Monday, March 05, 2012

மனைவியுடன் குழந்தையையும்.... ஒருவனாக சுமக்கின்றேன்.....

ஆஃப்ரிக்க நாட்டுலே இருந்து வந்த 'க்யூட் பசங்களை' முதல்முதலா எங்கூரு டெலிகாம் விளம்பரத்துலேதான் பார்த்தேன். கண்டவுடன் காதலில் விழுந்தேன். எங்கூரில் இறக்குமதி செஞ்சுக் கொஞ்சநாளா அதுக்கேற்ற எல்லா வசதிகளையும் செஞ்சு கொடுத்து உள்ளூர் காலநிலைக்கு அதுகளைப் பழக்கப்படுத்தியாச்சுன்னும் குறிப்பிட்ட ஒரு தேதியில் இருந்து பொதுமக்கள் பார்வையிடலாமுன்னு அறிவிப்பு வந்ததுதான் தாமதம், கிளம்பிட்டோம்.

ஒரானா பார்க் என்ற பெயரில் எங்கூர் மிருகக்காட்சி சாலை இயங்குது. இதை ஆரம்பிச்சது 25 செப்டம்பர் 1976. குட்டி ஆஃப்ரிக்கா என்று சொல்லும் வகையில் சிங்கம், சிறுத்தை, காண்டா மிருகம், நீர்யானை, சிங்கவால் குரங்கு, ஒட்டச்சிவிங்கி, வரிக்குதிரை, கழுதைப்புலி, நெருப்புக்கோழின்னு வச்சு வளர்க்கறாங்க. சின்னக்கூண்டுகளில் வைக்கறதில்லை. திறந்த வெளியில் ஒவ்வொரு வகைக்கும் ஏராளமான இடங்கள். கூடியவரை அதனதன் இயற்கைச்சூழலில் நாம் பார்த்து ரசிக்க ஏற்பாடு. இப்ப 80 ஹெக்டர் நிலத்தில் சுமார் 400 செல்லங்கள்(!!!) 70 வகைகளில். செரங்கேட்டி என்ற பெயரில் ஒரு ரெண்ட்டாரண்டு. மாலை வேளைகளில் டின்னர் இங்கே விசேஷம். இங்கே ஒரு நாள் முழு வாடகை கட்டிட்டுக் கல்யாணம் கூட செஞ்சுக்கலாம். இப்பெல்லாம் பிறந்த நாள் பார்ட்டிகள் கூட நடத்தறாங்களாம். கிறிஸ்மஸ் தினத்தைத்தவிர வருசம் முழுசும் பார்வைக்குத் திறந்திருக்கும் இடம். எல்லா வெளிநாடுகளையும் போல உள்ளே போகும் டிக்கெட் விலை அதிகம்தான் என்றாலும் உள்ளூர் மக்கள் வசதிக்காக 'ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஒரானா வொய்ல்ட் லைஃப்'ன்னு இருக்கும் அமைப்பில் சேர்ந்துக்கிட்டால் ஒரு வருசம் வரை இலவசமாப் போய் வரலாம். ரெண்டு தடவைப் போய் வரும் டிக்கெட்காசு தான் இதுக்கு. ஒரு பேட்ஜ் கொடுப்பாங்க. கம்பீரமாச் சட்டையில் குத்தி வச்சுக்கிட்டுக் கெத்தா உள்ளே நுழையலாம். இங்கே நடக்கும் விஷயங்களையெல்லாம் மாசம் தவறாமல் நியூஸ் லெட்டரில் அறிக்கை நம்ம வீட்டுக்கு அனுப்புவாங்க, நாங்களும் முந்தைய நண்பர்கள்தான்.

இதுதவிர இங்கேயுள்ள செல்லங்களை நாம் தத்து எடுக்கும் வசதியும் இருக்கு. அதுக்காக ஒரு நீர்யானையையோ, சிங்கத்தையோ வீட்டுக்குக் கூட்டிவந்து வச்சுக்கெல்லாம் முடியாது:-)))) நம்ம தத்துப்பிள்ளைகளை ஒரானா பார்க் ஹாஸ்டலில் வச்சு வளர்க்கலாம்:-))))

எங்க ஒரானா பார்க்குலே அழியப்போகும் ஆபத்தில் இருக்கும் இனங்களுக்கான விசேஷ' Bப்ரீடிங்' பிரிவுகூட இருக்கு. Zooவில் ஒரு குழந்தை பிறந்தால்கூட உள்ளூர் பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் சொல்லிருவாங்க:-) இந்தப் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கவும் ஒரு போட்டி நடத்துவாங்க. தேர்ந்தெடுத்த பெயருக்கு உரியவருக்கு பார்க் விஸிட் டிக்கெட் டீ ஷர்ட்ன்னு பரிசுகளும் கிடைக்கும். எதாவது ஒன்னு மண்டையைப் போட்டாலும் ஊரே கூடி துக்கம் கொண்டாடும்.

ஆஃப்ரிக்க நாடுகளைத்தவிர, தென் அமெரிக்க வகைகளான லாமா, மெக்ஸிகன் ஸ்பைடர் மங்கிஸ், அண்டைநாடான அஸ்ட்ராலியா வகைகளில் ஈமு, கருப்பு அன்னம், சிகப்பு கங்காரு, மஞ்சள் தலை காக்கட்டூ, செதில் முதுகுள்ள பல்லிகள் இப்படி சிலபல. நியூஸி ஸ்பெஷலான கிவிப்பறவைக்குத் தனியா ஒரு கிவி ஹவுஸ், காகாரிகி என்ற கிளி வகைகள், கெரெரூ என்ற காட்டுப் புறாவகைகள், டுவாடாரா என்ற ஓணான் வகைகள் உண்டு.

மிருகங்களை கூடியவரையில் அண்மையில் பார்க்கும் வசதிகளும் சாப்பாட்டு நேரத்தில் போய் உணவு அளிப்பதைப் பார்க்கவும் ஏற்பாடுகள் உண்டு.

நாங்க நியூஸி வந்த புதுசில்(1988) இங்கே லயன் சஃபாரின்னு இருந்துச்சு. உசரமாக் கம்பவேலி போட்ட சின்னக் காட்டுக்குள்ளில் ஒரு காலி இடத்தில் வண்டிகளை வட்டமாகப் பார்க் பண்ணிக்கிட்டு, நாம் நம்முடைய கார்களில் இருந்து காட்டரசனையும் அந்தப்புர அழகிகளையும் பார்க்கலாம். வண்டியைக் கண்ட இடத்தில் நிறுத்தாமல் நமக்கு முன்னே கட்டியம் சொல்லிப்போகும் காரைப் பின்பற்றியே போய் வரணும். கார் கண்ணாடிகளை இறக்கக்கூடாது. கதவைத்திறக்காமல் உள்ளே நல்லாப்பூட்டி வைக்கணும், சத்தம் போடக்கூடாது இப்படி ஏராளமான கூடாதுகள்.

அதிலும் சிங்கங்களுக்கு சாப்பாடு கொடுக்கும் நேரம்தான் நம்மைக் கூட்டிப்போவாங்க:-) பெரிய கூண்டுபோல் இருக்கும் வண்டிக்குள் சிங்கப் பணியாளர் ஒருத்தர் பெரிய இறைச்சித் துண்டங்களை வச்சுருந்து அங்கங்கே இருக்கும் சிங்கங்களுக்கு உணவு கொடுப்பார். சாப்பாட்டு நேரத்துக்குக் காத்திருக்கும் பசங்க தாவி வந்து இறைச்சியைக் கவ்விப்போகும். சிலது வண்டி கூடவே பிடிச்சுக்கிட்டு நடக்கும். சிலது கூண்டுக்கு மேலே ஏறி நின்னு 'தா தா ' ன்னு கேக்கும்.
அதுக்கப்புறம் ஒருசமயம் போனபோது சிங்கங்களுக்கு வேற அமைப்பு ஒன்னு செய்யறோமுன்னு சொல்லி இதுகளை ஒரு பெரிய இடத்தில் கம்பி வேலிக்குள்ளில் வச்சுருந்தாங்க. அங்கங்கே கம்பி ஓரமா சிலது படுத்துருக்குது. சாப்பாட்டு நேரம் வந்ததும் என்ன செய்யப்போறாங்கன்னு காத்திருந்து பார்த்தால்.....கம்பி வேலியில் அங்கங்கே சரிவா வச்சுருக்கும் ஒரு அடி நீளக்குழாய் அமைப்பில் வெளிப்பக்கமிருந்து இறைச்சித் துண்டுகளைப்போட்டு உள்ளெ தள்ளி விடறாங்க. எனக்குச் சீன்னு போச்சு. ஏதோ நாய்க்குப் போடுறதைப்போல..... அரசனுக்குக் காட்டும் மரியாதை இதுதானா? அப்பத்தான் கவனிக்கிறேன் இதுகளும் அந்தக் குழாய்க்கு அடியில்தான் படுத்துருக்குங்க. இறைச்சி வாளியைப் பார்த்ததும் எழுந்து நின்னு குழாயில் வாய் வச்சுப் பார்க்குது ஒன்னு.

நல்ல பெருசா இருக்கும் முழுத்தொடையோ, இல்லை அரை ஆடோ, மாடோ போட்டால்தானே அதுங்களுக்கும் பசி அடங்கும். மனத்திருப்தியாக் கடிச்சு சாப்பிடவும் செய்யும் இல்லையா? தாங்க முடியாமல் அப்புறம் அந்த சாப்பாடு பரிமாறினவரிடம் கேட்டதுக்கு 'இது ச்சும்மா ஒரு ஸ்நாக் போலதான். பார்வையாளர்கள் பார்க்க ஒரு ஃபீடிங். சாயந்திரமா பெரிய துண்டுகள் கொடுப்போம்'ன்னு சொன்னார்.

சிங்கங்களுக்கான புது அமைப்பை இப்போ கட்டி முடிச்சு போனவருசம் திறந்துட்டாங்களாம். ஆன செலவைச் சரிக்கட்டவோ என்னவோ இப்ப சிங்கம் என்க்ளோஸர்'' போய்ப் பார்க்க தனிச்சார்ஜ் கொடுக்கணும். அதுவும் ஆளுக்கு 30 டாலர். பார்க் உள்ளே வரக் கட்டணம் 25. சிங்கம் வேணுமுன்னா குடு முப்பது! (எனெக்கென்னமோ இது கொஞ்சம் அநியாயமாத் தோணுது) நம்மை கூண்டுக்குள்ளே வச்சு சிங்க ராஜ்யத்துக்குள்ளே கொண்டு போய்க் காட்டுவாங்களாம் அதுகளுக்கு!!!! . படம் பார்க்க:-)இது மட்டுமில்லாம சிறுத்தைகளையும் கிட்டப்பார்க்க ஒரு திட்டம் இருக்கு. இந்த சிறுத்தைகள் இங்கேயே பிறந்து மனிதர்களால் வளர்க்கப்பட்டவை. ஆனாலும் மிருகம் மிருகம்தானே? எப்ப எப்படி நடந்துக்குமுன்னு சொல்ல முடியாதுதான். எனக்கு என்னமாவது ஆச்சுன்னா அதுக்கு யாரும் பொறுப்பல்லன்னு ஒப்புதல் படிவம் எல்லாம் நிரப்பித்தரணும்ஒரு நாளைக்கு நாலே பேர் மட்டும் இந்தத்திட்டத்தின்படி கிட்டக்கப்போலாம். இதுக்கு ஆளுக்கு 100 டாலர். புக் பண்ணும்போதே காசைக் கட்டிடணும் ( அதானே.... உள்ளே போனபிறகு எதாச்சும் ஆச்சுன்னா அப்புறம் காசை யார் கட்டுவா?) சீட்டா கீப்பரோடு போய் அவர் சொல்லும் பேச்சைக் கேட்டுக்கிட்டு கையைக் காலை ஆட்டாம 'ச்சுப்'ன்னு இருக்கணும். சிறுத்தை நம்மை கவனமா அப்ஸர்வ் செஞ்சுட்டு அதுக்குத் தோணினால் அதுவாவே வந்து நம்ம பக்கத்தில் உக்கார்ந்துக்கும். அப்போ தடவிக்கொடுக்கலாம். நாம் நம்பிக்கையானவர்கள்தான்னு அதுக்குப் புரிஞ்சால் நம்ம மேல் கை எல்லாம் வச்சுக்குமாம்!!!! (ஆ...... நம்ம கோகியைத் தடவிக்கொடுத்த அனுபவமே நமக்குப்போதும்)
Lemur Ring Tails


ருசி கண்ட பூனைகளைப்போல் ஒவ்வொரு இனத்துக்கும் தனித்தனியா என்கவுண்ட்டர் வச்சுட்டாங்க. முப்பது டாலர் செலவழிக்க நீங்க ரெடின்னா, Lemurக்கு வாழைப்பழம் ஊட்டிவிடலாம். இருக்கறதுலேயே 'மலிவு' புலிகள்தான். 20 டிக்கெட் ஒரு நாளைக்கு. ஆளுக்கு 20 டாலர். சுமத்திராப் புலிகள்

மீர்கேட் தரிசனம் கிடைச்சது. இதைச்சொல்ல வந்தவள்தான் பார்க்குக்குள் நுழைஞ்சதும் உங்களை வேற எங்கெல்லாமோ கூட்டிக்கிட்டுப் போயிட்டேன். கீரி போல ஒரு தோற்றம். கூட்டுக்குடும்ப வாழ்க்கை. குழி தோண்டுவதில் நிபுணத்துவம். பொந்து பொந்தாத் தோண்டி உள்ளே போய் ஒரு நிமிசம் உக்கார்ந்துட்டு வந்துரும். ஆனால்.... வெளி உலகத்தில் என்ன நடக்குதோ என்ற ஆர்வம். எட்டிஎட்டிப் பார்க்க தீராத ஆசை. பின்னங்கால் ரெண்டில் எழுந்து நின்னு பார்க்கும்போது நம்ம மனசை அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!! ச்சோ.... ச்வீட்:-)

ஒருநாள் 'கடை வாக்' போனப்பக் கண்ணில் பட்டதை வாங்கியாந்துட்டேன். கூர்மையான பார்வையுடன் அடடடா..... பார்க்கப் பார்க்க மனசுலே

மனைவியுடன் குழந்தையையும் ஒருவனாக சுமக்கின்றேன்
சுமப்பதுதான் சுகம் என்று மனதுக்குள்ளே....நினைக்கிறேன்.

பாட்டின் வரிகள் ஓடுவதைத் தவிர்க்கமுடியலை:-))))

32 comments:

said...

த்ரிலிங்கான அனுபவங்கள்:)!

/கார் கண்ணாடிகளை இறக்கக்கூடாது. /

இது ரொம்ப ரிஸ்க். 1988 என சொல்லியிருக்கிறீர்கள். இப்போது இம்முறையை பின்பற்ற மாட்டார்கள் என நம்புகிறேன். பெங்களூரில் 1992 என நினைக்கிறேன், பனர்கட்டா சஃபாரியில் ட்ரைவர் சீட் பக்கம் தாத்தா மடியிலிருந்த 3 வயது பேத்தியை புலி பாய்ந்து கண்ணாடியை உடைத்து வந்து காட்டுக்குள் இழுத்துச் சென்று விட்டது! காப்பாற்ற முடியவில்லை:((! அதிர்ச்சி அளித்த சம்பவம். அதன் பிறகு சஃபாரி வண்டிகளின் ஜன்னல்களை கம்பிகளால் மூடினார்கள்.

/கூண்டுக்குள்ளே வச்சு சிங்க ராஜ்யத்துக்குள்ளே /

மனிதக் காட்சிச் சாலை :)!

said...

//Lemur Ring Tails//

ஆளைவிட வால் பெருசா இருக்கார்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அந்த மூணு வயசுக் குழந்தையை நினைச்சால்...பகீர்ன்னு இருக்கு:(

இங்கே இப்போது நாம்தான் கூண்டுக்குள்ளே. வளையாத இரும்புக்கம்பி என்று நம்புகிறேன்.

ஆனைக்கொரு காலம் என்றால் பூனைக்கொரு காலம்.
மனுசனுக்கொரு காலம் என்றால் சிங்கத்துக்கொரு காலம்:-)))))

said...

வாங்க கோவியார்.

ஆள் பாதி வால் பாதி! உண்மையில் பெரிய'வால்':-)))

said...

ரீச்சர்,

ஒரு பொம்மை வாங்கின மேட்டரைச் சொல்ல மிருகக்காட்சி சாலை பூரா நடக்க வெச்சு.... முடியலை!! காலெல்லாம் வலிக்குது!

சரி வகுப்பில் நான் டீட்டெயில்ட் பாடமா Meerkat Manor பார்க்கச் சொல்லிடுங்க!

http://animal.discovery.com/videos/meerkat-manor/

said...

பின்னங்கால் ரெண்டில் எழுந்து நின்னு பார்க்கும்போது நம்ம மனசை அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!! ச்சோ.... ச்வீட்:-)

பொம்மையும் அழகு.. பகிர்வும் அழகு..

said...

அனிமல் சஃபாரி பெங்களூரில் அனுபவிதுள்ளோம். மிக த்ரில்லிங் அனுபவம். நீங்கள் பகிர்ந்த அனுபவம் அதை விட செமையா இருக்கு

said...

/கோவி.கண்ணன் said...
ஆளைவிட வால் பெருசா இருக்கார்./

இவர் தான் வால்பையனோ

said...

டெரர் சுற்றுலாதான்.ரொம்ப திரிலிங்காக இருந்திருக்குமே!

said...

பொம்மை ரொம்பத் தத்ரூபமா இருக்கு...

said...

\\என்கவுண்ட்டர் வச்சுட்டாங்க\\

அங்கையுமா ;-))

பாட்டு வரிகள் சூப்பரு ;-)

said...

த்ரில்லிங்கான அனுபவம். ராமலஷ்மி சொல்லும் அனுபவத்தை நினைத்தாலே அடி வயிற்றை கலக்குதே....

ஃப்ஜித்தீவு சுவாரசியமாக படித்து பாதி புத்தகத்துக்கு வந்து விட்டேன் டீச்சர்.தொடர்ந்து படிக்கத் தோணுது. பாக்கி இரண்டையும் புக் செய்து வாங்கியாச்சு.

said...

எனக்கெல்லாம் டிஸ்கவரி சானல் போதும்பா:)

பணமும் கொடுத்துக் கடியும் வாங்கணுமா!!
ஆனா தைரியமா போய்ட்டுப் படங்களும் கொண்டுவந்திஉ இருக்கீங்களே.சூப்பர்மா.
குடும்பத்தைச் சுமக்கும் ஆண்மகனுக்கு என் வாழ்த்துகள்:)

said...

சூப்பர்.... த்ரில்லிங் அனுபவங்கள்...

said...

பூனை போன்ற அதன் பெயர் 'மீர்கேட்' டா. டிஸ்கவரி சாலனில் பார்த்திருக்கிறேன். வேடிக்கையாக இருக்கும்

said...

வாருமைய்யா வகுப்புத்தலைவரே! மீர் 'கேட்'டுன்னதும் இப்படிப் பூனைபோல வந்தீரா!!!!!

சுட்டி அபாரம். நன்றீஸ்;

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ரசிப்புக்கு நன்றிப்பா!!

said...

வாங்க மோகன் குமார்.

ஆஃப்ரிகாவில் திறந்த ஜீப்பில் கொண்டுபோவாங்களாம். அது இன்னும் பயங்கர த்ரில்லிங்கா இருக்குமே!

said...

வாங்க பாவா ஷரீப்,

வாலுக்கு இப்படி ஒரு அபிமானியா!!!!

said...

வாங்க ஸாதிகா.

ஆபத்தை ஆபத்துன்னு புரிஞ்சுக்கமுடியாத வயசுலே அனுபவிச்சது இது. இப்ப மறுபடி போகணுமுன்னா கொஞ்சம் யோசிப்பேன்!!!!!

said...

வாங்க பாசமலர்.

ஆமாங்க. அதிலும் அந்தக் கண்ணில் ஜீவன் ததும்பித்தான் கொசுவத்தி ஏத்தி வச்சுருச்சு:-))))

said...

வாங்க கோபி.

'அந்த' சொல்லுக்கு இந்தியாவில் பயங்கரப் பொருள்!!!!!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

பெங்களூர் சம்பவம் நினைக்கும்போதே... வயித்தைப் பிசையுது:(

உங்க தயவில் மூணு வித்துப்போச்சு:-))))

வாசிச்சுட்டுச் சொல்லுங்க.

said...

வாங்க வல்லி.

இன்னும் சீட்டாவுடன் கை குலுக்கலைப்பா:(

ஆனா அதுங்க குழந்தையா இருந்த சமயம் நகர்ந்து ஓடும் கம்பியில் கட்டி வச்ச இறைச்சித் துண்டை எடுக்க ஒரு வேகம் எடுத்து ஓடும்பாருங்க. கண் இமைப்பதுக்குள்ளே கவ்விரும். சூப்பர் ஸ்பீடு!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அப்போ நாம் வச்சுருந்த வண்டி கூட ஒரு 'அறை'க்குத் தாங்கி இருக்குமான்னு இப்ப சந்தேகம் வருது.

சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட சிங்கமா இருந்துருக்கும்போல!

said...

வாங்க பத்மா.

கூட்டமா நின்னு பார்க்கும்போது ரொம்பவே அழகு, இல்லை!!!!!

said...

ஆஹா!!.. பயப்படாம சிங்கம் புலியையெல்லாம் கிட்டத்துல போயி அதுங்க சாப்பிடறதைப் பார்த்துட்டு வந்துருக்கீங்க.

said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

said...

கூண்டுக்குள்ளே இருக்கும் மனித சிங்கங்களைப் பார்த்து ராஜாக்கள்தான் பயந்து ஒடிவிடுங்கள் :))

said...

வாங்க அமைதிச்சாரல்.

அதுகள் நம்மைப் பார்த்து பயந்தனன்னுதான் நினைக்கணும்:-)

said...

வாங்க ஸாதிகா.

நம்மை(யும்) கண்டுக்கிட்டதுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்..

said...

வாங்க மாதேவி.

பாய்ண்ட்டை 'கப்'ன்னு புடிச்சீங்க:-))))))