Sunday, January 01, 2012

இனிய வாழ்த்து(க்)கள் !!!!

பதிவுலக மக்கள்ஸ் அனைவருக்கும் 'ஆங்கில'ப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

வழக்கம்போல் முந்திரிக் கொட்டையாட்டம் புதுவருசப்பொறப்பு கொண்டாடியாச்சு. டேட் லைனில் இருக்கோமுன்னு ஊர் உலகத்துக்கு முன்னே எதுன்னாலும் செஞ்சுருவோம். இப்போ எங்களுக்கு டே லைட் சேவிங்ஸ் வேற இருப்பதால் இது நார்மல் டெலிவரி இல்லையாக்கும் கேட்டோ! சிஸேரியன்:-)))) சரியா ஒரு மணி நேரத்துக்கு முன்னே 'பிறப்பிக்கப்பட்ட' குழந்தை இந்த 2012.

ராத்திரி 12க்கு டிவி முன்னாலே வந்து நின்னு 'சொல்லிட்டானா சொல்லிட்டானா'ன்னு கேட்டால்...... யாருக்குத் தெரியும்? கடிகாரம் சொன்னா கேக்கமாட்டாராம். எல்லாத்தையும் டிவிக்காரன் வந்து சொல்லணும்! அவனும் கவுண்ட் டவுன் பத்துன்னு ஆரம்பிச்சு ஒன்னு முடிஞ்சதும் ரெண்டு நிமிசத்துக்கு பட்டாஸ் வெடிச்சு வாண/ன வேடிக்கை காட்டுனதும், அப்பாடான்ற நிம்மதியோடு சாமியறையில் இருந்த எனக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லிட்டு சாமியைக் கும்பிட்டுவிட்டு, அதுவரை எரிஞ்சுக்கிட்டு இருந்த 'அலங்கார விளக்கு'களை அணைச்சுட்டுப் படுக்கையில் போய் விழுந்தார். எண்ணி அஞ்சாவது நிமிசம், 'கச்சேரி' ஆரம்பம் ஆச்சு. பயங்கர ஆர்க்கெஸ்ட்ரா. எந்த நாட்டு இசைன்னு பிரித்து அறிய முடியலை எனக்கு:(

என் ரெண்டு கைகளிலும் இருக்கும் ஆள்காட்டி விரல்களைக் காதுகளுக்கு அடைப்பானாக்கி, 'கொஞ்சநாளா பதிவு ஏதும் எழுதலையே'ன்னு மனசுக்குள்ளே எழுதிப்பார்த்துக்கிட்டே கிடந்தேன். ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கு. ஒவ்வொன்னாச் சொல்ல ஆரம்பிக்கணும்.
வருசப்பிறப்பன்னிக்கு யானை வாங்குனா விசேஷமாம். பாலத்து ஜோசியர் சொன்னாரா? அவர் எதுக்கு? இதுக்கெல்லாம் நானே நல்லதுகெட்டது பார்த்துச் சொல்லிடமாட்டேனா? எனக்காக ஒன்னு சண்டே மார்கெட்டில் காத்து நின்னது ஞானக்கண்ணில் தெரிஞ்சதே:-)


போன ஞாயிறு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடுனப்ப கோபாலின் வகையில் ரெண்டு பேரும், மகளின் வகையில் மூவருமா இந்த எட்டு நாளில் சேகரிப்பு ஆறு.
ஜப்பான்காரர்களின் கலையான ஒரிகாமியில் செஞ்சதை அப்படியே சீனர்ஸ் வெள்ளைக் களிமண்ணில் செஞ்சு நியூஸிக்கு அனுப்பி, ஒரு இந்தியக்கிவியை வாங்க வச்சுட்டாங்கப்பா. இதுலே இது buy one get one free வேற! இப்பெல்லாம் மால்களிலேயே அங்கே வாங்கும் பரிசுப்பொருட்களுக்கு இந்த சீஸனில் மட்டும் Gift Wrap போட்டு அழகாப் பொதிஞ்சு கொடுத்துடறாங்க. அந்த ரெண்டில் ஒன்னு மகளுக்குக் கொடுத்துடலாமுன்னு ஐடியாவேற நான் கொடுத்தேன். போட்ட கணக்கு தவறலை. பொதியைத் திறந்து பார்த்த மகள் இது அம்மாவுக்குப் பொருத்தமான பரிசு என்று எனக்கே(!!!) திருப்பிக் கொடுத்தாள்:-))))))
மகள் கொடுத்த பொதியில் மூன்று மெட்டாலிக் யானைகள் முதுகில் மெழுகுத்திரி விளக்கோடு! கோபம் வேண்டாம். கொளுத்தமாட்டேன்னு அதுகளுக்கு வாக்குக் கொடுத்தேன்.
கொஞ்சம் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் வாங்கி நம்ம செல்லங்களின் மரத்துக்கு அணிவிச்சேன். லைவ் க்றிஸ்மஸ் ட்ரீ! சொல்லிவச்சதுபோல கிறிஸ்மஸ் லில்லீஸ் பூத்தது. மஞ்சள். நட்பின் வண்ணம்.
தோழி வீட்டில் கிறிஸ்மஸ் கொண்டாட அழைப்பு. லஞ்சு வேண்டாமுன்னு நாங்கள் வீட்டிலேயே சாப்பிட்டுட்டுப் போய் டிஸ்ஸர்ட்க்கு மட்டுமுன்னு ஒரு விஸிட்:-)

தின்னது செரிக்கன்னு வெறிச்சோடி இருக்கும் சிட்டி மாலுக்குள்ளே ஒரு நடை. சூரியகாந்திகளை அடுக்கி நட்டுவச்சு எல்லாம் ஒரே ச்மயத்தில் பூத்து நிக்குது. பார்க்க ஒரு அழகுதான்!வருசத்தில் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் எல்லாக்கடைகளுக்கும் விடுமுறை. எங்க பக்கங்களில் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு டிவியில் கமர்ஸியல் ஃப்ரீ டே! அத்தை வாங்கு இத்தை வாங்குன்னு விளம்பரம் ஒன்னும் இல்லாம நிம்மதியா இருக்கலாம்.
இன்னிக்கு இதுவரை நல்லகாலம். குலுக்கல் வெறும் ரெண்டே முறைதான். அதுவும் இப்போ ஒரு 14 மணி நேரமா கப்சுப். இப்படியே இருந்துட்டால் இனி எல்லாம் நலமே! சாயுங்காலம் கோவிலுக்குப்போய் அப்பீல் செஞ்சுக்கிட்டு வந்தால் ஆச்சு.

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை மீண்டும் சொல்லிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

என்றும் அன்புடன்,
துளசி.



42 comments:

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

யானைகள் அழகு:)!

said...

வாழ்வினில் துன்பங்கள் அகலும்
நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
ஆண்டிது பிறக்கிறது 2012.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்

said...

யானைகள்ன்னா எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அதனாலேயே பிள்ளையாரைப் பிடிக்கும். அழகுப் படங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் துளசியக்கா..

விளக்கேந்திய யானைகள் ஜூப்பரு.

said...

என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

said...

குலுங்காமல் இருக்க நாங்களும் பிரார்த்தித்து கொள்கிறோம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

விளக்கு ஏந்திய யானைகள் கண்ணைக் கவர்கின்றன...

உங்களுக்கும் உங்களவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் டீச்சர்.....

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்.

said...

உஙுகளுக்கும் புத்தாண்டு இனிய வாழ்த்து(க்)கள். அழகான Christmas tree, very eco friendly.

said...

டபால்ன்னு அலங்கார விளக்கணைச்சது எல்லாம் என்னமா நோட் செய்து இங்க குடுக்கிறீங்க.. ஹ்ம்.. அதெல்லாம் அப்படித்தான்..

விளம்பரம் இல்லாத நாள்...இங்க அன்னிக்குத்தான் ஓவர் விளம்பரம் ..

வாழ்த்துகள்.

said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர் ;-)

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா.

said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

said...

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பதிந்து கொள்ளுகிறேன்!
இரண்டு குலுக்கல் தானா. சரி. பூமாதாவுக்குக் கோபம் தணியட்டும்.
யானைகள் வெகு அழகு. உங்களைத் தேடி வருவதில் தான் யானைகளுக்கு அத்தனை ஆசை.
சத்தம் இல்லாத உறக்கம் கேட்டேன் என்று நானும் பாடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

said...

அழகு யானைகள் ஆறு!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

said...

பொதியைத் திறந்து பார்த்த மகள் இது அம்மாவுக்குப் பொருத்தமான பரிசு என்று எனக்கே(!!!) திருப்பிக் கொடுத்தாள்:-))))))

அருமையான பதிவு. அருமையான நகைச்சுவை.
எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா!

said...

படங்கள் மிக அருமையாக இருக்கு.

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், மேடம்.

said...

உங்களுக்கும் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துகள். லைவ் க்ரிஸ்மஸ் ட்ரீ சில பார்த்திருக்கேன். நல்ல ஐடியா. அது என்ன மரம்?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அழகை, அழகுன்னுதானே சொல்லணும்:-)))))

said...

வாங்க டொக்டர் ஐயா.

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது உண்மை.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கணேஷ்.

உங்க பெயரிலேயே 'யானைகளை பிடிக்கும்' என்பது வெளிப்படையாகத் தெரியுதே!

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

வாழ்வில் இனி ஒளி வீசும் என்று சிம்பாலிக்காச் சொல்றாங்க அந்த மூவர்:-))))

said...

வாங்க ஸ்டார்ஜன்.


வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கைலாஷி.

பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எப்படிப்பார்த்தாலும் யானை அழகுன்னு நிரூபிக்குதுங்க அதுகள்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க மதுரையம்பதி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க வெற்றிமகள்.

ஒரு சில வருசங்களுக்கு முன்னே(2007) திடீர்னு இந்த ஐடியா வந்துச்சு. வீட்டில் இருந்த அலங்காரங்களை மரத்தில் போட்டு வச்சேன். கழட்ட மனசில்லாமல் அப்படியே விட்டு வச்சுருந்தேன். தினம்தினம் தீபாவளின்னு இருக்கும்போது கணம் கணம் கிறிஸ்மஸ் இருக்கப்டாதா? ஹிஹி

அலங்காரம் ரொம்பப் பழசாப்போயிருச்சேன்னு இந்த வருசம் புதுசா வாங்கிக் கட்டி விட்டேன். முந்தி குக்கர் கேஸ்கட்(பழசு) வச்சுச் செஞ்ச கிறிஸ்மஸ் ரீத் காணாமப் போயிருக்கு. அதான் வாசலில் நாலு கண்ணாடி குண்டுகளைக் கட்டித் தொங்கவிட்டேன்.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கயலு.

பதிவர் என்ற குணாம்சத்தைக் காப்பாத்தணுமுன்னா எதையும் விடாம நோட் செஞ்சுக்கணும் யுவர் ஆனர்:-))))

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கோபி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க குமரன் தம்பி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க மீனாப்ரியா.

ஆஹா...ரொம்பநாளுக்கு ரொம்ப நாளு!!!!!

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க வல்லி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

அந்தப் பாட்டுலே நானும் பின்பாட்டாச் சேர்ந்துக்கறேன்:-))))

நண்பரின் குழந்தைகள் ஒருநாள் யானைகளை எண்ணி சொல்லப்போறோமுன்னு ஆரம்பிச்சுட்டு.....கடைசியில் கணக்குத் தப்பிப்போய் பேந்தப்பேந்த முழிச்சாங்க. குட்டிக்குட்டி யானைகளா இருக்கும் தாய்லாந்து படுக்கை விரிப்பைப் பார்த்ததும்.........பத்தாயிரமுன்னு சொல்லுச்சுங்க பிஞ்சுகள்:-)))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ரத்னவேல்.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க கவிநயா.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ராம்வி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ஜீவி.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க அப்பாதுரை.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

அது ஜாப்பனீஸ் நீடில் பைன் ட்ரீ. நல்ல தடிமனான ஊசிகள். இதோட பைன் கோனும் பூ மாதிரியே இதழிதழா முளைக்குது. அடுத்த வருசம் இந்த கோன்களை வச்சு புதுசா ஒரு அலங்காரம் செஞ்சு பார்க்கணும். நாலைஞ்சு கலரில் ஸ்ப்ரே கேன்ஸ் & கொஞ்சம் ஜிகினாத்தூள். வாங்கிக்கணும்.

கொஞ்சம் அபூர்வமான மரம் என்று தாவரநிபுணர் சொன்னார். அதனால் பழைய வீட்டை இடிச்சுக்கட்டும்போது இந்த மரத்தைக் காப்பாற்றி வச்சு மீண்டும் இடம் மாற்றி நட்டுக் கொடுத்தார். கொஞ்சம் கையைக் கடிச்சுருச்சுன்னாலும்...... வீட்டுக்கு வரும் தோட்டக்கலை ஆர்வம் உள்ளவர்கள் மரத்தைப் பாராட்டும்போது காலரைத் தூக்கிவிட்டுக்கறார் கோபால்:-)

said...

இனிய வாழ்த்துக்கள்.

வருட ஆரம்பத்திலே புதுவிருந்தாளிகள் பலரும் வீட்டில் கூடிவிட்டனரா பழையன புதியன எல்லோரையும் சேர்த்து ஒரு திருவிழாவே நடத்திடுங்க :))
கரும்புத்தோட்டம் வாங்கிடுங்க:)))

said...

வாங்க மாதேவி.

இதுவரை எப்பவும் வராத விருந்தாளி ஒருவர் எதிர்பாராத விதமா வந்துட்டார். எனக்குக் கையும் ஓடலை காலும் ஓடலை. அவரை எப்படி உபசரிக்கணுமுன்னு சட்னு தோணாமக் கொஞ்சம் குழம்பித்தான் போயிட்டேனாக்கும்:-))))

கரும்புத்தோட்டம் 'வாங்கி' அதைக் கதையாவும் எழுதி வெளிவந்துருச்சுப்பா:-)))