Monday, August 12, 2013

கந்தசாமியும் செங்கற் சூளையும்...... (மலேசியப் பயணம் 4)

1857 இல்  ஊர் உருவாகி  மக்களுக்குத் தேவையான  வசதிகள்  வர ஆரம்பிச்ச  24  வது வருசம் (1881) வெள்ளத்தால் ஊரில்  பாதி அழிஞ்சது. மீதிப்பாதியை அழிச்சுப் புண்ணியம் கட்டிக்கிட்டது  அக்னி.  மரமும் ஓலையும் வச்சுக் கட்டுன கட்டிடங்கள் எல்லாம்  போன இடம் தெரியலை:(


இனிமேப்பட்டு  செங்கல் வச்சுக்  கட்டிடங்களைக் கட்டணுமுன்னு  அப்போ  ரெஸிடெண்ட் ஜெனரலா இருந்த   Sir Frank Athelstane Swettenham உத்தரவு போட்டுட்டார். பிரிட்டிஷ்காரர் சொன்னதைக் கேக்கணுமா இல்லையா?  அவுங்கதானே இப்ப நாட்டைப்புடிச்சு வச்சுக்கிட்டு இருக்காங்க.

ரெண்டு நதிகள் ஓடும் நிலப்பகுதியாக இருந்ததால்,  அருமையான  களிமண் பூமி.  செங்கல் அறுத்துச் சுட்டு, கட்ட ஆரம்பிச்சாங்க. ரொம்பவே தரமான செங்கல். ஊரில் இருக்கும் முக்கிய கட்டிடங்கள் எல்லாம் அப்போ கட்டுனவைதான்.  இந்தப்பகுதிக்கு  ப்ரிக் ஃபீல்ட்ஸ் என்றே பெயரும் அமைஞ்சது. நம்ம சிங்காரச் சென்னையின் சூளை,   சூளைமேடு கூட இப்படி  நம்ம ஊர் உருவான சமயம்  செங்கல் சூளை அதிகமா இருந்த பகுதியா இருந்து, அதனால் கிடைச்ச காரணப் பெயரோ என்னவோ?


ஏராளமான இந்தியர்கள் இந்தப்பகுதியில் வசிப்பதால்  லிட்டில்  இண்டியான்னும்  ஒரு செல்லப்பெயர் உண்டு.
மலேயன் ரயில்வேஸ்  தொடங்குச்சு 1885.  இதுலே வேலை செய்ய  இங்கிலாந்துலே இருந்து  நேரடியா ஆட்களைக் கொண்டு வர்றதுக்கு பதிலா,  அவுங்க  தங்கள் அடிமை நாடுகளில் இருந்து  ஏற்கெனவே ப்ரிடிஷாரால் பயிற்றுவிக்கப்பட்ட  மக்களைக்கொண்டு வரலாமேன்ற  யோசனையால்  சிலோன்காரர்களைக்  கொண்டு வந்தாங்க. அந்தக் கூட்டத்தில் சிலோனீஸ் என்ற  வகையில்  தமிழர், சிங்களர் எல்லோரும் இருந்தாலும் தமிழர்கள் எண்ணிக்கை  கொஞ்சம் அதிகமா இருந்துச்சு.

ரயில்வே நிர்வாகம், ஸ்டேஷன் எல்லாம்  இருந்த இந்தப் பகுதியிலேயே  வசிக்கவும் ஆரம்பிச்சாங்க. கொஞ்சகாலம் கழிச்சு கோவில் ஒன்னு தேவைப்படுதுன்னு  1890  டிசம்பர்  24 க்கு சின்னப்பா  என்றவர் வீட்டுலே கூடுன சிலோன்காரர்கள,  ஜஸ்ட் வேல் ஒன்னை நட்டு வச்சு முருகனை வழிபட ஆரம்பிச்சாங்க. இந்த முருகன் இருக்கான் பாருங்க......  தமிழன்  எங்கியாவது போனால்,  கூடவே பொட்டியைக் கட்டிக்கிட்டுக் கிளம்பிருவான்:-))))

அப்புறம் கோவில் கட்ட நிலம், செலவுக்கான பணம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா  ஒரு ஒழுங்குக்கு வந்து, 1902 வருசம்  சின்ன கோபுரத்தோடும்,   மூலவர் சந்நிதியில் முருகன் சிலையாகவும்  அழகா அமைஞ்சு போச்சு.  யாழ்பாணத்தில் இருக்கும் நல்லூர் ஸ்ரீ கந்தசாமி கோவிலை  முன்மாதிரியா வச்சுக்கிட்டாங்களாம்.  கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு இடத்தையும் வாங்கி அங்கே கலாமண்டபம் என்ற பெயரில் ஒரு ஹாலும் கட்டிக்கிட்டாங்க. வீட்டு விழாக்கள் எல்லாம் இங்கே கனஜோராக நடத்திக்கலாமாம்.

கோவில் வாசலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  நூறு வருசத்துக்கு மேல் ஆச்சுன்னாலும்  புதுக்கருக்கு அழியாமல் பளிச்ன்னு  இருக்கு.   ஆகம விதிப்படி  பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் எல்லாம் தவறாமல் செஞ்சுடறாங்க.


கோபுர வாசலில் 'டூஸ் அண்ட் டோண்ட்ஸ்' (எச்சரிக்கை) ஒட்டி வச்சுருக்காங்க. அஞ்சாவது பாய்ண்ட்டைப் பார்த்ததும் மனசு அப்படியே நொந்து போச்சு:(  உள்ளே போய்   கடவுள் கந்தசாமியை தரிசனம் செஞ்சுக்கிட்டு வெளியே வந்தோம்.  கோவிலுக்கு நேர் எதிரா இருக்கும் தெருவில் நடக்க ஆரம்பிச்சோம்.

கொஞ்சதூரத்தில்  ஏகப்பட்ட புறாக்கள் தரையில்!  கிட்டப்போய்ப் பார்த்தால்  ரெண்டு மூணு கிலோ அரிசியைத் தரையில் கொட்டி வச்சுருக்காங்க. அதுவும் கார் நிறுத்தும் இடத்தில்.  என்ன வழிபாடோ தெரியலை. அடுத்து  குழலோடு க்ருஷ்ணன்,  வாவான்னான்.  வீர ஹனுமான் கோவிலாம். கோவிலைப் புதுப்பிக்கும் வேலை நடக்குதுன்னு  எல்லோரையும் தாற்காலிக கொட்டகையில் கொண்டு வந்து வச்சுருக்காங்க.





  தொட்டடுத்து இன்னொரு கோவில். மகாமுனீஸ்வரர்  ஆலயம். எல்லோரும் ஷெட்டுக்கு வந்துட்டாங்க. அவரவருக்கு அவரவர் சாமிகள் வேண்டித்தான் இருக்கு. கோவில்களுக்கு   பக்ககத்திலும்  எதிர்வாடையிலும்  பூமாலைக்கடைகள். ஆர்கிட் பூக்களை வச்சுக் கட்டுன  அழகான மாலைகள்.

இங்கிருந்து தலையைத் திருப்பிப்பார்த்தால் கந்தசாமி கோவில் கம்பீரமா இருக்கு!


இன்னும் கொஞ்சதூரம் சிறுநடையில் புத்தகக்கடை ஒன்னு கன்ணில் பட்டது. காலத்தில் உறைஞ்சு போன தோற்றம் கடைக்கும் கடை ஓனருக்கும்.  நமக்கான வாசிப்புக்கு  ஒன்னும் அகப்படலை.  அப்படியும் தேடுனதில்  ' சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது - சிவசங்கரி.'     பழையகால டைப்ரைட்டர்முன் கைகட்டி இருந்த பெண்மணி,  கையில் வாங்கிப் பார்த்து  கால்குலேட்டரில்  தட்டி 17 வெள்ளின்னார்.  இந்திய ரூபாயை  ரிங்கிட்டுக்கு மாத்தி மேலே ஒரு 12 ரிங்கிட் லாபம் வச்சுக்கறாங்க. நாள் முச்சூடும்  புத்தகங்களுக்கு முன்  வெறித்த பார்வையுடன்  இருந்து பாருங்க..... அவுங்க கஷ்டம் புரியும்!



மணி பத்தேகால் கூட இல்லை, வெயில் வாட்டி எடுக்குது.  கே எல்  சுற்றுலாப்பயணிகளுக்கான  வரைபடம், மலேசிய நாடு முழுமைக்கும்  உள்ள   வழிகாட்டிகள் இப்படி ரொம்ப அழகா அருமையா  விமானநிலையம், ஹொட்டேல்கள் இப்படி பல இடங்களில் குவிச்சுப்போட்டு வச்சுருக்காங்க.  கைப்பைக்குள் இருந்த  ப்ரோஷரைப் பார்த்து  அடுத்துப்போக வேண்டிய இடத்துக்கு ஒரு டெக்ஸி  அகப்படுமான்னு  நின்னதில்  ஒரு டெக்ஸி  கிடைச்சது.


வண்டியில் ஏறி உக்கார்ந்து வண்டி நகர ஆரம்பிச்சதும்  ரெயில்வே  ஸ்டேஷன் என்றார் நம்மவர். தலையை ஆட்டிய  ஓட்டுனர் (தமிழர்)  அடுத்த முப்பது விநாடிகளில்  ஒரு பாலத்தாண்டை வண்டியை நிறுத்தி  இந்தப்பாலத்தில் போங்க என்றார். பயணக்கட்டணம் மூணு வெள்ளி. கொடுத்துட்டு இறங்கும்போது சரியா முக்கால் நிமிசம்  ஆகி இருந்துச்சு. ஆனால் இந்தமுக்கால் நிமிசத்தில் கூட  சொல்லவேண்டிய அறிவுரையை மறக்காமல் சொன்னதுக்கு அவரைப் பாராட்டத்தான்(?!) வேணும்.

   "சங்கிலியைக் கழட்டிப் பையில் வச்சுக்குங்கம்மா. மலாய்க்காரனுங்க  சரியான திருட்டுப் பசங்க,அறுத்துக்கிட்டு ஓடிடுவாங்க"

இதென்னடா   பெரிய அபகடமா இருக்கேன்னு  பாலத்துக்குமேல் நடக்கும்போது சங்கிலியைக் கழட்டிக் கைப்பைக்குள் வச்சேன். இப்பப் பையைக் கட்டிக் காப்பாத்தணும். நல்லவேளையா நம்ம ஹொட்டேலில் எலெக்ட்ரானிக் ஸேஃப் இருப்பதால்  அதில் பாஸ்போர்ட்டுகளை வச்சுப்பூட்டி இருக்கோம். இல்லேன்னா நாந்தான் சுமப்பவள்.

பாலத்தினடியில் தண்டவாளங்களும், குஆலா லம்பூர்  என்ற  ஸ்டேஷன் பெயரும் தெரிஞ்சது
.

முதல் ரயில் போக்குவரத்து  தொடங்குனது  1886  செப்டம்பர்    KL  to  Klang . ஒரு 49 கிமீ தூரம். ரயில்வே ஸ்டெஷன் கட்டிடம் அப்போதான் கட்டி முடிச்சுருந்தாங்க. the residence of the British Resident, வீடு  அங்கே பக்கத்திலிருந்ததால் ரெஸிடெண்ட் ஸ்டேஷன் என்ற பெயர் அமைஞ்சது.  சில வருசங்களில் ரயில்பாதைகள் நீட்டிக்கப்பட்டு இந்த ஊருக்கும் சிங்கைக்கும் ரயில் பயணம் ஆரம்பிச்சது. தாய்லாந்து வரைகூட ரயிலில் போகலாம்!


ரெஸிடெண்ட் ஸ்டேஷன் கட்டிடம்  ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணர்களால்  அமைக்கப்பட்டாலும்,  இருக்கும் நாட்டின் மதம் அனுசரிச்சு முகலாய கட்டிடக்கலைப் பாணியையும் கலந்து கட்டுனதே! தரமான உள்ளூர் செங்கல் பயன்படுத்தியிருந்தாங்க.  சூளை ரொம்பவே பக்கம் என்றபடியால்  சுடச்சுடக் கிடைச்சிருக்கலாம். அப்புறம்  ஒரு இருபத்தினாலு வருசம் கழிச்சு (1910 ) புனரமைப்பு செஞ்சாங்க.


இப்பப் பார்க்கும்போதும்  ஏதோ ராக்ஷஸ சைஸ்  பறவை ஒன்னு  அப்படியே சிறகுகளை விரிச்சு இறங்கி உக்கார்ந்தது போலத்தான் தோணும்.  நம்ம கேமெராவில் ஒரு ஃப்ரேமுக்குள் அடங்காது:(பிட் பிட்டா எடுத்தோம்.


வேறொரு சென்ட்ரல் ஸ்டேஷன் கட்டுனதும் இங்கே ரயில் நடமாட்டம்  அவ்வளவா இல்லையேன்னு  அழகான இந்த பாரம்பரியமுள்ள கட்டிடத்தை வீணாக்காமல்  ஹொட்டேல் ஹெரிடேஜ், ஸ்டேஷன் ஹொட்டேலா மாத்திட்டாங்க. வெளியே இருக்கும் அழகும்  எதோ போன வருசம் கட்டுனமாதிரி இருக்கும் புதுமையும் உள்ளே இல்லையாம். கார்பெட், அறைகள் எல்லாம் மக்கல்  மணமென்று  ஹொட்டேல் ரிவ்யூஸ் சொல்லுது.  ஒருவேளை 'பழமை போற்றுதும்' வகையில் 127  வருச கார்பெட் விட்டுவைக்கப் பட்டுள்ளதோ என்னமோ!!!

இந்த ஸ்டேஷனுக்கு எதிர்சாரியில் பிரமாண்டமான ரயில்வே நிர்வாக அலுவலகம், சட்னு பார்க்க லண்டன் பார்லிமெண்ட் பில்டிங் போல  நீளமா அரைத்தெருவுக்கு  இடம் பிடிச்சிருக்கு.  இதுவும் அட்டகாசமான அழகுதான்!  நம்ம சி,சென்னையில் செண்ட்ரல் ஸ்டேஷனைத் தொட்டடுத்து ரயில்வே ஆஃபீஸ் ஒன்னு தங்கசாலைத் தெரு ஆரம்பத்தில்  அட்டகாசமா இருக்கும் கவனிச்சு இருக்கீங்களா?

நம்ம குடும்பத்தில் ரெயில்வேகாரர்கள் அதிகம் என்பதால்  ரயில்வேன்னா ஒரு பாசம் பொத்துக்கிட்டு வந்துரும், எனக்கு கேட்டோ:-)

அக்கரையில் இருந்து படம் எடுக்கலாமுன்னு நினைச்சால்..... இங்கே எங்கேயுமே  ஸீப்ரா க்ராஸிங் என் கண்ணில் படலை.  அட்லீஸ்ட் சிக்னலில் வண்டி நிற்கும்போது பச்சை மனுசன் உண்டான்னா அவரையும் காணோம்?  சர்புர்ன்னு  தலை தெறிக்கும் வேகத்தில் கார்கள்.  நான் போகும்போது கூடவே (ஓடி)வான்றார் இவர். ஒரு வழியா எதிர்க்கரை போய்ச் சேர்ந்தோம்.






இனி எங்கே? எடு ப்ரோஷரை......

தொடரும்....:-)






36 comments:

said...

திரு முருகா!

//கந்த சாமியும் செங்கற் சூளையும்//

தமிழ் மொழியில், "முருகன்" என்ற பெயருக்கு எத்தனை மதிப்போ...

அதே மதிப்பு, அதை விட மதிப்பு,
"கந்தன்"
என்ற பேருக்குத் தான் உண்டு!

ரொம்ப சஞ்சலமாக இருந்தது Aug-9-இல் இருந்து!
இப்போ தான் பதிப்பித்தீர்கள் போலும்; எதேச்சையா, ஒங்க பதிவைத் திறந்து பாத்தேன்! "கந்தசாமி" நிக்குறான்!

புகைப்படம் எடுக்க அனுமதி இல்லீன்னா என்ன?
கோபுரத்தில் ஐஞ்சாம் அடுக்கில் பாருங்கள்!

கந்தசாமியும் நிக்குறான்!
அப்பா, திருமாலும் நிக்குறாரு! - தன் குறப் பெண்ணை, அவனிடம் சேர்த்து வைக்க!

said...

அதென்னங்க அஞ்சாவது கண்டிஷன். தெரியலைன்னா தலை வெடிச்சுடுமே?

said...

நான் என்னமோ என்னைப் பத்திதான் பதிவு போட்டிருக்கீங்களாக்கும்னு அவசர அவசரமா ஓடியாந்து உளுந்து கால் சுண்டு விரல் சுளுக்கிக்கிட்டுதுங்க. அங்கே எதாச்சும் நல்ல தைலம் வித்தா வாங்கி அனுப்புங்க.

said...

"கந்தன்" என்பது... "முருகன்" என்பதை விடப் பெரும் பெயர்!

கந்தர் அநுபூதி
கந்தர் சட்டிக் கவசம்
கந்தர் அலங்காரம்
கந்தர் அந்தாதி
கந்தர் கலி வெண்பா
கந்த புராணம்
-ன்னு எல்லாமே "கந்தன்" தான்!

"முருக" சட்டிக் கவசம், "முருக" அநுபூதி -ன்னு யாரும் சொல்லுறதில்ல!
"முருக" ஆற்றுப்படை மட்டுமே! மத்ததெல்லாம் "கந்த" தான்!

ஏன் தெரியுமா???
---

கந்தன் = சங்கத் தமிழ்!
கந்தன் = இயற்கை வழிபாடு!

கந்து + அன் = கந்தன்!

சங்க காலத்தில், "கந்து"-ன்னா = சிறு தூண் -ன்னு பொருள்!
ஒரு தூணா = முருகன்? ஆமாம்!

முல்லை/ குறிஞ்சி நிலக் காட்டு/ மலை மக்கள்!
இவர்களிடம் யானைக் கூட்டம் அதிகம்! பழக்கப்பட்ட யானைகள்!

(அரச/ மருத நாகரிகம் அதிகம் பரவாத காலம்; காட்டு வாசிகள் பாருங்க! குதிரைகள் கிடையாது; குறிஞ்சியில் யானை, முல்லையில் மாடு மட்டுமே)

யானையை ஓரிடத்தில் இருந்து, இன்னொரு இடத்துக்கு ஓட்டிச் செல்லும் போது, அதைக் கட்ட, ஒரு குறும் தூண் தேவைப்படும்! வெறும் கட்டையெல்லாம் வேலைக்காவாது, யானையின் இழுப்புக்கு!
அதான் கந்து = இரும்பு/எஃகுத் தூண்!

இந்த Weightஐ யார் சுமந்து செல்வது?
= அந்த யானையே தான் சுமந்து செல்லும்!
= வேண்டும் இடத்தில் இறக்கி, அதிலேயே யானையைக் கட்டி, லேசா மேய விடுவார்கள்!

இப்படித் தன்னைக் கட்டும் ஒன்றையும் தானே சுமப்பது போல்...
எல்லாம் கடந்தவனும், நம் அன்பைக் கடக்காமல் கட்டுப் படுகிறான்!
அவனே = கந்து + அன் = கந்தன்!
---

தமிழ்ப் பழங்குடிகள், குடி காத்த முன்னோர் நினைவாக...
நடு கல்லையும்/ கந்தையுமே நட்டு வழிபட்டார்கள்!

அந்த இயற்கை வழிபாடே
= கந்து + அன் = கந்தன்!

said...

கந்தனையும் கண்டுகொண்டேன்.....

கூடவே ரயில் நிலையத்தினையும். புகைப்படங்கள் அனைத்தும் அருமை...

said...

இந்தக் கந்திலே = படரும் வள்ளிக் கொடி!

வள்ளிக் கிழங்கு/ வள்ளிக் கொடியை எத்தனை பேரு பார்த்து இருக்காங்க -ன்னு தெரியல!
ரொம்ப மெல்லீசு! வெற்றிலைக் கொடி போலத் தான் இருக்கும், ஆனா வேற!

Deep Violet பூக்கள்!
ரொம்ப நெருக்கம் நெருக்கமா இருக்கும்!
அந்தக் கொடி தான், இந்தக் கந்திலே சுற்றிக் கொள்ளும்!

இதைத் தான், தன் குடி காத்த முன்னோர் = ஆண்/பெண்
-ன்னு உருவகமா வழிபட்ட தமிழ்ப் பழங்குடிகள்!

"கொடிநிலை-கந்தழி-வள்ளி" -ன்னு தொல்காப்பியரும் இதைத் தான் சொல்லுவாரு!
இப்படியான இயற்கை வழிபாடு தான் = கந்தன்/ வள்ளி!
-------

பின்னாளில், மருத நிலத்தில், அரசர்கள் செல்வாக்கோடு..
(இராஜ சூய யாகம் வேட்ட பெருநற் கிள்ளி)
சம்ஸ்கிருத புராணங்கள் வந்து கலந்த போது தான்..

பூர்வ குடிகள் வழிபாடு போய்...
கந்தன் -> ஸ்கந்தன் -ன்னு ஆகி விட்டான்!:((

நம்பவே நம்பாதீங்க! கந்தன் வேற, "ஸ்கந்தன்" வேற!
ஸ்கந்தன் = ஆறும் ஒன்னாக்கப் பட்டவன் -ன்னு பொருள்! இது தமிழிலேயே இல்லை!

இப்படிச் சொல்வதற்காக, யாரேனும் கோபித்துக் கொள்வார்களோ என்னவோ! பரவாயில்லை! அதுவும் முருகன் எனக்கு அருள் "விதியே"!

தமிழ் முருகனுக்கு, 6 முகம், 12 கை, 18 கண் என்ற கட்டுக் கதையெல்லாம் கிடையவே கிடையாது!
இதெல்லாம் பூர்வ குடித் தொன்மத்தை அழித்து வந்த கலப்பே!

பின்னாளில், சைவ சமயத்தில், சிறு "பரிவாரத் தெய்வமாய்", முருகன் அடக்கப்பட்டு விட்டதால்...
சம்ஸ்கிருத புராணத்தையும் விட முடியாமல், தமிழ்த் தொன்மத்தையும் ஒப்புக்குத் தொட்டுக்கிட்டு, பல கதைகள் மலிந்து போயின!

ஆனால்...
* தமிழ்க் "கந்தன்" = இயற்கை வழிபாடே!!!
* கந்தன் - வள்ளி = இயற்கைத் தமிழ் வாழ்வு!

அந்தக் "கந்தசாமி" தான், இன்று ஒங்க பதிவை அலங்கரிக்கிறான்!

said...

//5th Condition:
சந்நிதியில், புகைப்பட/ ஒளிப்படக் கருவிகளை உபயோகிக்க வேண்டாம்//

:)))))
அதே, நிர்வாக மக்கள் தான்...

//இப்போது, நீங்கள் இறைவனின் "வீட்டுக்குள்" பிரவேசிக்கிறீர்கள்//
-ன்னு முதல் அடியா, எழுதி வச்சிருக்காங்க பாருங்க!

"வீட்டுக்குள்", நம் அம்மா-அப்பா சொல்லுவாங்களா?

"காமிரா வேணாம்-ப்பா;
நீ வெளியூரில் தனியா இருக்கும் போது, எங்களைப் பாக்கணுமா என்ன?
நம்ம அன்பின் "சக்தி" கொறைஞ்சீரும்; நீ எங்களைப் பாக்கவே வேணாம்"-ன்னு சொல்லுவாங்களா?:))

நான் இங்கு சொல்வதை, நீங்க நிர்வாகத்திடம் சொல்ல முடியாது;
விதண்டா வாதம்-ன்னு முத்திரை குத்தீருவாங்க!:)
"ஆகம விதி"ப்படி நடந்துப்போம்! ஆனா அது என்ன விதி? -ன்னு தரவு மட்டும் கேட்டுறாதீக! அம்புட்டுத் தான்!:)

ஆகமம் எழுதிய காலங்களில், Photography Concept-யே கிடையாது!
அப்பறம் எப்படி விதி மட்டும் எழுதப்படும்?:)
------

said...

"கந்தசாமி" -க்கு ரொம்ப நன்றி டீச்சர்!

கந்தனை எழுத எழுத மனச் சோர்வெல்லாம் கொறைஞ்சா மாதிரி இருக்கு!
-----------

சென்னைப் புரசைவாக்கத்தில் (எங்க வீட்டுப் பக்கம்) = Kosapet (குயப்பேட்டை)
அங்கு "கந்தசாமி" கோயில் தான்! திருப்புகழ் வகுப்பும் வார இறுதியில் நடக்கும்!

* சென்னை, Parrys Corner "கந்த" கோட்டம் தான்!
* திருப்போரூர் முருகனும், "கந்தசாமி" கோயில் தான்!

திருப்போரூர் "கந்தன்" = "யானை கட்டும் கந்தாகவே" இருப்பான்!
உருவமெல்லாம் கிடையாது! சும்மா அலங்காரத்தில் உருவம் போல் செஞ்சி வச்சிருப்பாங்க!
ஒரு முறை கட்டாயம் பாருங்க! அவன் Very Sexy!:) அழகோ அழகு!

//நம்ம சிங்காரச் சென்னையின் சூளை, சூளைமேடு கூட//

Yes, "Brick Kiln" Road
Close to purasawalkam only:)

said...

காதல் முருகனைப் பத்தியே பேசிட்டு மறந்துட்டேனே...

அந்தக் கண்ணன் சிலையும் ரொம்ப அழகு டீச்சர்! Standing Style!
திருமால் = அப்பா என்பதால், அழகைப் பேசாம, பெருமை மட்டும் பேசுறது என் வழக்கம்:)

முல்லை நில மாயோன் = கண்ணன்!
அவனும் சங்கத் தமிழ்த் தொன்மம் தான்!

தமிழுக்கு இரு பெரும் மரபுகள்!
* "முன்னை மரபின் முதுமொழி முதல்வ" = திருமால்
* "அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக" = முருகன்

ஆனா "கிருஷ்ணன்" -ன்னு ஓவரா "கலப்பு" அடைஞ்சதால..
மாயோன் என்னும் தமிழ்த் தொன்மம் கிட்டத்தட்ட அழிஞ்சே போயிருச்சி:((
-----

//மேலே ஒரு 12 ரிங்கிட் லாபம் வச்சுக்கறாங்க//

12 ரிங்கிட்டா?
17 வெள்ளி -ன்னா, அப்போ புத்தக விலை 5 வெள்ளி? கொள்ளை லாபம்??

said...

//சங்கிலியைக் கழட்டிப் பையில் வச்சுக்குங்கம்மா//

ஹிஹி! அம்மாவுக்கும் ஒருத்தரு இப்படியே சொன்னாரு!

"என்னப்பா சிங்கப்பூரில் ஒரு பிரச்சனையும் இல்ல, பக்கத்தூரு, இங்கிட்டு இப்படி இருக்கே?" -ன்னு அம்மா கேட்டாங்க!

போலீஸ்காரர் வேடத்தில், ஒருத்தர், அம்மா-அப்பாவை Passport கேட்டு ஏமாற்றப் பார்த்தது தனிக் கதை:)
---

//நம்ம சென்னையில் செண்ட்ரல் ஸ்டேஷனைத் தொட்டடுத்து ரயில்வே ஆஃபீஸ் ஒன்னு தங்கசாலைத் தெரு ஆரம்பத்தில்//

அதை மறக்க முடியுமா? Brown Color Beauty!
நல்ல கம்பீரமான கட்டிடம்! முன்னாடி ஒரு ரயில் பெட்டியும் நிக்கும்!
அங்கிருந்து கந்த கோட்டமும் கிட்டக்க தான்!

எங்க ராம்-மாமா வேலை பாத்த ஆபீசு வேற!:)
கிராமத்தில் இருந்த சென்னை வந்த புதுசுல, அங்கிட்டு போயி நின்னா, டீ-பட்டர் பிஸ்கட் வாங்கிக் குடுப்பாரு:)

பட்டர் பிஸ்கட் கடிச்சிக்கிட்டே, கந்த கோட்டம் போவேன்,to see that Bad Guy Murugan:))
---

(sorry for my comments! கந்தசாமி என்ற உற்சாகத்தில் வந்துருச்சி)

Anonymous said...

படங்களும் தகவல்களும் அருமை. கோவில், மண்டபம், நூலகம் என அசத்தல்கள். அவங்கள் கிட்ட கனடா தமிழர் தண்ணீர் வாங்கி குடிக்கக் கடவ..! இந்த பிரிக்பீல்டுக்குத் தான் எனது அம்மாச்சி, கொள்ளுப் பாட்டியின் தமையன் ஒருவர் போனாராம், போனவர் அங்கே இருந்துவிட்டார். அங்கே இருக்க சிலோனீசில் அப்ப என் மரபணு சொந்தங்களும் இருக்குமில்ல..! மகிழ்ச்சி..!

said...

நல்லூர் கந்தனை முன்மாதிரியாக வைத்துக்கட்டிய கோயில் எனக்கு புதிய தகவல் நன்றி.

எங்கள் பக்கத்தில் அந்தகாலத்தில் மலேசியாவில் வேலைக்காகச் சென்று வாழ்ந்தவர்கள் பலரும் இருந்தார்கள் மலேசியன் பென்சனியஸ் எனப் பெருமையாக சொல்வார்களாம்.

படங்கள் நன்றாக இருக்கின்றன. கண்டுகொண்டோம் இடங்களை.

said...

//இந்த முருகன் இருக்கான் பாருங்க...... தமிழன் எங்கியாவது போனால், கூடவே பொட்டியைக் கட்டிக்கிட்டுக் கிளம்பிருவான்:-))))//

சுப்பனைப்போலொரு அப்பன் உண்டா தன் மக்களைக்காப்பதில்!!

said...

கந்தசாமியே பதிவு பூராவும் வியாபித்திருக்கிறார். ..இல்லை இல்லை கண்ணபிரானின் கந்தன் வியாபித்திருக்கிறார்.
கட்டிடங்களும் மிக பிரம்மாண்டம்.
பழைய கால எக்மோர் நினைவுக்கு வருகிறது.

said...

நல்லூர் ஸ்ரீ கந்தசாமி கோவிலை முன்மாதிரியா வச்சுக்கிட்டாங்களாம். //
இலங்கை சென்றபோது நல்லூர் ஸ்ரீ கந்தசாமியை பார்க்க முடியவில்லை.
உங்கள் பதிவில் பார்த்து விட்டேன்.
ரயில் நிலைய படங்கள் அருமை.

said...

கடவுளர் படங்கள் அனைத்தும் அருமை .

said...

கடவுளர் படங்கள் அனைத்தும் அருமை . இன்று சஷ்டி !! கந்தன் தரிசனம் உங்கள்
தயவில் ! மேலும் கந்தனை ப் பற்றிய விவரங்கள் KRS வழியாக . இருவருக்கும் நன்றிகள் பல !!

said...

வாங்க கே ஆர் எஸ்.

உங்க பின்னூட்டங்களுக்கேன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கோம்.
எ(த்)தைச் சொன்னாலும்..... அப்படியே அதை தமிழுக்கும்,கந்தனுக்கும் இணைப்பாய் வச்சுக்கிடறீங்களே!!!!

வள்ளிக்கொடி பார்க்கஆசை இருந்தால் நாமே வீட்டில் வளர்க்கலாம். கடையில் விற்கும் சக்கரை வள்ளிக்கிழங்கு (இங்கே எங்கூரில் அதுக்கு என்ன பெயர் தெரியுமோ? கேட்டால் வியப்புதான். குமெரா.Kumera. சொல்லும்போது இங்கத்து ஆக்ஸென்ட்டில் க்கூமெரா. குமரன் அந்த முருகன்!) ஒரு துண்டு முனைப்பகுதியில் வெட்டி, நாலைஞ்சு பல்குச்சிகளைக் குத்தி ஒரு சின்ன வாயுள்ள ஃப்ளவர்வாஸில் தண்ணீர் நிறைச்சு மேலாக வச்சுடணும். சில வாரங்களில் வேர்விட ஆரம்பிச்சு அவை தண்ணீருக்குள் போகவும் புதுசா இலைகள் வரவும் சரியா இருக்கும்.

ஒரு சோதனைக்கு வச்சுப் பார்த்துருக்கேன் அடுக்களை சன்னலில். . வெகுசீக்கிரமா கொடி வளர்ந்துவந்தாலும் ஒயிட்ஃப்ளை பூச்சி காரணம் வெளியே போட வேண்டியதாகிப் போச்சு:(

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அதென்ன அஞ்சா? என் மூன்றாவது கண்ணை மூடிக்கோன்னுட்டாங்க:(

நம்ம வீட்டில் சகல ரோக நிவாரணி இப்போதைக்கு டைகர் பாம்தான். இப்போ அதிலும் வகைவகையா ஏராளமா வந்துருக்கு.

சாஃப்ட் வகை ஒன்னு. இது ஆஃப்டர் ஷேவ் வாசனையில் இருக்கு!!!

கொசுக்கடிக்காமல் இருக்கக்கூட ஒன்னு இருக்கு.

பேசாம ஒரு பதிவு எழுதலாம். அத்தனை வகையாக்கும்,கேட்டோ:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இங்கே பார்த்தீங்களா? கந்தன் என்றதும் அயராமல் அடிச்சு ஆடுறார் நம்ம 'ஆழ்வார்'!!!

ரசனைக்கு நன்றி.

said...

வாங்க நிரஞ்சன் தம்பி.

சொந்தங்கள் உலகெல்லாம் இருக்குங்களே!

எங்க கிறைஸ்ட்சர்ச் தமிழ்ச்சங்கத்தில் கூட சின்ன அளவில் நூலகம் வச்சுருந்தோம்.... நடந்துபோன நிலநடுக்கத்தில் அந்தக்கட்டிடம் போயிருச்சு:(
நட்ட ஈடு கொடுத்தாங்க. இனி புதுசா ஒன்னு ஆர்ம்பிக்கத்தான் வேணும்.

said...

வாங்க மாதேவி.

மலேயாக்காரர்கள் என்ற பெருமையோடு பலரைத் தமிழ்நாட்டிலும் அந்தக் காலத்தில் பார்த்திருக்கேன்.

சிலோனிலிருந்து வந்துச்சுன்னு பெருமையுடன் என்னிடம் இருந்த ஜார்ஜெட் புடவை ஒன்னைக் கட்டிக்கிட்டு அலம்பல் செஞ்சகாலம் எல்லாம் நினைவுக்கு வருது.

சிலோன் ரேடியோ கேட்டு வளர்ந்தோமேப்பா. எல்லாம் போயே போச்:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

// சுப்பனைப்போல் அப்பன்....//

அட்டகாசம்!!!!!

ஃபிஜியிலும் போய் இடம் பிடிச்சுட்டானேப்பா:-))))

said...

வாங்க வல்லி.

அடியார்க்கு அடியார் கூட்டமே!

// எக்மோர்/// அடடா..... எப்படி மறந்துபோனேன்????

நினைவூட்டலுக்கு நன்றிப்பா.

said...

வாங்க கோமதி அரசு.

ரசித்தமைக்கு நன்றி.

இப்பெல்லாம் எது எது எப்பப்போ எந்த பதிவின் மூலம் கிடைக்கணுமுன்னு ஆண்டவர் முடிவு செஞ்சுட்டாரே!!!

said...

வாங்க சசி கலா.

ரசித்தமைக்கு நன்றி.

சஷ்டிக்கு துளசி பிரஸாதம்!

said...

//வள்ளிக்கொடி பார்க்கஆசை இருந்தால் நாமே வீட்டில் வளர்க்கலாம்//

Wow!
வள்ளி - வளர்த்துப் பாக்கணும்;
இத்தகவலுக்கு மிக்க நன்றி டீச்சர்!

//உங்க பின்னூட்டங்களுக்கேன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கோம்//

ஒங்க இயல்பான பதிவு ஓட்டத்தை விடவா டீச்சர்?

நான் ஏதோ, ஒரு ஆருயிர் நண்பனைக், காணாம இருந்து கண்ட conversation போல எழுதிடறேன்; அம்புட்டு தான்! மனம் விட்டுப் பேச ஒரு வாய்ப்பு:)

இங்கு, பல முறை, என் பின்னூட்டங்களுக்கு நற்சொல் சொல்லியவர்களுக்கு நன்றி கூடத் தெரிவிக்காத நிலை எனக்கு! - வல்லி யம்மா, சசிகலா, கோமதி அரசு, ரஞ்சனியம்மா, தருமி சார், இன்னும் அனைவருக்கும் நன்றி!!

என் கதையையும் பொறுமையுடன் படிக்கும் இவர்களுக்கு, நான் என்ன பெருசாச் சொல்லீற முடியும்?
முருகா, துளசி தளம் (எ) துளசீ வனத்தில், நண்பர்கள் பேசிக் கொண்டு, இன்புற்று இருப்பதுவே!

said...

படங்களும் தகவல்களும் மிகவும் அருமை.

said...

உங்கள் பயண அனுபவமும், திரு ரவியின் பின்னூட்டமும் படு பொருத்தம். இந்தப் பகுதி படிக்க ஆரம்பித்தபோதே ரவியின் பின்னூட்டம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே படித்தேன். ரவி என்னை ஏமாற்றவில்லை!

இந்த பயண அனுபவங்கள் புத்தகமாக வந்தால் இவரது பின்னூட்டங்களையும் சேர்த்துப் போடுங்கள், ப்ளீஸ்!

said...

//"நடந்துபோன" நிலநடுக்கத்தில் //

:).அப்ப ரிக்டர் அளவு கம்மியா இருக்குமா???

said...

தாமஸ் குக் ஆட்கள் எங்களுக்குக் காட்டாத இடங்களெல்லாம் போயிருக்கீங்க.. பொறாமையா இருக்கு

http://kgjawarlal.wordpress.com

said...

என்ன கே ஆர் எஸ் இப்படிச் சொல்லிட்டீங்க? கூடி இருந்து குளிர்விக்கத்தானே நம்ம பதிவுலகம் இருக்கு!

மனம்விட்டுப்பேசி பின்னூட்டமடலாட என்ன தயக்கம்?


குட் லக் வித் யுவர் வள்ளிக்கொடி.

said...

வாங்க அரவிந்தன்.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க ரஞ்ஜனி.

நானும் ரவியின் பின்னூட்டத்துக்கு ரசிகைதான். பதிவு முழுமையும் பெருமையும் பெறுகிறதுன்னு நினைச்சுக்குவேன்.

முந்தியே ஒரு முறை பின்னூட்டங்களுடன் புத்தகம் வரவேண்டுமென்று பதிப்பாளருடன் பேசி இருக்கேன்.

ஆனால் கருத்துப் பரிமாற்றம் கூடியவைகளை மட்டும் சேர்க்கலாம்தானே?

said...

வாங்க வழிப்போக்கன் -யோகேஷ்.

அன்னிக்கு என்னமோ கொஞ்சம் வேகநடை 6.3 ன்னு போட்டுருச்சு.

ஆனால் கடந்த ரெண்டு வருசமா மெது நடைதான். இதுவரை அதாவது இன்று 10:26:48am வரை 13,601 முறை சின்னாட்டம் ஆடி இருக்கு;

said...

வாங்க ஜவஹர்.

கைடட் டூர் என்றால் கைடு காட்டுவது மட்டும்தான்:(

நம்ம ஐரோப்பா பயணம் இப்படித்தான் ஆச்சு:(

அதிலும் 18 நாள், ஏழு நாடுகள் என்று குதிரைக்குக் கண்பட்டி போட்டாப்போல் ஒரு ஓட்டம்:(