Wednesday, May 11, 2011

ஷிம்லா ஸ்பெஸல் (தொடர்ச்சி.... 2)

கம்பிக்கதவைத் திறந்து காலணிகளை மாட்டிகிட்டுக் குச்சியைத் தேடினால்........ கிடைக்கலை. 'எல்லாம் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க'ன்றார் கடைக்காரர். நமக்கு முன்னே குச்சியோடு போகும் கும்பலில் கலந்துக்கலாமுன்னு போனால்.... கரடுமுரடா இருக்கும் ஏற்றத்தில் என்னால் வேகமா நடக்க முடியலை. 'மூச்' இளைக்குது. இந்த அழகில் கண்ணாடியைக் கழட்டிட்டதால் கண்ணு வேற சரியாத் தெரியலை. 'ராமா ராமா'ன்னு அங்கே இருந்த பெஞ்சில் உக்கார்ந்தால் கீழே இறங்கி வரும் பெண் ஒருவர் 'குரங்கு வந்துரும். கையில் இருக்கும் கண்ணாடியை ஒளிச்சு வச்சுக்கோ' என்றார்.
இன்னும் எவ்ளோ தூரமுன்னு கோபால் கிட்டே கேட்டால், பத்தடிதான் வந்துருக்கேன்றார். அயோத்தியை விட்டு வெளிவந்த அடுத்த நிமிடம் காடு வந்துருச்சான்னு சீதை கேட்டாளாமே!
'நீ ரொம்ப அன்ஃபிட்'ன்னு மூச்சு வாங்கிக்கிட்டே சொன்ன கோபாலை...... போயிட்டுப் போகுது விடுங்க. ஆணாதிக்கம்தான். ரெண்டுபேருக்கும் எல்லா விதப் பொருத்தமும் ஒன்னா இருக்கே உயர் ரத்த அழுத்தம் வரை! இதுதான் மேட் ஃபார் ஈச் அதர்:-)

பல்லைக் கடிச்சுக்கிட்டு இன்னும் கொஞ்ச தூரம் ஏறினதும் ஆரஞ்சுக் கலரில் அனுமனின் பாதம் தெரிஞ்சது. ஆஹா....வந்துட்டோமுன்னு மனசில் பதிய நிதான நடையில் மேலே போய்ச் சேர்ந்தேன். இந்த சரிவுப்பாதையின் ஒரு பக்கம் படிக்கட்டுகள் கட்டி வச்சுருக்காங்க. அதுவும் சரிஞ்ச மாதிரி கிடக்கு,. பிடிச்சுக்கக் கைப்பிடி ஒன்னும் இல்லை:(
108அடி அனுமன், சுற்றிலும் கட்டங்கட்டமாச் சாரம் கட்டி வேலை நடந்துக்கிட்டு இருக்கு. கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்தாலும் கம்பிகளுக்கு நடுவில் முகம் தெளிவாத் தெரியலை. கீழே சதுக்கத்தில் இருந்து பார்த்ததே பரவாயில்லை.


இலங்கையில் ராமராவண யுத்தம் நடந்துக்கிட்டு இருக்கு. லக்ஷ்மணன் அடிபட்டு மயக்கமா விழுந்துட்டார். அவரைக் காப்பாற்றணுமுன்னா சஞ்சீவினி மூலிகை ஒன்னு இமயமலையில் இருந்து கொண்டு வரணும். ஹனுமன் நான் போய்க் கொண்டுவரேன்னு கிளம்பி ஆகாயமார்க்கமா வந்துக்கிட்டு இருக்கார்.

இங்கே இப்போ நாம் நிற்கும் இந்த மலைமுகட்டில் (இதுதான் ஷிம்லாவில் அதிக உயரமான மலைமுகடு) ஜாக்கூ என்ற முனிவர் குடில் கட்டித் தவம் செஞ்சுக்கிட்டு இருக்கார். அவரிடம் போய் மூலிகை எங்கே கிடைக்குமுன்னு கேட்டுக்கலாமேன்னு பறந்து வந்துக்கிட்டு இருந்தவர் சடார்ன்னு கீழே இறங்கிக் கால் பதிச்சார். அந்த வேகத்துலே மலை கொஞ்சம் அழுந்தி அரைவாசி பூமிக்குள் புதைஞ்சதாம். அதனால் உயரம் 'கொஞ்சம்' கம்மி ஆகிருச்சுன்றாங்க. இப்போ ஷிம்லாவில் மிக உயரமான முகடு 7234 அடி உயரம்தான்!

அனுமனுடன் கூடவே வந்த சிலர் பயணக் களைப்பினால் கண்ணயர்ந்து விட்டாங்க. அதனால் அவுங்களையெல்லாம் தூங்க விட்டுட்டு ஜாக்கூ முனிவரிடம் மூலிகை இருக்கும் இடம் தெரிஞ்சுக்கிட்ட அனுமன், அப்புறம் வந்து இவுங்களைக் கூப்பிட்டுப் போகலாமுன்னு மூலிகை இருக்கும் இன்னொரு சிகரமான த்ரோண் மலை''க்குப் போயிட்டார். அங்கே குவிஞ்சுருக்கும் மூலிகைகளில் எது சஞ்சீவினின்னு தெரியாமல் அந்த இடத்தையே பெயர்த்து எடுத்துத் தூக்கிட்டு, வழி மறிச்சு நின்ன காலநேமி என்ற பகைவனிடம் இருந்து தப்பிக்க குறுக்குப் பாதையில் கிளம்பி நேரா இலங்கைக்குப் போயிடறார்.
கண் முழிச்சுப் பார்த்த வாநரர்கள் அனுமனைக் காணாமல் திகைச்சு அங்கேயே செட்டில் ஆகிட்டாங்க. அவுங்க பரம்பரைதான் இப்போ கண்ணாடியைப் பிடுங்கும் கூட்டம்! ஜாக்கூ முனிவரிடம் 'மீண்டும் வருவேன்'னு சொல்லிப்போனவர் வரலைன்னு முனிவருக்கு கவலை. அப்போ அங்கே ஒரு அனுமன் உருவச்சிலை தோன்றியது. அதை எடுத்து அனுமன் கால்தடம் பதிஞ்ச இடத்தில் வச்சு பூஜிக்கத் தொடங்கி அந்த இடமும் சிலையும்தான் இப்போ கோவிலாக ஆகி இருக்கு.
குரங்கு நடமாட்டத்தைச் சமாளிக்க இங்கேயும் தனி அறையே கட்டி விட்டுருக்காங்க காலணிகளுக்கு. கோவிலுக்குள் நுழைஞ்சதும் கண்ணாடியைப் போட்டுக்கிட்டேன். அழகான சின்னக்கோவில். அம்சமா இருக்கு. வெளிப்புறச்சுவர்களில் அழகான புடைப்புச் சித்திரங்கள். எல்லாம் ராமாயணக் காட்சிகள்தான். உள்ளே சதுரக்கல்லில் சிந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் ஒரு கையில் சஞ்சீவினி மலையோடு ஒரு காலைத் தூக்கிப் பறக்கப்போறேன் என்று சொல்லும் விதமா கருவறையில் இருக்கார். ராம லக்ஷ்மண ஜானகியரின் பெரிய படம் ஒன்னு மாட்டி வச்சுருக்காங்க. ரொம்ப அழகா இருக்கு!
பாபா நீம் கரோரி அவர்கள் முயற்சியால் கோவில் புதுப்பிக்கப்பட்டு இந்த 108 அடி உயரச் சிலையும் நிர்மாணமாகுது. இவரோட ஒரு ஆஸ்ரமத்தை ரிஷிகேஷில் ( அனுமன் எட்டிப் பார்க்கிறார்னு சொன்னேனே ) பார்த்த நினைவு வந்தது.

ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro)வில் மலை முகட்டில் இருக்கும் ஏசு நாதர் சிலைக்கு ஒப்பாக இது இருக்கப் போகுதுன்னு ஒரு பேச்சு! ஆனால் அங்கே 130 அடி சிலை. நமக்கு? 108 என்பது ஒரு சூப்பர் பவர் உள்ள எண் என்பதால் அதே 108 அடி உயரச்சிலை..

அனுமனை தரிசனம் செஞ்சுக்கிட்டுத் திரும்பக் கீழே இறங்கினோம். இறக்கம் பரவாயில்லை. அவ்வளவு கஷ்டமில்லை எனக்கு. மசமசன்னு கண்ணுக்கு முன்னே இவனுங்க குறுக்கும் நெடுக்குமாப் போய்க்கிட்டுத்தான் இருந்தானுங்க.
கவனமா வச்சும் பாருங்க, ஒரு குழந்தையின் செருப்பைத் தூக்கிட்டு நடையைக் கட்டுவதை!

காருக்கு வந்து கண்ணாடி போட்டுக்கிட்ட பிறகுதான் சுற்றுப்புறமே தெரிஞ்சது:-))))) மலைச்சரிவுகளில் ஓங்கி உலகளக்கும் தேவதாரு மரங்கள் எக்கச்சக்கம். சாலையை ஒட்டி கைக்கு எட்டும் விதமா நெடுநெடுன்னு நிக்குது ஒவ்வொன்னும். ரோடோடெண்ட்ரோன் செடிகள் எல்லாம் (Rhododendron) மரங்களா வளர்ந்து ரத்தச்சிகப்புப் பூக்களுடன் அங்கங்கே. கிளம்பி நம்ம வண்டி பார்க் செஞ்ச இடத்துக்கு வந்து இறங்கியாச்சு. மணி சரியா நாலடிக்க அஞ்சு நிமிசம்.

நல்ல தரமான மரங்கள் கிடைப்பதால் ஃபர்னிச்சர் செய்யும் வேலைகள் கனஜோராய் நடக்குது. வழியில் அங்கங்கே சோஃபா செட்டுகளும் நாற்காலிகளும் விற்பனைக்குத் தயாரா குவிஞ்சு கிடக்கு.
ஷிம்லாவை ஸ்மோக் ஃப்ரீ சிட்டியா போனவருசமே ஆக்கிட்டாங்களாம். ஆனா..... கடைகளில் சிகெரெட் விற்பனை நடப்பதைப் பார்த்தேன். நம்ம சனங்க அடங்குதா என்ன:(
மால் ரோடில் செர்ரி, ஆப்பிள், ப்ளம்ஸ்ன்னு வச்சு விக்கறாங்க. தேங்காய்ச்சில்லுதான் என்னைக் கவர்ந்துச்சு:-)))

ஷிம்லாவுக்கு டாட்டா சொல்லிட்டு மலை இறங்க ஆரம்பிச்சோம். நகரைவிட்டு ஒரு பத்து கிலோ மீட்டர் வெளியே வந்தவுடன் சாலையின் ஓரங்களில் நீலப்பூக்கள். ரஸ்ட் நிறப்பூக்கள் உள்ள மரங்கள் அங்கங்கே கண்ணுக்குக் கவர்ச்சியாப் பூத்துக் குலுங்குதுங்க. ஒரு இலைன்னா ஒரு இலை இல்லை. எல்லாம் பூக்கள் மட்டுமே! வண்டி போகும் வேகத்திலும் சாலை இருக்கும் அழகில் குலுங்கும் அழகினாலும் எடுத்த படங்கள் ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை:( (அதான் ஒன்னு சுட்டேன்.)
இப்போ குல்மோஹர் (மயில் கொன்றை) சீஸன், ஆனால் ஷிம்லாவில் ஒரு குல்மோஹரையும் காணோம். சண்டிகரில் ஊர் முழுக்கப் பூத்து நிக்குது. வண்டியின் குலுக்கலால் வாந்தி வர்றமாதிரி வயித்துலே சங்கடம். பேசாமக் கண்ணை மூடித் தூங்கிட்டேன். ஆனாலும் அப்பப்பக் கண் முழிச்சுப் பார்க்கும்போது சில பாலக் நாத் கோவில்கள் கண்ணில் பட்டன,
டிம்பர் ட்ரெய்ல் Timber Trail heights) (யார்ட்லே இருந்து ரோப்வே வேறொரு மலை உச்சி ரிஸார்ட்டுக்குப் போகுது. முந்தி ஒரு சமயம் நம்ம கிவியன் சொல்லி இருந்தார், 'அதுலே போய் ஒரு டீ குடிச்சுட்டு வா'ன்னு! போயிட்டாலும்......
(படத்தைப் பெருசு பண்ணிப்பார்த்தால் ஒருவேளை ரோப்கார் கண்ணுக்குத் தெரியலாம்!)

Dதரம்பூர் வந்தவுடன் இங்கே காஃபி டே இருக்குன்னு சொன்ன கோபாலை, உங்களுக்கு எப்படித் தெரியுமுன்னா.... காலையில் போகும்போது பார்த்து வச்சுக்கிட்டேன்னார். என் தங்கம்:-)

ஒரு கப்புச்சீனோ குடிச்சுட்டுக் கிளம்பி கல்கா வந்து வளைவில் இருக்கும் காளி மந்திருக்கு ஒரு நமஸ்காரம் செஞ்சுட்டு வீடு வந்து சேர்ந்தப்ப மணி 7.30.

'மதர்ஸ் டே முடிஞ்சுருச்சு'ன்னார் கோபால். Dதானிக்கு ஏமி அர்த்தமு? 'ராத்திரிக்கு எதாவது ஆக்கிப் போடு' என்பதோ?????

24 comments:

said...

நேரில் சென்று பார்த்து வந்ததைப் போன்றதொரு பகிர்வு.

said...

அட ஷிம்லா விசிட் மூணு பகுதியிலேயே முடிஞ்சிடுச்சே!...

டிம்பர் ட்ரெயில் கூட நல்லா இருக்கும். ரோப்வே யில் உட்கார்ந்த படி அதலபாதாளத்தினையும், மலைகளையும் பார்த்தபடி செல்வது ஒரு நல்ல அனுபவம். :)

said...

'நீ ரொம்ப அன்ஃபிட்'ன்னு மூச்சு வாங்கிக்கிட்டே சொன்ன கோபாலை...... போயிட்டுப் போகுது விடுங்க. ஆணாதிக்கம்தான். ரெண்டுபேருக்கும் எல்லா விதப் பொருத்தமும் ஒன்னா இருக்கே உயர் ரத்த அழுத்தம் வரை! இதுதான் மேட் ஃபார் ஈச் அதர்:-)


....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... இந்த குறும்பு பேச்சு போதுமே.....

said...

படங்களோடு, விரிவாக விளக்கங்களும் தந்து - பயணத்தில் உள்ள சிரமங்களையும் நகைச்சுவை உணர்வோடு வெளிப்படுத்தி - அருமையாக எழுதி இருக்கீங்க.

said...

அழகான படங்கள்.அருமையான விளக்கம். தேங்காய பத்தைகள் என்ன கலை நேர்த்தியாக பூக்குவியல் போல அடுக்கியிருக்கிறார்கள்.
சிரத்தையான பகிர்வுக்குப் பாரட்டுக்கள்.

said...

நல்ல விரிவான பதிவு.


அனுமன் சஞ்சீவிமலையுடன் வந்து இறங்கிய இடம் "ராம் பொட" என்றும் சொல்கிறார்கள். இப்பொழுது "றம்பொட" எனஅழைக்கப்படுகிறது. இங்கு அனுமனுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு கோயில் அமைக்கப் பட்டுள்ளது.

said...

அருமையான பதிவுகளுக்கு தங்களுக்கு "DOCTOR" பட்டம் தரலாம்.அப்பதான் எனக்கு "HELPER" பட்டமாவது கிடைக்கும்.--பத்மா

said...

வாங்க பத்மா.

டாக்டரா????? நோ ஒர்ரீஸ். ஸ்டெத் ஒன்னு வச்சுருக்கேன்.
அதென்ன ஹெல்ப்பர்? டாக்டருக்கு நர்ஸ் வேணாமா?

போகட்டும். நான் டாக்டருன்னா நீங்க ஜூனியர் டாக்டர். சரியா:-)))))

said...

உங்க கூடவே நாங்களும் வந்த உணர்வு.பகிர்வுக்கு நன்றி.

said...

கோட்டை பற்றி அறிய ஏக்கம் வருகிறது. எமது ஊரிலிருந்த ஒரே யாழ் கோட்டையும் போரினால் சிதைந்து கிடக்கிறது. படங்களும் கட்டுரையும் அருமை.

said...

வாங்க Food. ( என்னங்க இப்படிப் பேரை வச்சுருக்கீங்க? )

முதல் வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதலபாதாளம் பார்ப்பது அருமையான அனுபவம்தான். முந்தி ஒரு சமயம் இத்தாலி காப்ரி ஐலண்ட் போயிருந்தப்ப இப்படிப் போனோம். அது இன்னும் கொஞ்சம் பயங்கரம்.கேபின் கார் எல்லாம் இல்லை. தனியா ஒரு பலகையில் உக்கார்ந்து காலைத் தொங்கப் போட்டுக்கிட்டுக் கம்பியைக் கெட்டியாப் பிடிச்சுக்கணும்! அந்தரத்துலே போகும்போது கீழே கண்ணை ஓட்டினால் வயிறு கலக்கல்தான்:-)

said...

வாங்க சித்ரா.

வாழ்க்கையில் 'ரசம்' இதுதானே:-)))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஆமாங்க. ரொம்ப அழகா இருந்துச்சு. வாங்கித் தின்னதான் மனசு வரலை:(

உங்களை ராஜின்னு கூப்புடலாமா செல்லமா?

said...

வாங்க மாதேவி.

உங்க நாட்டுலே சீதை இருந்த அசோகவனம் கூட இப்ப ஒரு சின்னக் கோவிலா இருக்காமே. தோழி போயிட்டு படம் எடுத்துவந்து கொடுத்தாங்க.

ராவணன் மாளிகை இருந்த இடமும் இருக்கணுமே? இருக்கா?

said...

வாங்க பத்மா.

டாக்டரா????? நோ ஒர்ரீஸ். ஸ்டெத் ஒன்னு வச்சுருக்கேன்.
அதென்ன ஹெல்ப்பர்? டாக்டருக்கு நர்ஸ் வேணாமா?

போகட்டும். நான் டாக்டருன்னா நீங்க ஜூனியர் டாக்டர். சரியா:-)))))

said...

வாங்க டொக்டர் ஐயா.

போர் என்றாலே அழிவுதான்:(

இப்படி அழகுள்ள இடங்களை எப்படித்தான் சிதைக்க மனம் வருதோ:(

said...

Lakshmi has left a new comment on your post "ஷிம்லா ஸ்பெஸல் (தொடர்ச்சி.... 2)":

உங்க கூடவே நாங்களும் வந்த உணர்வு.பகிர்வுக்கு நன்றி.

said...

வடுவூர் குமார் has left a new comment on your post "ஷிம்லா ஸ்பெஸல் (தொடர்ச்சி.... 2)":

அப்பாடியோவ்! இப்ப சிம்லா பக்கமா? கொஞ்ச நாள் கழித்து வந்து பார்த்தா எங்கோயோ போய்விட்டீர்களே!

said...

வாங்க லக்ஷ்மி.

ப்ளொக்கர் குழப்பத்தால் உங்க பின்னுட்டத்தைக்ல் காப்பி அண்ட் பேஸ்ட் செஞ்சு போட்டுருக்கேன்.

எல்லாம் நான் பெற்ற இன்பம் வகை:-)))

said...

வாங்க குமார்.

ராஜஸ்தான் சூடா இருக்குன்னு நடுவே ஒரு மூணு இடுகை ஜில்ஜில் ஷிம்லாவுக்கு:-))))

said...

அனுமன்
கூடவந்தவர்களோட சந்ததியாமா:)
நல்லாவே செருப்பத் தூக்கிட்டு ஓடுது.
எத்தனை கதை ஒரு கட்டுரைக்குள்ள துளசி!
படமெல்லாம் வழக்கம் போல சூப்பர். கீக்கனும்னு நினைச்சேன். இங்க யாரும் அனுமன் ஆவேசம் கொண்டு
சாமி வந்து ஆடலியா
:)

said...

படிச்சுட்டேன். 'அயோத்தியை விட்டு வெளியே வந்ததுமே', மற்றும் 'மேட ஃபார் ஈச் அதர்' வரிகளில் சிரித்தேன். சுவாரஸ்யமான அனுபவம்.

said...

வாங்க ஸ்ரீராம்.

இன்னும் ஒரு நாள் அங்கே தங்கி இருந்தால் சுவாரசியமான விஷயங்கள் பலதும் கூடுதலாக் கிடைச்சுருக்கும்.

போதுமென்ற மனமேன்னு பல சமயங்களில் இருக்கவேண்டியதாப் போயிருது!

வருகைக்கு நன்றி.