Monday, May 21, 2012

ராஜாவிடம் இருக்கும் காசெல்லாம் அவருடைய அப்பா சேர்த்ததாம்!

நெசமாவாச் சொல்றீங்க? ஆமாம் மேடம். அப்ப அவர் சேர்த்துவச்சதால்தான் என் பிழைப்பு நடக்குது! இல்லேன்னா இந்த ஜென்மத்துலே என்னாலே இவ்வளோ காசு சேர்க்க முடியுமா?

 சில்லறை சமாச்சாரம்!

 குவியலாக் கொட்டி வச்சுருந்த காசுகளைக் கண்டதும் கண் பெற்ற பயனைக் கண்டுகொண்டேன். அகலவிரிஞ்ச கண்களைப் பார்த்ததும் நம்ம ஆர்வம் ராஜாவுக்குப் புரிஞ்சு போச்சு. கொஞ்சம் இங்கேயே இருங்க. தோ வந்துடறேன்னு சொல்லிட்டு ஓடுனேன். காசு வெயிட் பண்ணும் ஆனால் கடவுள் வெயிட் பண்ண மாட்டாரே........ ஆனால்.....ராஜா பொறுமை காத்தார். இடம் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வாசல்.

 வீட்டில் அங்கங்கே காசு வைக்கும் பழக்கம் நம்ம ஜீனில் இருக்குபோல பாட்டிக்கு இருக்கும் சில செண்டிமெண்டுகள் நம்மை அறியாமலேயே மெதுவா பேத்திகளின் மனசில் புகுந்துருது. அஞ்சறைப்பொட்டியில் கடுகு இருக்கும் பாருங்க அதுலே கைவிட்டால் காசு கட்டாயம் தட்டுப்படும். கால மாற்றத்தால் இப்ப மாடர்னா இருக்கும் மஸாலா டப்பாவிலும்....... டாலர்.
ஒரு சமயம் ஹளபேடு போனப்ப கோவில் வாசலில் பழைய காலக்காசுகள் ரூபாய், அணா, தம்பிடின்னு சொல்லும் பைசா இப்படி நாப்பது காசுகளை பேரம் பேசி 100 ரூபாய்க்கு வாங்குனேன்.

 தபால்தலை சேகரிக்கும் பழக்கம்போல் வெளிநாட்டுக் காசுகள் சேகரிச்சு வைக்கும் வழக்கம் எப்படி எப்போ ஆரம்பமாச்சுன்னு தெரியலை உலகை இடம்வந்தபோது கையில் கொஞ்சம் சேர்ந்துபோன சில்லறைகள் காரணமாக இருக்கலாம். ஃபேன்ஸியாப் போட்டு வைக்கத் தேடுனதில் ஒரு முழ உசர பாட்டில் கண்ணில் ஆப்ட்டது. நம்ம கோபாலும் அடிக்கடி எங்கியாவது போய்வந்துக்கிட்டு இருக்காரா..... அவர் (நமக்காகக்) கொண்டு வரும் சில்லறைகளையும் சேகரிக்க ஆரம்பிச்சதில் 'பாட்டில் நிரம்பி வழிஞ்சதுதான் மிச்சம். இன்னொரு பாட்டில் வாங்கிக்கணும்.

ஓமான் போனப்ப பழைய வெள்ளி நாணயங்கள் அஞ்சு வாங்கியாந்தார். அதுலே ஒன்னில் அன்கட் எமரால்ட் நடுவிலே வச்சு பெண்டண்ட்டா செஞ்சது ஒன்னும் இருந்துச்சு. அழுக்கா இருந்த கருப்புக்கல்லைக் கழுவினால்.... பளீர்ன்னு பச்சை மின்னுது (வெயிலில் வச்சுப்பார்த்தால்)!!!!


சின்னத் தள்ளுவண்டியில் ஏழெட்டு கூறுகளாக் காசுகளைப்போட்டு வச்சுருந்தார் ராஜா. எப்படி இந்த வியாபாரத்தில் ஈடுபாடுன்னதுக்கு.... தகப்பனார் நிறைய கலெக்ஷன் வச்சுருந்தாராம். அதுலே இருந்து ஆர்வம், வந்துச்சுன்னார். இப்போ இதுவே பிழைப்புக்கான ஆதாரமா ஆகி இருக்கு.
கருப்புக்கண்ணாடி அணிந்தவர் ராஜா.  படம் எடுக்கும்போது  சாலையில் போய்க்கிட்டு இருந்த ஒருவர் எப்படி சிரிச்சமுகமா போஸ் கொடுக்கறார் பாருங்க:-))))

சோழர்கள் காலத்துக் காசுகளில் இருந்து பழைய ஓட்டைக் காலணாவரை வச்சுருக்கார். முறம் மாதிரி அப்பத்து ஆயிரம் ரூ.நோட்டு! விசேஷமா அரசாங்கம் வெளியிடும் நூறு ரூ, பத்து ரூ காசுகள். அபூர்வ கலெக்ஷ்ணா வச்சுருக்கும் பல காசுகளை தள்ளுவண்டிக்குள்ளில் இருந்து எடுத்தார். அவை எல்லாம் விற்பனைக்கு இல்லையாம். நம்ம ஆர்வத்தைப் பார்த்துட்டு.....காமிச்சாராம். அப்பாவின் கலெக்ஷன். அப்பா என்னும்போதே கண்களில் ஒரு ஒளி.  ) 'அவரைப்பற்றிய விவரங்கள் பாருங்க 'ன்னு தினசரிகளில் வந்ததைக் காமிச்சார். எழுபதுகளின் கடைசியில் வந்தவை
பெயர் கத்ரிவேலு.( கதிர்வேலுவை இப்படிப் போட்டுருக்காங்களோ?) யோகா மாஸ்ட்டர். உடற்பயிற்சி ஆசிரியர். தண்ணீருக்குள்ளில் இருந்து யோகாசனங்கள் செய்வாராம்! ஏராளமான பத்திரிகை சேதிகள் கட்டிங் ஒரு பெரிய ஃபோல்டரில் இருக்கு. ஒவ்வொன்னாப்பார்க்க நமக்கு நேரம் இருந்துட்டாலும்...... ஹூம்..
 பழைய காலக் காசுன்னதும் சட்ன்னு நம்ம ராமன் அவர்களின் ஞாபகம் வந்துச்சு. இவர்கிட்டே இருப்பது பொக்கிஷம்! காசு மட்டுமா..... பழங்கால அரிய பொருட்கள் வகைவகையா வீட்டில் வச்சுருக்கார். பர்மனென்ட் கொலு! ஒவ்வொன்னுக்கும் தனிப்பெயர்கள். நான் இதுவரை கேள்விப்பட்டதுகூட இல்லை! அவர்வீட்டுக்கு அவசரடி விஸிட் போனதில் கண்ணால் கொஞ்சம் அள்ளிக்கிட்டு வந்தேன். கையிலேதான் கேமெரா இருந்துச்சே.... க்ளிக்காவது செஞ்சுருக்கலாமுல்லெ? கண்கள் விரிய வா பொளந்து நின்னதுலே கைகள் அதுபாட்டுக்கு தேமேன்னு நின்னுபோச்சு:(

 மதுரை நாயகர் காசுகள் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு இருக்கார். எம்பத்தி ஆறு காசுகளின் படங்களும்  அதன் எடை உட்பட மொத்த விவரங்களும் அதுலே இருக்கு. ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு அருமையான துணை! எனக்குக்கூட ஒரு பிரதியில் கையெழுத்துபோட்டு பரிசளித்தார்.
ஒருவகையில் பார்த்தால் ராமன் நமக்கெல்லாம்கூட சொந்தம்தான். பிரபல பதிவரும் நம்ம துளசிதளம் (சரித்திர) வகுப்பில் சட்டாம்பிள்ளையாகவும் இருக்கும் கொத்ஸின் உடன்பிறந்தவர்! 

 இவரைப்பற்றி நம்ம பா ரா ஒருசமயம் எல்.பி.ரோடில் அரிக்காமேடு என்று பதிவு செஞ்சுருக்கார்.

 ரெண்டு மாசம் முந்தி சண்டே மார்கெட்டில் ஒரு பிஸ்கட் டின்னில் முக்காவாசி வரும் காசுகளை 25 ன்னு சொன்னார் கடைக்காரர். 20க்கு பேரம் படிஞ்சது. வீட்டிற்கு வந்து பார்த்தால்..... அடிச்சேன் லக்கி ப்ரைஸ்ன்னுதான் சொல்லணும். ஒரு ஆறேழு நாட்டுக் காசுகள் இருக்குன்னாலும் (commemorate coins) உள்ளூர் விசேஷ வெளியீடுகள் நாலைஞ்சு இருக்கு. அதுலே 1967 இல் ஷில்லிங், பென்ஸ் காலம் மாறி தசாம்ச நாணயங்கள் வந்ததை சிறப்பிக்கும் ஒன்னும் 1981 இல் மாட்சிமை தாங்கிய ராணியம்மா வருகையை முன்னிட்டு வெளியிட்டதும் இருக்கு.
ஆல்ப்ளாக்ஸ் ஆட்டக்காரர்களுக்காக வெளியிட்ட நினைவுக் காசுகளும் அதுலே நிறைய இருந்தன. ஸ்கூல் பசங்க பார்த்தால் விடாது!

 உள்ளூரில் தபால்தலை, காசுகள், இப்படி சேகரிப்பு ஐட்டம் விற்கும் ஒரு கடை முந்தி  சிட்டி செண்டர் பக்கம்  இருந்து நிலநடுக்கத்தால் ரெட் ஸோனில் மாட்டிக்கிட்டு இப்போ காணாமப் போனவைகளில் ஒன்னா ஆகிப்போச்சு. நமக்குக் கிடைச்ச காசை செலவில்லாமல் மதிப்பீடு செஞ்சுக்க எதாவது வகை இருக்கான்னு தேடுனப்ப நம்மூர் ட்ரேட் மீ Trademe ஆப்ட்டது. இவ் வகைக் காசுகளைத் தனித்தனியா விக்கறாங்க. ஒவ்வொன்னும் 80, 100ன்னு விலை போட்டு வச்சுருக்காங்க.  ஆஹா..... இருவதே டாலர்க்கு உண்மையாவே லக்கி ப்ரைஸ்தான்.

35 comments:

said...

லக்கி ப்ரைஸ்தான்.//

நாணயம் நிறைந்த வாழ்த்துகள்

said...

உள்ளேன் ரீச்சர்.

படத்தில் தினமணிக்கு மூணு சுழி ண் போட்டு இருக்கிறதும் கண்ணில் பட்டுது! :)

said...

சாரி தினத்தந்தி நாட் மணி!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

காசுக்கடைக்கு நீங்க தான் போணி-)))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கொத்ஸ்.

சட்டாம்பிள்ளை 'டான்' னு வந்ததுக்கு நன்றி.

அதென்ன திணத்தந்தியை திணமணின்னு சொல்லப் போச்சு?????
:-)

said...

//காசு வெயிட் பண்ணும் ஆனால் கடவுள் வெயிட் பண்ண மாட்டாரே//

காசேதான் கடவுளடா, அந்தக்
கடவுளுக்கும் அது தெரியுமடா

என்று அந்தக்காலத்துலே ( நாங்க யங் ஆ இருந்தப்போ )
கேட்ட பாட்டு நினைவுக்கு வருது.

காசைக் கடவுளாகப் பார்ப்பவர்களும் உண்டு.
கடவுளைக் காசாக்குபவர்களும் உண்டு.

கடவுள் வைட் பண்ணத்தான் செய்வார், செய்கிறார்.
( அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் )
ஆனால், கடவுளை வைத்து ப் பணம் செய்பவன் வைட் பண்ணமாட்டான்.

மீனாட்சி பாட்டி.

said...

வந்ததுக்கு அம்மாகிட்ட ஒரு அட்டென்டென்ஸ் :)

said...

nalla pathivu ......

i am also a coin collector?....

but ippa ellam, coin kadaiyila thaan vankanum..

said...

எத்தனை வித நாணயங்கள்!படங்களும் பகிர்வும் பிரமாதம்

said...

முன்னாடி ஸ்டாம்ப் சேர்த்துண்டு இருந்தேன். பழைய பெரிய அஞ்சு ரூபாய் நாணயம் இன்னும் வச்சுருக்கேன்.

20-ல பேரம் முடிஞ்சா உண்மைலயே லக்கி ப்ரைஸ்தான் :)

said...

கருப்புக்கல்லு எம்ரால்ட் பென்டண்ட் ஆனது திடீர் புதையல்தான். உயர ஜாடியின் மூடி வரை காசுகள் அழகு:)! சேர்ந்து கிடக்கும் காசுகளை என்ன செய்ய எனத் தெரியாமலிருந்தேன். இது நல்ல ஐடியாவாக இருக்கிறது.

மூன்றாவது பின்னூட்டத்தை வாசிக்காமல் மீண்டும் பதிவுக்குள் போய் தினமணியைத் தேடினேன்:)!

said...

|| இருவதே டாலர்க்கு உண்மையாவே லக்கி ப்ரைஸ்தான். ||

இதத்தான் நாணயமாய்ப் பொழங்க நாணயமாய்ப் பொழங்க அப்படின்னு அந்தக் காலத்துலருந்து சொல்றாங்களோ?

:))

சுஜாதாவின் ஒரு சிறுதகையில் பரமேசுவர ஐயர் இங்கிலாந்திலிருந்து வந்த ஒரு கடிதக் கவரிய் புதையல் பற்றிய ரகசியம் இருப்பதாக தொடரும். கடைசியில் பார்த்தால் அதில் இருந்த அஞ்சல் தலை தவறாக அச்சடிக்கப்பட்ட விக்டோரியா ராணியின் அஞ்சல் தலை என்பதும் அது லட்ச ரூபாய் பெறும் என்பதும் அவருக்குத் தெரியாமலே போகும்...

மரகதம் அன்கட் என்றால் மதிப்பு வாய்ந்தது.(படத்தில் இருக்கும் அளவுக்கு நிறம் இருந்து அது நிஜமான மரகதமாக இருந்தால் உங்களுக்கு உண்மையில் லக்கி ப்ரைஸ்தான்.

said...

நல்ல கலெக்ஷன்.. நம்மூர் காசுமாலை மாதிரி அங்கே நாணயங்கள்ல எமரால்ட் பதிச்சு பெண்டெண்டாப் போட்டுக்கறாங்க போலிருக்கு. கேரளாவில் நாகப்படம் மாலைன்னு ஒண்ணு போட்டுருப்பாங்க. அந்த ஐடியா மாதிரியும் இருக்கு.

இந்திய நாணயங்கள்ல சிறப்பு வெளியீடுகள் மாதிரி வித்தியாசமா ஏதாவது கிடைச்சா சேகரிச்சு எங்கூட்ல சிரிச்சுட்டிருக்கற புத்தர் கிட்ட கொடுத்துருவேன். அவர் எப்பவும் வெச்சுருக்கும் சாக்குப்பைக்குள் போட்டுப் பத்திரமா வெச்சுருக்கார். எவ்ளோ சேர்ந்துருக்குன்னு ஒரு நாள் பார்க்கணும்.

said...

நிறைய காசு என் கண்ணுல படும் டீச்சர்.ஆனா எனக்கு ஓட்டைக்கை:)இந்த வருசம் வாங்கினா அடுத்த வருசம் கால் மொளச்சி காணாமல் போயிடும்.

ஒரு நாணயம் பாருங்க!எத்தனை வரலாறு சொல்லுது!

சல்லிக்காசு சேர்ப்பதும்,வின்டேஜ் கார் சேர்ப்பதிலும் இந்தியர்கள் கில்லாடிகள்தான்.

said...

டீச்சர் காதுல புகைய கிளப்பி விட்டுட்டீங்களே!தேடிப்பிடிச்சு சதாம் ஹுசைன் நோட்டாப்பார்த்து 20க்கும் மேல் சேர்த்து வச்சிருந்தேனே!அதையும் கூட ஜார்ஜ் புஷ் வந்து தூக்கிட்டுப் போயிட்டார்:)

said...

I am also a Coin Collector. Your post was interesting. Pl have a look at my post on Numismatics:-

http://simulationpadaippugal.blogspot.in/2010/02/numismatics.html

said...

வாங்க மீனாட்சி அக்கா.

நலமா?


கடவுள் பல சமயம் அநியாயம் செய்தவரைக் கொல்ல வரும் நேரம் ரொம்பவே நின்னுடறார் அக்கா :(

உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கு அளவில்லாமப் போய்க்கிட்டே இருக்கு.!

said...

வாங்க புதுகை அப்துல்லா.

தலைப்பு இழுத்தாந்து வகுப்பில் விட்டுருச்சோ:-)

ஆஜர் பதிவு செஞ்சுட்டேன்:-)

said...

வாங்க பாபு.

கடையில் வாங்குவதைவிட பயணிகள் நிறைய வரும் கோவில்களின் அருகில் கொஞ்சம் மலிவாக் கிடைக்கும்.

ஆனால்...இதுலேயும் போலி உருவாகிருச்சு. பார்த்து வாங்கணும்.

said...

வாங்க ஸாதிகா.

நாணயங்களும் நா நயங்களும் அதிகம்தானே:-))))

said...

வாங்க தக்குடு.

புதுக்குடித்தனம் எப்படி இருக்கு? கிரகஸ்த வாழ்க்கை ஜாலிதானே?

நானும் தபால்தலைகள் சேர்த்து வச்சுருக்கேன். ஆல்பம் நிறைஞ்சு இப்போ இன்னொண்ணு வாங்கிக்க நேரம் இல்லை.

பதிவுலகம் நேரம் விழுங்கி:-)))))

ரொடீசியா ஸ்டாம்பு வச்சுருக்கேன்:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கொஞ்சம் வாயகலமான உசர பாட்டில் என்றால் இன்னும் நல்லது கேட்டோ:-)))

நானும் அந்த 'திணமணி' எங்கேன்னு கொஞ்சம் மெனெக்கெட்டேன்:-))))

said...

வாங்க அறிவன்.

அந்த சுஜாதா கதை (தபால்தலை) நானும் வாசித்ததே!

படத்தில் பச்சைக்கல் கொஞ்சம் மங்கலா இருக்கு. ஆனால் நேரில் இன்னும் பளிச்:-)

said...

வாங்க அமைதிச்சாரல்.

இந்திய சிறப்புக் காசுகள் நானும் கொஞ்சம் வச்சுருக்கேன். எல்லாம் கும்பலில் கோவிந்தாவாக இருக்கு:-)

நாகபடம் மாலை கடையில் கிடைக்குதா என்ன? ப்ரின்ஸ் ஜூவல்லரி ஆண்ட்டீக் கலெக்‌ஷன் பிரிவில் பார்க்கணும்.

ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி.

said...

///ராஜாவிடம் இருக்கும் காசெல்லாம் அவருடைய அப்பா சேர்த்ததாம்!///
என்னடா மேடம் அரசியல் பத்தி எழுதி இருக்காங்கன்னு நினைச்சு ஒடி வந்தேன்(ராசாவைத்தான் ராஜா என்று நினைத்துவிட்டேண்)

ஆனால் வந்து பார்த்தா பல வித நாணயங்களுடன் படங்களும் சேர்த்து பகிர்வும் பிரமாதம்

said...

வாங்க ராஜநடராஜன்.

காசை பாட்டிலில் போட்டு வையுங்க. அப்புறம் கால் முளைச்சாலும் அடியில் இருந்து ஏற முடியாது. இந்திய நண்டுகள் கதைதான்:-)

மவொரிகளுடன் ப்ரிட்டிஷ் அரசு போட்ட ஒப்பந்தம் 150 ஆனதுக்கு அப்போ (1990) நியூஸி ரிஸர்வ் பேங்க் போட்ட நோட்டுகளும், நியூ மில்லினியம் கொண்டாட வெளியிட்ட நோட்டுகளும் நம்ம கலெக்‌ஷனில் இருக்கு.

தங்க நிற நாணயங்கள் வெளியிட்டு போனவருசம் இருபதாண்டு ஆச்சுன்னு தங்கநிற வெள்ளிக்காசுகள் வெளியிட்டாங்க. அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன் இப்போ:-)

இங்கே போஸ்ட் ஆபீஸில் இதெல்லாம் கிடைக்கும். ஆனால்..... யானை விலை.

said...

வாங்க சிமுலேஷன்.

உங்க பதிவு அட்டகாசம். நல்ல விவரங்கள்! குறிச்சு வச்சுருக்கேன். நன்றி.

said...

வாங்க அவர்கள் உண்மைகள்.

தலைப்புக் கயமை!!!!

கடையில் வியாபாரம் நல்லாப்போகுது!

வருகைக்கு நன்றி.

said...

உங்க பதிவில் தலைப்பில் இருக்கும் அரசியல் பதிவை தமிழ்மணத்தில் சூடாக்கி இருக்கிறது.
:)

said...

தலைப்பைப் பார்த்தது நானும் "அவகளை"ப் பற்றி இருக்குமோ
என நிினைத்துக் கொண்டே பதிவுக்குள் வந்தேன்
பயனுள்ள அருமையான பதிவாக இருந்தது
படங்களுடன் விளக்கங்க்களும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

said...

வாங்க கோவியார்.

உண்மைதான்!!!! இந்தப் பதிவை 711 பேர் பார்த்திருக்காங்கன்னு ப்ளாக்கர் சொல்லுது!

said...

வாங்க ரமணி.

'அவுகளை' எல்லாம் எழுதமுடியுமா? பெரிய இடமாச்சே!

வருகைக்கு நன்றி.

said...

கலெக்சன் அருமை.

கண்ணாடி ஜாடி நல்ல ஐடியா.

said...

வாங்க மாதேவி.

கண்ணாடி ஜாடியில் காசை ஒளிச்சு வைக்கறேன்:-))))

said...

இப்போதான் பழைய நாணயங்கள் சேகரிக்க ஆரம்பித்துள்ளேன்.நாணய சேகரிப்பு பற்றி தேடித்தேடி படித்து வருகிறேன்.ஆலோசனை இருந்தால் சொல்லுங்களேன்