Tuesday, November 29, 2011

சீத்தலை சாத்தள் (புதிர்- விடை)

பின்னூட்டங்களில் விதவிதமான ஐடியா கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இதுக்கெல்லாம் கூடப் பயன்படித்திக்கலாமான்னு ஒரே வியப்புதான்:-)

சரியான விடையை ஒருத்தர் சொல்லி இருக்காங்க. படம் பாருங்க.


ஏஞ்சலீன் அவர்களுக்கு எல்லாருமாச் சேர்ந்து ஒரு 'ஓ' போடுங்க!!!!!!

ஓ ஃபார் Onion:-)

நகரவிடாமல் பிடிச்சு வச்சுக்கிட்டு நறுக்கித் தள்ளிறலாம். ரெண்டா வெட்டித் தோல் உரிச்சதும் ஒரே அமுக்:-)

22 comments:

said...

சூப்பர்:))! கிச்சன் உபகரணம் என சொன்ன எனக்கு 10 மார்க்(நூற்றுக்கு)!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அட....என்னங்க வெறும் க்ரேஸ் மார்க் கேட்டுக்கிட்டு?

கிச்சன் உபகரணம் என்று சொன்னவங்களுக்கு எல்லாம் அம்பது மார்க்ஸ்.

ரொம்ப தாராளமா இருக்கேன். நறுக்கும்போது அவ்வளவா கண்ணீர் வருவதில்லை. வெங்காயத்துக்கும் கண்ணுக்கும் தூரம் கூடுதல்:-)

said...

ஐம்பதா. நன்றி நன்றி:)!!

உபயோகமான கருவி. இங்கே கிடைக்கிறதா தெரியவில்லை. உரித்து ஃப்ரிஜ்ஜில் ஒரு மணி போல வைத்து கட் செய்தால் கண்ணீர் வருவதில்லை. ஃப்ரஷாக செய்யும் போது இது இருந்தால் தேவலாம்தான்.

said...

//கிச்சன் உபகரணம் என்று சொன்னவங்களுக்கு எல்லாம் அம்பது மார்க்ஸ்//

அப்ப அடுக்களைக்கருவின்னு தமிழ்ல சொன்னவங்களுக்கு எம்பது மார்க்காவது கிடைக்குமா டீச்சர் :-))

நாலஞ்சு வெங்காயங்களை வலைப்பைகள்ல போட்டு ஃப்ரிஜ்ஜில் வெச்சுட்டா கண்ணீர் வராம நறுக்கலாம். நான் வி ஸ்லைசர் உபயோகப்படுத்தறதால இந்தக் கருவி இது வரைக்கும் தேவைப்படலை. அடுத்த தடவை ஹைப்பர் சிட்டி போனாப் பார்க்கணும் :-))

said...

ஏஞ்சலினுக்கு ஒரு ஓ!!!!

கிச்சன் உபகரணமா! என்னென்னமோ நினைச்சுகிட்டு இருந்தோம்.

வெங்காயத்தை தோல் உரிச்சுட்டு தண்ணீரில் அஞ்சு நிமிஷம் போட்டு எடுத்து நறுக்கினா கண்ணு எரியாது.

said...

:)

said...

அட இப்போதான் கொஞ்சம் நிம்மதி.... :)

said...

நல்ல கருவி! எங்கே கிடைக்கிறது?

said...

உபகரணம் சூப்பர்

said...

ஏஞ்சலினுக்கு ஒரு ஓ!!!!

சொல்லி விட்டேன்.

வெங்காயத்தை நகர விடாமல் செய்யவா! நன்றாக இருக்கிறது.

said...

தங்களின் பிஜித்தீவு படித்தேன் ... அருமை ...நன்றி.

said...

ராமலக்ஷ்மி,

இது கண்ணீர் தடை உபகரணம் இல்லைப்பா. நழுவறதை பிடிச்சு ஒரு இடத்தில் உக்காரவைப்பதற்கு:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

இது என்ன தமிழ்ப்படமா? (வரி)விலக்கு கொடுக்க:-)

பிடிச்சு வச்சுக்கற கருவிப்பா இது:-)

said...

வாங்க கோவை2தில்லி.

அமுக்கிப்பிடிக்கும் கருவிங்க இது.

அண்ணன் மகள் வெங்காயம் நறுக்கும்போது கூலிங் க்ளாஸ் மாட்டிக்குவாள். அப்ப கண்ணு எரியாதாம்:-)

said...

வாங்க புதுகை அப்துல்லா.

சிரிப்பாணிக்கு நன்றி:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்கள் நிம்மதி(யே) எங்கள் மகிழ்ச்சி:-)

said...

வாங்க வெற்றிமகள்.

இங்கே உள்ளூர் கடையில் வாங்கினதுதான். ஒரு சமயம் நம்ம வலைஉலகத்தோழி ஒருத்தர் 'விரல்காப்பு'ன்னு ஒன்னு அங்கே அஸ்ட்ராலியாவில் சூப்பர்மார்கெட்டில் கிடைக்குதுன்னு போட்டுருந்தாங்க. ஆஸியில் கிடைச்சால் நியூசியிலும் கிடைக்குமேன்னு தேடுனதில் ஆப்ட்டது இதுதான். அவுங்க சொன்ன ஐட்டம் கிடைக்கலை கேட்டோ:(

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இதைவிட சூப்பரா ஒன்னு இருக்கு. சதக்ன்னு குட்டிக்குட்டி சதுரமா விழும்.ஆனால் அதுலே வெங்காயம் வச்சு அழுத்தறதுக்குக் கையில் பலமில்லை:(

said...

வாங்க கோமதி அரசு.

நலமா?
குளிருக்கு முன்னால் கிளம்பணுமா?????

said...

வாங்க சிவஷன்முகம்.

நலமா? ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி.

ஃபிஜி ஏமாற்றம் தரலைதானே:-)))))

said...

தோத்துவிட்டேனே :((

ஆகா கிச்சன் உபகரணம். அதனால் அது எனக்குத்தான் சரிப்படும் இங்கே அனுப்புங்க :)))))

said...

வாங்க மாதேவி.

நீங்களும்(என்னைப்போல்) கேட்ஜெட் நட்டா? :-))))))))