Monday, February 02, 2015

ட்ரெஸ் கோட் வந்துருச்சாம், திருமலையில்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 18)

'நாளைக்குக் காலையிலே கிளம்பணும்.  கொண்டு போகும் சின்ன சூட்கேஸில் உனக்குத் தேவையானவைகளை எடுத்து வச்சுரும்மா. புடவை ரெண்டு மூணு கட்டாயம்  இருக்கட்டும்.  ட்ரெஸ் கோட் இருக்காம் 'என்று சொல்லி பயமுறுத்திக்கிட்டு இருக்கார்  கோபால்.

கேரளப் பயணம் போக முடிவு செஞ்சதுலே இருந்தே  தினம் 'புடவை,  புடவை, ட்ரெஸ் கோட்' எல்லாம் கேட்டுக்கேட்டே காது புளிச்சுப்போனது உண்மை. ஒரு முண்டு செட்டும் கொண்டுபோயிருந்தேன்.

புடவை ஒன்னும் பிரச்சனையே இல்லை.வில்லியாக இருப்பது ப்ளவுஸ்தான்.   தீர்வும் அப்பவே  கண்டுபிடிச்சுட்டேன்!  நல்லா ஒர்க்கவுட் ஆகுது.  குட்டிச்சாத்தான் வேலை!

சுட்டி வேலை செய்யலையோன்னு ஒரு சம்ஸயம்.   இதைப் பாருங்க நேரம் இருந்தால்....
http://thulasidhalam.blogspot.co.nz/2010/04/blog-post_04.html

//பிரச்சனைன்னு வந்தபிறகு அதுலே இருந்து தப்பிக்க வழி தேடும் மனசு, ஒரு ஐடியாவைக் கண்டு பிடிச்சது. தேவைகள்தானே கண்டுபிடிப்புகளின் தாய்! கேரளா முண்டு பாரம்பரிய உடைதானே? அதை எடுத்துக்கிட்டுப் போகலாம். தேவைப்பட்டால் சல்வார் மேலேயே அடிமுண்டு சுத்திக்கிட்டு, மேல்முண்டை தாவணியாப் போட்டுக்கலாம். அப்ப ப்ளவுஸ்? நோ ஒர்ரீஸ். அதான் கமீஸ் போட்டுருக்கோமே!!!!! சரிகை முண்டு என்பதால் ப்ளவுஸுக்கு எந்தக் கலரும் ப்ரிண்டும் ஓக்கே:-) கட்டிப் பார்த்தேன். ரெண்டே நிமிஷம். பர்ஃபெக்ட்!//



ஆளுக்கொரு கேபின் பேக். மற்ற பெரிய பெட்டிகளை  இங்கே லோட்டஸிலோ இல்லை அண்ணன் வீட்டிலோ வச்சுட்டுப் போகலாம் என்ற எண்ணம்.

இந்தப்பதிவு எழுதும் சமயம் நம்ம கோபால் எதோ ஒரு தெலுகு சானல் போடப்போய்  அதுலே திருப்பதிக்கு ட்ரெஸ் கோட் என்னன்னு வரிகள்  ஸ்கிரீன் அடியில் போய்க்கிட்டு இருந்துச்சு.  புடவை  ஓக்கே. சுடிதார்  வித் துப்பட்டா  ஓக்கே. ஸல்வார் கமீஸ் வித் துப்பட்டா ஓக்கே.  அப்ப துப்பட்டாவில் தான்  இருக்கு,  சூக்ஷ்மம் :-)    பாவடையுடன்  தாவணி கட்டாயம் இருக்கணுமாம்.  ஹாஃப் ஸாரீஸ்.  அப்ப  சின்னக்குழந்தைகள்  பட்டுப்பாவாடையுடன் தாவணி போட்டுக்கணும். பிஞ்சுகள் கவுன் நோ வா?  ஹூம்.... பழங்காலத்து சிற்பங்கள்,  சித்திரங்களைப்  பார்த்து  ட்ரெஸ் கோட் வைக்கலை என்பதே இப்போதைய ஆறுதல். மார்க்கச்சை  வேணுமுன்னு கச்சை கட்டுனாங்கன்னா  நாம் அம்பேல்:-))))


இந்த வருசத்தின் முக்கிய திட்டம், கேரள மாநிலத்திலிருக்கும் திவ்ய தேசங்களை தரிசிப்பது. அதுக்கான திட்டம்'தீட்டிக்கொண்டு' இருந்தப்பதான்  மதுரை தமிழ்ப் பதிவர் மாநாட்டு சமாச்சாரமும் கிடைச்சது.

பயணத்திட்டத்தில்  இருந்த  சேலம்,  திருச்செங்கோடு,நாமக்கல், கரூரை கழற்றிவிட்டுட்டு மதுரையை சேர்த்துக்கிட்டோம்.  ஞாயிறு மாநாடு என்பதால் சனி மாலை மதுரை போய்ச் சேரும்படியான திட்டம்.

இன்றைக்கு வெள்ளிக்கிழமை. நம்ம அநந்தபதுமனை ஸேவிச்சு, பயணச் சேதியை சொல்லிட்டு வரணும்.  அடையாறு கிளம்பினோம். தி. நகரில் ரெண்டு தெரு தாண்டிக்கிட்டு  இருக்கும்போதே நம்ம  கண்ணாடிக்கடைக்கு ஒரு ஃபோன் போட்டு கண்ணாடி ரெடி செய்ய ஒரு நினைவூட்டல் கொடுத்தால்.... கண்ணாடிகள்   தயாரா இருக்குன்னாங்க.   மதியம் போய் வாங்கிக்கணும்.

 இப்போ பெருமாள்! அடையார் அனந்த பத்மநாபன்!

வழக்கம்போல் ஹாயா தாய்ச்சிண்டு  மேலே  கண்களை நட்டு, ஆழ்ந்த சிந்தனையில் இருக்கார்!  ஹை அண்ட்  பை சொல்லிட்டு, வழக்கம்போல்  தர்மபரிபாலன சபாவை எட்டிப் பார்த்தால் பயங்கரக்கூட்டம். கோவிலில் இருந்து  அந்த ஹாலுக்குப்போகும் கம்பிக்  கதவு மூடி வச்சுருக்கு. என்னன்னு பார்க்கணுமேன்னு வெளிப்புறம் சுத்திக்கிட்டுப்போகும்போது விஷயம் தெரிஞ்சது. இன்றைக்கு கந்தசஷ்டி விழாவின் ஆரம்பநாள்.


கல்யாணவீட்டு வரவேற்பு போல் சந்தனம், குங்குமம், விபூதி, கல்கண்டு எல்லாம் வச்சு கூடவே அன்றைக்குப் பாடப்போகும் திருப்புகழ் பதிகங்களை அச்சடிச்ச  தாள்.  ஒரு பத்து பதினைஞ்சு பாட்டுகள் இருக்கு அதில்.





ஹாலில் வரிசைகளில் மக்கள் தரையில் உக்கார்ந்திருக்காங்க. இந்தப்பக்கம் சில வரிசை நாற்காலிகளில் மூட்டு கேஸ்கள்.  ஒரு அரைமணி போல நாமுமிருந்து  சில பாட்டுகளைக் கூடவே பாடிட்டு(?!) ஏற்கெனவே சொல்லி வச்சுருந்தநேரத்துக்கு  அலைகள் அருணா சீனிவாசன் வீட்டிற்குப்போனோம். இதே அடையார்தான். இவுங்க இண்டியன் எக்ஸ்ப்ரெஸில் எழுதறாங்க. நம்ம மரத்தடி காலத்தோழி!

இங்கே(யும்) தீபாவளி இனிப்புகளை உள்ளே தள்ளினேன். பெருமாளே..... டாக்டர் வீலருக்கு சேதியைச் சொல்லிறாதே.  இவுங்க  நியூஸியில் நம்ம ஃபேமிலி டாக்டர். நல்லவேளை தமிழ் படிக்கத்தெரியாது அவுங்களுக்கு:-)

அரட்டைக் கச்சேரியை முடிச்சுட்டு,  லேட்டிஸ் ப்ரிட்ஜ் சாலையிலிருக்கும்  லைட்டுக் கடைகளில் ஒரு ரெண்டு மூணு கடைகளுக்குப்போய் குத்து விளக்குக்கான மின்சாரவிளக்கு தேடினோம். இங்கேயும் கிடைக்கலை:(

மதிய சாப்பாடு மயிலை சரவணபவன். கோபாலுக்குத் தாலி. எனக்கு பூரி:-)

அப்படியே பக்கத்தில் இருக்கும் விஜயா ஸ்டோர்ஸ். சாமிக்கான சாமான்களை வாங்கிக்கணும். தனித்தனியா கடைக்குன்னு கிளம்பாம போற போக்கில் எந்தக் கடைகள்  கிடைக்குதோ அங்கெ போய்த் தேடினால் சிலசமயம் கண்டடைவோம். கலசத்துக்கு வைக்கும்  அலங்காரத் தேங்காய் கிடைச்சது.நகைநட்டு ஒன்னும் சரிப்படலை.  கல்வச்ச நாமங்களும், கண்களும் ஆப்ட்டது:-)  இன் னும் பலருக்கு நாமம் போட வேண்டித்தான் இருக்கு நம்மூட்டில்!

அறைக்கு வரும்வழியில்  தோழி வீடு அடுத்த ஸ்டாப்.  செட்டில் ஆயிட்டாங்களான்னு  பார்த்துட்டு பைபை சொல்லிக்கணும். இன்னும்  ஒரு பதினேழு நாளைக்குப் பார்க்கமாட்டோமே:-(

வரப்போகும் விசேஷத்து ஏற்பாடுகளில் ரொம்ப பிஸியா இருக்கும் நேரம் என்றாலும் நமக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கினாங்க.

அவுங்க வீட்டிலிருந்து கிளம்பி எல்டாம்ஸ் சாலை வழியா வரும்போது ஒரு வீட்டின் முன் நிறையக் கூட்டம். டிவி சேனல் ஒன்னு  பெரிய வேன் வச்சுக்கிட்டு  என்னமோ ஷூட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. டிவி சீரியலோன்னு பார்த்தால்.... இல்லையாம்.  பழைய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனின் வீடு அதுன்னு நம்ம சீனிவாசன் சொன்னார்.  அப்புறம்  மாலையில்தான் டிவி போட்டப்ப  அவர் சாமிகிட்டே போன விஷயம் தெரிஞ்சது:(


பொதுவா  நீண்டகாலமாக  ட்ராவல்ஸ் வண்டி ஓட்டுபவர்களுக்கு  முக்கிய புள்ளிகள் வீடெல்லாம் (சின்னவீடு உட்பட!)  தெரிஞ்சிருக்கு. போறபோக்குலே இது இன்னார்வீடுன்னு  சொல்றது வழக்கம்:-)


அறைக்கு வந்து கொஞ்சநேரம் ஓய்வு எடுத்துக்கிட்டு  மறுபடி அக்குப்ரெஷர் டாக்டர் ஜெயலக்ஷ்மியை  பார்க்கப் போனோம். வரச்சொல்லி இருந்தாங்களே.  நேத்து மாலை முதல் காதுகளைக் கிள்ளிக்கிள்ளித் தோள்வலி கொஞ்சம் குறைஞ்சுதான் இருந்துச்சு.


இன்றைக்கு  இன்னும் சில புள்ளிகளைக் குறிச்சுக்கொடுத்து  அழுத்தம் கொடுக்கச் சொன்னதுடன்,  மோதிரம் ஒன்னும் கொடுத்தாங்க.  அதெப்படி ரெண்டு ஆளுக்கு ஒன்னுன்னு இன்னொன்னும் கேட்டு வாங்கினோம்:-)  இதை கை விரல்களில் (பின்னே? மோதிரமாச்சே!) போட்டுக்கிட்டு  விரலில் ஒவ்வொரு கணுவிலும் மும்மூணுமுறை உருட்டணும்.  நரம்புகளில் அழுத்தம் கொடுப்பதோடு ரத்த ஓட்டமும்  சீராகுமாம்.

எனக்கு மட்டும்  ஒரு காது மடலில்  மொட்டைக் கம்பி வச்சு  லேசாய் துளைப்பதுபோல்  திருகுனதும்  'ஓ...காது குத்தி விடப்போறாங்க. புதுசா  சின்ன அழகான  காதணி வாங்கிக்கணும். வைரமா இருந்தால் விசேஷமு'ன்னு நினைக்கும்போதே கடுகு சைஸில் ஒரு கருப்பு சமாச்சாரத்தை அந்தப் பள்ளத்தில் வச்சு அதுக்கு மேலே ஒரு  துளியூண்டு டேப் போட்டு ஒட்டுனாங்க. அட....  இதுநம்மூரில்  செல்லங்களுக்கு மைக்ரோ சிப் வைக்கும் சமாச்சாரம்போலன்னு நினைச்சேன்.

ஆனா.... இது   சரியாக் காதின் எந்தப் புள்ளியில் அழுத்தம் கொடுக்கணுமுன்னு நமக்கு அடையாளம் காமிக்கும் கைடாம். ரெண்டு மூணு நாளில் விழுந்துரும். ஆனால் அதுக்குள்ளே சரியான புள்ளி எங்கேன்னு உங்களுக்குப் பழகிருமுன்னும் சொன்னாங்க டாக்டரம்மா.

ஒவ்வொரு  புள்ளிகளைப்பற்றி சொல்லும்போதெல்லாம்.... எல்லாம் புத்தகத்தில் இருக்கு. தரேன் தரேன்னு சொல்லிக்கிட்டும் இருந்தாங்க.
இவுங்க  உடல்நலம்பற்றி முக்கியமா அக்குப்ரெஷர்  சிகிச்சை பற்றி விளக்கமா நிறைய புத்தகங்கள் எழுதி இருக்காங்க. அதுலே உடல்நலம் உங்கள் கையில் என்ற புத்தகத்தைக் காமிச்சு இது இங்கிலீஷிலும் இருக்கு. எது வேணுமுன்னு கேட்டதும் அதுலே ஒன்னு இதுலே ஒன்னுன்னு  ஒன்னுபோலச் சொன்னோம்.


சான்ஸ் கிடைச்சா விடமுடியுமான்னு நம்ம கோபால், என்னைக்காமிச்சு ' இவுங்க எழுதுவாங்க'ன்னார்:-) அடடே அப்படியான்னு  ஆர்வத்தோடு விவரமெல்லாம் கேட்டுக்கிட்டு, ஒரு பெரிய அலமாரியைத் திறந்து அவுங்க எழுதிய புத்தகங்களைக் காமிச்சாங்க. ஏகப்பட்டவை.  அதிலிருந்தும் ரெண்டு புத்தகங்களை  எடுத்துக்கிட்டோம்.


சந்தடிசாக்குலே  மதுரையில் பதிவர் மாநாட்டுக்குப் போறோம். அப்படியே  கோவில்கள்  விஸிட்ன்னு தெற்குப்பக்கம் போறோமுன்னு சொன்னோம்.   தென்நாட்டுப் பயணம் போய் வந்ததும்  ஒருமுறை வந்துட்டுப் போங்கன்னு சொன்னாங்க.

இந்த ரெண்டு நாட்களில் நான் கவனிச்சது , ஏராளமான நோயாளிகள்(!)  வந்துக்கிட்டே இருக்காங்க. திங்கக்கிழமை விடுமுறை. அன்றைக்குத்தான் எழுதுவாங்களாம். நம்மைப்போல் டொக் டொக்ன்னு தட்டச்சு இல்லையாம்.  பேனாவும் பேப்பருமா வச்சு  பயங்கர ஸ்பீடில் எழுதுவாங்களாம். அம்பதறுபது பக்கமெல்லாம்  ஜூஜுபின்னதும்  'ஹைய்யோ'ன்னு இருந்துச்சு எனக்கு.

வர்ற கூட்டத்தைப் பார்த்தால்  இதுவரை ஒவ்வொரு புத்தகமும் ஏகப்பட்ட பதிப்புகள் ஆகி இருக்கும். இப்பக்கூட ஒரு பெரிய புத்தகம் (விலை 1000 ரூ) பற்றிய விமரிசனம்  ஹிந்துவில் வந்திருக்குன்னு  நோட்டீஸ் போர்டில் இருந்த விமரிசனக்கட்டிங் காமிச்சாங்க. இன்னும் விற்பனைக்கு வரலை. அநேகமா அடுத்த வாரம் வந்திருமுன்னு அவுங்க பப்ளிஷர் (லிஃப்கோ)  சொன்னாராம்!

கன்ஸல்ட்டிங் ஃபீஸ் ஒரு பக்கமுன்னா இந்த மோதிரம், புத்தகங்கள்  எல்லாமும் சேர்த்து ஒரு தொகை வந்துருது.  இதை எங்கூர் டாலரில் மற்றும்போது  அப்படியொன்னும் பெரிய தொகை இல்லை என்பது ஒரு ஆசுவாசம்.

அறைக்கு வந்து புத்தகங்களையும் மோதிரங்களையும் வச்சுட்டு, கண்ணாடிகளை வாங்கிக்க  (தி.நகர் ராகவேந்திரா  கோவிலுக்குப் பக்கத்துக்கடை) போனோம். போட்டுப் பார்த்து  ஃபிட்டிங் சரியா இருக்கான்னு  செக்  பண்ணிட்டு, அடுத்ததாக   கோபாலுக்கான ஸ்பெஷல் ஷாப்பிங்.


ஐஸ்வர்யம்   ரேமாண்ட்ஸ். 90 பாண்டி பஸார். (நம்ம ஷாப்பிங் முக்கால்வாசி இந்த திநகர் ஏரியாவிலேதான்  எப்பவும்)   நாம் போன நேரத்தில் மெஷர்மெண்ட் மாஸ்டர் வெங்கட்  அங்கில்லை. கொஞ்ச நேரத்தில் வந்துருவார்,   உக்காருங்கன்னாங்க. இந்த 'கொஞ்ச நேரத்தில்'  எனக்கு நம்பிக்கை போய்  பலவருசங்களாச்சு.

பழைய ஆர்டர் நம்பரைச் சொன்னார் கோபால்.  ஆர்டர் எடுக்கும்  புத்தகங்கள் அடுக்குகளா ஒருஇடத்தில் .  சரியாச் சொன்னால்  ஒரு பத்து மாசத்துக்கு முந்திதான் வந்துருந்தோம்.  ஜனவரின்னதும்  தேடி எடுத்துட்டார் கடைப்பணியாளர்.  நம்பரைப் பார்த்தால்  கரெக்ட்!  எனக்கு ஒரே ஆச்சரியம்.  எப்படி இவர் சரியா இந்த ஆர்டர் நம்பரை நினைவு வச்சுருக்கார்? சகவாசதோஷமோ!!!!

இன்னிக்கு  அவர் போட்டுருக்கும்  பேண்ட்ஸ், போனமுறை  இங்கே தைச்சு எடுத்துப்போனதுதானாம். இன்னிக்குத்தான் முதல்முறையா அணிஞ்சுருக்கார். அதுலே உள்பக்கம் பாக்கெட் துணியில்  இந்த நம்பர் பால்பாய்ண்ட்லே எழுதி இருந்துச்சாம். போட்டுக்கும்போது கவனிச்சுருக்கார்:-)
ஒரு ஆறேழு துணிகளைத் தேர்ந்தெடுத்துட்டு  இதே அளவில் தைச்சு வைக்கச்சொல்லிட்டு அறைக்குப் போனோம்.

கோபாலுக்கு  துணி எடுக்கும்போது நான் ரொம்பவே தாராளமாத்தான் இருப்பேன். ரெண்டு போதுமுன்னு ஆரம்பிப்பார்.  சரின்னுட்டா..... என்ன ஆகுமுன்னு ஒருக்கா பார்க்கணும்:-))))

பாக்கிங் ஆரம்பிக்கணும் . நாளைக்கு    காலைப்போக்குவரத்து ஆரம்பிக்குமுன்   சீக்கிரமாக் கிளம்பணும்.  ஒரு பத்து நாளைக்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வச்சுக்கிட்டு  கொஞ்சம் பெரிய வண்டியை எடுத்துக்கிட்டு எட்டு மணிக்கு  வந்துருங்கன்னு சீனிவாசனிடம்  சொல்லியாச்சு.

சென்னைக்குள்ளேயே சுத்தறோமுன்னா நமக்கு டாடா இண்டிகா போதும்.

தொடரும்..............:-)





31 comments:

said...

அது என்ன எப்ப கோபால் படம் போட்டாலுமே--சாப்பிடும் படத்தையே போகுகிறீர்கள்! இது உங்களுக்கே நன்னா இல்லை! சொல்லிட்டேன்!

said...

நம்ம மாநாட்டுக்கு வந்து சேர்ந்த பயணத்தை அறிந்தேன்... ஐயாவின் "கவனிப்பிற்கும்" பாராட்டுக்கள்...

said...

கோயில் விழாவினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. படிக்கும்போது உடன் இருப்பதுபோல உள்ளது.

said...

சுற்றுலா அனுபவங்களை சுவைபட பகிர்ந்திருக்கிறீர்கள். இந்த டிரஸ் கோடு ரொம்ப எரிச்சல் தரும் விஷயம்.

said...

நான் விஜயவாடாவில் இருந்தபோது disc prolapse ஆகி படுக்கையில் இருக்க வேண்டியதாயிற்று. ஆனால் எனக்கிருந்த பணி பளு என்னைப் படுக்க விடவில்லை. சீக்கிரம் குணமாக யாரோ சொல்லி குண்டூரில் ஒரு அக்யுபங்க்சர் மருத்துவரிடம் போனோம். அங்கே உடம்பெல்லாம் ஊசி செருகப் பட்டு இருந்த நோயாளிகளைப் பார்த்தபோது என் மனைவிக்கு அந்த சிகிச்சை பிடிக்கவில்லை. நான் அங்கிருந்த டாக்டரிடம் பேசியபோது அவர்கள் குத்தும் ஊசியினால் பெர்மனெண்ட் க்யூர் கிடைக்காதென்று தோன்றியது. சில நரம்புகளில் ஊசி ஏற்றி அந்த இடத்தை மரக்கச்செய்து வலி போக்குகிறார்கள் என்று புரிந்து கொண்டேன். அக்குப்ரெஷர் என்பது இதமாக தடவுதல் போன்றதோ.?

said...

// நல்லவேளை தமிழ் படிக்கத்தெரியாது அவுங்களுக்கு//

So, do you mean your New Zealand doctor should not know that you ate 'lot of' sweets in India ? Ok, Got it.

said...

படங்களும் பதிவும் அருமை.
ரொம்ப நாளாச்சு பதிவு பக்கம் வந்து முதலிலிருந்து படிச்சுட்டு வரேன்.

said...

அன்புள்ள துளஸீ மேடம்
வணக்கம்
நான் உஙல் பரம ரசிகை எல்லா பதிவுகலியும் படீப்பேன்.ஆனால் பின்னூட்டம் எழுத முடியவில்ஐ இப்படி நெரிய தப்பு வரும். பயம் பாதீ காறணம். மேமலூம் ஏன்னிடம் ஜி மைல் ஐடி இல்லை. என் கனவரின் ஐ டி உள்ளது. சீ.ஏ பாலாஜி ஐடி இல் ஒரு பின்னுடம் எழுதினேன். அது திரல பார்ததும் எழுதலாம் என்ர நம்பீக்கை எல்லா பதிவுகளும் நல்ல நடை கருதத்து நல்ல போட்டோ.பூனை குட்டி அழகு. கொலு நன்ராக உள்ளதூ.
அன்புடன்
மீரா பாலாஜி
madam so many mistake is came because first time i type in tamil very difficult if you are not satisfied no need to publish

said...

தோழியரின் படம் சூப்பர் . வல்லியம்மாவின் பதிவில் படித்த முண்டகக்கண்ணியம்மனின் கோவில் சென்று வந்தேன் .அருமையான கோவில் . நீங்கள் அந்த கோவில் பற்றி எழுதி இருக்கீங்களா ?லிங்க் அனுப்ப முடியுமா ?

said...

பதிவுக்குப் பதிவு உங்க தோழி வந்துடறாங்க. அவங்க வச்சிருக்கிற வெள்ளை முடிக்கட்டும் ரிப்பன் பார்த்து மல்லிப்பூனு நினைச்சுட்டேன்.கண் செக் செய்யணும். கோபால் எது செய்தாலும் பூவு நாருன்னு சொல்லிக்கிறீங்க்களா இருக்கட்டும் இருக்கட்டும். பதுமன் கோவில் படங்கள் அழகுப்பா. பதிவர் மாநாட்டுக்கு வெயிட்டிங். இந்தத் தோழமை எப்பவும் நிலைச்சிருக்க பெருமாள் தான் துணை.

said...

வாங்க நம்பள்கி.

ஒவ்வொருமுறை சாப்பாட்டுத்தட்டை படம் எடுக்கும்போதும், இது நம்பள்கிக்காகன்னு சொல்லியே எடுப்பதால் போட்டுத்தான் ஆகணும்:-))))

தட்டுக்கு முன்னால் கோபால் இல்லைன்னா தட்டுக்குப் பின் கோபால் இப்படித்தான் இருக்கு இதுவரை:-)))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கவனிக்காம இருக்கமுடியுமா? ஆச்சு நாப்பது வருசம்:-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நான் பெற்ற இன்பம் வகையில் நம் பதிவு:-)))

said...

வாங்க கவிப்ரியன்.

வணக்கம்.

முதல் வருகைக்கு நன்றி.

ஆபாசமாக உடை அணிஞ்சு யாரும் ஆலயத்துக்கு வரமாட்டாங்கதான் என்றாலும்... இப்படி கலாச்சாரக் காவலர்கள் படுத்தும் பாடு...... ப்ச்:(

இவுங்க சொல்லும் புடவையையே கூட ஆபாசமா உடுத்தமுடியும் என்பது ஃபேஷன் ஷோ பார்த்தால் தெரியும்:(

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இந்த அக்கூப்ரெஷர் சிகிச்சையை அவர்கள் சொல்லிக்கொடுத்தபடி நாமேதான் செஞ்சுக்கணும். இதுக்குப் பக்க விளைவுகள் ஒன்னும் இல்லை என்பதே ஆறுதல்.

இவுங்களும் ஒரு ஊசியை அங்கங்கே லேசாக குத்தி வைக்கிறாங்க. ஆனால் இது ச்சும்மா ஒரு கண்துடைப்பு போல் பட்டது எனக்கு. இங்கே நியூஸியில் அக்கூபஞ்சர் சிகிச்சை நான் எடுத்திருக்கேன். அது வேறு வகை.

எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்று பட்டபாடுகளே இவை:(

இந்த டாக்டரின் பக்கம் இது. சில வீடியோக்களும் இருக்கு. நேரமிருந்தால்பாருங்களேன்.

http://www.drjayalakshmi.com/

said...

வாங்க விஸ்வநாத்.

சின்னதா ஷுகர் பேக்டரி ஒன்னு என் உடம்பிலே உருவாகுதுன்னு மருந்து கொடுப்பது இவுங்கதானே!

இனிப்பே கூடாதுன்னு ஆரம்பிச்சவங்களிடம் , வாட் ஈஸ் த பாய்ண்ட் ஆஃப் லிவிங் என்றதும் பத்து பாய்ண்டுக்குக் கீழே இருக்கும்படி கண்ட்ரோல் செஞ்சுக்குங்க சொன்னாங்க.

அப்படித்தான் இதுவரை:-)

அலோபதியின் கூடவே நாட்டு மருந்தும் எடுத்துக்குவேன். வெந்தியம், கருஞ்சீரகம், சீரகம் ஓமம் இவை கலந்த பொடி. இதுக்கும் பக்கவிளைவு இல்லை.சாப்பாட்டுச் சாமான்தான்:-)

said...

வாங்க ரமா ரவி.

நலமா? பார்த்தே நாளாச்சே!

said...

வாங்க மீரா.

ரொம்ப மகிழ்ச்சி. உங்களுக்கு தமிழ் தட்ட வந்துருச்சே! ஆரம்பகால தட்டச்சுப்பிழைகளைக் கண்டுக்காதீங்க.

பழகப்பழக சரி ஆகிரும்.

ஜிமெயில் ஐடி என்ன பிரமாதம்?

சுலபமாக் கிடைக்குமே. ஒன்னு எடுத்துக்குங்க. காசா பணமா?

said...

வாங்க சசி கலா.

ஆஹா..... அந்த முண்டகக்கண்ணியம்மன் தயவு எனக்கு இன்னும் கிடைக்கலையேப்பா:(

said...

வாங்க வல்லி.

சென்னைப் பயணத்தில் தோழிகள் சந்திப்பு எப்பவும் மறக்க முடியாதவைகள்தான். எனக்கு அது டானிக். அடுத்த பயணம்வரை மனசில் வச்சு எடுத்து எடுத்துப் பார்த்துக்குவேன்:-)

பதிவர் மாநாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து மூணு பதிவு நியூஸி வந்தவுடன் போட்டாச்சு.

said...

நிகழ்வுகள் அனைத்தையும்
நேரடியாகப் பார்ப்பது போல்
எப்படி இத்தனை அருமையாக எழுத முடிகிறது
கொஞ்சம் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து
படித்தாவது கற்பூற வாசம் அறிய வேண்டும்
மனம் கவர்ந்த பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

வாங்க ரமணி.

என்ன இது இப்படிச் சொல்லிட்டீங்க?

???? !!!!!!

said...

சில பேர் ஸ்லீவ் லெஸ் குர்தி அதுக்கு டைட் ஜீன்ஸ்னு வர்றாங்க. அதனாலத்தான் இந்த மாதிரி கண்ட்ரோல் செய்யறாங்க. இங்கே ஸ்கந்தகிரியில கூட கோட் உண்டு. திருப்பதியில சுடிதார் அலவுட் என்றாலும் சுடியில் போன என்னை ஒருத்தர் உங்களை விமர்சிச்ச மாதிரியே விமர்சிச்சார். சரியான ஜுரம் தவிர்க்க முடியாம ஸ்ரீலங்கா ஹவுஸ் ஓனர் ஆண்ட்டியை கூட்டிகிட்டு போயிருந்தேன். புடவை நம்ம பாராம்பரிய உடைதான் சுடிதார் போட்டுகிட்டா என்ன தப்புன்னு எனக்கும் புரியலை.

said...

அம்மா.....டி! ஒரு நாளில் எத்தனை அலைச்சல் என்று ஆச்சர்யப்படுவதா, அத்தனையையும் வரிவிடாமல் இப்போது இத்தனை நாட்கள் கழித்து எழுதுவதை வியப்பதா? டைரில குறிச்சு வச்சுடுவீங்களோ! மன டைரிதானா?

எல்லாமே சுவாரஸ்யம். நான் எங்கள் 'திங்க' கிழமைப் பதிவொன்றில் கோபால் ஸாருக்குப் பிடித்த தாலி பற்றி எழுதி இருந்தேன்!

said...

லேட்டஸ்ட் பதிவு படிச்சாச்சு. எங்கே விட்டேன் என்று இனி தேடித் பிடித்துப் படிக்கிறேன்! வல்லியை பார்த்தது (புகைப்படத்தில்) சந்தோஷமாக இருக்கு.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இப்ப சுடி எல்லாம் ஓக்கே பண்ணியாச்சு. என்ன ஒன்னு.... துப்பட்டம் கட்டாயம் வேணும். இன்னும் அதைக் கழுத்துலே போடக்கூடாதுன்னு சொல்லலை போல (டச் வுட்!)

ரெண்டு தோள்களிலும் கமீஸோடு பின் குத்தி வச்சு ஆடாமல் அசையாமல் வரணும் என்பது அடுத்த கட்ட நடவடிக்கை ஆகலாம்!

பேசாம கமீஸ் தைக்கும்போதே துப்பட்டாவை ஷோல்டர் ஜாய்ண்ட்டில் சேர்த்து தச்சுட்டால் பிரச்சனையே இல்லையாக்கும் கேட்டோ:-)))

இதுவே ஒரு ஃபேஷன் என்றுவந்தாலும் வந்துரும்ப்பா.

அடுத்து புடவைக்குள்ள ப்ளவுஸின் நீளத்துக்கு வருவாங்க. நோ லஞ்ச் இன்டர்வெல், யூ ஸீ!

said...

வாங்க ஸ்ரீராம்.

எல்லாம் மன டைரிதான். வயசாகிட்டதால் பலதும் விட்டுப்போகுது அப்பப்ப. போயிட்டுப்போறதுன்னு இருக்கேன்.

பொதுவா ஆண்களுக்குத் தாலி (தான்)ரொம்பப் பிடிக்கும். தினம் புதுசுபுதுசா வெவ்வேறு இடங்களில் என்றால் கேக்கணுமா:-)))

said...

வாங்க ரஞ்ஜனி.

வலையில் இது ஒரு வசதி. நேரம் கிடைக்கும்போது நூல் பிடிச்சுப் போகலாம்:-)

வல்லியைப் பார்த்தது நம்மில் அநேகருக்கும் கூடுதல் சந்தோஷமே!

said...

ரெண்டு போதும்னு சொல்லிட்டா கோபால் சாரும் சரின்னு சொல்லிருவாரு. பொதுவா ஆண்கள் அப்படித்தான்.

டிரஸ் கோட் பத்திச் சொன்னது செம காமெடி. சின்னக்கொழந்தைகளுக்கும் பாவாடைக்குத் தாவணியெல்லாம் டூமச்.

மயிலை சரவணபவன் பக்கத்துலயே சுக்ரா ஜுவல்லரி இருக்கு. வெள்ளிப் பொருட்கள் அங்க நல்ல நல்ல டிசைன்ல கிடைக்கும். அடுத்தவாட்டி ஒருவாட்டி எட்டிப் பாத்துருங்க. நீங்க சொல்றமாதிரி கும்பத் தேங்காய், நாமமெல்லாம் கெடைக்கும். அங்க ஒரு வெள்ளி வேல் சின்னதாப் பாத்தேன். வாங்கனும்னு ஆசை. அப்புறம் வாங்கிக்கலாம். என்ன அவசரம் இப்போ :)

said...

இனிய சந்திப்புகள் கண்டு மகிழ்ந்தோம்.

said...

ட்ரெஸ் கோட் - பல சமயங்களில் தேவையாகவும் இருக்கிறது. ஆனாலும் ரொம்பவே கஷ்டப்படுத்தாது இருந்தால் சரி.

சந்திப்புகள், சாப்பாடு, purchase என்று கலந்து கட்டி ஒரு பதிவு! ரசித்தேன்.