Friday, June 06, 2014

கனியுடன் (கனிவுடன்) ஒரு மாலைப் பொழுது:-)


நம்ம தோழி சிங்கை ஜெயந்தி சங்கர் இருக்காங்க பாருங்க, அவுங்க சிறுகதைகளின் முழுத்தொகுதி வெளிவருது.  அதற்கான விமரிசனக் கருத்தரங்கு கூட்டம்  நம்ம டிஸ்கவரி பேலஸில் (கே.கே நகர்) நடக்கப்போகுது. மாலை அஞ்சு மணிக்காம். காவ்யா பதிப்பகம், இந்தப்  புத்தகம் போட்டுருக்காங்க.

அஞ்சரை மணி ஆகி இருந்துச்சு அங்கே போய் வண்டியை நிறுத்தும்போது.  இடம் தெரியாமல் கொஞ்சம் சுத்தினோம் வேற!  முன்பொருக்கில் போயிருந்தாலும்  அதாச்சு நாலைஞ்சு வருசம். பதிவர்களுக்கான சங்கம் ஆரம்பிக்கும் சமாச்சாரத்துக்கு.  அப்புறம் சங்கம்  வந்துச்சா, இல்லையா?

அதுக்குள்ளே நம்ம  லக்ஷ்மி பாலகிருஷ்ணன்  குழந்தையோடு வந்தாங்க.  கனிவமுதன், கோபாலைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.

 மாடியேறிப்போனோம்.  போனதும் கோபாலும் கனியுமா  புத்தகம் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க:-)
( நம்ம கோபாலும்   நம்ம கனிவமுதனும்)

புத்தகம் வெளிவரும் சமயம்  ஒரு விமர்சன அரங்கம்  வைக்க ஏற்பாடு நடக்குது. அந்த சமயம் நீங்களும் சென்னைக்கு வர்றீங்கதானே.  நிகழ்ச்சியிலே நீங்களும்  விமர்சகரா  பங்கு  எடுக்கணுமுன்னு  கேட்டுருந்தாங்க. ஆனால்  நமக்கு காசிப்பயணம் இருப்பதால்  சரியா அன்றைக்கு   சென்னை திரும்பிடமுடியுமான்னு சந்தேகம். ஆன்னா ஊன்னாதான் ஃப்ளைட் கேன்ஸலாகுதே தில்லியில்.அதனால்  கமிட் செஞ்சுக்கலை.

நமக்கு  இங்கே வரக்கொடுப்பினை இருந்துருக்கு.  வந்துட்டோம்:-)  திடீர்னு நான் முளைச்சதும் ஒரு விநாடி ஜயந்திக்கு திகைப்பும் சிரிப்பும்.

விமர்சகர்களா,   எழுத்தாளர்கள்  நம்ம ஷங்கரநாராயணன், அண்ணாகண்ணன், சுப்ரபாரதிமணியன், பேராசிரியர்  ராமகுருநாதன், லக்ஷ்மி பாலகிருஷ்ணன்  மற்றும்  கவிஞர் திலகபாமா  இருக்காங்க.அரங்கின் தலைவராக  காவ்யா  சண்முகசுந்தரம் அவர்கள்.

(பேராசிரியர்  ராமகுருநாதன், லக்ஷ்மி  பாலகிருஷ்ணன்)

நம்ம  (மலர்வனம்) லக்ஷ்மிக்கு  இதுதான்   முதல் முயற்சி.  கைதட்ட நான் இருக்கேன்னு  ஊக்குவிச்சேன்:-)  சும்மாச் சொல்லக்கூடாது..... ஆழ்ந்த வாசிப்பால் பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்க!  ரொம்பவே  ஆத்மார்த்தமான விமர்சனம் நம்ம லக்ஷ்மியுடையது!   கன்னிப்பேச்சுன்னு நம்ப முடியலை என்னால்!!!  வெல் டன்,  லக்ஷ்மி!
(இடமிருந்து வலம்: அண்ணாகண்ணன், திலகபாமா, காவ்யா சண்முகசுந்தரம், ஜெயந்தி சங்கர், ஷங்கரநாராயணன், பேராசிரியர்  ராமகுருநாதன், லக்ஷ்மி  பாலகிருஷ்ணன்)


கூட்டமுன்னு சொன்னால் ஒரு முப்பது பேர் இருக்கலாம். நம்ம ராமச்சந்திரன் உஷா (என் நெருங்கிய தோழிகளில் ஒருவர்) வந்ததும் களை கட்டியது எங்கள் பேச்சு:-)

அதுக்குள்ளே வண்டியை பார்க் செஞ்சுட்டு 'தல' வந்துட்டார். என்ன இது?சாமியாராகும் எண்ணமான்னு அதிர்ந்து போயிட்டேன். இல்லையாம்!  நடிக்கப்போறார். மேக்கப் டெஸ்ட் நடந்துருக்கு. கொஞ்சம்கொஞ்சமா பாத்திரமாகிக்கிட்டு இருக்கார். ஐ மீன் கதா பாத்திரம்!   ஜோடியாகக் கூடச் சேர்ந்து நடிப்பது யாருன்னு தெரிஞ்சால் அசந்து போயிருவீங்க கேட்டோ!   சிம்ரன்! ஹைய்யோ!!!!

சேதி தெரிஞ்சது சும்மா இருக்க முடியுதா?  கொஞ்சம் வாரினோம்:-))))   'இல்லைம்மா.... அந்த டிவி சீரியல் கேன்ஸலாகிருச்சு'ன்னார். ஓ.... அப்ப சிம்ரனுடன்  ஜோடி,  சான்ஸ் போச்சேன்ற கவலையில்தான் தாடியான்னு அதுக்கும் கொஞ்சம் வாரினோம்:-)))

(பாலபாரதி, கோபால்)

'தல'  ரொம்ப பெருந்தன்மை.  சிரிச்சபடியே எங்க 'தாக்குதலை' சமாளிச்சார்.

கூட்டத்துக்கு நம்ம பாரதி மணி ஐயா வந்துருந்தார். ஆஹா.....  ஓடிப்போய் நலம் விசாரிச்சேன்.  நம்ம திடீர் விஜயம் அவருக்குத் தெரியாது.... 'எப்படா வந்தே?'   அவர் கேட்டதும்  மனசு குழைஞ்சுதான்  போச்சு  அவர், என்னை மகள் என்று சொன்னாலும் அவருக்கு ஃபேவரிட் பெர்ஸன் மருமகன்தான்:-)



பாருங்களேன்.... நாடகத்துலே  மிடுக்காய்  நடந்து ஜமாய்ச்சுட்டு, இப்பக் கைத்தடியோடு உக்கார்ந்துருப்பதை!

 எல்லோருமே அருமையா ஒவ்வொரு கதையை எடுத்துக்கிட்டு பேசுனாங்க.  கடைசியில்  ஜெயந்தி, நான் எதிர்பாராத விதமா  என்னை , 'மேடைக்கு ' அழைச்சுட்டாங்க.  என்னத்தைப் பேசப்போறேன்?  கொஞ்சம்கூட தயாரிப்பு இல்லையே....  பெப்பே...பெப்ப்பே...

சரி எல்லோரும்தான்  அவுங்க எழுத்தைப் பற்றி விவாதிச்சுட்டீங்களே. எழுத்தாளரைப் பத்தி வேணுமானால் நான் பேசவா? எதுன்னாலும் பிரச்சனை இல்லை . பேசுங்க பேசுங்க. நம்மாட்களுக்குத்தான் பேச்சு எங்கள் மூச்சு இல்லையோ!

ஜெயந்தியுடன் எனக்கேற்பட்ட நட்பு மரத்தடி காலத்தில் ஆரம்பிச்சதுன்னு  தொடங்கி, எப்படி அவுங்க சிறுகதைகள், நாவல்கள் எல்லாம் வெளிவந்தவுடன்  நியூஸிக்கும் ஒரு காப்பி பார்ஸேல்னு  வந்துருதுன்னு   சிலாகிச்சுப் பேசினேன்.  இப்படி   ஜெயந்தியின் அன்பளிப்பால் என் புத்தக அலமாரி நிறைஞ்சு வழிவதையும்  சொல்லிக்க  இதை விட்டால் வேறேது சான்ஸ்?  (அவ்ளோ நெருக்கமாக்கும்  கேட்டோ!!!)

ஒருவழியா சமாளிச்சு முடிச்சதும் ஜெ வின் ஏற்புரையோடு  அரங்கம் இனிதே  நிறைவடைந்தது.


போதுமான வெளிச்சம் இல்லை. கூடவே என் கேமெரா பேட்டரியும்  மண்டையைப்போடும் சமயம். உணர்ச்சிப்பெருக்கில் ஏற்படும் கை நடுக்கம் , (ஒருவேளை எங்கள் கை தட்டுகளால் அரங்கம் அதிர்ந்ததாலோ? )  ஆட்கள் முகத்தில் ஃப்ளாஷ் வேணாம் என்ற எண்ணம் இப்படி பல்வேறு காரணங்களால்....  எடுத்த படங்கள் ஒன்னும் சரியா இல்லை.  கொஞ்சமே கொஞ்சம் சுமாரா  இருந்தவைகளைப் போட்டுருக்கேன். எப்படியெல்லாம் விளக்கம் சொல்லவேண்டியதாப் போச்சு:)


இவ்ளோ கலாட்டாவிலும் கனியும் கோபாலும் தங்கள் உலகில் மெய்மறந்துருந்தாங்கன்னுதான் சொல்லணும். அப்படிஒரு ஒட்டுதல் ரெண்டு பேருக்கும்!


எல்லோரிடமும் நாலு  வார்த்தை பேசிட்டுக் கிளம்பினோம். பதிவர் சந்திப்பு  போண்டா இல்லாமல் முடிஞ்சு போச்சே என்ற ஆதங்கத்தில்  ராச்சாப்பாட்டுக்குப் போன இடத்தில் போண்டா வாங்கிக்கிட்டேன். கூடவே கொஞ்சம் இடியப்பமும்.

சும்மாச் சொல்லக்கூடாது ...ஜெயந்தியின் சிறுகதைத் தொகுப்பு ரொம்ப நல்லா வந்துருக்கு. இதுவே  தலைகாணி சைஸ்லே இருக்கே!  காவ்யா பதிப்பகத்துக்கு ஒரு  'ஓ'  போடலாம்.  எழுதிக் குவிச்சுருக்காங்க நம்ம ஜெ.  குறைஞ்சது  வருசம் மூணு நாவல்கள்  என்ற கணக்குன்னா பாருங்க!

ஜெயந்தி சங்கருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் இந்த இடுகையின் வழியே தெரிவிப்பதில் மனம் மகிழ்ந்தது என்பதே  உண்மை.  நல்லா இருங்க ஜெ!

பதிவர்கள் சந்திப்பு, புத்தக வெளியீடு என்று பதிவுலகம் சம்பந்தப்பட்ட பலவித நிகழ்ச்சிகளுக்கும் மனம் கோணாமல் இடமளிக்கும்  டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன் அவர்களுக்கு  என் மனமார்ந்த நன்றிகள்.

சும்மா மேடை போட்டுப் பேசாமல்,  புத்தகங்கள் புடைசூழ இருக்குமிடத்தில்  இலக்கியக்கூட்டம் நடக்கும்போது அதுக்குன்னே ஒரு தனி  மெருகு வந்துருது பாருங்களேன்!!!!

நம் சென்னை அனுபவங்கள் ..........  இன்னும்  அஞ்சு நாள் இருக்கே:-)

தொடரும்...........:-)



13 comments:

said...

ஜெயந்தி சங்கருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள், மேடம்

said...

ஜெயந்தி சங்கருக்கு என் வாழ்த்துகள். உள்ளூர்ல நடந்திருக்கு. தெரிஞ்சிருந்தா வந்திருப்பேன். வந்து போட்டோக்களும் எடுத்துக் கொடுத்திருப்பேன்.

உஷாவை அடையாளம் தெரியுது. பாரதிமணி சாரையும் தெரியுது. சிலர் பேர்கள் வாய்லயே நிக்குது. ஒரு அறிமுகம் போட்டுருங்களேன் டீச்சர்.

said...

ஜெயந்திக்கு நல் வாழ்த்துகள் எண்ணங்களைப் புத்தகமாக எழுத எவ்வளவு திறன் வேண்டும். இந்த உழைப்ப்புக்கு நல்ல பலன் உண்டு. எல்லாப் பதிவர்களையும் பார்த்தது ரொம்ப சந்தோஷம். கோபால் கனி படம் சூப்பர். தாத்தா பேரன் படப் போட்டியில் முதல் பரிசு இந்தப் படத்துக்குதான். தல படம் காணோமே. பாரதி மணி சார் நன்றாக இளைத்திருக்கிறார். நல்ல தகவல்கள் துளசி.

said...

உங்களுக்கு பேச முன்னேற்பாடு தேவையா ?கலக்கிடுவீங்கன்னு தெரியும் .கலகலன்னு பேச்சு கலை கட்டிடுச்சு போல ....நல்ல பதிவு .

said...

ஜெயந்தி சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

said...

வாங்க அய்யாசாமி ராம்.

வாழ்த்துகளுக்கு நன்றி.கட்டாயம் உரியவரிடம் சேர்ப்பித்து விடுகிறேன்:-)

said...

வாங்க ஜி ரா.

வாழ்த்துகளுக்கு ஜெயந்தி சார்பில் நன்றி.

உங்களுக்குத் தெரியலை இந்த விமர்சன அரங்கம் விவரம் என்பது எனக்குத் தெரியாமல்போச்சே:(

இப்படியா மக்கள்ஸை மறந்துட்டீங்க???

படங்களுக்கு அடியில் பெயர் போடவா? இன்னும்கொஞ்ச நேரத்தில் செஞ்சுடலாம். ஓக்கே!

said...

வாங்க வல்லி.

பாரதி மணி சார், நாடக உலகில் கலக்கிக்கிட்டு இருக்கார் இப்போ!

ஆறாவது படம் பாருங்கள். கோபாலுடன் காட்சி கொடுக்கிறார்:-)

said...

வாங்க சசி கலா.

விமர்சன அரங்கம் என்பது கொஞ்சம் ஸ்பெஷல் ஆச்சேப்பா. கொஞ்சமாவது ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டுப் போனால்தானே மரியாதை!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நம்ம ஜெயந்தி சங்கர் சார்பில் நன்றீஸ்.

said...

சுவாரஸ்யம். சிம்ரனோடு நடிக்க இருந்த 'தல'தான் யார் என்று புரியவில்லை. ஆனால் பெரிய தலைகள் கலந்துகொண்ட விழா என்று படங்களைப் பார்த்தால் தெரிகிறது! :)))

ஓ.. பாலபாரதி அவர்களா? வல்லிம்மா பின்னூட்டத்துக்கான பதிலில் தெரிந்து கொண்டேன்.

ஜெ.ச. கதைகள் படித்ததில்லை. அவருக்கு எங்கள் வாழ்த்துகளும்.

said...

ஜெயந்தி சங்கர் அவர்களுக்குப் பாராட்டுகள்.....

இனிமையான பொழுதாக அமைந்திருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது....

said...

ஜெயந்தி சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இனியநிகழ்வு.