உள்ளே போனால் எல்லாம் அச்சு அசல் தமிழ்நாட்டுக் கோவில்தான். விசாலமான வெளிப்பிரகாரம். கண்ணுக்கு நேரா ஏழடுக்கு ராஜ கோபுரம், , பளிர்ன்னு வெள்ளை நிறத்தில்.
நமக்கிரண்டு பக்கமும் கண்ணாடி அலமாரிபோல் இருக்கும் இடத்தில் ஒரு பக்கம் ராம்லீலா, இன்னொரு பக்கம் க்ருஷ்ணலீலான்னு ஒவ்வொரு காட்சிகள்.,
ராஜகோபுரம் கடந்து உள்ளே போனவுடன் இடது கைப்பக்கம் மதில்சுவரை ஒட்டி இருக்கும் இடத்தில் உண்மையான துளசி! கம்பி வலையெல்லாம் போட்டு பதுகாப்பா வச்சுருக்காங்க. மணம் பிடிச்சுக்கிட்டே போனால் தனி மண்டபம். சந்நிதிக்கு முன்னால் ரொம்பவே வினயத்துடன் நிற்கும் அனுமன், சங்குச்சக்கரங்கள் ஏந்திய விஷ்ணு, தசாவதாரப் போஸ்கள் இப்படி அழகான சிற்ப வேலைகள் அமைஞ்ச தூண்களுடன் நீளமான ஹால். பளிங்குத் தரை. சந்நிதியில் ஆதிசேஷன் படுக்கையில் ரங்கநாதர், தாயார்களுடன் தாய்ச்சுண்டு இருக்கார். மெல்லிசா இருக்கும் சின்ன வெளிச்சத்தில் ரங்ஸின் கன்னம் மின்னுது. ரொம்பவே வயசான பட்டர் ஒருத்தர் நடுங்கும் கரங்களால் தீபாராதனை காமிச்சார்.

தரிசனம் முடிச்சு பிரகாரத்துலே நடந்தால் வலது பக்கம் சொர்க்கவாசல் கதவு! இடது பக்கம் வசந்த மண்டபம் போல ஒன்னு. இங்கே தூண்களில் டெர்ரகோட்டா நிறமடிச்சு வச்சு மறுபடியும் தசாவதாரச் சிற்பங்கள். நரசிம்மன் சூப்பர்! அஞ்சு மூணு நாலு அடுக்குகளா அங்கங்கே கோபுரங்கள் கோவில் முழுசும். சின்னக் கோபுரத்துடன் இருந்த அடுத்த வாசலில் நுழையலாம். உட்பிரகாரம். தங்கத்தகடு போர்த்தி வச்ச அம்பதடி உசரக் கொடிமரம். நடுவில் மெயின் சந்நிதி முன் மண்டபத்துடன். சுற்றிவர ஓடும் தாழ்வாரம் மேற்கூரையுடன். ஒரு மூலையில் கண்ணாடி அறை. இருக்கட்டும் தரிசனம் முடிஞ்சு வரும்போது பார்க்கலாம்.

ரங்கமன்னார், கோதை நாச்சியார், பெரிய திருவடி மூவரும் மூலவராக !!! இங்கே நமக்கு ஏகாந்த சேவை! வெளியே தாழ்வாரத்துலே இறங்கி வலம் வரலாமுன்னா கண்ணுக்கு முன்னால் ஆஜானுபாகுவா நம்ம சீனு!! பெரிய நாமத்தைப் போட்டு கண்களை மூடி வச்சுக்கலை. நல்லாத்தானே கண்ணு தெரியுது....... கஷ்டப்படும் ஆத்மாக்களைக் காப்பாத்தக்கூடாதான்னு மனசுக்குள்ளில் மனமார வேண்டினேன்.
வலையில் சுட்ட படம். மூலவர் மூவரா ரங்கமன்னார், கோதை & கருடர்

கண்ணாடி அறைக்குள்ளே போக ஒரு கட்டணம். சின்னத்தொகைதான். ரெண்டு ரூபாய்ன்னு நினைவு. ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருப்பதைப்போல ஆனால் சின்ன அறையாக இருக்கு. மறுபடி வெளிப்பிரகாரத்துக்குள்ளே வந்தால் தூரக்க, வாசலைப் பார்த்தபடி இருக்கும் மண்டபத்தில் அனுமன் நிக்கிறார்.. கருடன் சந்நிதியைக் காணோமேன்னு வாய்விட்டுச் சத்தமாச் சொல்லிட்டேன் போல. அங்கே தரிசனத்துக்கு வந்த ஒரு வயசான மாமி , 'உள்ளேயே ரங்கமன்னாருடன் இருக்காரே. அதனால் தனிச்சந்நிதி இல்லை'ன்னு தமிழில் சொன்னாங்க. தமிழ் கேட்ட இன்ப அதிர்ச்சியில் மெய் மறந்துருப்பேனோ? யார் என்னன்னு விசாரிக்காம விட்டுட்டேன். ஆனா கண்டிப்பா உள்ளூர்வாசிதான் அவுங்க.. பேத்தியைக் கையில் பிடிச்சுக்கிட்டு ரொம்பக் கேஷுவலா இருந்தாங்க.

பெரிய குளம் ஒரு பக்கமும் நந்தவனம் ஒரு பக்கமுமா பெரிய வளாகம்தான் இது! பெருமாளின் திருக்குடை ஒன்னு உள்ளே வந்ததைப் பார்த்துட்டு அங்கிருந்து கிளம்பினோம். இனி இருட்டுலே சுத்த வேணாம் பாக்கி நாளைக்குப் பார்த்துக்கலாம்.


தொடரும்.................:)

45 comments:

said...

அந்தப் பெண்களின் நிலை மிகுந்த வருத்தம் அளிக்கின்றது:(!

ஏழடுக்கு ராஜகோபுரம், ரங்காஜி மந்திர், பிரகாரம் மற்றும் சிற்பங்கள் அழகு.

பெரியவர் ஏந்தி வரும் பெருமாள் குடை சூப்பர்.

said...

படங்களுடன் பகிர்வு அருமை. பல விடயங்களை புதிதாக அறிந்து கொண்டேன்.

said...

கொஞ்ச நேரத்துலே கையில் ஒரு பொதியோடு ப்ரதீப். வளையலாம்! ம்ம்ம்ம்ம் இருக்கட்டும். வேண்டப்பட்ட ஆளு வாழ்க்கையில் நுழைஞ்சுருக்கு போல!


......ஆளை பார்த்திட்டீங்களா? வளையல் selection சரிதானா? :-)

said...

புகைப்படங்கள் கண்களை விட்டு அகலவில்லை.

said...

நகரம் தான் நாகரீகத்தில் மாறுது. ஆனா கிராமப்புறங்களில் தங்க்ஸ்களின் என்றும் மாறாது.

மற்ற குறிப்புக்க்ளும் எடுத்துகிட்டேன்.

said...

நானும் அங்கு போன போது அந்த பெண்களை பார்த்தேன். மனசு வலித்தது.

said...

அந்தப்பெண்களை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு..

said...

பெண்களின் பரிதாப நிலை மிகவும் பரிதாபத்துக்குறியது.

மேலோட்டமாப் படிச்சேன். முழுதும் கீழோட்டமா படிச்சிட்டு வர்ரேன். சேரியா?

said...

//ஏற்கெனவே மனதால் செத்துப்போனவர்களின் உடம்பைக் கொஞ்சம்கொஞ்சமா சாகடிக்கும் நியமங்கள்.//

பாவம் அந்தப் பெண்கள் :(

ரங்காஜி கோயிலின் படங்களும் அழகு.

said...

வயதானவங்க மட்டும் தான் இருப்பாங்களா இருக்கும் துளசி..இப்பல்லாம் யாரும் அப்படி அனுபரதில்லயா இருக்கனும் அல்லது அப்படியே மனம் நம்ப விரும்புகிறது..

இந்த ரங்காஸ் கோயில் ல தான் என் கண்ணாடிபோனது. சுத்தியும் நிறைய தமிழ் குடும்பங்கள் வசிக்கிறாங்க அவங்க தான் உங்களுக்கு சொல்லி இருப்பாங்களா இருக்கும்..

அந்த வெளிநாட்டு ராதைகள் எவ்ளோ அழகு ஆமாம்..:)

said...

அழகான படத்தோடு நகைச்சுவை விளக்கமும்..

முக்கியமா பெருமாளின் திருக்குடை நல்லாருக்கு மா.

said...

விநோதமான உலகம் பெறுவதற்குப் பெண்வேண்டும்.

அவளுக்கே சோதனை வந்தால் அவளே வேண்டாம்.

ரங்காஜி கோவில் சுத்தமாக இருக்கிறதே. அதை யார் கவனிக்கிறார்களோ.

said...

அடடா
எப்பயுமே பெருமாள் ஒரு தனி அழகு தான்.
என்னக்கு பெருமாள் கோவில் சந்நிதிகுளர ஒரு தனி வாசனை வரும் பாருங்க,அந்த தீர்த்தம்,துளசி,பூ இதெல்லாம் சேர்ந்து ,அடடா அங்கேயே நாள் பூர இருக்கலாம்.எங்க பாடி ஊரு ஸ்ரீமுஷ்ணம்,தினமாம் ரெண்டு வேலை கோவிலுக்கு போவம் பாட்டியோட.அருமையான கோவில்,இப்போ கவனிப்பு இல்லாம ஒரே கொரங்கு தொல்லையா இருக்கு.
என்னாகும் துளசி(செடி) பிடிக்கும்.எங்க பாட்டியோட சேர்ந்து தினமும் அதுக்கு அபிஷேகம் பூஜைலம் பன்னுவோம்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

பெண்கள் நிலையை இப்ப நினைச்சாலும் 'பகீர்'ன்னு இருக்குப்பா:(

said...

வாங்க வரோ,

வணக்கம். நலமா?

முதல் வருகைக்கு நன்றி.

சரித்திர டீச்சர் புது விஷயங்களைச் சொல்லாமல் இருக்கலாமோ?

said...

வாங்க சித்ரா.

ஆள் இருப்பது உறுதி. ஆனா நம்ம கண்ணுலே படலை இன்னும்:-)

said...

வாங்க தமிழ் உதயம்.

இன்னும் நல்லா எடுத்துருக்கலாம். ஒரு மாதிரி பனி மூட்டம்.

நல்ல கெமெரா வேணுமுன்னு சொல்லி அடி போட்டுக்கிட்டு இருக்கேனாக்கும்:-))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

கிராமமோ நகரமோ இப்படி விதவைகளைக் கலாச்சாரம் என்ற பெயரில் கொடுமை செய்யலாமான்னுதான் மனசுக்கு ரொம்ப வருத்தம்.

கல்வி அறிவும், நிதிநிலைமையும் சரியா இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்.

said...

வாங்க அமுதா.


அவுங்களை இப்படிப் பஜனை பாட வைக்காமல் கைத்தொழில் எதாவது கற்றுக்கொடுத்து அவுங்க வாழ்க்கையை மேம்படுத்தலாம்.

விதவைகளுக்கு உதவித்தொகை ஒன்னும் கொடுப்பதில்லையா இந்தியாவில்?

said...

வாங்க வளர்மதி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க அமைதிச்சாரல்.

இளவயதும் ஆரோக்கியமும் இருக்கும் பெண்களை மகளிர் குழுக்கள் மூலம் வேலைவய்ப்பு உண்டாக்கி வாழ்க்கையில் ஒரு பிடிப்பை உண்டாக்கலாமேன்னுதான் ஆதங்கப்படறேன்.

said...

வாங்க நானானி.

கீழோட்டம் முடிஞ்சதா? :-)

said...

வாங்க சுந்தரா.

ஏதோ அவுங்களாவே ஆசைப்பட்டு விதவை ஆனாங்களா என்ன?

அவன் விதி முடிஞ்சதால் இவள் கஷ்டப்படணுமா? :(

said...

வாங்க கயலு.

பெண்கள் படிக்கணுமுன்னு தலைதலையா அடிச்சுக்கறது இதுக்குத்தான்.

சிந்திக்க முடியாம மூளையை மழுங்கடிச்சா எப்படி?


நாங்கள் இருட்டும் சமயமா போனதால் ரங்காஸில் குரங்க்ஸ் இல்லை.

said...

வாங்க சாந்தி.

கருத்துக்கு நன்றிப்பா.

said...

வாங்க வல்லி.


பெண்களில்லாத உலகத்துலே கண்களினாலே என்ன பயன்?

மனம் வெறுத்துப்போச்சு அவுங்களைப் பார்த்ததும்.......

கோவில் ஊழியர்கள் அருமையா கவனிச்சுக்கறாங்க. இது ட்ரஸ்ட் நடத்துதாம்.

said...

வாங்க விஜி.


பச்சைக்கற்பூரம் வாசனையையே பெருமாள் வாசனைன்னுதான் சொல்லணும்:-) கூடவே துளசியும் இருந்தாக் கேக்கவே வேணாம்!

ரங்கமன்னார் சந்நிதியில் மட்டும் தீர்த்தம் சடாரி கிடைச்சது.

said...

good post with beautiful pictures.

thanks for sharing!

வளர்மதி,

மன்னிக்கணும். உங்க பின்னூட்டத்தை தவறுதலா டிலீட் பண்ணிட்டேன். இப்போ காப்பி & பேஸ்ட் பண்ணி இருக்கேன்பா.

said...

அருமையான புகைப்படங்களுடன் அரிய தகவல் துளசி மேம்!!!

said...

//பெருமாளின் திருக்குடை ஒன்னு உள்ளே வந்ததைப் பார்த்துட்டு அங்கிருந்து கிளம்பினோம் //

தமிழ் நாட்டிலே போன பதினைந்து நாட்களாக கொட்டித் தீர்த்து விட்டது மழை. எங்கு பார்த்தாலும்
வெள்ளக்காடு. பல இடங்கள் தெற்கு தமிழகத்திலே கிட்டத்தட்ட முழுகிவிட்டன. மீட்புப்பணி நடந்து
கொண்டிருப்பதாகச்சொல்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்னமோ தருகிறார்கள் ! இது போல ஒரு குடை எல்லோருக்கும் தந்தால்
எத்தனை செளகரியம் !!

சுப்பு தாத்தா.
http://kandhanaithuthi.blogspot.com

said...

"ரெண்டாயிரம் பெண்கள் இருக்காங்களாம்". பகீர் என்கிறது.:(

"நாக லோகத்தில் என்னென்ன நியமங்களோ? " :)

said...

சுத்தமான பிரகாரம் , அழகிய கோபுரம் , அருள்பாலிக்கும் ரெங்கநாதர் எதுவுமே மனதில் நிற்கவில்லை அந்த கையேந்தும் பெண்களைத் தவிர.

said...

வாங்க சக்தி.

வருகைக்கு நன்றி.அடிக்கடி வரணும்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

இந்தக் குடை பெரும் ஆளுக்கு. அதை வெறும் ஆளுக்கும் கொடுக்க முடிஞ்சால் சமத்துவம் ஓங்கும்!!!!

said...

வாங்க மாதேவி.

ஒவ்வொரு உலகத்துக்கும் நியமங்கள் வேறு வேறாய்த்தான் இருக்கும்.

said...

வாங்க சிவகுமாரன்.

எனக்கும் மன உளைச்சலாப் போயிருச்சு.

அரசு ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கலை? அங்கே ஆட்சியில் இருப்பதும் ஒரு பெண் அல்லவா??

said...

படங்கள் அருமை............
அந்த பெண்கள்.............. ம்...............

said...

வாங்க வழிப்போக்கன் - யோகேஷ்.

நினைச்சாலே பகீர் னு இருக்கு.

என்ன கொடுமை பாருங்க:(

said...

சகோ. துளசி அவர்களே,

நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு வருகிறேன். நிறைய போட்டோக்களுடன் உங்கள் தளம் சிறப்பாக இருக்கிறது. அமைதியான ஆன்மீகத்தை பரப்புகிறீர்கள்.


இந்தப் பெண்கள், அவர்கள் விதவைகள் என்றவுடன் எதற்கு அவர்கள் இங்கே கொண்டு வந்து விடப் பட வேண்டும். இந்தியாவில் எல்லா பெண்களும் பொருளாதார அளவில் தங்கள் கால்களில் தாங்களே நிற்க வேண்டும்.


நாலு மணி நேரம் பாடுகிறார்களோ, இல்லை அரை மணி நேரம் பாடுகிறார்களோ, பாடல் என்பது தானாக வர வேண்டும். ஆன்மீகத்தை வற்புறுத்திக் கொண்டு வர முடியாது.

அதைப் போல விதைவையானால் ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வதா இல்லையா என்பதையும் முடிவு செய்ய வேண்டியது அந்தப் பெண்ணே என்பது என் தாழ்மையான கருத்து. மொத்ததிலே பெண் விடுதலை இன்னும் வரவில்லை.

said...

இன்னும் நல்லா எடுத்துருக்கலாம். ஒரு மாதிரி பனி மூட்டம்.

நல்ல கெமெரா வேணுமுன்னு சொல்லி அடி போட்டுக்கிட்டு இருக்கேனாக்கும்:-))))


ஆச்சரியமாயிருக்கு. தேர்ந்த புகைப்பட கலைஞர் போல சரியான கோணம் பார்த்து இது போன்ற கருவிகளில் எடுத்த புகைப்படமே இத்தனை கவிதை பேசுதே? இதற்கு மேலே வேறொன்று புதிதாக வேண்டுமா?

அப்புறம் இது போன்ற குடை ஒவ்வொருவருக்கும் இந்த மழையில் வேண்டும் என்ற கருத்து ரொம்பவே சிரிக்க சிந்திக்க வைத்தது.

சாமிக்கு அந்த குடை சரியே? ஆசாமிக்கு அந்தக் குடை சரியா வருமா?

said...

டைட்டில்,பதிவு.படங்கள் 3 ம் டாப்

said...

வாங்க திருச்சிக்காரன்.

முதல் வருகைக்கு நன்றி.

அந்தக் காலத்தில் எப்பவோ ஆரம்பிச்ச கொடுமைகளில் இந்த விதவைகள் சமாச்சாரம் ஒன்னு.
குடும்பம் செய்யும் அநியாயம்.

காசியில் வயது முதிர்ந்தவர்களைக் கொண்டுவந்து விட்டுட்டுப் போயிருவாங்களாம். எப்படியோ இருக்கட்டும், சாவு வந்துருச்சுன்னா டைரக்டா சொர்கம்தானாம். அங்கே மரணப்படுக்கையில் கிடக்கும் நபர்களுக்கு சாமியே பக்கத்துலே உக்கார்ந்து ( அஃப்கோர்ஸ் மற்றவர்கள் கண்ணுக்குப் புலப்படாமல்) விசிறிவிடுவாராம்!

அதுக்குதான் பெண்கள் கல்வி அறிவு முக்கியமுன்னு சொல்றது.

நம்ம தளத்தில் கோவில்தரிசனத்துடன் கூடிய பதிவுகள் நிறைய இருக்கு. நேரம் கிடைச்சால் பாருங்க.

said...

வாங்க ஜோதிஜி.

ஆசாமிக்கும் குடை சப்ளை செய்யலாம். கூடவே ரெண்டு ஆளும் வேணும் குடை பிடிக்க.



சாலைகளை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தணும். குடும்பத்துக்கு ஒரு நிறமுன்னு புதுப்புது நிறங்கள் கண்டு பிடிக்கணும். கட்சிக்கொடி, யூனிஃபார்ம் போல கட்சிக்குடை இலவசமாக் கொடுப்பாங்க.

அதுக்குண்டான சாயப்பட்டறைகள் குடைத்துணி தயாரிப்புன்னு திருப்பூரில் ஆரம்பிப்பாங்க.

புதுத் தொழில். வேலைவாய்ப்பு கேரண்டி.

said...

வாங்க செந்தில்குமார்.


மனமார்ந்த நன்றி.

(ஆத்தா...நான் ஜெயிச்சுட்டேன். மூணுக்கு மூணு மார்க!!!!)

said...


"ரங்ஸின் நிலையும் தங்ஸ்களின் (இன்றைய) நிலையும்" = மனம் கலங்க வைக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். ராம்குமாரின் பக்கத்தில் பின்னூட்டத்தில் பார்த்தேன். எல்லா தளங்களிலும் பகிர்வது போல் Widget சேர்க்க வேண்டுகிறேன். நன்றி மேடம் Tulsi Gopal.