Tuesday, January 24, 2012

ஒரு முகம்தேட ....த்ரீ முகம் கிடைச்சது! (கப்பல் மினித் தொடர் 2)

நம்ம பக்கங்களில் துறைமுகத்துக்குள்ளே போய் வர ஏதொரு நிபந்தனைகளும் கெடுபிடிகளும் 'அப்போ' இல்லை. மீன்பிடிக்கறேன்னு ஒரு நூலைக் கையில் பிடிச்சுக்கிட்டுப் போய் வார்ஃப் ஓரத்தில் உக்காந்துக்கலாம். ஒரு சமயம் எனக்கு 9 கேட் ஃபிஷ் கிடைச்சது. ஆறு இஞ்சுக்கு மேல் நீளமுன்னா எடுத்துக்கலாம். சின்ன சைஸுன்னா திரும்பத் தண்ணீரில் விட்டுடணும். நம்ம 'கேட்ஸ்'க்குப் பிடிக்குமுன்னு ஆசைஆசையாக் கொண்டுவந்தேன். மோந்து பார்த்துட்டு ச்சீன்னு (என் முகத்தில்) துப்பிட்டுப்போனது நம்ம கப்பு:-)
படம் இடது பக்கம்: டன்னல் கண்ட்ரோல் பில்டிங். நிலநடுக்கம் காரணம் கட்டிடத்தின் முகப்பும் கற்பாறை விழுந்து பழுதாகிக்கிடக்கு. டன்னலுக்குள்ளும் கற்பாறைகள் விழுந்ததால் மூணுநாட்கள் மூடி வச்சுருந்து பழுது பார்த்தாங்க. மின்சார சப்ளை நின்னு போயிருச்சு. அவசர நடவடிக்கையா உள்ளே மின்சாரம், எக்ஸாஸ்ட் ஃபேன் எல்லாமும் பேக் அப் பவர் ஜெனெரேட்டர் உபயத்தால் நடந்துச்சு. இந்தப் படம் எடுத்த சமயம் எல்லாம் நார்மல்(டச் வுட்)


ஏறக்கொறைய ஒரு கூட்டமா இந்திய முகங்களைப் பார்த்ததும் திகைச்சுப்போயிட்டேன். நாலு பேர் இருந்தால் கூட்டம் என்று கொள்க என்பது எங்கூர் நியதி. சரவணன், திரு, ஜெயராமன் என்ற மூவரணிக்கு எங்க மூணு பேரையும் பார்த்ததும் பூவாய் மலர்ந்தன முகங்கள். மூணும் மூணும் ஆறுன்னு சிரிச்ச ஆறுமுகங்கள்
படம்:: துறைமுகத்துக்குள்ளே


'இந்தத் தமிழ்ப் படங்கள் எல்லாம் ஏற்கெனவே பார்த்ததா' ன்னு என் முதல் கேள்வி. 'அட! புதுசுங்க. நாங்க யாரும் பார்க்கவே இல்லை. ஊரைவிட்டு வந்து ஒன்னரை வருசமாகுது'ன்னாங்க. இங்கிருந்து திரும்பிப் போகும்போது இன்னும் சில நாட்டுக்குப்போய் சரக்கை இறக்கி ஏத்திக்கிட்டு சிங்கப்பூர் வழி சென்னைதானாம். அப்புறம் ஆறு மாசம் லீவு. பேசும்போதே வரப்போகும் ஜாலியை எதிர்நோக்கும் பரவசம் கண்ணில் தெரிஞ்சது.

கப்பலின் கேப்டன், இன்னும் ரெண்டு அதிகாரிகள் தவிர ஒரு பிலிப்பைன் சமையல்காரர். அப்புறம் இந்த ஒரு ஏழுபேர் ஆஹா.... அப்ப பாக்கி நாலு பேர் எங்கே? கப்பல் நங்கூரமடிச்சு நின்னாலும் எஞ்சின் ஓடிக்கிட்டே இருக்கணுமாம். அப்பதான் மின்சாரம் கிடைக்குமாம். ரெண்டு பேர் அந்த ட்யூட்டியில் இருக்காங்க. இன்னும் ரெண்டு பேர் தூக்கம். நைட் ட்யூட்டி பார்க்கணுமாம்.

இந்த ஏழு பேரில் ஒருவர் வடக்கிந்தியர். பாக்கி ஆறு பேரும் தமிழர். நாலு தமிழ்நாடு, ரெண்டு இலங்கை.

'பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு. அநேகமா இன்னும் ரெண்டொரு வாரத்துலே துறைமுகத்துக்குள்ளே விட்டுருவாங்க'ன்னு ஜெயராமன் சொன்னார். இவர் ஒரு அதிகாரி. chief Officerன்னு சொன்னாங்க. சரவணன் ரேடியோ ஆபீஸராம். இந்த ரேங்க் எல்லாம் என்னத்தைக் கண்டேன்? அப்போ நாம் பதிவர் ஜாதி இல்லை பாருங்க. அதனால் முழுசா விவரம் ஒன்னும் கேட்டுக்கலை:( மொதநாளே தொணதொணக்க வேணாமுன்னு கொஞ்சம் அடக்கிப்பேசிட்டு, படங்களைக் கொடுத்துட்டு, நம்ம வீட்டுக்கு வாங்கன்னு அழைப்பும், எந்த பஸ், எந்த ஸ்டாப்புன்னு விவரம் எல்லாம் விளக்கிட்டு நாங்க திரும்பிட்டோம்.

தொடர்ந்துவந்த சனிக்கிழமை, 'உங்க வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கோமுன்னு ஃபோன் பண்ணிச் சொன்னாங்க.' மணி ஒரு பத்து இருக்கும். பகல் சாப்பாடு நம்மோடு இருக்கட்டுமேன்னு கொஞ்சம் கூடுதலா சமைக்க ஆரம்பிச்சேன். பகல் மணி மூணாகுது...இதுவரை இவுங்க வந்து சேரலை:( என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு மனசுலே பதற்றம். அப்ப இந்த செல்ஃபோன் எல்லாம் நம்ம வீட்டில் புழக்கத்தில் வரலை. கோபால் ஆஃபீஸ்லேகூட எல்லாருக்கும் பேஜர் கொடுத்தாங்களே தவிர நோ செல்:(

வாசலுக்கும் உள்ளுக்குமா நடந்துபோய்ப் பார்த்துக்கிட்டு இருக்கோம். எங்கேன்னு போய்த் தேட? நாலுமணி போல வந்து சேர்ந்தாங்க மூவர். நம்ம சரவணனும், ஜெயராமனும், இன்னொரு புது முகமும். லிட்டில்டன்னில் இருந்து டவுனுக்கு வந்தவரைக்கும் எல்லாம் சரி. ஆனால் டவுனில் நம்ம வீட்டுக்கு பஸ் எடுக்காம கொஞ்சம் சுத்திப்பார்க்கலாமுன்னு போனதில் வழி தவறி, நேரம் ஓடி இருக்கு!

பெரிய பிஸ்கெட் பாக்கெட் ஒன்னு கொண்டுவந்து மகளுக்குத் தந்தாங்க. 'எதுக்கு இதெல்லாம்? அனாவசிய செலவு'ன்னு கடிந்தேன். கப்பலில் சாப்பாட்டுக் குறைவு ஒன்னும் இல்லையாம். 'அதான் உங்க ஊர் ஜனங்க பொட்டிபொட்டியா தின்பண்டங்கள் அனுப்புனீங்களே' என்றார் ஜெயராமன்.

எப்போ சாப்பிட்டாங்களோ என்னவோன்னு உடனே சாப்பாடு பறிமாறினேன். வத்தக்குழம்பு பார்த்ததும் நம்ம ஜெயராமனுக்குக் கண்ணுலே கரகரன்னு தண்ணீர். சரவணனுக்கு சாம்பார் ரொம்பப்பிடிச்சுப் போச்சு. இலங்கைக்காரர் நகுலன் ஒன்னும் கதைக்காமல் சாப்பிட்டார்.

நம்ம வீடியோ ஷெல்ஃபைப் பார்த்ததும் நகுலனுக்கு ரொம்ப மகிழ்ச்சியாப் போயிருச்சு. நம்ம படக் கேஸட்டுகளைக் கொடுத்துட்டு இன்னும் நாலைஞ்சு எடுத்து வச்சுக்கிட்டார். பார்க்காத படங்கள் நிறைய இருக்குன்னும் சொன்னார்.

கப்பலை எப்போ உள்ளே விடுவாங்கன்னதுக்கு, இன்னும் சரிவரத் தெரியலையாம். கப்பலை கைது செஞ்சு வச்சுருக்காங்களாம். அடராமா?
கப்பலைக் கூடவா? ஏன்? எதுக்கு?

போன ரெண்டு முறை இங்கே வந்துட்டுப்போன கப்பல்தான் இது. அப்போ வேற க்ரூ இருந்துருக்காங்க. பொதுவா சாமான்களை இறக்க, ஏத்தன்னு சர்வீஸ் செய்யும் துறைமுகத்துக்கு ஒரு கட்டணம் கட்டணும் அதைக் கடந்த ரெண்டு முறையும் கட்டாம நைஸாக் கம்பி நீட்டிருச்சு கப்பல். இந்த முறை வாகா வந்து மாட்டிக்கிச்சு.

கப்பல் உரிமையாளருடன் பேச்சு வார்த்தை நடக்குது. அவர் அதுக்கெல்லாம் ஏற்கெனவே பணம் கொடுத்துட்டேன் அப்போ இருந்த கப்பல் அதிகாரிகளிடம். இன்னொரு தடவை கொடுக்க முடியாதுன்றாராம். அடப்பாவமே! யாரு நடுவிலே ஆட்டையைப் போட்டா?

ஏழு மணிக்கு முன் துறைமுகத்துக்குத் திரும்பணுமாம். இவுங்களைக் கூட்டிப்போய் கப்பலில் விடும் துறைமுக நிர்வாகத்தின் சின்னப்படகு அதுக்குப்பிறகு வேலை செய்யாதாம். மணி ஆகுதேன்ற பதைபதைப்பில் ' பஸ் பிடிச்சுப்போனால் ரொம்ப நேரமாகும். நான் போய் விட்டுட்டு வர்றேன்'னு கோபால் நம்ம வண்டியை எடுத்தார். அஞ்சு ஸீட் டொயோடா. இங்கெல்லாம் அஞ்சுன்னா அஞ்சு. அதுக்குமேல் அடைச்சுக்கிட்டுப் போகமுடியாது. கப்பலில் இருக்கும் மற்ற நண்பர்களுக்கு இருக்கட்டுமுன்னு குழம்பு, பொரியல், கூட்டுன்னு பார்ஸல் செஞ்சு கொடுத்தேன். ரைஸ் குக்கரில் சோறு ஆக்கிக்குவோம் என்றார் சரவணன்.

எப்பப்ப முடியுமோ அப்பெல்லாம் வந்து போங்க. வர்றதுக்கு முன்னால் ஒரு ஃபோன் அடிங்கன்னு சொன்னேன்.

அஞ்சாறு நாளைக்கொருமுறைன்னு யாராவது ரெண்டு பேர் வந்து போய்க்கிட்டு இருந்தாங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம். சாப்பாடெல்லாம் வேணாமுன்னும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நமக்கு மனசு கேக்குதா? கொஞ்சம் கூடுதலாச் சமைச்சால் ஆச்சுன்னு குழம்பு, ரசம். கறின்னு கொடுத்து அனுப்புறதுதான். மூணு வாரம் ஆச்சு. இன்னும் கப்பலை உள்ளே விடலை. நல்லவேளையா இது சரக்குக் கப்பல் என்றதால் ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லைதான். (ஆமாம். இந்தக் காலத்துலே யார் கப்பலில் பயணம் போறாங்க? மாசக்கணக்கா பயணம் பண்ண காலம் மாறிப்போச்சுல்லே!)

இதோ விட்டுருவாங்கன்னு இருந்த 'சரவணன் அண்ட் கம்பெனி'க்கும் ஆரம்ப கால உற்சாகம் படிப்படியாக் குறைய ஆரம்பிச்சது. இவுங்களுக்கு இப்படி நடப்பது முதல் அனுபவமாம். முதலாளி எதுக்கும் ஒத்துவரலையாம். என்னடா இப்படி வந்து கண்காணாத தேசத்தில் மாட்டிக்கிட்டமேன்னு இருக்கு போல!

கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாகுமுன்னு ஆறுதலாப் பேச்சுக் கொடுத்த ஒரு நாள், அதிர்ச்சியா இன்னொரு தகவல் சொன்னார் சரவணன்!

தொடரும்.............:-)
சின்ன ஊர்தான். ஆனாலும் நிலநடுக்கத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கு. கண்டெயினர்களை வச்சே இங்கேயும் பிஸினஸ் ஏரியாக்களை சுமாராச் சரிபண்ணி இருக்காங்க.

PIN குறிப்பு: நிறைய படங்கள் எடுத்தாலும் இப்ப நம்ம தேவைக்கு எதுவும் கண்ணுலே ஆப்டலை. ஏகப்பட்ட ஃபோட்டோ ஆல்பத்துலே, இது எங்கே ஒளிஞ்சுருக்கோ? என்ன ஆனாலும் இந்த டிஜிட்டல் ஃபோட்டோ சௌகரியம் வராது கேட்டோ!


முந்தாநாள் போய் சில படங்கள் உங்களுக்காக எடுத்து வந்தேன். அவை பதிவில் இடம் பெறும்.
படம்: துறைமுகத்துக்குள்ளே

19 comments:

said...

படங்கள் எல்லாமே நல்லாயிருக்குங்க.

சரவணன் என்ன அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்னு தெரியலையே..... சீக்கிரம் சொல்லிடுங்க டீச்சர்.

said...

இப்படி திரிலிங்கா தொடரும் போட்டுவிட்டீங்களே!! அப்பறம் என்ன ஆச்சு??

said...

இந்தப் பதிவு எனக்குக் கொசுவத்தி சுத்துது. :)

ஒரு வாட்டி அமெரிக்கா போயிருந்தப்போ ... அமெரிக்கா ஒரு வாட்டிதானே போயிருக்கேன். ஹிஹி.

போனது ஜெர்மன் டவுன். ஐரோப்பாவைப் பாத்த கண்ணுக்கு அமெரிக்கா பிடிக்கலை. பெரிய பட்டிக்காடு மாதிரி இருக்கு. கடைல கெடச்சத வெச்சு ஏதோ சமைச்சு ஏதோ சாப்டுக்கிட்டிருந்தேன். கார் வேணுமாம் அங்கெல்லாம். நான் போனதோ 50 நாளைக்குதான்.

அப்ப ஆபீஸ்ல ஹேமான்னு ஒருத்தங்க அறிமுகம் ஆனாங்க. நண்பர்கள் நாலு பேர வீட்டுக்குச் சாப்பிடக் கூப்டாங்க.

போனா... வத்தக்கொழம்பு, சாம்பாரு, ரசம், சோறு, கூட்டு, பொரியல், தயிர், ஊறுகாய். எனக்குக் கண்ணெல்லாம் தண்ணி.

அவங்களே அதெல்லாம் அடிக்கடி பண்றதில்லையாம். சின்னப்பசங்க. அமெரிக்கர்களாகவே வளர்ராங்க. அதுனால நம்மூர்ச் சாப்பாடெல்லாம் இந்த மாதிரி எப்பயாச்சுந்தான்.

போறப்போ அவங்க வீட்டுக்காரர் தேடியெடுத்து ஒரு பழைய அம்புலிமாமா குடுத்தாரு. மறக்கவே முடியாது. :)

said...

suspense ஆ? சரிதான்.....

said...

ஆயிரம்தான் ச்சீஸும் பட்டருமா ராஜபோகமா சாப்பிட்டாலும் ஒரு வத்தக்குழம்புக்கு ஈடாகுமா :-))

சஸ்பென்ஸ் நாளை உடையுமா??????

said...

இன்றுதான் இந்தத் தளத்துக்கு வந்தேன். பத்தொன்பது வருடத்துக்கு முந்தைய நிகழ்வுகளையும் நேற்று நடந்ததுபோல் நினைவில் வைத்து எழுதுவது மிகப்பெரிய விஷயம். சுவைபடவும் எழுதுகிறீர்கள். தொடர்ந்து வருவேன்.

said...

கப்பல் தொடரின் இரண்டாம் பாகத்திலும் சஸ்பென்ஸ் தொடர்கிறது.... :)

வற்றல் குழம்பு - வாசம் இதுவரை வந்துவிட்டது.... :))))

சரவணன் சொன்ன அதிர்ச்சித் தகவல் என்ன? எதிர்ப்பார்ப்புடன்....

said...

நண்பர்கள் அனைவருக்கும் இந்தியக்குடியரசு தின வாழ்த்து(க்)கள்..

said...

வாங்க கோவை2தில்லி.

அவ்ளோ அதிர்ச்சி இல்லைங்க. இன்னிக்கு எழுதும் பதிவிலே சொல்லிடறேன்.

said...

வாங்க ராம்வி.

சரவணன் சொன்னது அடுத்த பதிவில்.

said...

வாங்க ஜீரா.


பழகுன சமாச்சாரங்களைப் பலநாள் கழிச்சுப் பார்த்தால்..... கண்ணுலே தண்ணீர்தான்.

நீங்க அம்புலிமாமான்னதும்தான் எனக்கும் ஞாபகம் வருது. ஜெயராமன் கொஞ்சம் தமிழ்ப் பத்திரிகைகள் (அதுவரை நாம் பார்க்காத இனங்கள்)கொண்டுவந்து கொடுத்தார். அப்போ நம்ம வீட்டில் குமுதமும் ஆவியும் மட்டும் ஏர்மெயிலில் வாராவாரம் வந்துக்கிட்டு இருந்துச்சு.

said...

வாங்க சித்ரா.

ச்சும்மா....ஒரு சஸ்பென்ஸ் வச்சுப் பார்த்தேன். கேட்ட சேதி கொஞ்சம் சோகம்தான்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆமாங்க. 38 வருசமாக் குழம்பு வச்சே கை ஒடஞ்சு போச்சு:-) எண்ணிப்பார்த்தால் ஒரு ஏழெட்டுவகைதான் . அதையே மாத்திமாத்திச் செஞ்சு முழுங்குனாலும் அது இல்லாட்டா ஆகுதா?????

சஸ்பென்ஸை உடைச்சுறலாம். நோ ஒர்ரீஸ்:-)

said...

வாங்க கீதா.

முதல் வருகைக்கு வணக்கமும் நன்றியும் . நலமா இருக்கீங்களா?

வாசிக்கத் தயாருன்னா சொல்லுங்க. நம்ம தளத்தில் வெறும் 1293 பதிவுகள்தான் இருக்கு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தேர்வுக்குப் படிக்காம இங்கே என்ன செய்யறீங்க?

இடையில் அஞ்சு நிமிட் ப்ரேக்கா? :-)))))

said...

ரொம்ப நாளைக்குப்பிறகு.

ஒரு வணக்கத்த வச்சுக்குறேன்.

said...

வாங்க ஜோதிஜி.

வலையின் வசதியே இதுதான். எத்தனை நாளானாலும் 'இருப்போம்'!!!!!

வருகைக்கு நன்றி.

said...

(ஜெய) ராமனுடன் நகுலனும் சேர்ந்து வந்தாரா :))

said...

வாங்க மாதேவி.

ராமாயணமும், மகாபாரதமும் இணைபிரியாத இதிகாசங்கள்!!!!