Wednesday, February 15, 2012

அண்மைக்காக அலைந்தேன்!

பிட்டுக்கு 'படம்' சுமக்கும் மக்களா இருக்கோம். நடுவில் நாலைஞ்சு 'வீட்டுப்பாடம்' அசைன்மெண்ட்க்கு 'டிமிக்கி' கொடுத்தாலும் கற்றுக்கொள்ளும் ஆசையும் 'இன்னும் நானும் ஒரு மாணவி' என்ற போதையும் விட்டபாடில்லை:-)


இந்த அண்மைக்கு கூடியவரை 'மேக்ரோ'வைத் தவிர்க்கணும் என்று சொல்லி இருக்காங்க. அப்போ....தூரத்தில் இருப்பதைப் பக்கத்தில் கொண்டுவரணுமுன்னு நானாப் புரிஞ்சுக்கிட்டு சில படங்களும், மேக்ரோ போடாமல் கூடியவரை கிட்டக்கப்போய் எடுத்ததுமா கொஞ்சம் நம்ம தோட்டத்தில் அலைஞ்சேன். எல்லாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் முயற்சியே!

சில படங்களை உங்கள் பார்வைக்கு வச்சு விளம்பி இருக்கேன். பார்த்துட்டு தட்டோ, குட்டோ கொடுத்துட்டுப் போங்க.

வந்தாள் மகாலக்ஷ்மியே!!!! நம் வீட்டில் புதுசா வச்ச செடியில் முதலில் பூத்த தாமரை
நியூஸிக்கு புது வருகையா ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி. Regal Pelargonium. சனிக்கிழமை சாவறதைப்போல் வாடி வதங்கி இருந்த ஒரு சின்னச் செடியை(80% தள்ளுபடியில் போட்டு வச்சுருந்தாங்க)இலை டிஸைன் புதுசா இருக்கேன்னு ரிஸ்க் எடுத்து வாங்கியாந்தேன். இப்போ வளர்ந்து தளதளன்னு பூக்கொத்தாய் மலர்ந்துருக்கு!
ஒரு நாள் நம்ம ஸ்வாமிநாராயண் கோவிலில் நண்பரைச் சந்தித்தேன். அவருடைய அக்காவும் மாமாவும் இந்தியாவிலிருந்து விருந்துக்கு வந்துருக்காங்க. நண்பரின் மாமாவின் பெயரைக் கேட்டதும் 'அட! உங்க பெயரை என் வாழ்க்கையில் மறக்கமாட்டேன்'னேன். அவருக்கு ஒரே வியப்பு. ரொம்ப மகிழ்ச்சியோடு ஏன்னு கேட்டார். என் பூனை பெயர் அதுன்னதும் உண்டான திகைப்பை ஒரு நொடியில் முழுங்கிட்டு 'அப்பாடா...'ன்னு நிம்மதிப் பெருமூச்சு விட்டார். காரணம்.... நாயின் பெயர்ன்னு சொல்லாம விட்டேனாம்:-))))

ராஜலக்ஷ்மின்னு ஒரு பூனை இருக்கான்னார். இருக்குன்னேன்! போன நிமிஷம்வரை Bபாம்பின்னு கூப்பிட்டுக்கிட்டு இருந்த நம்மூட்டு விஸிட்டருக்கு நாமகரணம் உடனே ஆச்சு:-)

ராஜலக்ஷ்மி
என்னமோ வளர்க்கும் வீட்டில் தண்ணியைக் கண்ணுலேயே காண்பிக்காததைப்போல நம்மூட்டுத் தாமரைக்குளத்தில் குடிக்க வந்துடறார்!!!
'பிங்க்' செம்பருத்தி:-)
வேலி ஓர ரோஜா..... ஒரு செடியின் இருமலர்கள்


ஒரு நகைப்பூவின் இரு புறம்!


கோல்டன் ப்ளம்
மஞ்சள் ரோஜா
உலக அதிசயமா இந்த ஊரில் ஊமத்தை! அதுவும் நம் வீட்டில்:-)))))
அம்மாவுக்கு மட்டும்தான் திராட்சைத் தோட்டமா? ச்சும்மாவுக்குதான்:-)
வண்டு வருகின்றது......

கீழே உள்ள மூணும் நம்ம வீட்டைவிட்டு வெளியில் போய் எடுத்தவைகளாக்கும் கேட்டோ:-))))
ஸீகல்கள்
படகுகள்
கப்பல்

41 comments:

said...

அசத்தி விட்டீர்கள்:)! பூக்கள் அழகு. ராஜலக்ஷ்மி கம்பீரம். நகைகளை விட முடியுமா:)? நுணுக்கமான வேலைப்பாடு.

போட்டிக்கு வந்திருக்கும் கோல்டன் ப்ளம் நெய்யுருண்டை போல் பளபளக்குது:)!

said...

ராஜலக்ஷ்மி கம்பீரம். //
அதே அதே ..:)

நல்லா இருக்கு.. ஆளூம் பேரும்..:)

said...

ஒரு செடியின் இரு மலர்கள் அபாரம்..

said...

பிரமாதமாக இருக்கு படங்கள். பூக்கள் எல்லாம் கொள்ளை அழகு.கண்ணையும், மனதையும் கவரும் பதிவு.

said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!எங்கியோபோயிட்டீங்க தலைவி.
இத்தனை அழகை ஒரே இடத்தில் பார்த்தால் மூச்சே நின்னு போயிடும் போல இருக்கு:)
பூக்கள் படு ஜோர்.
ராஜலக்ஷ்மி ஏன் முறைக்கிறாங்க:)
முகப்பு நகைகள் வெகு ஆர்ட்டிஸ்டிக்.

said...

ஹய்யோ... அந்த மஞ்சள ரோஜா கண்ணுலயே நிக்கிது. என்னா அழகு. வீட்டுக்கு வெளில எடுத்த படம், நகைகள்னு எல்லாமே அருமை. அசத்திட்டேள் போங்கோ...

said...

வாங்க ராமலக்ஷ்மி.

'பிட்' டீச்சரே வந்து பாராட்டியதுக்கு நன்றி.

(சென்னைச் சம்பவத்தால் டீச்சர்கள் அரண்டு போயிருக்காங்கன்னு .....)

வீணா வம்பு எதுக்குன்னு கவனமாத்தான் இருக்கணும் இனி. இல்லை?

அந்த நெய்யுருண்டை ஆப்ரிகாட் பழங்கள்.

said...

வாங்க கயலு.

இனிமேல் எதையும் வளர்க்கக் கூடாதுன்னு ((அராஜகமா) ஒரு சட்டம் வீட்டுலே போடப்பட்டிருக்கு.

அதான் கொஞ்ச நேரம் கொஞ்சிட்டு பிஸ்கட் & பால் கொஞ்சம் கொடுத்துட்டு இன்று போய் நாளை வா என்கிறேன்.

பக்கத்தில் வந்து நின்னு ஆசையாத் தடவிக்கிறான். வெட்'நரி' டாக்குட்டர்
(தோழியின் மகள்) வீட்டுக்கு விஸிட் வந்தப்போப் பார்த்தாங்க. வயசானது. ஆனால் ஹெல்த்தியா இருக்குன்னாங்க.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஆஹா...பிடிச்சுருக்கா...... நன்றிஸ்.

said...

வாங்க ராம்வி.

உங்கள் ரசனைக்கு இனிய பாராட்டுகள்.

said...

வாங்க வல்லி.

உறங்கும் புலியை எழுப்பிட்டீங்க!!!!!

தோட்டப்பதிவுகளை விரைவில் எதிர்பார்க்கவும்:-)))))

என்னைசுத்தி எல்லாமே(என்னைத்தவிர) அழகோ அழகுதான்ப்பா:-))))

said...

வாங்க கணேஷ்.

மஞ்சள் மகிமை!!!! இதுக்கே இப்படீன்னா மற்ற நிறங்களுக்கு என்னவோ!!!!!

ரசிப்புக்கு நன்றி.

said...

அனைத்தும் அழகோ... அழகு...

said...

உங்க வீட்டு தோட்டமே அழகோ அழகு.....

வீட்டுக்கு வெளில எடுத்த படங்களும் சூப்பர்...

said...

இனிமேல் எதையும் வளர்க்கக் கூடாதுன்னு ((அராஜகமா) ஒரு சட்டம் வீட்டுலே போடப்பட்டிருக்கு.//


சரியே. வீட்டுக்கு அவங்களா வரவங்களைக் கவனிச்சுட்டு மறுநாள் வரலைனாலே ஏன் காணோம்னூ மனசு பரிதவிக்கும். :(

படங்கள் அழகோ அழகு.

said...

ஆஹா புகைப்படங்கள் அனைத்தும் அழகு....

உங்களுக்குத்தான் இந்த முறை விருது கிடைக்கும் எனத் தோன்றுகிறது.....

said...

'இன்னும் நானும் ஒரு மாணவி' என்ற போதை புன்னகை நகைப்பூ வரவழைக்கிறது..

said...

படங்களில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

said...

எனக்கு ராஜலக்ஷ்மியை ரொம்ப பிடிச்சிருக்கு .
மேடம் குளத்தில குனிஞ்சு தீவிரமா பாக்கறதை பார்த்தா குட்டி மீனிருக்குமான்னு தேடற மாதிரி இருக்கு

said...

அசத்தலான படங்கள்
நிஜமாகவே நகைப் பூ என்று ஒன்று இருக்கா
பார்க்க ஆச்சரியமாக இருந்தது
மனம் கவர்ந்த படங்கள்
தொடர வாழ்த்துக்கள்

said...

வாங்க குடந்தை அன்புமணி.

நல்லா இருக்கீங்களா? இந்தப் பக்கம் பார்த்தே ரொம்ப நாளாச்சே!!

ரசனைக்கு நன்றிங்க.

said...

வாங்க கோவை2தில்லி.

தோட்டத்தை இன்னும் சிறப்பா வைக்கலாம். ஆனால் முன்புபோல் உடலில் பலம் இல்லை:(

முக்கால்வாசித் தோட்டம் இப்ப கண்டெய்னர்களில்தான்.

எங்கூரில் வீடுகட்ட இருக்கும் நிலத்தில் 40% சதம் மட்டும் கட்டடம். மீதி 60 சதம் தோட்டத்துக்கு விட்டே ஆகணும்.

said...

வாங்க கீதா,

//சரியே. வீட்டுக்கு அவங்களா வரவங்களைக் கவனிச்சுட்டு மறுநாள் வரலைனாலே ஏன் காணோம்னூ மனசு பரிதவிக்கும். :(//

சத்தியமான உண்மை. ராஜலக்ஷ்மிக்குக் கொஞ்சம் பிஸ்கட் வாங்கப்போறேன்னதும் மகளும் அப்பாவும் பாய்ஞ்சு திட்டுனாங்க. அப்புறம் அது இங்கேயே தங்கிருமாம்.

அதெல்லாம் கிடையாது. பக்கத்து வீட்டுப் பசங்க வரும்போது எதாவது தின்னக்கொடுக்கறோமே அப்படி இதுக்கும் கொஞ்சம் தின்னக் கொடுத்தால் என்ன தப்புன்னு விவாதம் செஞ்சுட்டு நான் வாங்கி வந்துட்டேன்.

வரும்போதெல்லாம் கொஞ்சம் பாலும் பிஸ்கட்டும் வைப்பேன். நாசூக்காக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு பாக்கி வச்சுட்டுப்போகும்.

இப்ப என்னன்னா..... சீனாவில் போய் உக்கார்ந்துட்ட ரங்ஸ், ஃபோன் செய்யறப்ப....'அவன்' வந்தனான்னு விசாரிக்கிறார்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு நன்றி.

விருதுக்கெல்லாம் ஆசை இல்லை. அது பேராசை!

ச்சும்மா (வகுப்பில்) இருத்தலின் அடையாளமாத்தான் ஒருபடம் அனுப்புவேன்:-)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

பூ இல்லாத வாழ்க்கை போரடிகுமே!
அதான் பூப்பூவாய்...:-)))))

said...

வாங்க குமார்.

(உண்மையான ) சமீபத்தில் வாங்குன கேமெராவில் எடுத்தவை. கேமெரா க்வாலிட்டியை கம்பெனி இம்ப்ரூவ் செஞ்சுருக்கும்போல:-)

said...

வாங்க ஏஞ்சலீன்.

ராஜலக்ஷ்மி நல்ல அழகுதான் இல்லெ?

சிலவருசத்துக்கு முன் ரெண்டு மீன்களை இதே 'குளத்தில்' விட்டுருந்தேன். சிலமாதங்களில் அவை 'காணாமல்'போச்சு:(

அப்போ ராஜலக்ஷ்மி இல்லை. கோபால கிருஷ்ணந்தான் இருந்தான்.

படத்தைப் பெருசு பண்ணிப்பார்த்தால் பிங்க் நாக்கால் தண்ணீரை நக்கும் ராஜலக்ஷ்மியைப் பார்க்கலாம்.

said...

வாங்க ரமணி.

வருகைக்கு நன்றி.

நகைப்பூ கிடைத்தவுடன் சிரிப்பூ ஒன்னு, மல்லிப்பூ ஊர் கடையிலேயே பூத்துச்சுச்சு பாருங்க அது:-)))))

said...

நட்புகளே! நேரம் கிடைக்கும்போது பார்க்க:

http://thulasidhalam.blogspot.co.nz/2008/10/blog-post.html

said...

தாமரை பூத்த தடாகமும் , வண்டாடும் சோலையும், தட்ட வைக்கிறது, கைகளை!

அழகான ரோசாப்பூ, அருமையான கலர்.

என்ஜாய்!

said...

அண்மைக்காக எடுத்த அத்தனைப் படங்களும் அருமை. அதிலும் வாடி வதங்கிய செடிக்கு உயிர் கொடுத்தபின் அது கொப்பும் கிளையுமாய்ப் பூத்திருக்கும் அழகை மிகவும் ரசித்தேன். மனம் கொள்ளை கொண்ட பதிவு.பாராட்டுகள் மேடம்.

said...

மலர்கள் பூத்துக்குலுங்கும் இடத்தில் முருகனும் வள்ளியும் (காதலித்துக் கொண்டு) இருப்பார்கள் என்பதும் ஒரு நம்பிக்கை.

மகிழ்ச்சி பூக்கிறது என்றுதானே தமிழில் சொல்வோம். மகிழ்ச்சியே பூத்தது போல அழகான பூக்கள்.

தாமரை மலர் சிறப்பான மலர்களில் ஒன்று. வீட்டில் மலர்வது மிகமிகச் சிறப்பு. சர்க்கரைப் பொங்கல் செய்து வையுங்கள். ஏதோ நல்ல செய்தி வரப்போகிறது. :)

செக்கச் சிவந்த செம்பருத்தியைப் பார்த்திருக்கிறேன். இளஞ்சிவப்பு நிறத்தில் இனிமையாக இருக்கிறது. ஆனாலும் நான் “செம்”பருத்தி ரசிகன்.

ஒரே செடியில் இரண்டு ரோஜா மலர்கள். ஆனால் இரண்டும் வெவ்வேறு நிறங்கள். ஒட்டுவகை ரோஜாவோ?

ராஜலட்சுமியின் அழகே அழகு.

வீட்டில் என்னதான் தண்ணீர் இருந்தாலும் இது போலக் குடிப்பதுதான் பூனைகளுக்கும் நாய்களுக்கும் பிடிக்குமாம். நியூசிலாந்தில் நல்ல தண்ணீர். அதுனால சரிதான். :)

said...

வாங்க வெற்றிமகள்.

நம்ம வீட்டில் இப்போதைக்கு 8 வகை ரோஜாச்செடிகள்(தான்) இருக்கு.

தடாகத்திலும் ஒரு கிழங்கு பூத்தாச்சு. இன்னொன்னு என்ன நிறம் வரும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கேன்.

ரசிப்'பூ'க்கு நன்றிப்பா.

said...

வாங்க கீதமஞ்சரி.

உண்மைதாங்க. உயிர் போகும் நிலையில் இருந்த உயிரைக் காப்பாற்றின திருப்திதான்!!!!

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜீரா.

அதென்ன தாமரையில் வள்ளியும் முருகனும்!!!!!! மாலின் மனைவி மால் மருகனுக்குக் கொடுத்துட்டாங்களா என்ன?

Rembrandt

James Hudson

என்னன்னு திகைப்பா? இவைதான் நம்ம வீட்டுத் தாமரைகளின் வகைகளாம். சரியான வெள்ளைக்காரத் தாமரை:-)))))

2006 வது வருசத்தில் இருந்தே நம்ம வீட்டில் தாமரை மலர்ந்துக்கிட்டு இருக்கு. நடுவில் நாட்டைவிட்டுப்போய் வந்தபிறகு பார்த்தால்..... குடி இருந்தவர்கள் தாமரையைக் கொன்னு போட்டுருந்தாங்க:(
அதான் மீண்டும் கிழங்குகளை வாங்கி நட்ட பின் கிடைத்த முதல் பூ இது!

சக்கரைப்பொங்கல் வைக்கத்தான் வேணும். நீங்க துளசிதளம் வந்ததே நல்ல செய்திதான்.

செம்பருத்தி ஆரஞ்சு மஞ்சளில் கூட வருகிறது. புதுச்செடி ஒன்னு வச்சுருக்கேன். பூ வரட்டும் என்ன நிறமுன்னு பார்க்கலாம்.

ரோஜா ஒட்டுவகை இல்லை. பூக்கள் மலரமலர நிறம் மாறுது.

நாய்பூனைகளுக்குக் குட்டைத்தண்ணீர் ரொம்பப் பிடிக்குமாம்.

ரசனைக்கும், விரிவான பின்னூட்டத்துக்கும் நன்றி.

said...

;-)))))))))))))

said...

பூப் படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு. இப்போ அந்த நகைப்பூ வாங்கியே தீரணும்னு இருக்கேன்;-)))))) எங்கே கிடைக்கும்?

நிறைய தட்டு தான்:-) குட்டு இல்லை!

said...

மகாலஷ்மி, ராஜலஷ்மி எல்லாம் மனத்தை இழுக்கிறாங்கள்.

படங்கள் அருமை.

said...

வாங்க வெற்றிமகள்.

சிரிப்பாணிக்கு நன்றி:-)

said...

வாங்க கெக்கே பிக்குணி.

எல்லாம் நம்ம மதுரை தங்கமயில் கடைதான்.

அங்கே மாடியில் இதுபோல நிறைய 'பூக்கள்' இருக்கு. டபுள் சைடா இருப்பதால் திரும்பிக்கிட்டாலும் பிரச்சனை இல்லை:-) கல்லும் சிந்தெடிக் கிடையாது. ஒரிஜனல்தான். ஆண்டிக் வகையில் அநேகம் இருக்கு.

said...

வாங்க மாதேவி.

வீடு முழுக்க லக்ஷ்மிகள்தான்:-)))))