Wednesday, May 15, 2013

இதுக்கு என்ன செய்யலாம்???????


பதிவர்கள் பதிவு எழுதி வெளியிடுவதோடு நின்னுடாமல் வாசகர்களாகவும் இருக்கணுமுல்லையா? இந்த நியதியை அனுசரிச்சு  நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்மணத்துக்கு வந்து நாட்டு நடப்பைத் தெரிஞ்சுக்கிட்டுப் போவேன். நீங்களும் அப்படித்தானே?


இப்படி இருக்கும் ஒரு நாளில் தமிழரின் பெருமை-கம்போடியாவில் என்று ஒரு பதிவு கண்ணில் பட்டுச்சு. அடடா..... நாம் போய் வந்த இடமாச்சே. நாம் கோட்டை விட்ட விஷயம் எதாவது  இருக்குமோ? அவர்கள் பார்வையில்  என்னசொல்றாங்க?  என்ற ஆவலில் எட்டிப் பார்த்தேன். ரொம்ப ஒன்னும் இல்லை.  கொஞ்சம் படங்கள் இருந்தன. அதுக்காக ச்சும்மா விடமுடியுதா?  இப்படி ஒரு பின்னூட்டம் போட்டுட்டு வந்தேன்.


கருத்து:
 துளசி கோபால் சொன்னது…
http://thulasidhalam.blogspot.com/2010/08/2.html

http://thulasidhalam.blogspot.com/2010/08/3.html

இன்னும்கொஞ்சம் படங்களும் விவரங்களும் இந்தச்சுட்டிகளில்.
4/12/2013 1:49 AM


எங்கியோ பார்த்தமாதிரி இருக்கும் படங்களை இன்னொருமுறை பார்க்கலாமுன்னு மறுபடி அங்கே போனால்.... எல்லாம் நம்ம அங்கோர்வாட்  கம்போடியாப் பயணக் கட்டுரைகளில் இருந்தவை. முதலில் புரியலை.  டூரிஸ்ட் போற இடங்கள் ஒரே மாதிரிதானே இருக்கும்  என்ற நினைப்பு.  அதுக்காக நாம் படம் எடுத்தபோது இருந்த சுற்றுலாப் பயணிகள் அதே உடுப்பில் அதே இடத்தில் இன்னுமா நின்னுக்கிட்டு இருப்பாங்க?  இவைகளில் பல நம்ம கோபால் எடுத்தவை!!!

ஆனால் அதுலே படத்துலே வாட்டர்மார்க் ஒன்னு சேர்த்துருக்காங்க.
பதிவின்   பெயர் அந்திமாலை. உரிமையாளருக்கு  ஒரு மடல் அனுப்பினேன்.
அது இங்கே:

சொல்லவே இல்லை!!!!

வணக்கம். உங்கள் கம்போடியா பதிவில்  உள்ள படங்கள் எல்லாம் துளசிதளத்தில் வெளிவந்தவை.  அதுலே உங்க அடையாளம் வச்சு வெளியிட்டு இருக்கீங்க?

முன்னாலேயே கொஞ்சம் சொல்லி இருக்கலாமே?
​ என்னதான் பொதுவெளியில் இருக்கும் படம் என்றாலும் அனுமதி பெறாமல் உங்கள்  தளத்தில் சேர்ப்பது முறையா?​

என்றும் அன்புடன்,\
துளசி


மறுநாளே அங்கிருந்து ஒரு பதில் வந்துச்சு.

அன்பான சகோதரிக்கு வணக்கம்.

எங்கள் இணையத்தில் பல ஆக்கங்களை வேறு சில இணையத் தளங்களில் இருந்து எடுத்து வெளியிடுவது வழக்கம். இவ்வாறு செய்கையில் மேற்படி ஆக்கம் எந்த இணையத்தில் வெளியானது என்பதை ஆக்கத்தின் அடியில் 'நன்றி' எனும் இடத்தில் குறிப்பிடவது வழக்கம். சில இணையங்களில் வெளியாகும் ஆக்கங்களுக்கு இணைப்பு( link) மட்டுமே கொடுப்போம். அந்த ஆக்கங்களுக்கு மேற்படி இணையமே பொறுப்பாகும்.நீங்கள் குறிப்பிட்ட 'கம்போடியா' பற்றிய ஆக்கத்திற்கு 'தமிழ்க் கதிர்' எனும் இணையமே பொறுப்பாகும். உங்கள் புகைப் படங்களை அவர்கள் பயன்படுத்தியிருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அவர்கள் மேற்படி புகைப் படங்களை www.dreamstime.com மற்றும் www.sangathie.com போன்ற இணையத் தளங்களில் இருந்து எடுத்துள்ளார்கள் என்பதைப் பார்த்தாலே தெரிகிறது.ஆகவே நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியது மேற்படி இரண்டு இணையத் தளங்களும் ஆகும். அவர்களுடைய ஆக்கத்திற்கு நாங்கள் இணைப்பு மட்டுமே கொடுத்துள்ளோம். என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த விடயத்தில் நாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை என்றே நம்புகிறேன். உங்களது மின்னஞ்சலை மேற்படி 'தமிழ்க் கதிர்' இணையத்திற்கு அனுப்ப முயற்சி செய்தோம். ஆனால் அவர்களின் மின்னஞ்சல் முகவரி எங்களுக்குக் கிடைக்கவில்லை. முடிந்தால் நீங்கள் முயற்சியுங்கள்.

"ஒன்றுபட்டு உயர்வோம்"

அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்
ஆசிரியர்
அந்திமாலை
www.anthimaalai.dk


நல்லபடியாத்தான் பதில் போட்டுருந்தார். அவர் சொன்ன சுட்டிகளில் போய்ப் பார்த்தால் ஒரு கோடியே எழுபது லட்சம் படங்கள் வச்சுருக்காங்களாம். வலையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து அவுங்க அடையாளம் போட்டு வச்சுக்குவாங்க போல!!!!


அந்திமாலைக்காரர், நம்ம தளத்தில் அவை வெளிவந்த (நான் பின்னூட்டத்தில்)அனுப்பின) சுட்டிகளில்  போய்ப் பார்த்திருப்பார் போல. இப்போ அவரது கம்போடியா இடுகையில்  இருந்த நம்ம படங்களைக் காணோம்!  தூக்கிட்டார் .


என்னுடைய மனக்குறை என்னன்னா..... பொதுவில் போட்ட படங்களை மற்றவர்கள் பயன்படுத்தும்போது  இன்னாரின் பதிவிலிருந்து எடுத்தவை என்றோ அல்லது குறைஞ்சபட்சம்  வலையில் கிடைச்சவை என்றஓரு வரி சொல்லலாம். நான் சிலசமயம் இப்படி எதாவது படம்  சேர்த்தால் 'சுட்டபடம்' என்றாவது  குறிப்பிடுவேன்.

இதை விட்டுட்டு படங்களை எடுத்ததுமில்லாமல்  அவர்களுடைய அடையாளம் போட்டு வைப்பது என்ன நியாயம்?

Over 17,000,000
Royalty Free Stock Photos
Our collection of images grows by the day. We have
the perfect images & illustrations to suit your specific needs!

Download Royalty-Free stock photos, illustrations & images
for as low as NZ$0.25 / image or free



இதுலே இப்படிவேற போட்டுக்கிட்டுஇருக்காங்க.


முதலில் இதைப்பற்றி எழுதணுமான்னு நினைச்சேன்தான்.  அப்போ நம்ம பதிவர்  எஸ். ஹமீது பதிவுத் திருட்டு குறித்து ஒரு இடுகை போட்டுருந்தார்.  இதேபோல  நானும் சிலமுறை பாதிக்கப்பட்டு இருக்கேன் என்றாலும்  பதிவில் உள்ள படத்திருட்டு சமாச்சாரத்தை சொல்லாமப்போக மனசு வரலை.

சம்பவம் நடந்து ஒரு மாசமாச்சு.  மனசு ஆறலை. அதான் உங்களிடம்கொட்டிட்டேன்.

இப்பச் சொல்லுங்க..... இதுக்கு என்ன செய்யலாம்?



40 comments:

said...

ஒண்ணும் செய்யமுடியாதுங்க. மனதைத் தேத்திக்கொள்ள வேண்டியதுதான்.

ஆகவே இனிமேல் உங்கள் பதிவுகளிலிருந்து காப்பி பேஸ்ட் பண்ணப்போறேன். இந்திய சட்டப்படி என்னை ஒண்ணும் பண்ண முடியாது. உங்க ஊருக்கு நான் வரமாட்டனே!

said...



உங்களது வருத்தம் எனக்குப் புரிகிறது.

உங்கள் படங்கள், அதன் மேல் உங்களுக்கான உரிமைகள் இதற்காக காபி ரைட் சட்டங்கள் ஒரு அகில அளவிலும்
அந்தந்த நாடுகளிலும் இருந்தாலும், அவற்றில் காணப்படும் உரிமைகளை நிலை நிறுத்தவோ அல்லது
சட்டப்படி ஒரு நட்ட ஈடு தொகை பெறவோ அதே சட்டங்களில் இடம் வெகுவாகவே இருக்கிறது, உங்கள் கட்சியை எடுத்து உங்கள் தரப்பில் வாதாட பல்வேறு நாடுகளில் சட்ட நிபுணர்கள் இருக்கின்றனர், அவற்றினை தீர்வு செய்வதற்காகவே நீதி மன்றங்கள் இருக்கின்றன

என்றாலும், நடை முறையில் சாத்தியம் இல்லை எனத்தோன்றுவதற்கு காரணம் பல இருக்கின்றன.

1. நீங்கள் சொல்லியவாறு முதல் குற்றம் புரிந்தவராக கருதப்படுபவர் ஐ.டி. தெளிவாக இருக்காது.
2. சட்டத்தில் வழி தேடுவதற்கு உங்களுக்கு பணம் அதிகமாகவே தேவைப்படும். கொஞ்ச நஞ்சம் அல்ல.
ஆயிரக்கணக்கான டாலரைச் செலவழித்தால் ஒரு பத்து இருபது முப்பது ஆண்டுகட்கு பின்னே
ஒரு அவுட்சைட் ஆஃப் கோர்ட் செட்டில்மென்ட் படி ஒரு நூறு டாலரைப் பெற இயலும்.
3. இதில் கோர்ட்டுக்குப்போவதாக உங்களுக்கு ஒரு மனம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னாலே உங்களை
அணுகும் வழக்கறிஞர்கள் செய்யும் தொந்தரவு பொறுக்காது. பலர் நீங்கள் ஃபீஸ் என்று ஒன்றும் தரவேண்டாம்,
கிடைக்கும் தொகையில் எனக்கொரு பங்கு தாருங்கள் என்பார்கள்.
4. உங்கள் நேரம் வெகுவாக விரையமாகும். அதே நேரத்தில் புதுப்புது அனுபவங்கள் சாத்தியம்.
5. அந்த சூழ்னிலைகளை ரசித்து போட்டோக்களும் கட்டுரைகளும் சாத்தியம்.

இதெல்லாம் இருக்கட்டும்.

இன்னொரு பக்கம் . இன்னொரு திசையில் இவற்றையெல்லாம் நோக்கிடில்,

ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான உயிரினங்களை, தாவர இனங்களை அதன் விதைகளின் ஜீன்களை
ஏதோ ஒரு கால கட்டத்தில் படைத்த, அவ்வப்போது அவற்றினை பரிணாம வளர்ச்சியில் புதுப்பித்தவன் அவனை
இறைவன் என்று ஒப்புக்கொள்ள இயன்றாலும் சரி, இல்லையானாலும் சரி, அவன் ஒரு காபி ரைட் உரிமை
வாங்கி இருந்தால் என்ன ஆகும் ?

இரு இணைவின் மூன்றாவது உருவாகும் என நினைப்பைக் கொடுத்தவன் காபி ரைட் க்ளைம் செய்யவில்லையே ?
அந்த எண்ணத்திற்கு அடிகோலியாக இருக்கும் ஹார்மோனை கொடுத்தவன் ஒரு காபி ரைட் எனக்குத் தான் என்று
சொல்லவில்லை.

தொல்காப்பியரும், திருவள்ளுவரும், சங்கத்து புலவர் யாவரும், பல்வேறு மொழிகளில் இயல் இசை நாடகம் படைத்தவரும், சிற்பிகளும், ஏன்....? முதன் முதலிலே அசலுக்கு ஒரு நகல் உருவாக்க இயலுமென ஒருவனுக்குத்
தோன்றியதே அவனும்,

அ, ஆ, இ, ஈ.....முதல். ஃ வரை முதலிலே தொகுத்தவனும்,
ஒன்றுக்கு முன்னே பூஜ்யம் இருக்கிறது எனக்க்கண்டவனும்,

இந்த எழுத்துக்களை பயன்படுத்தும் உரிமை என்னிடம் இருக்கிறது என்று ஏன் கொண்டாடவில்லை ? அந்த எழுத்துக்களை வைத்து அவற்றினை நாம் ஒரு கோர்வைப்படுத்துகிறோம் , நாம் செய்வதெல்லாம் அது தானே?

உலகத்தே காணும் எதுவுமே, எல்லாமே நமது அல்ல. அப்படி இருக்கையில் அதன் நகல் மட்டும் எப்படி நம் சொந்தமாகும்?

இந்த மாதிரி சிந்தனையே பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். இருப்பினும் இது போன்று சிந்திப்பதும் சாத்தியம்.

நாம் எடுத்தோம் . தொடுத்தோம். உண்மைதான்.
இதில் இருக்கும் " நாம் " யார் ?
இன்னும் ஒரு ஐ நூறு வருடங்களுக்குப்பின்னே
நம் பெயரை இவ்வுலகு சொல்லுமா ?
சொல்லக்கூடிய வழி வகையில் நடக்கிறோமா ?

அப்படி நாம் நடந்து காட்டினால்,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனாக இருக்கும்பொழுது

உங்களையும் என்னையும் பார்த்து காபி அடிப்பவனைக் கண்டு
நாம் மகிழ்வோம்.

கடைசி வார்த்தை. எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் பாடுகிறார்.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அவர் யாருக்காக கொடுத்தான்.
ஒருத்தருக்கா கொடுத்தான்.. இல்லை ஊருக்காக கொடுத்தான்.

இன்னும் பேசலாம். பொறுமை யாருக்குமே இருக்காது.
ஸோ,
ஃபுல் ஸ்டாப்.

சுப்பு தாத்தா.
இது என்னுடைய கண்ணோட்டம்.
( உங்களை இந்த பின்னூட்டம் மன வருத்தம் அடையச்செய்திருந்தால், மன்னிக்க வேண்டுகிறேன்.)

said...

ஒண்ணும் பண்ண முடியாது என்பதும் உண்மை...

தானாக திருந்தினால் மட்டுமே உண்டு...

said...

அப்படியா சங்கதி.இனிமே படத்தை தவிர்த்தல் நலமே.தகவலுக்கு நன்றி

said...

பட்டுக் கோட்டையாரைத் தான் கேட்கணும். அவங்களாத்திருந்தினாதான் உண்டு.

நீங்க அந்தப் பதிவின் சுட்டி தரவில்லையே;(
தமிழ்மணத்திலே இதுக்கு ரூல்ஸ் இருக்கா.

said...

உங்க எண்ணம் புரியுது. சமயங்கள்ள நான் பழைய பதிவுகளைத் தேடும் போது அது ரெண்டு மூனு தளங்கள்ள இருந்து தலைய நீட்டும். நம்மதான் அங்கல்லாம் போறதில்லையேன்னு பாத்தா.. பேரில்லாம எழுத்து மட்டும் இருக்கும். போய்த் தொலையுதுன்னு விட வேண்டியதுதான்.

வள்ளுவரும் இளங்கோவடிகளும் காப்பிரைட்டா வாங்கி வெச்சிருந்தாங்க. ஊருக்கே எழுதுனமாதிரி நம்ம படைப்பும் ஊருக்கேன்னு நெனைச்சிக்க வேண்டியதுதான். என்ன... குறளை எழுதுனது வள்ளுவருன்னு எல்லாருக்கும் தெரியும். நம்ம பேரைத் தெரியாது.

பேரோடையோ பேரில்லாமலோ மக்களைச் சேருதேன்னு நெனைச்சிக்க வேண்டியதுதான். :)

said...

நம்முடைய படங்களில் நாமே முதலில் Watermark போட்டுவிடுவதுதான் உத்தமம்.அதையே அப்படியே காப்பி அடித்தாலும் நம்முடைய பெயருடன்தான் காப்பி அடிக்க முடியும்.

ஓரு தடவை என்னுடைய ஒரு பதிவை அப்படியே வேறு ஒருவர் தன் பெயரில் இட்டிருந்தார். நம்முடையதையும் ஒருவர் காப்பி அடிக்கிறாரே என்று சந்தோஷமடைந்தேன்.

நான், என்னுடையது என்னும் அகங்காரமும், மமகாரமும் நீங்கினால் இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை என்பது என் கருத்து துளசியம்மா.

said...

இதுக்கு தான் நன்றாக படம் எடுக்கக்கூடாது என்பது, போதா குறைக்கு நாங்க வேற உங்கள் படங்கள் அருமையாக இருக்கு என்று உசுப்பேத்தி விடுகிறோம்.
:-)

said...

Before uploading your photos in your posts do your own water-mark; http://photography-in-tamil.blogspot.com/2013/05/gimp.html

said...

படங்கள் மட்டுமல்ல குறிப்புகளைக்கூட அப்படியே காப்பி பேஸ்ட் செய்து விடுகிறார்களே:(

said...

http://www.bloggersentral.com/2012/05/disable-right-click-on-images.html - இது சிறிது உதவுமா என்று பாருங்கள்...

இதையும் மீறி திருடும் நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள்...! என்ன செய்வது...? மறுபடியும் சொல்கிறேன்... அவர்கள் தானாக திருந்தினால் மட்டுமே உண்டு...

என் பதிவும் (அப்படியே தலைப்பு கூட மாற்றாமல்) ஒரு தளத்தில் பார்த்தேன்... அதைப் பற்றிய பகிர்வு விரைவில்...!

said...

Thank you for the info.
Vetha.Elangathilakam.

said...

கேட்கவே வருத்தமா இருக்கு, துளசி!
ஆனா திருடறவங்களுக்கு இந்த வலி இருக்காதோ? இல்லை புரியாதோ?
திரு டிடி சொல்லியிருக்கறாப்பல right click disable பண்ணிப் பாருங்க. புகைப்படங்களுக்கு watermark போட்டுருங்கோ.

ஒண்ணுமே செய்ய முடியாது என்பதுதான் உண்மை!

said...

புகைப்படங்களிலாவது வாட்டர்-மார்க் காப்பாத்தும். ஆனா, எழுத்தை என்ன செய்வது?

ஆகையால, சில சமயம் இப்படி எங்காவது பார்க்கக்கூடாததைப் பார்த்து அதிர்ச்சி ஆகும். ஆனாலும், சுப்புத் தாத்தா பாலிஸிதான் எனக்கும் என்பதால் கண்டுகொள்வதில்லை. என்ன நம்ம பேரையும் போட்டிருந்தா ஒரு சின்ன சந்தோஷம். இல்லாட்டியும் நாம சொல்ல நெனச்சத, இன்னும் நிறைய பேருக்குக் கொண்டு சேர்க்கறதுக்கு நம்மகிட்ட கட்டணம் வாங்காம விட்டாங்களேன்னு திருப்தி! :-)

said...

write your website name in water mark.

said...

எனக்கும் இதுபோல் பலமுறை நடந்திருக்கிறது என்பதால் உங்கள் ஆதங்கம் புரிகிறது டீச்சர். தெரிந்து சில...தெரியாமல் எத்தனையோ?

said...

பதிவு எழுதுபவர்கள் வாசகர்களாகவும் இருக்கணும் போல என்பது சரிதான். ஆனா அதுக்கு நேரமும் நல்ல இணைய இணைப்பும் வேணும். என்னோட, ஏன் இந்தியாவுல இருக்கற எல்லா இணைப்புகளுமே சொதப்பல் ரகம்தான். சர்வீஸ்ல இருக்கறவரைக்கும் அதிவேக இணைப்பை அனுபவித்துவிட்டு இப்போது ஆமையா நகர்ற இந்த இணைப்போட நம்மளோட பதிவ பப்ளிஷ் பண்றதுக்கே படாதபாடு பட வேண்டியிருக்கு. இதுல எங்க போயி...

ஆனாலும் இந்த மாதிரி திருட்டு ரொம்ப சகஜமாத்தான் நடக்குது போல. இத வச்சே ஒரு துப்பறியும் கதை எழுதலாம் போல :)

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

சொல்லிட்டு செய்யப்போறிங்க!!!

இன்னாருடையதுன்னு சேர்த்தீங்கன்னா இன்னும் விசேஷம்:-)

நன்றி.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

பிரச்சனையில் உங்க கண்ணோட்டத்தைச் சொல்லி இருக்கீங்க.

எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை.

பதிவுகளையும் படங்களையும் பயன்படுத்துவது கூடப் பிரச்சனை இல்லை இப்படி எடுத்ததைத் தன்பெயரோடு சேர்த்துக்கொள்வதுதான் சரியாப்படலை:(

மனித மனம் நேர்மையை எதிர்பார்க்கிறது. அம்புட்டுதான்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

புரிதலுக்கு நன்றி.

said...

வாங்க கவியாழி கண்ணதாசன்.

தெரிஞ்சோ தெரியாமலோ படங்களுடன் பதிவு என்பது பழகிப்போச்சு. இப்ப திடீர்னு படங்களைத் தவிர்த்தால்.... எனக்கே என் பதிவு பிடிக்காமல்போயிரும் அபாயம் இருக்கு:-)))))

said...

வாங்க வல்லி.

பட்டுக்கோட்டையார் நல்லாத்தான் சொல்லிட்டுப் போயிருக்கார்!

எதுக்கு சுட்டி எல்லாம்?

மனசில் இருக்கும் குறையைச் சொல்லனுமுன்னு தோணுச்சு. எனக்கும் உங்களையெல்லாம் விட்டால் வேற யார் இருக்கா? அதான் வெளியே கொட்டிட்டு மனசை க்ளியர் பண்ணிட்டேன்:-)

said...

வாங்க ஜிரா.

நானும் பல இடங்களில் என் பதிவுகளைப் பார்த்துருக்கேன். இப்ப படங்களும் புகழ் பெற ஆரம்பிச்சுருக்கு:-))))

said...

வாங்க கைலாஷி.

இது அம்பீஸ் கஃபேயில் திருடியதுன்னு போட்ட டபரா செட்டுகள் கூடக் காணாமப் போகுதாமே!!!

அதன் பக்கத்துலேயே தங்கள் பெயரைப்போட்டு வச்சுருப்பதைப் பார்த்தால் சிரிப்பு வராதோ?

said...

வாங்க குமார்.

ரொம்பச்சரி. உசுப்பேத்தி உசுப்பேத்தி.... உடம்பு ரணகளமா ஆகிப்போச்சு:-))))

said...

எப்படி எல்லாம் செய்கிறார்கள்.

said...

வாங்க சாம்பார் வடை!

உண்மைதான். சுட்டிக்கு நன்றிகள். நானும் புகைப்பட வகுப்பில் இதுபற்றி வந்த பதிவை வாசித்தேன்.


ஆனால் ஒன்னுரெண்டுன்னா வாட்டர்மார்க் போட்டுக்கலாம்தான். நம்ம தளத்தில் வரும் பத்துக்கணக்கான(!) படங்களுக்கு ஒவ்வொன்னா செஞ்சுக்க நேரம் அதிகம் ஆகுதுங்களே:(

said...

வாங்க ஸாதிகா.

குறிப்புகளை அப்படியே காப்பி & பேஸ்ட் செய்யறது இப்போ பழகிப்போச்சுன்னு விட்டுட்டேன்.

இப்போ படங்களுக்கு இந்த கதி! இது வெறும் இனிஷியல் ஷாக் தான். போகப்போக இதுவும் பழகிரும் இல்லே:-)))

said...

சுட்டிக்கு நன்றி தனபாலன்.

செஞ்சுறவேண்டியதுதான். மீண்டும் நன்றிகள்.

said...

வாங்க வேதா.

நிறையப்பேர் பாதிக்கப்பட்டிருக்கோமோ:(

said...

வாங்க ரஞ்ஜனி.

சொன்னீங்க பாருங்க கடைசி வரியில்!!! அதுதான் உண்மை:-))))

எழுதுவதோடு கடமை முடிஞ்சுருதுன்னு இருப்பவள் நான். இனிமே இதுக்கெல்லாம் கூட மெனெக்கெடணுமான்னு.... ப்ச்...

said...

வாங்க ஹுஸைனம்மா.

//நிறைய பேருக்குக் கொண்டு சேர்க்கறதுக்கு நம்மகிட்ட கட்டணம் வாங்காம விட்டாங்களேன்னு திருப்தி! :-)//

அட! இதுவேறயா!!!!! தப்பிச்சோம் போங்க:-))))))

said...

வாங்க ஜயதேவ் தாஸ்.

கருத்துக்கு நன்றி.

படம் பூராவும் தளத்தின் பெயர் அடைச்சுக்குமே:-)))))

வாட் டு டூ!!!!

said...

வாங்க கீத மஞ்சரி.

கண்ணில் பட்டதுதான் இப்போப் பிரச்சனையே!

எட்டிப்பார்க்காமல் இருக்கக் கத்துக்கணும் இனி:-))))

said...

வாங்க டிபிஆர் ஜோ.

துப்பறியும் கதை வாசிக்க நாங்கள் ரெடி! நீங்க (எழுத) ரெடியா:-))))

said...

வாங்க மாதேவி.

க்ரிமினல்களுக்கு அறிவு கூடுதல் என்பதே உண்மை!!!!

said...

'தமிழ்மணத்'திலேயே நம்ம பதிவைத் திருடி, அதே 'தமிழ்மணத்'திலேயே தன்னோட பேர்ல, ஓர் எழுத்தைக் கூட மாற்றாம பதிவேற்றுகின்றவன் எவ்வளவு பெரிய திருடனா இருப்பான்..? இது சாதாரண திருட்டு இல்லே...கொள்ளை! ஒண்ணு, ரெண்டுனா பரவாலேன்னு விட்டுடலாம்...ஆனா ஒரு நாளைக்கு பத்துப் பதினைஞ்சுன்னு கொள்ளை அடிச்சு அவனோட தளத்தில போட்டுக்கிறான்... ஒரு முறை எச்சரித்தும் திருந்தலேன்னா, அடுத்தது வேற வழியைததான் பார்க்கணும்...

வெறும் எழுத்துக்கள் திருட்டுப் போனதையே என்னால தாங்கிக்க முடியல..ஆசையா, ஆர்வமா எடுத்த உங்கள் படங்கள் திருட்டுப் போனது ரொம்ப சோகம்தான்.

மற்றவர்களும் சொன்னதைப் போல இனி உங்க படங்களுக்கு வாட்டர் மார்க் போட்டுடுங்க மேடம்...!

said...

வாங்க ஹமீது.

இப்படி நம்மையெல்லாம் புலம்ப வச்சுட்டாங்களே:(((((

said...

ப்ளாக்கரில் ஒரு படத்தை இணைத்து விட்டால் அது பொதுவானதாகி விடும்
மற்றவர்கள் பயனோடுத்துவதை தகடை செஎய்ய வாய்ப்பில்லை. வாட்டர் மார்க் இடுவது நல்லது/ வாட்டர் மார்க்கையும் ரிமூவ் செய்ய மென்பொருட்கள் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.பெரும்பாலும் வலியப் பதிவர்கள் அனைவரும் கூகுள் தேடுதலில் கிடைத்த படங்களையே பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் வெறும் கட்சியை மட்டும் எடுக்காமல் நமது பின்னணியில் காட்சி வருமாறு எடுத்துக் கொள்வது நல்லது.எங்கு வெளியிட்டாலும் நாமும் இருப்போம் அல்லவா?
அவர்கள் உண்மைகள் வலைபதிவர் ஒவ்வவொரு படத்துக்கும் நீர்க் குறி இட்டு வைப்பார். அதை நீங்களும் பயன்படுத்துங்கள்.

said...

வாங்க முரளிதரன்.

கருத்துகளுக்கு நன்றி.

// வாட்டர் மார்க் இடுவது நல்லது/ வாட்டர் மார்க்கையும் ரிமூவ் செய்ய மென்பொருட்கள் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.//

வல்லவனுக்கு வல்லவன் கதையா இருக்கே!!

எத்தனைன்னு நீர்க்குறி போடுவது சொல்லுங்கோ?

எல்லாம் க்ருஷ்ணார்ப்பணம் என்று விடணும்:(