Tuesday, July 22, 2014

இன்னும் ஒரு மண்டலம் கடக்கவேணும்!

இங்கே நியூஸிக்கு வந்தபின் இந்த 27 வருச காலத்தில் முதல்முறையாக  SAD ஆல் பீடிக்கப்பட்டுள்ளேன்:(

நம்ம வீட்டுக்கு வழக்கமா வரும் முள்ளீ   த ஹெட்ஜ்ஹாக்  போல ஒளிஞ்சுருந்து  நீண்ட தூக்கம் தூங்க ஆசையா இருக்குன்னாலும்...........   மனித வகையில் இது ரொம்ப ஆபத்தான சமாச்சாரம்.  தூங்கும்போது காலை ஆட்டிக்கிட்டே தூங்கணுமாம். இல்லைன்னா.... கதை கந்தல்! கொண்டு போய்  தீ வச்சுருவாங்க!

Seasonal affective disorder (SAD)களுக்கு லைட் தெரபி என்னும் சிகிச்சை ஓரளவு பயன் தரும்.  சூரிய வெளிச்சத்தில் குறைஞ்சது ஒரு மணி நேரம் உக்கார்ந்துஇருக்கணும். நமக்கு இந்தக் குளிர் காலத்தில் தகராறே சூரியன்தான் என்பதால்.... நல்ல ப்ரகாசமான வெளிச்சத்துக்கான மின்சாரவிளக்குக்கு எதிரில்,  ஒரு 60 செ மீ தூரத்தில் உக்கார்ந்து கண்ணைத் திறந்து வச்சுக்கணும். ஆனால்  லைட்டைப் பார்க்கக்கூடாது. இதெல்லாம் நடக்கற  காரியமா?

இன்னொரு உத்தமமான சிகிச்சை......   குளிர் இல்லாத, தினம் சூரிய வெளிச்சம் வர்ற  ஊருக்குப்போய் ஒரு மூணு மாசம் இருந்துட்டு, இங்கே நம்மூர் குளிர்காலம் முடிஞ்சாட்டு திரும்பி வர்றது. இதுவும் நடக்கற காரியமாத் தெரியலை:(

மனதை உற்சாகமா வச்சுக்கிட்டால் பாதிப்பு அவ்வளவா இருக்காது என்று தெரிஞ்சாலுமே.... மனசு சொல்வதை உடல் கேட்பதில்லை.ரெண்டும் வழக்கம்போல் ஓயாத மோதல்!

 உடலையும் மனசையும் போறபோக்கில் விட்டுப்பிடிக்க உத்தேசம்.  எப்படியும் இங்கத்துக் குளிர் முடிய இன்னும் ஒரு மண்டலகாலம் பாக்கி இருக்கு.  இதுவும் கடந்து போகும் என்றிருக்கப் போகிறேன்.  பாதிப்பு மிகவும்  தீவிரம் இல்லை, ஆரம்ப நிலை என்பதால் போய் (காலை ஆட்டிக்கிட்டே) தூங்கப்போகிறேன். அப்பப விழிப்பு வரும்போது  வந்து கண்டுக்குவேன். அதுவரை....

நடப்பது நடக்கட்டும். அது நாராயணன் செயல்!

மாணவக் கண்மணிகள்  அனைவருக்கும்  இந்த டீச்சரின் அன்பு  வழக்கம் போல்.



படங்கள் அருளிச் செய்த கூகுளார்க்கு நன்றிகள்.


16 comments:

said...

குளிர்காலம்னா இப்படி ஒரு வம்பு இருக்குதா? நான் நெனச்சது வேற. நல்லா கம்பளியப் போத்தீட்டு தூங்கிகிட்டே இருக்கலாம்னு நெனச்சேன்.

said...

மிகவும் சிரமம் என்பது புரிகிறது...

said...

மழையே இல்லாம சில்லுன்னு இருக்கு இதுக்கே தூங்கலாமான்னு தோணுது. ஓவர் குளிரும் உடம்புக்கு ஆவது போல இருக்கே :(

said...

சிறந்த உளநல வழிகாட்டல்
தொடருங்கள்

said...

உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க அக்கா ..எனக்கும் சில வருஷமா இருக்கு இந்த பிரச்சினை ..அதிக டிப்ரஷன் வந்தப்போ என்னை நானே கிராப்ட் மற்றும் தோட்ட விஷயங்களில் அதிகம் ஈடுபடுதிக்கிட்டேன் .NOW I FEEL MUCH BETTER...சில நேரம் தூங்காம கூட கிராப்ட் செய்திருக்கேன் ....
இந்த நாட்களில் தான் நம்மூருக்கு ட்ராவல் செய்யணும் .But three months !! we cant ..bcos of daughters school ..
அக்கா ரஜ்ஜு உங்க மடியில் வைச்சு கொஞ்சம் நேரம் உக்காருங்க ..எனக்கு எப்பெல்லாம் தலை வலி டிப்ரஷன் வருதோ உடனே ஜெஸ்ஸி தான் இன்ஸ்டன்ட் பெயின் ரிலீவர் and antidepressant ..take care akka.


said...

மனதை உற்சாகமா வச்சுக்கிட்டால் பாதிப்பு அவ்வளவா இருக்காது என்று தெரிஞ்சாலுமே.... மனசு சொல்வதை உடல் கேட்பதில்லை.ரெண்டும் வழக்கம்போல் ஓயாத மோதல்!//

சரியாக சொன்னீர்கள் துளசி.
ஒரு மண்டலம் குளிரில் கஷ்டப்படவேண்டுமா?
அதிக குளிரால் தலைவலி, உடல்வலி எல்லாம் ஏற்படும் இல்லையா?


said...

அன்பு துளசி, காணலியேன்னு வந்து வந்து போறேன். இந்த ஊருக் குளிருக்கும் ஏதோ ட்ரீட்மெண்ட் எடூத்துக்கறாங்க. உங்களுக்கு எப்படி வந்ததுன்னு தான் எனக்குப் புரியலை. சொன்னதைச் செய்யுங்க. உங்களுக்கு உற்சாகம் பதிவுகளும் படங்களும் தான். வருஷா வருஷம் படுத்தணுமா உடம்பு. என்னப்பா வருத்தமா இருக்கு. ஏஞ்சலின் நல்ல யோசனை சொல்லி இருக்காங்க. ரஜ்ஜு துணை கிருக்கட்டும். பெருமாளும் துணை இருப்பார். நிறைய பாடல்கள்,படங்கள் பார்க்கவும்.

said...

உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் டீச்சர்..

said...

Take care Thulasi . Rajju and plants will boost you up . How is your husband ? engage yourself with the long pending puzzle which you have been doing . have you finished that ? if not try doing that . sorry for English comment . veetla computer seri illa . Take good care .

said...

சோர்ந்துவிடாதீர்கள். மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

நலன்பெற வேண்டுகிறேன்.

said...

Take care!
Cheers

said...

உடலும் உள்ளமும் நலமாக வாழ்த்துகள். வேங்கடவன் திருவருள் எப்பவும் உங்க துணையிருக்கும்.

இதைப் பத்தி நான் நெதர்லாந்துல கேள்விப்பட்டிருக்கேன். அங்கயும் இந்த மாதிரி விளக்குகள் விப்பாங்க. அதுலருந்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

said...

இப்படி ஒரு நோயா? பார்த்துக் கொள்ளுங்கள், துளசி.

நமக்கெல்லாம் எனர்ஜி கொடுப்பதே இந்த எழுத்து தான். எழுதுங்கள். நல்ல இசை கேளுங்கள். புத்தகங்கள் படியுங்கள். மூன்று மாதங்கள் ஓடிவிடும்.

said...

வாழ்துக்கள் மேடம். எதுவும் கடந்துபோகும்.

ஆனாக்க பதிவு ரெகுலராக எழுத மறந்துவிடாதீர்கள்.

said...

இந்த பிரச்சினையிலிருந்து மீண்டு, நலமமடைய வேண்டுகிறேன்! நம் ஊருக்கு இப்போது போய் இருந்தால் போதும்! நல்ல சூடு!

said...

அன்பு நட்புகளுக்கு ,

வணக்கம். உங்கள் அனைவருடைய அன்பும், ஆதரவும், அக்கறையோடு சொன்ன ஆறுதலான சொற்களும் என்னைத் திரும்ப மீட்டு வந்துவிட்டன!

இன்று முதல் மீண்டும் பதிவு ஆரம்பம்.

அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.