Friday, February 11, 2011

காலளவு ' நீளம்' 310 கிலோ மீட்டர்.

நெசமாவா? இந்தக் கால் அளவுக்கு காலணி வாங்கிக்க முடியுமா? அதை விடுங்க. காலே இந்த அளவுன்னா கால்முதல் தலை வரை எம்மாம் உசரம் இருக்கணும்!!!!!!!!

ஒரு புதன்கிழமை இன்ப அதிர்ச்சி ஒன்னு கொடுத்தார் கோபால். இந்த வீக் எண்ட் நீ ஆசைப்பட்ட ஒரு இடத்துக்குப் போலாமா?

ஐய்யோ ஐயோ..... நான் ஆசைபட்ட இடங்கள் ஏராளமா இருக்கே...இப்ப எதுன்னு போகப்போறோம்!!!!!

'ஹரித்வார் ரிஷிகேஷ்' சொல்லி வாய் மூடலை..... வெறும் வீக் எண்டா? ஊஹூம்.... போதாது.

வெள்ளிக்கிழமை மத்தியானமாக் கிளம்புனா சாயந்திரம் போயிடலாம். ஞாயிறு மாலை கிளம்புனா ராத்திரி வீடு. வெறும் 208 கிலோ மீட்டர்தான். மிஞ்சிமிஞ்சிப்போனா மூணரை நாலு மணி நேரம் ஆகும். ஹொட்டேல் புக் பண்ணிடலாம். நெட்லே பாரு என்ன இருக்குன்னு.......

ராஜா ஜி நேஷனல் பார்க்குக்கு முன்னால் பார்க்வ்யூ ....பேரே நல்லா இருக்கேன்னு வலைமூலமா பதிவு செஞ்சு வச்சோம்.

ரெண்டே நாள் போதாதுன்னு நான் அரிச்சு எடுத்து, ரெண்டரைநாளா இருக்கட்டுமேன்னு வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கே கிளம்பிட்டோம். சண்டிகர்-யமுனாநகர்-ஹரித்வார். சரியா பகல் ஒன்னரை இல்லை ரெண்டு மணிக்குப் போயிறமாட்டோமா! (ஹூம்.... நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குது)
சண்டிகர் நகர எல்லையை விட்ட அரைமணி நேரத்துலேயே சாலையில் குரங்குகளின் நடமாட்டம். ஹனுமனே காட்சி கொடுத்துட்டான்னு கிளிக்கிட்டுப் போய்க்கிட்டே இருந்தோம்.

யமுனா நகரைத் தாண்டும்போதே மணி ரெண்டு. எல்லோருக்கும் நல்ல பசி. கண்ணுக்கு தென்பட்ட தாபாக்கள் எல்லாம் அவ்வளவு சரியா இல்லை. நம்ம ட்ரைவர் ப்ரதீப் மட்டுமாவது எங்காவது நிறுத்தி சாப்பிடட்டுமேன்னால் ....பரவாயில்லைன்னு பதில் வருது.
யமுனாநகர் தாண்டி சரியா 23வது கிலோமீட்டரில் 'சாகர் ரத்னா' மின்னுது. ஆஹா.... நம்ம பொறுமைக்குப் பலன் கிடைச்சதேன்னு ஒரே குஷி. இது தென்னிந்திய சாப்பாடு கிடைக்கும் செயின் ரெஸ்ட்டாரண்டு. சண்டிகரிலும் ஒன்னு இருக்கு. உள்ளே போனால் காலியாக் காத்தாடுது. இனிமேத்தான் மக்கள்ஸ் சாப்பிட வருவாங்களாம். நாம்தான் அன்னிக்கு போணி;-) சட்னி சாம்பார் எல்லாம் ஃப்ரெஷா இருக்கு!
இந்தக் காட்டுலே இப்படி ஒரு விஸ்தாரமான கட்டிடமா?
சாப்பிடும்போதே செல்லுலே கால். ஹரித்வார் ஹொட்டேலில் இருந்து கூப்பிடறாங்க. நீங்க வர்றீங்கதானே இன்னிக்கு? வந்துக்கிட்டே இருக்கோம். யமுனாநகர் தாண்டியாச்சு. மூணு மூணரைக்குள்ளே வந்துருவோம்.
வழியெல்லாம் இன்னும் பனிமூட்டம் சரியாவே விலகலை. லேசா மசமசன்னு இருக்கு. சூரியனைக் கண்ணுலேயே காணோம். ரெண்டு பக்கமும் மரங்கள் அடர்ந்து இருப்பதால் கொஞ்சம் இருட்டாத்தான் கிடக்கு.
குறுகலான சாலை. ஹைவேதான். ஆனாலும் ........... இதுலே ட்ராக்டர்கள். எருமை மாட்டு வண்டிகள்ன்னு இருக்கும் இடத்தை அடைச்சுக்கிட்டு மெதுஓட்டம். எதிரே வரும் இதே மாதிரி வரிசைகள். இன்னும் பஸ், ட்ரக், போக்குவரத்து வேற. சாலைகள் எல்லாம் பைபாஸா இல்லாம ஊருக்குள்ளேயே போகுது. ஊர் வருவதற்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாலேயே ரெண்டு பக்கமும் நெருக்கமான கடைகள் ஆரம்பிச்சுருது. இது ஊர் கடந்து ஒரு கிலோமீட்டர்வரையும் இருக்கு. காய்கறிகள். பழங்கள், மசாலாச் சாமான்கள் இப்படி எல்லாமே சாலையை ஒட்டிய தரையில் குவிச்சு வச்சுருக்கு. மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடின்னு பொடிவகைகள் அப்படியே சின்னச்சின்னக் கும்மாச்சியா திறந்து கிடக்கு. 100 கிராம் வாங்குனா அதுலே ஒரு 75 கிராம் தூசியும் மண்ணுமாத்தான் இருக்கப்போகுது. சின்னதும் பெருசுமான ஊர்களுக்குத் தகுந்தபடி மக்கள் கூட்டம் மொய்க்குது.
ஸஹரன்பூர், ரூர்கி கடந்து பக்வான்பூர் தாண்டி நாலே முக்காலுக்கு ஊருக்குள்ளே நுழைஞ்சாச்சு. பெரிய ரவுண்டானாவில் ஊர்விசேஷங்கள் என்னன்னு ஹிண்ட் கொடுப்பதுபோல காமதேனு, சிவன், விஷ்ணு, குடத்தில் இருந்து நீரைச் சரிக்கும் கங்கைன்னு சில சிலைகள். இங்கே வலப்பக்கமும் இடப்பக்கமும் ரெண்டு சாலைகள் பிரியுது. எதுக்கும் நேராவே போகலாமுன்னு போனால் பெரிய பாலம். கீழே நல்ல அகலமா கங்கை ஓடுறாள். நாம் இந்த அஞ்சாறு மணியா தேசீய நெடுஞ்சாலை 58 இல் வந்துக்கிட்டு இருந்தோமில்லையா..... அங்கங்கே சின்னச்சின்ன பாலங்களுக்குக் கீழேயும், வாய்க்கால்களிலேயும் இருந்தது கங்கைதான் என்றாலும் அப்பெல்லாம் தோணாத பரவசம் அகலமா சுழிச்சுப் பாயும் நதியைப் பார்த்ததும் தோணுச்சு. அதானே எப்படித் தோணும்? முக்கால்வாசி வறண்டு போய்த்தானே இருந்துச்சு. வெள்ளக்காலங்களில் தண்ணீர் ஓடும்போல!
வேகமா வரும் தண்ணீரைக் கட்டுப்படுத்தவோ என்னமோ கால்வாய்களில் தடுப்பா கற்களை வரிசையா நிரப்பி வச்சுருக்காங்க.
வாங்கன்னு கூப்புடறாப்போல நெடிதுயர்ந்து நிற்கும் சிவன் சிலை ஒரு பக்கம். கடந்து போனால் இடது பக்கம் கங்கை வரும் வழியெல்லாம் ரெண்டு பக்கமும் அட்டகாசமான நீஈஈஈளமான படிகளைக் கட்டி வச்சுருக்காங்க. வலது பக்கம் தன்னிச்சையா தண்ணீர் ஓடுது.

பார்க்வியூ ஹொட்டேலுக்கு ஃபோன் பண்ணி 'லேண்ட் மார்க் சொல்லுங்க. ஊருக்குள் வந்தாச்சு'ன்னா.......'ரிஷிகேஷ் போகும் ரோடுலேயே வாங்க. ஷாந்தி குஞ்ஜ்க்கு நேரெதிரா இருக்கு'ன்னாங்க. சாலைக்கு ரெண்டு பக்கத்துக்கும் ஆளுக்கொருத்தராக் கண் நட்டுக்கிட்டே வந்ததில் என் பக்கம் பார்க் வியூவைக் கண்டுபிடிச்சுட்டேன்!
உள்ளே போய் செக்கின் செஞ்சோம். நம்மைத்தவிர வேற யாருமே தங்கலைன்னாங்க. (அதான் தனியா இருக்கப் பயந்துக்கிட்டு நாம் வர்றோமா இல்லையான்னு கேட்டாரு போல) ரெண்டாவது மாடி. பார்க் வியூலே வியூ எங்கேன்னா...... அசட்டுச்சிரிப்பு ஒன்னு பதிலா வந்துச்சு. ஒரு பத்துப்பதினைஞ்சு கிலோ மீட்டர் தூரத்துலே நேஷனல் பார்க் இருக்கு. இங்கே இருந்து மனக்கண்ணில் வியூ பார்த்துக்கணும்.

உள்ளூர்லே பார்க்க வேண்டிய இடங்கள் எவைன்னு கேட்டதுக்கு ரெண்டு நிறங்களில் விவரம் அடங்கிய தாள் கிடைச்சது. ஒன்னு ஹரித்வார், இன்னொன்னு ரிஷிகேஷ். மாலை அஞ்சரைக்கு கங்கை ஆரத்தி இருக்கு. சீக்கிரம் கிளம்பிப்போனா பார்க்கலாம். இல்லேன்னா கூட்டம் வந்துருமுன்னு சொன்னார். ஆமாம்...இங்கே ஹொட்டேலில் கூட்டமே இல்லையேன்னா.... குளிர்காலம். அதான் டூரிஸ்ட் கூட்டம் இல்லைன்னார்.

வெய்யில் காலமுன்னா மாலை ஆறு மணிக்கு நடக்கும் ஆரத்தியை குளிர்காலங்களில் அரைமணி நேரம் சீக்கிரமா ஆரம்பிச்சுருவாங்களாம். இந்தக் காலங்களில் சீக்கிரம் இருட்டிப்போகுதுல்லே?
வந்த வழியாவே போய் அந்தப் பெரிய சிவன் சிலைக்கு முன்னாலேயே வலது பக்கம் திரும்பணும். பெரிய மைதானமா இருக்கு. கார்பார்க்கிங் சார்ஜ் 30 ரூபாய். வண்டியை நிறுத்திட்டு இறங்குனோம். டெண்ட் கூரை போட்ட வரிசை, ஒழுங்கு இப்படி ஒன்னுமில்லாம அங்கங்கே கடைகளான கடைகள். 'கங்கா மைய்யாமே ஜப் தக்கே பானி ரஹே....மேரே சஜனா தேரே ஜிந்தகானி ரஹே...... ' மைய்யா.... கங்கா. மைய்யா....... எல்லா கேஸட் விஸிடி டிவிடி விக்கும் கடைகளிலும் இதே பாட்டு அப்படியே அந்த ஏரியா முழுசும் காற்றில் கலக்குது. 42 வருசமா இதே பாட்டைத்தான் போட்டுக்கிட்டு இருக்காங்க போல. கங்கைக்கே போரடிச்சுருக்காதோ?


கங்கையில் நீர் உள்ளவரை என் கணவரின் ஆயுள் இருக்கட்டும் என்று கதாநாயகி பாடறாங்க. சுஹாக் ராத் என்ற ஹிந்திப் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய பாட்டு இது. 1968 லே வந்த படம்.

கங்கை ஒரு ஜீவநதி. நினைவில் இருக்கட்டும்:-)
சின்னதா அரைலிட்டர் கொள்ளளவுலே இருந்து இருவது லிட்டர் வரை இருக்கும் விதவிதமான ப்ளாஸ்டிக் கேன்கள் அங்கங்கே விற்பனைக்கு. காத்துலே பறக்காமல் இருக்கக் கட்டிப்போட்டு வச்சுருக்காங்க. சாப்பாட்டுக் கடைகள், சாயாக்கடைகள், பாசிமணி பொட்டு குங்குமம் இப்படி அலங்காரச்சாமான்கள், பூஜைக்கான பூக்களை ஒரு இலையில் வச்சு விற்கும் கடைகள், பொரிகடலை, மற்ற தீனிகள் இப்படி ஜேஜேன்னு இருக்கு. நம்ம ட்ரைவர் பிரதீப் ஒரு ரெண்டு லிட்டர் கேன் வாங்கிக்கிட்டார்.
நின்னு பார்க்க நேரமில்லைன்னு கொஞ்சம் வேகமாக் காலைவீசிப்போட்டு ஓட்டமும் நடையுமாப் போறேன். மசமசன்னு இருட்டிக்கிட்டு வருது. படிகள் ஏறி பாலம் கடந்து அந்தப் பக்கம் போகணும்.

இந்த இடம்தான் ஹரி கி பொவ்ரி./ பொவ்டி ( Hari Ki Pauri )ஹரியின் பாதம். அதான் 310 கிலோமீட்டர் நீளம்.

இந்தப் பதிவை எழுதும்போது கோபாலிடம் சொன்னேன். பெருமாள் விஸ்வரூபம் எடுத்தப்ப அவர் பாதம் 310 கிலோமீட்டர் நீளம்.

"எதுலே போட்டுருக்கான்?"

அய்ய...... ப்ரிண்டுலே வந்ததெல்லாம் உண்மைன்னு நம்பும் ஒரு ஜீவன்:(
நானே கணக்குப் போட்டுக் கண்டுபிடிச்சதை நம்பமாட்டாராமா?

"எதுலேயாவது போட்டாத்தானா? நாந்தான் சொல்றேன். முன்னுத்திப்பத்து."

"எப்படி? "

"இருங்க விலாவரியா அடுத்த பதிவுலே சொல்றேன்."


தொடரும்.............................:-))))

36 comments:

said...

//அதான் தனியா இருக்கப் பயந்துக்கிட்டு நாம் வர்றோமா இல்லையான்னு கேட்டாரு போல//

ஹா ஹா நான் நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க :-)

எனக்கு ரொம்ப வருடமாக ஹரித்வார் ரிஷிகேஷ் இமயமலை (எல்லாம் ஒரே இடமா!) செல்ல வேண்டும் என்று ஆசை.. காசி கூட. வாய்ப்பு தான் அமைய மாட்டேங்குது.

உங்கள் பயணக்கட்டுரை படித்து மனதை தேத்திக்கொள்கிறேன். ரிஷிகேஷ் பற்றி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.. ப்ளீஸ்

said...

ஹரித்வார் வந்தாஅச்சா. சரி போயிட்டு வரேன்:)

said...

போய்ட்டுவந்தாச்சா..

ப்ரிண்ட்ல வந்தாதானா..உங்க ப்ளாக் ல வந்தாலும் நம்புவார்..:)

said...

ரொம்ப சுவாரசியமா இருக்கு பயணம்.

said...

/ பெருமாள் விஸ்வரூபம் எடுத்தப்ப அவர் பாதம் 310 கிலோமீட்டர் நீளம். //

அட் !! என்ன இது ? நாங்க பார்த்தப்போ 333.333... கி.மீ. அவர் பாதம் இருந்துச்சே !!
வாமனாவதாரத்துலே... ( நீங்க அப்ப புறக்கல்லே அப்படின்னு நினைக்கறேன்.)
பகவானாகப்பட்டவரு அந்த மஹாபலிக்கிட்டே மூணு அடி கேட்டாராம். சரி அப்படின்னு
அந்த இளிச்ச வாயர் சொன்ன உடனே, ஒரு அடி லே பூலோகம், புவர் லோகம், ஸுவர் லோகம்
எல்லாத்தை மேலயும் காலை வைச்சாராம். இரண்டாம் அடிக்கு அதல,சுதல, என்று மிச்சம் இருக்கற‌
ஏழு லோகத்தையும் இன்னொரு லெக் கிலே கவர் பண்ணிட்டாராம். இன்னொரு அடிக்கு
எங்கேப்பா வைக்கிறது அப்படின்னு அந்த மஹாபலி சக்கரவர்த்தி கிட்டே கேட்டப்ப,
அந்த மஹாபலி, சொன்ன வாக்கை மீறக்கூடாதுன்னு சொல்லிட்டு, தன்னோட தலைலே
அந்த காலை, மூணாவது அடியா வைங்க அப்படின்னாராம். ஓ.கே சொல்லிட்டு, அவரு
தலைலே இவரு காலை வெச்சு, அவருக்கு மோச்சம் கொடுத்ததால்ல இதிகாசம் சொல்லுது.

இதுக்கு இன்னொரு ஆங்கிள் லே வியாக்கியானம் கூட சொல்றாக. அத உங்க அடுத்த பதிவை
பாத்துட்டு போடறேன்.


மீனாட்சி பாட்டி.
http://vazhvuneri.blogspot.com

said...

ஹரித்வார் பயணமா! இந்த நாட்களில் நல்ல சில்லென்று தண்ணீரில் ஒரு குளியல் போட்டால் நன்றாக இருக்கும். பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது உங்கள் பகிர்வு. மிக்க நன்றி.

said...

அருமை . உங்களுடைய பதிவு நகைச்சுவை இலைஒடியும் திருத்தமாகவும் உள்ளது. மற்றும் படிப்பவர்களை பயணம் செய்ய தூண்டுகிறது

said...

ஹரித்வார் ரிஷிகேஷ்...ஆ!

எங்களுக்கும் நல்ல பயணம்.

said...

ஹரித்வார்,ரிஷிகேஷ் வீக் எண்ட் போய்விட்டு வரும் அளவு பக்கமாக வீடிருப்பது வசதி டீச்சர்:))))

said...

நதிக்கரையில் கரையோரம்
நிமிர்ந்து நின்று அபயமளிக்கும்
சிவன் சிலை அற்புதமாக இருக்கிறது.
உங்கள் விளக்கங்களின் சுவை பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

said...

அன்பின் துளசி

நானும் ரிஷிகேஷ் ஹரித்வார் எல்லாம் போயிருக்கேனே ... இந்த இடுகையிலே சொன்னதெல்லாம் நெனெச்சு ஒரு கொசு வத்தி சுத்தியாச்சு - படங்கள் எல்லாம் சூப்பர்

said...

உள்ளே போய் செக்கின் செஞ்சோம். நம்மைத்தவிர வேற யாருமே தங்கலைன்னாங்க. (அதான் தனியா இருக்கப் பயந்துக்கிட்டு நாம் வர்றோமா இல்லையான்னு கேட்டாரு போல) ரெண்டாவது மாடி. பார்க் வியூலே வியூ எங்கேன்னா...... அசட்டுச்சிரிப்பு ஒன்னு பதிலா வந்துச்சு//
ஹைய்யோ துளசி , இதுதான் உங்களை வித்தியாசமாக் காண்பிக்கிறது.!!!!
அருமையான படங்கள் .இந்தக் கங்கையை நான் என்னிக்குப் பார்க்கப் போறேனொ.

said...

வாங்க கிரி.

ஹிமயமலைத்தொடரின் ஷிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் தான் இருக்கு. இங்கிருந்து போகப்போக பத்ரிநாத் கேதார்நாத் எல்லாம் வருது.

விளக்கமா சொல்லுன்னு நீங்க சொன்னதே நூறுபேர் கேட்டமாதிரிதான். சும்மாவே ஆடுவேன் இதுலே நேயர்விருப்பமாயிருச்சுன்னா சலங்கை கட்டுனமாதிரிதான்:-)

வெளக்கிப்பிடுவோம். நோ ஒர்ரீஸ்:-)

said...

கிரி, சொல்ல விட்டுப்போச்சு..... இத்தனை வயசுக்கு இப்போதான் எனக்குக்கிடைச்சது. நீங்கெல்லாம் சின்னவயசு. காத்திருங்க.கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது!!!!!

said...

வாங்க வல்லி.

வடக்குன்னதும் அச்சா தானே வருது பாருங்க:-))))

கங்கையைப் பார்க்கணுமா? தினமும் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கீங்க நம்மூட்டுக் குழாய்களில். எல்லா நீரும் கங்கை இல்லைன்னாலும் எல்லா நீரிலும் கங்கையின் அம்சம் உண்டு:-)

said...

வாங்க கயலு.

இந்தப் பயணத்துலே உங்க நினைப்பு அடிக்கடி வந்துச்சு. விவரம் வரும் பதிவுகளில்:-))))

said...

வாங்க சுசி.

கூடவே வாங்கப்பா. தனியாப்போக பயமா இருக்கு:-)))))

said...

வாங்க மீனாட்சி அக்கா.

தங்கைக்கு ஏத்த அக்காவா இருக்கீங்க:-)

வரும் பதிவுகளைப் பார்த்துட்டு வேற ஆங்கிள்ஸ் சொல்லுங்கக்கா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணம் போனது ரெண்டரை மாசத்துக்கு முந்தி. குளிர்கால ஆரம்பம்.

அப்போ துளசிதளத்தில் மதுரா யாத்திரை நடந்துக்கிட்டு இருந்துச்சு.

கொசுவத்திகள் உள்ளத்துக்கு(ம்) நல்லது:-)))))

said...

வாங்க செந்தில் குப்புசாமி.

முதல் வருகைக்கு(?) நன்றி.

இலை ஓடியதும் கொஞ்சம் பொருத்தம்தான். கங்கையைத் தொடருங்கள்.

said...

வாங்க மாதேவி.


கூடவே வாங்கப்பா. உங்க பின்னூட்ஸ் எல்லாம் நமக்குச் சத்துணவு:-)

said...

வாங்க சுமதி.

இப்போ இருக்கும் ஊர் அப்படி! ஷிம்லாகூட வெறும் 105 கி.மீதான்.

said...

வாங்க டொக்டர் ஐயா.

அவர் பாட்டுக்கு வரத்தைக் கொடுத்துட்டு அப்புறம் திண்டாடுவார்:-)))))

said...

வாங்க சீனா.

போயிட்டு வந்துட்டு இப்படி 'கப்சுப்' ன்னு இருக்கலாமா? நம்ம பதிவுலக இலக்கணம் & பண்பாட்டின் படி நாலு வரியாவது எழுதணும்.ஆமா:-))))

said...

அய்யோ துளசி - நான் போனது அந்தக்காலம் - அப்பல்லாம் பிளாக்குன்னா என்னன்னே தெரியாதே

said...

அருமை அருமை.
இடமெல்லாம் இவ்வளவு சுத்தமா இருக்கே? 310 மறக்காம சொல்லுங்க அப்புறம் நானூத்துஇருபதாயிடப் போகுது.

said...

photos அமர்க்களமாக இருக்கின்றன.

said...

thulasiakka,
punniya athma neenga.athan bagavan ella kolangalaiyum vanjanai illama kaaturan. ennakkum , enga veetu ayyavukkum intha punniyam kidaikanumnu perumala vaendikunga.thanks.

said...

கால்வாய்கள்ல இருக்கும் தடுப்புக்கற்கள் நல்ல ஐடியா..

said...

ரொம்ப நாளா north indian க்ஷேத்ரடனம் போகணும்னு ஆசை. அது விஷயமா இந்த பதிவு உதவும். நீங்கள் கொடுத்து வைத்தவர்.

said...

என்னங்க சீனா,

கொசுவத்திக்கு எந்தக் காலமும் ஒன்னுதான்:-))))

said...

வாங்க அப்பாதுரை.

நம்மைச்சுற்றி ஏகப்பட்ட 420 இருப்பதால் இது 310 ஆகவே இன்னும் இருக்க வாய்ப்பு உண்டு:-))))


பொதுவா ஃபோட்டோக்களில் அழுக்குத் தெரியாது அப்படியும் சிலசமயம் தெரிஞ்சுருமுன்னா அங்கே எவ்வளவு அசுத்தம் இருக்கணும்,பாருங்க.

படம் நல்லா வர்றதில்லைன்னு புதுக் கெமெராவுக்கு அடிபோட்டுக்கிட்டு இருக்கேன்:-)

கூடமெல்லாம் கோணலே, ஆட மாட்டாதவளுக்கு:-)

said...

வாங்க தேனிக்காரி.

புண்ணீய ஆத்மாவா? சரியாப்போச்சு! பாபாத்மாக்களும் இப்படிக் கோவில் கோவிலாப் போகுமாம்:-)

கிடைச்ச புண்ணியங்களையெல்லாம் எல்லோரோடும் பகிர்ந்துக்கறேன்ப்பா.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வெள்ளம் வரும்போது அந்த இடம் பார்க்கவே ஜோரா இருக்கும் இல்லே?

said...

வாங்க ஸ்ரீநிவாஸ் கோபாலன்.

முதல் வருகைக்கு நன்றி.

வட இந்திய யாத்திரை சீக்கிரம் கிடைக்கட்டும் என வாழ்த்துகின்றேன்.

த்வார்க்கா, உடுபி பக்கம் எல்லாம் போய் வந்தாச்சா?

இன்னும் இல்லைன்னா நம்ம துளசிதளத்தில் கொஞ்சம்(?) இருக்கு. பாருங்க நேரம் கிடைக்கும்போது.

said...

நேர்லயே பார்த்தது போல இருந்தது,நல்ல பயணக்கட்டுரை