Friday, May 13, 2011

'ஜெய் மாதா' நீதான் காப்பாத்தணும்! ......((ராஜஸ்தான் பயணத்தொடர் 10)

ஆமெர் கோட்டைக்கு பதினாலு நிமிசத்துலே வந்தாச்சு. சின்னக்குன்று மேல்கோட்டையும், வெளியே அகலமான அகழியுமா அமைஞ்சுருக்கு. நல்லவேளையா இங்கே கோட்டைக்குப் பக்கத்தில் பார்க்கிங் இருக்குன்னு சொல்லி வயித்தில் பாலை வார்த்தார் கைடு காஷிராம்.

மேலே ஏறிப்போகும் வழி


நுழைவுச்சீட்டு வாங்குமிடத்தில் பெருசா துணிப்பந்தல் போட்ட வெளிமுற்றம். கம்புகள் வச்சு வரிசை அமைச்சுக்கிட்டு இருக்காங்க. மறுநாள் முதல் நவராத்ரி ஆரம்பம்., இது வசந்த நவராத்ரி. ஒரு வருசத்துக்கு மொத்தம் நாலு நவராத்ரிகள் இருப்பது தெரியும்தானே?
தெரியலைன்னா நோ ப்ராப்லம். இப்போ தெரிஞ்சுக்கிட்டால் ஆச்சு.
நம்ம பக்கம்தான் புரட்டாசி மாசத்துலே வரும் நவராத்ரியைக் கொண்டாடுறோம். வடக்கே நாலு பருவகாலங்களுக்கும் ஒவ்வொன்னு இருக்கு.

சைத்ர மாசத்தில் வசந்த நவராத்திரி.
ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி.
புரட்டாசியில் சாரதா நவராத்திரி.
தை மாதத்தில் சியாமளா நவராத்திரி.

நாளைக்கு சைத்ர மாசம் பொறக்குது. யுகாதி பண்டிகை. இன்னும் ஒன்பது நாட்களுக்கு இங்கே கோலாகலம்தானாம். உள்ளூர் மக்கள் படைதிரண்டு வந்து ஜாம் ஜாம்ன்னு கொண்டாடுவாங்களாம். அதை ஏன் கோட்டைக்குள்ளே கொண்டாடணும்?

கோட்டைக்கு வெளியே ஆமெர் ஊர்


இங்கேதான் ஷிலா மாதா கோவில் இருக்கு. படிஏறிப்போனால் முதலில் கண்ணுலே படுவது இந்தக் கோவில்தான். வெள்ளிக்கதவுகள் பளபளன்னு தூள் கிளப்புது. ராஜா ஜெய்சிங் அவர்களின் இஷ்ட தெய்வம். அனுதினமும் மஹாராஜா இங்கே பூஜையை முடிச்சுக்கிட்டுத்தான் காலை உணவே அருந்துவாராம். இங்கே ஆமெர் கோட்டையில்தானே ராஜகுடும்பம் ஆரம்பகாலத்தில் இருந்து வசிச்சது. ஜெய்ப்பூர் நகரம் அப்பெல்லாம் நிர்மாணிக்கவே இல்லையே!

ஒரு குன்றைப் பார்த்தால் விடமாட்டாங்க போல இந்த ராஜாக்கள். உடனே கோட்டை கட்டவேண்டியதுதான். இப்போ நாமும் அந்த ஊர்களுக்குப்போனால் கோட்டையை விடமாட்டேங்கறோம் பாருங்க..... இதனால் சுற்றுலாப் பயணிகளைக் கோட்டை கோட்டையாக் கொண்டுபோய் சுத்திக் காமிக்கும் தொழில் பெருகிப் போய், மலைப்பாதைகளுக்காகவே ஜீப் வண்டிகள் வச்சுக்கிட்டு
கலக்கிக்கொண்டிருக்கும் யாவாரம் கனஜோரா நடக்குதுன்னு இந்தக் கார்ப்பார்க்கைப் பார்த்தாலே புரிஞ்சுருமே:-))))

ஷிலான்னா ஒரு கற்பலகை. இதுலே தேவி உருவம் இருக்கு. காளி மாதா,
இப்படியே கிடைச்ச காளியை பிரதிஷ்டை பண்ணி ஷிலா தேவின்னே பெயரும் வச்சுட்டாங்க. நாங்க கோவில் கதவுக்கிட்டே போறோம்..... உள்ளே இருந்து ஒருத்தர் வந்து கோவிலை மூடப்போறோம். தரிசனம் செய்யணுமுன்னா சீக்கிரம் வாங்கன்னு குரல் கொடுத்தார். ஆஹா,,,,ன்னு கால் செருப்பை அங்கேயே உதறிட்டு உள்ளே பாய்ஞ்சேன். சின்னதா ஒரு சந்நிதி. கற்பலகையில் தேவி . சாமந்திப் பூக்களால் அலங்காரம். தேவியின் தலை கொஞ்சம் சாய்ஞ்ச மாதிரி இருக்கு.

கண்டிப்பா ஒரு கதை இருக்கத்தான் வேணும் இல்லை?

பதினாறாம் நூற்றாண்டுலே மஹாராஜா மான்சிங் (முதலாமவர்) கனவில் கல்கத்தா காளி 'தோன்றி' நான் 'இந்த இடத்தி;ல் ' இருக்கேன். வந்து எடுத்துக்கிட்டுப்போய் கோவில்கட்டிக் கும்பிடுன்னுட்டாள். ராஜா கிளம்பிப்போனார் அந்த இடத்துக்கு. கடலில் இருந்து ஆப்ட்டுச்சு ஒரு கற்பலகை (ஸ்லாப். Shila) அதுலே காளி தலை நேராத்தான் இருந்துருக்கு. கறுப்பான காளி உருவத்துக்குக் காண்ட்ராஸ்ட்டா வெள்ளைப் பளிங்கு வச்சு ஒரு கோவில் கருவறை கட்டி அதுலே காளியை வச்சுப் பூஜை செய்யறார் ஷிலா மாதான்னே பெயரும் http://www.blogger.com/img/blank.gifஅமைஞ்சுருச்சு. மகாராஜா. இந்த ஆமெர் கோட்டையின் காவல் தெய்வமா கோட்டையின் உள்ளே நுழைஞ்சதும் பளிச்சுன்னு கண்ணில் படும்விதமா கோவில் அமைஞ்சுருக்கு.( நம்ம கண்ணில்தான் முழுக்கோவிலும் படலை. நெடூக ஷாமியானா போட்டு வச்சு நம்ம பார்வையைப் போகவிடாம மறைச்சுட்டாங்கப்பா)

ஒரு புண்ணியவான் படம் எடுத்து இங்கே போட்டுருக்கார் பாருங்க.

காளி சிலை ஆப்ட்ட இடம் கிழக்கு வங்காளத்தில் உள்ள ஜெஸ்ஸூர். (பிரிவினைக்குப்பிறகு இது பங்ளாதேஷ் நாட்டில்!!) காளிக்குண்டான வழிபாட்டின் மரபின்படி எருமை, ஆடுன்னு உயிர்ப்பலி கொடுத்துக்கிட்டு இருந்துருக்காங்க. ஒரு சமயம் இப்படி பலி கொடுப்பது சரியில்லைன்னு 'ஞானோதயம்' ஏற்பட்டுச்சு. அப்போ முதல் காளிக்கு விதவிதமான வெஜிடேரியன் விருந்துதான் தினமும். நம்ம காளிக்கு இது பிடிக்கலை. அதான் 'என்னாங்கடா இது?'ன்னு தலையைச் சாய்ச்சுக் கேக்கறாள்!!!

தினமும் காலை பத்தரைக்கு விருந்து. ராஜ போக் !! அப்போ பக்தர்களுக்கு தரிசனம் இல்லை. கதவைச் சாத்திக்கிட்டுச் சாப்பாடு போடறாங்க சாமிக்கு!


கண்டிப்பாப் படம் எடுக்கக்கூடாதுன்னு காஷிராம் முதலிலேயே சொல்லிட்டார். அந்த வெள்ளிக் கதவையாவது..... ஊஹூம்.....அனுமதி இல்லைன்னுட்டார். அதுக்காக விட்டுடமுடியுமா? சுட்டுப் போட்டுருக்கேன் தேவியை!

காளியின் அவதாரங்களா ஷைலபுத்ரி, ப்ரஹ்மச்சாரிணி, சந்த்ரகாந்தா, கூஷ்மண்டா. ஸ்கந்தமாதா, காத்யாயினி, கால்ராத்ரி, மஹா கௌரி, ஸித்தி தாத்ரினு ஒன்பது தேவிகளை இந்த வெள்ளிக்கதவில் வடிச்சுருக்காங்க. நவகாளியின் தரிசனமும் கிடைச்சுருது நமக்குக் கோவில் பூட்டி இருந்தாலும் கூட! நவ'துர்கா' மகா காளி..........................


ஷிலா தேவி


கல்கண்டு, பூந்தி, சக்கரை மிட்டாய்ன்னு ஒரு கலவையாப் பிரசாதம் அள்ளிக் கொடுத்தார் பூஜாரி. ரெண்டு நிமிசமுன்னா ரெண்டு. தரிசனம் கிடைச்சதேன்ற திருப்திதான் நமக்கு.

தொடரும்...................:-)


10 comments:

said...

"யாவாரம் கனஜோரா நடக்குது" ஆமா:) காளி கோயில் அழகாக இருக்கிறது.

said...

எழுத சோம்பேறித்தனத்தால இவ்வ்ளோ கதையையும் மண்டைக்குள்ளே வச்சுருந்தேன் வெளியில் கொண்டு வந்ததுக்கு நன்றியோ நன்றி! அப்புறம் எப்படியிருக்கீங்க!?

said...

நல்ல பகிர்வு. கோவில் படத்தை சுட்டாவது போட்டுருவோம்ல! :)

said...

முதலில் தங்கள் பதிவில் வுள்ள சூப்பர் படங்களை பார்த்து ரசித்துவிட்டு பின்னால் "கதைகளை" பற்றி எழுதுகிறேன்!!!!!!!!!!!

said...

நல்ல பதிவு. படங்கள் விபரங்கள் நிறைந்த பதிவு. உங்களோடு சேர்ந்து நாங்களும் தரிசனம் செய்து கொண்டோம்.
இன்று முழுவதும் அரசியல் பதிவுகள் - திகட்டி விட்டது.

said...

வாங்க மாதேவி.

காற்றுள்ள போதே...... சமாச்சாரம்:-)

said...

வாங்க அருணா.

நலம். நலமா?

என்ன ஊருப்பா உங்க ஊரு. 41 மணி நேரம் தங்குனதுக்கு இப்பவே பத்துப்பதிவுகள் ஆகி இருக்கு. இன்னும் ரெண்டோ மூணோ கூட வரலாம்!

ஏகப்பட்ட நல்லதுகள் கொட்டிக் கிடக்கேப்பா!!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இல்லையா பின்னே:-))))))

said...

வாங்க பத்மா.

மீ த வெயிட்டிங்:-))))

said...

வாங்க ரத்னவேல்.

வெள்ளிக்கிழமை பூரா ப்ளொக்கர் சொதப்பிருச்சு. அதான் சனிக்கிழமை வெளியீடு:-)