Friday, June 15, 2012

முதுகு சொறியும் முதலைக் கை ((ப்ரிஸ்பேன் பயணம் 3)

கண் முன்னே நிற்கும் சரித்திரத்தைக் கடந்து தெக்கே போகிறோம். ஏற்கெனவே அஞ்சாறுமுறை வந்து போன ஊர்தான்னாலும் இம்மாம்பெரிய சரித்திரச்சான்று கண்ணுலே (அதுவா வந்து) விழலை பாருங்களேன்! தங்குமிடத்துக்கு எதிரில் என்பதால் அப்புறமா கிட்டே போய்ப் பார்க்கலாமேன்னு ஒரு மெத்தனம் :(

ப்ரிஸ்பேன் நதியின் தென் கரைக்கு (சௌத் பேங்க்) குறுக்குவெட்டாகக் கட்டியிருக்கும் விக்டோரியாப் பாலத்தின் வழியே. கூடிப்போனால் ஒரு ஒன்னரைக் கிலோமீட்டர் இருக்கும். முந்நூத்திப்பதிமூணு மீட்டர் பாலம் கடந்தால் அக்கரை. யஹாங் ஸே வஹாங், வாஹாங் ஸே யஹாங் ன்னு அங்கங்கே தாண்டிப்போக இந்த நதிக்குக் குறுக்கே 16 பெரிய பாலங்கள் கட்டி விட்டுருக்காங்க. அத்தனை வளைவுகளோடு நதியின் பாய்ச்சல் இருக்கே! ஆனால் வண்டியில் போக நாலைஞ்சு கிலோமீட்டர் ஆகிருச்சு. தலையைச்சுத்தோ சுத்துன்னு சுத்திக்கிட்டுத்தான் மூக்கைத் தொடணும். அதென்ன ஒன்வே சிஸ்டமோ!

கோ பிட்வீன் என்ற பெயரில் ஒரு புதுப் பாலம் (271 மீட்டர்) கட்டிவிட்டுருக்காங்க. டோல் கட்டணும். கட்ட ஆன செலவை இப்படித்தானே சரிக்கட்டணும். நாம் போன பாதையில் புதுப்பாலம் தலைக்கு மேல் இருந்ததால் காசு கட்டவேணாம். இந்தப் பாலத்துக்கு பெயர் வைக்கவும் ஒரு போட்டி வச்சு அதுலே வந்த ஆறாயிரம் பெயர்களில் கோ பிட்வீன் என்பதைத் தெரிவு செய்தார்களாம். எல்லாம் ஊர் மக்களைக்கேட்டுத்தான்:-))))

கார்பார்க்கிங் விலை தாறுமாறாய் ஏறிக்கிடக்கு இந்த அஞ்சு வருசங்களில். அப்போ பத்து, இப்போ இருபத்தி எட்டு!   வெறும் கார்பார்க்கிங் மட்டுமே கட்டிவிட்டு பில்லியனர் ஆவது சுலபமா இருக்கும்! 



வெள்ளி மாலை 5 முதல் ஞாயிறு மாலை 5 வரை வாரம் 20 மணி நேரமுன்னு லைஃப் ஸ்டைல் மார்கெட் நடக்குது. நாலு வரிசையா கும்மாச்சிக்கும்மாச்சியா இருக்கும் கூடாரங்கள். கலைப்பொருட்கள் கொட்டிக்கிடக்கும் கடைகள். இந்தியர் ஒருத்தர் கடையில் துணிமணிகள் இருக்கு.


எல்லாம் ராஜஸ்தான் சமாச்சாரம். விலையும் ராஜஸ்தானைவிடக் கொள்ளை மலிவு. ஆனால் வியாபாரம் காத்தாடுது. நான் ரெண்டு உடுப்புகளை 20 டாலருக்கு (பேரம் பேசி) வாங்கினேன். கடைப்பையர் பெங்களூரு வாசி. இங்கே விண்ட்டர்(!!) சீஸனாம். அதனால் இந்த உடைகளுக்கு விற்பனை இருக்காதுன்னு கோபால் சாதிக்கிறார். கடை போட இந்த 20 மணி நேரத்துக்கு வாடகையே 220 டாலர்கள். இன்னும் பத்துப்பேர் என்னை மாதிரி வாங்குனால்தான் வாடகைக்காவது வருமானம் தேறும். ஒன்னும் சம்பாதிக்கிற மாதிரி தெரியலை:(

மார்கெட் என்னவோ முன்னே பார்த்ததைப்போல இருந்தாலும் கடைகள் எல்லாம் புதுசா இருக்கு. பழையன கழிதலும் புதியன புகுதலுமா.....






முதுகு சொறிஞ்சுக்க முதலைக்கை கூட கிடைக்குது. கங்காரு கால் பாட்டில் ஓப்பனர், முதலைத்தலை, பல் நெக்லெஸ் இப்படி பலதும் உண்டு. விலங்கு சம்பந்தப்பட்ட எதையும் எங்க நாட்டுக்குள்ளே கொண்டு வரக்கூடாது என்பதால் ஆசையோடு பார்த்துக் க்ளிக்கினதோடு சரி.







பூனைகளும் யானையுமா இருக்கே! ஒரு இடத்தில் யானை கிடைச்சது. ஒரு பக்கம் கல் பதிச்சது, அடுத்தபக்கம் ப்ளெய்ன். யானை கட்டும் ( 'சங்கிலி' யோடு வருது:-)





ஒரு கடையில் தலாய்லாமா படத்தைப் பார்த்துட்டு நுழைஞ்சால் இளவயது புத்த பிக்குணி. சீன தேசம். இங்கே உள்ளூர் மடாலயத்தில் பயிற்சி எடுக்கறாங்க. அழகான சின்னப்பொண்ணு. எனக்கு ஐயோன்னு இருந்துச்சு என்பதே உண்மை:(





தெருக்களில் கடற்கரைன்னு (Streets Beach) கடல் இல்லாத ஊருக்கு கடற்கரை போட்டு வச்சுருக்காங்க.. வெள்ளை மணலும் கடலோரச்செடிகளும், கற்களும், பாறைகளும், செயற்கை அலை அடிக்கும் கடலுமா இருக்கு. சரியா எஃபெக்டுக்கு லைஃப் கார்டுமா செட்டிங்ஸ் ஓக்கே. ஆனால் குளிரும் மழையுமா இருப்பதால் நீச்சலுக்கு யாரையும் காணொம்:( ஆனாலும் கடமை முக்கியமுன்னு காப்பாற்றும் வீரர்களுக்குக் குறைவில்லை. சில கடல்குளங்களில் ஆழம் ஒரு மீட்டராம்!!!! அம்மாடியோவ்.......





கடலைக் கடந்தால் நதி:-) நதியில் பயணம் செய்யப் படகு(ம்) இருக்கு.





பார்க்லேண்ட்ஸ் காட்டுப்பகுதிக்குள்ளே நுழைஞ்சு போர்ட் வாக் போகலாம். 'எல்லாமே முந்தி இருந்ததைப்போலவே'ன்னு சொல்லமுடியாதபடிக்கு.... வாழை இலைபோல சாப்பாடு விளம்பிக்கும் வகையில் பெருசு பெருசா இருந்த மணி ப்ளாண்ட் செடிகள் எல்லாம் மிஸ்ஸிங். மரத்தோடு பிணைஞ்சு கொஞ்சி நின்ற வஞ்சிக்கொடிகளைக் காணோம்:( எனக்கு பயங்கர ஏமாற்றம். மூங்கிலும் பனைகளுமா இருந்தக் காட்டைக் கடந்தால் நடுவாந்திரத்தில் நேப்பாளக் கோவில். பகோடா! .


இது போனமுறை எடுத்த மணி ப்ளாண்ட்.

நேப்பாள் ஷாந்தி மந்திர் 1988லே நடந்த எக்ஸ்போ சமயத்துலே நேபாள நாட்டுக் கலைஞர்கள் தயார் செஞ்சது. அப்பதான் ஆஸ்ட்ராலியாவுக்கு வெள்ளையர்கள் வந்து 200வது வருஷக் கொண்டாட்டம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. உள்ளே வெவ்வேற முகத்தால் எல்லாத் திசைகளையும் பார்க்கும் கடவுள் சிலை. ஸீ த்ரூ உண்டியல். உக்கார்ந்து சாமி கும்பிட வசதியான மரபெஞ்சுகள் 



அழகான மரவேலைப்பாடுகள். செதுக்கி, இழைச்சு வச்சுருக்காங்க. வெளியே ரெண்டு யானைகள், ரெண்டு சிங்கங்கள், அழகான வெங்கல மணின்னு அம்சமா இருக்கு.





பின்பக்கம் இருந்த குளக்கரையில் மூவர் ஒருவித தியானப்பயிற்சியில் இருந்தாங்க. மூவரில் ஒருவர் குரு என்று நினைக்கிறேன். எதிரும்புதிருமா இருந்த ரெண்டு பேர் கண்களை மூடி கைகளை விரித்து உடலைச் சாய்த்து வச்சுருக்க.... ஏதோ ஜன்னி வந்தமாதிரி அந்த உடல் பார்ட் பார்ட்டா ஆடுன ஆட்டம் இருக்கே!!!! நடுக்கம்! தொபுக்கடீர்னு தண்ணியிலே விழுந்துருவாங்களோன்னு எனக்கும் நடுக்கம்.


புது அட்ராக்‌ஷனா வீல்ஸ் ஆஃப் ப்ரிஸ்பேன் என்று ரங்கராட்டினம். மேலே போய் ஊரின் அழகை 360 டிகிரி ரசிக்கலாம். ஆளுக்கு 15 டாலர் கட்டணம். மகளைக் கேட்டதுக்கு வேணாமுன்னு சொன்னாள். போன ரெண்டாம் வருசம் சிங்கையில் சிங்கப்பூர் ஃப்ளையரில் போனதே போதுமாம். சிங்கையில் கூண்டுகள் இதைப்போல் மூணுமடங்கு பெருசுன்னாள்.


சைக்கிள்களில் மக்கள் போறதும் வாரதுமா இருக்காங்க. திடீர்னு எதாவது பழுதானால் சரி செஞ்சுக்கவும் காத்தடைக்கவும் கம்யூனிட்டி பைக் ரிப்பேர் ஸ்டேஷன்னு ஒன்னு ஒரு பக்கமா இருக்கு. நல்ல முன் யோசனை! சைக்கிளை உருட்டித் தள்ளிக்கிட்டே போக வேணாம் பாருங்க.


பகல் உணவுக்குத் தேடி மகள் தெரிவு செஞ்சது அஹ்மெட் ரெஸ்டாரன்ட். துருக்கியர்கள் கடை. அவுங்கூர் பண்டபாத்திரமெல்லாம் காட்சிக்கு இருக்கு. சாலை ஓரமாவே இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. தெருவில் உக்காந்து சாப்பிட்டால் அது பெரிய ஃபேஷன். அவரவருக்கு வேணுங்கறதை வாங்கி உள்ளே தள்ளியாச்சு.

அறைக்குத் திரும்பிக் கொஞ்ச நேர ஓய்வு. வலை மேய்தல்ன்னு இருந்துட்டுத் திரும்ப க்வீன் தெரு மால் ஷாப்பிங் போனோம். எங்கூர் நிலநடுக்கத்துக்குப் பின்னே மகளின் நெட்பால் க்ளப் தோழிகள் ரெண்டு பேர் இங்கே குடியேறிட்டாங்க. அவர்களோடு கொஞ்சம் நேரம் போக்கணுமுன்னு முன்னேற்பாடு. ஆறரைக்கு அவுங்களே வந்து அழைச்சுப் போவாங்க. அதுக்குள்ளே வந்துடலாமே.....

மோட்டலுக்கு எதிரில் இருக்கும் கிங் எட்வர்டு பார்க்கை வேடிக்கை பார்த்தபடி போனால் ஆச்சு. ஒரு முழு ப்ளாக்கைக் கடந்துடலாம். படிக்கட்டுகளும் கட்டி வச்சுருக்காங்க. இல்லைன்னா நடந்தும் போகலாம். வலப்பக்கம் தலையைத் திருப்புனா.... 'சரித்திரம்' ' கூப்புடுது. அப்புறமா வர்றேன்னு சைலண்டாச் சொல்லிட்டு தோட்டத்துக்குள்ளே நுழைஞ்சேன்.. வாழையும் பனையுமா கிடக்கு. அங்கங்கே உக்காந்துக்க இருக்கைகள்.


நமக்குத்தான் ராச்சாப்பாட்டுக்கு எதாவது வாங்கிக்கணும். மகள் தோழி வீட்டுக்குப்போனபிறகு திரும்ப இங்கே வந்து சாப்பிட சோம்பலா இருக்கு. நடந்துநடந்து அதிலும் ஏற்றமும் இறக்கமுமா இருக்கும் சாலைகளில்.... ஐயோ கால்வலி:(

இதுலே நச் நச்சுன்னு மழை வேற..... குடை ஒன்னு வாங்கிக்கணும்) கோபாலின் முணுமுணுப்பு)

மதியம் சாப்பிட்டதே இன்னும் திம்முன்னு கிடக்கு. இன்னிக்கு இரவு ஒன்னும் வேணாமுன்னு கோபால் சொன்னதும், சூப்பர்மார்கெட்டில் எதாவது கிடைக்குமான்னு பார்த்தால்..... ரெடிமேட் குழம்புகள் வச்சுருக்காங்க. கொர்மா, தால், பட்டர் பனீர் இப்படி.... தனியா பாசுமதி அரிசிச் சோறு 200 கிராம் விற்பனைக்கு இருக்கு. ஆஹான்னு ஒரு வெறுஞ்சோறும், தயிரும் வாங்கிக்கிட்டேன். கொண்டாட்டம்தான் வயித்துக்கு:-)))))

தொட்டுக்க?

எனக்கு வாழைப்பழம் மதி கேட்டோ:-)

தொடரும்..............:-)

 PIN குறிப்பு: சரியா சொல்ல வரலை. இதைப்பற்றி முன்பு எழுதியது இங்கே!

18 comments:

Anonymous said...

படங்களும் செய்திகளும் அருமை !

said...

// இன்னும் பத்துப்பேர் என்னை மாதிரி வாங்குனால்தான் வாடகைக்காவது வருமானம் தேறும். ஒன்னும் சம்பாதிக்கிற மாதிரி தெரியலை:(//

வாடகைக்கே 10 பேர் வாங்கனும், அப்பறம் துணிக்கான கொள்முதல், ஏற்றிவரும் வண்டிச்சத்தம், உழுதவன் கணக்குப் பார்த்தா ன்னு சொல்வது சரியாத்தான் இருக்கும் போல. ஆனா அவர் அந்தக் கடைப் போடும் முன் இந்திய நடமாட்டும் ஏறிட்டு பார்த்திருக்கனும்.

said...

cats are out of the sack... ரொம்ப அழகாருக்கு.

said...

ப்ரிஸ்பேன் நதியின் தென் கரை(சௌத் பேங்க்) அழகான பகிர்வுகள் .பாராட்டுக்கள் !

said...

முதுகு சொறிய முதலைக் கை கொஞ்சம் டூ மச்சாதான் இருக்கு:)! க்ளிக்கியதனால் நாங்களும் பலவற்றைத் தெரிஞ்சுக்கிட்டாச்சு.

சாலையோரச் சாப்பாட்டுக் கடை ஜம்முன்னு இருக்கே.

said...

முதுகு சொறிய முதலைக் கை... :)

கேட்கவே பயங்கரமா இருக்கு.... படங்கள் எல்லாமே அருமை....

said...

முதலைத் தோலில் முதுகு சொறியலாம் வாங்கன்னு ஒரு கடை. உண்மையான முதலையக் கொண்டு வந்து அதுக்கு முதுகு சொறியச் சொன்னா எல்லாரும் ஓடிப் போயிருவோம் :)

ஆம்ஸ்டர்டாம்ல கிளிமாஞ்சாரோன்னு ஒரு எத்தியோப்பியச் சாப்பாட்டுக்கடை. அங்கு ஒரு முறை முதலைக் கறி சாப்பிட்டிருக்கேன். வெள்ள வெளேர்னு கோழி மாதிரி இருந்துச்சு. ஆனா நல்லா வேகவெச்சிருக்கனும். அதான் இந்தப் பதிவைப் படிச்சதும் நினைவுக்கு வருது. :)

அந்த கடைக்காரப் பையன் எப்படி லாபம் பாக்குறான்னு தெரியலையே! காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்குக் கையுங் காலுந்தானே மிச்சம்னு பட்டுக்கோட்டை பாடுன மாதிரி... துணிக வித்தென்ன ஐயா நமக்கு ரொட்டி தாலுதானே மிச்சம்னு அந்தப் பையன் பாடுவானோ என்னவோ!

said...

கடலும் நதியும் நல்லாகத்தான் இருக்கின்றன.

கடைப்பையரை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கின்றது.

எங்களுக்கு நல்ல சுற்றுலா.

said...

வாங்க இக்பால் செல்வன்.

வருகைக்கு நன்றி.

மீண்டும் வரணும்.

said...

வாங்க கோவியாரே.

பையர் இங்கே படிக்க வந்துருக்கார். இது ஒருவேளை சைடு பிஸினெஸா இருக்கலாம். வீக் எண்ட் மார்கெட் தானே!

அப்பா பெங்களூருவில் சொந்த கம்பெனி நடத்துறாராம். கோபாலின் லைன் 'தெரிஞ்சதும் உடனே அப்பாவோடு பேசி நமக்கும் ஒரு தொடர்பு உருவாக்கிக்கிட்டார். பயங்கர ஃபாஸ்ட் :-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

போனமுறை உறியிலே உக்கார்ந்துருந்தாங்க. இப்போ சாக்குலே:-)))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உள்ளேயும் இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. ஆனால் வெளியில் இடம் இல்லைன்னாதான் உள்ளே போகுது சனம்!!

வெளியில் நிக்கவச்சுக் கொடுத்தால் சிறப்பு:-)))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இது குழந்தை முதலையின் பிஞ்சுக் கை!

அடல்ட்டுன்னா ஒரு கையில் நம் முதுகு பூராவும் 'அடங்கிரும்' :-)))

said...

வாங்க ஜீரா.

முந்தி ஒருக்காப்போனபோது முதலை, கங்காரு, குதிரை இறைச்சிகளை சூப்பர்மார்கெட்டுலேயே பார்த்திருக்கேன்.

முதலை டெலிகஸியாம்!!!!

தின்னே பார்த்துட்டீங்களா!!!!! அவ்ளோ தில் நம்ம வீட்டிலே கோபாலுக்கு மட்டுமே. ஒருமுறை எங்கியோ தின்னு பார்த்து ஒரு சான்றிதழ் வேற வாங்கிக்கிட்டு வந்தார்!

கடைக்காரப்பையருக்கு இது டைம் பாஸோ என்னவோ!!!!! காசு சம்பாரிக்கிறமாதிரி தெரியலையே:(

said...

வாங்க மாதவி.

நிறைய ஸீகல் பறவைகள் வேற கூட்டமா வந்து கடல் எஃபெக்டைக் குடுக்குதுங்க:-)))))

said...

ஒரு தியானபோஸ் நிஜம்மாவே பயம்மா தான் இருக்கு.. நம்ம ரங்கராஜன் போஸ் ல.. சாயமுயற்சிக்கிறாங்களோ..? :)

said...

வாங்க கயலு.

அதானே.... கவனமெல்லாம் இதுலேயே போயிருச்சுன்னால்....தியானம் எப்போ?

ஒருவேளை இந்தக் கவனிப்பே ஒரு தியானமோ?

சதா ஒரு விஷயத்தைப்பற்றி மட்டுமே நினைப்பது தியானம்தானே? நாம் பதிவு பற்றி நினைப்பதைப்போல:-)))))