Thursday, September 24, 2015

முன்னம் ஒரு காலத்திலே......

சரியாச் சொன்னால் நம்ம வீட்டுக்குக் கணினி வந்த பத்தாம் வருசம் அது. 2004!  தமிழில் கூட டைப் பண்ணிக்கலாம். தமிழில் ஆர்ட்டிகிள்ஸ் வருதுன்ற முக்கியமான தகவல்களை  எல்லாம் நம்ம கோபால்தான்  கொண்டுக்கிட்டு வருவார்.

கணினி வாங்குனமுதலே (1994) அதுலே கேம்ஸ் விளையாடுவதுதான் ஒரே பொழுது போக்கு. DOS  வகையில்தான். கடைகளில் விற்கும் டிஸ்குகளை  வாங்கியாந்து போட்டு ஒரே விளையாட்டுதான்.  எல்லாம் சேலஞ்சிங் கேம்ஸ்.  இன்ட்டர்நெட் முதலில் கிடையாது.  அப்புறம்  குறிப்பிட்ட அளவுக்கு இம்புட்டுக் காசுன்னு டெலிகாம் சொன்னதால் வாங்கினோம்.  வீட்டுலே மூணு பேர். ஆனால் கோபாலுக்கு  இங்கே வீட்டில் இண்ட்டர்நெட் அனுமதி இல்லை. 'எல்லாம் ஆஃபீஸ்லே பார்த்துக்குங்க'. நானும் மகளும் மட்டும்  வீட்டுலே ப்ரௌஸிங் செஞ்சுக்குவோம். அதுலேயும் லாக்  ரெஜிஸ்ட்டர் போல ஒன்னு வச்சுக்கிட்டோம். யார் பயன்படுத்தறாங்களோ....   அவுங்க எடுக்கும் நேரத்தை எழுதி வச்சுடணும்.  இருக்கும் நேரத்தில் ஆளுக்குப் பப்பாதி.

கணினி வந்த புதுசுலே.... தமிழ் தட்டச்சுக்குத் தேடியதில்  மயிலை ஃபாண்ட்ன்னு ஒன்னு இருக்குன்னு  இலங்கை நண்பர் சொன்னார். டாக்டர் கல்யாணசுந்தரம் என்பவர் தயாரிப்பு.


அவருக்கு மின்மடல் அனுப்பியதும்,  விவரங்களை அனுப்பினார்.  இந்த கீ தொட்டால் அந்த எழுத்து,  அந்தக் கீக்கு இதுன்னு  குழப்பமா இருக்கும். கவனிச்சுக்  கவனிச்சு தட்டச்சுவேன்.

நம்ம தமிழ்சங்கத்து இதழான  தமிழருவிக்காக சின்னச்சின்ன  கட்டுரைகளை எழுதி அதைத் தட்டச்சு செஞ்சு தருவேன்.  அரைப்பக்கக் கட்டுரைக்கு அரை நாள் ஆகிரும். தட்டுத்தடுமாற்றம்தான், வேறென்ன?

அப்புறம் ஒரு  யாஹூ குழு விவரம் கொண்டுவந்து தந்தவர் நம்ம கோபால்தான். அங்கே எல்லோரும் தமிழில் பேசிக்கிட்டு இருந்தாங்க. ஐக்கியமானேன்.  அப்பப்போ ஒன்னு ரெண்டு வரி நம்ம ரெண்டு சென்டைச் சொல்றதோடு  சரி.  முழுக்க முழுக்க வாசிப்புதான்.  எழுதுனவரிடம் (ரங்கா) அனுமதி வாங்கி அதுலே ரெண்டு  கதைகளை எடுத்து நாடகமாத் தயாரிச்சு தமிழ்ச்சங்கத்துலே மேடை ஏத்தினேன். நாந்தான்  பல ஆண்டுகளா (12 வருசம்) கலை கலாச்சார ஒருங்கிணைப்பாளர் அங்கே:-)))


ரங்காவின் எழுத்துகள் இப்பவும் எனக்கு க்ரேஸ்தான்.  ஏனோ அவர் வலைப்பூ புண்ணாக்கு 2006 க்கு அப்புறம்  ஒன்னுமே இல்லாமல் கிடக்கு.


அப்புறம்  என்னமோ வாசிக்கும்போது  முறுக்குன்னு ஒரு கதையை ரொம்பவே சிலாகிச்சு  எழுதி இருந்தார் நம்ம பிரபு ராஜதுரை. அதைத் தேடிப்போய் மரத்தடி குழுமத்தில் விழுந்தேன். இது 2004 மார்ச் மாதம். திஸ்கியில் தட்டச்சு செஞ்சு அனுப்பும் காலம் அது.  என்னென்னவோ விவாதங்களில் ஒரு பக்கமா இருந்து வேடிக்கை பார்ப்பதுதான். சிலவற்றில் எதோ தெரிஞ்சதை தட்டச்சு செஞ்சு அனுப்புவேன். நல்லா எழுதறீயேன்னு  உசுப்பி விட்ட மரத்தடி மக்கள், சும்மா ஆடுன காலுக்குச் சலங்கையைக் கட்டி விட்டுட்டாங்க.


எழுத்துக்காரியா ஒரு அங்கீகாரம். மரத்தடி.காம் என்னும் பகுதியில் நம்ம கட்டுரைகள்!  கண் விரியப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்புறம் ஆறு மாசத்தில்  தனிக்குடித்தனம், தமிழ்மணத்தில் இணைப்பு. கலப்பை பிடிச்சு ஏர் உழுதுக்கிட்டுப் போக நம்ம காசியின் வழிகாட்டுதல் இப்படி. யூனிகோடு வந்துருச்சு. எல்லாமே ஈஸி பீஸி.

செப்டம்பர் 2004  தனிக்குடித்தனம் போய் பால் காய்ச்சியாச்சு. அன்றைக்கு  நம்ம கோபாலின் பொறந்தநாள் வேற !  ரெண்டையும் ஒன்னா முடிச்சுப்போட்டு வச்சேன். குறைஞ்சது, இதுலே எதாவது ஒன்னு ஞாபகம் இருக்குமேன்னுதான்.


அன்னைக்குப் பிடிச்சது உங்களுக்கெல்லாம்.....  **  தசை:-)

இப்ப ஒரு மூணு வாரமா உடல்நிலை சரி இல்லை. குளிர்காலம் முடிஞ்சு  வஸந்தகாலம் தொடங்குனவுடனே ஊரெல்லாம் ஃப்ளூ.  அதிலும்  ஆஸ்த்மாக்காரிக்கு அதிகமாப்போய் ஒரே  கிடப்புதான். இருமி இருமி, இப்ப பேச்சில்லாப் பெருவாழ்வு. குரலைக்காணொம்! வீடே அமைதிப்பூங்கா!


உடல்நிலை சரி இல்லாமல் சோர்வாக இருக்கும் மனசுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் கைங்கர்யமா நம்ம தலை பாலபாரதி, ஒரு மடலும் சுட்டியும் அனுப்பி இருந்தார்.  பார்த்தால்.....  நம்ம ஆரம்பகால அழிச்சாட்டியங்கள்!!!!



அங்கவஸ்த்திரத்துலே ஜரிகை பார்டர் போல கட்டக் கடைசியில் இருக்கும் கத்தரிக்காய் கறி மட்டும்  என் சமையல் இல்லையாக்கும், கேட்டோ!


ஆரம்பநாட்களில் பாய்ஞ்சு பாய்ஞ்சு எழுதின வேகமெல்லாம் ஒரு கட்டுக்குள் வந்து இப்போ குறைஞ்சபட்சம் வாரம்  ஒரு மூணு.

இன்றுவரை வெளியிட்ட பதிவுகள் 1745.  ட்ராஃப்ட்டில் போட்டு வச்சவைகள் இருக்கட்டும், ஒரு பக்கம்.

இன்றோடு  பதினொரு வருசங்களை முடிச்சுட்டு, பனிரெண்டாவது  வருசத்தில் காலடி எடுத்து வைக்கும் துளசிதளத்துக்கு உங்கள் வழக்கமான அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையோடு நான்!

நம்ம வல்லியம்மா  மூணுநாள் கொண்டாட்டமா  ஃபேஸ்புக்கில்  துளசிதளத்தை மலைமேல் ஏத்திவிட்டுருக்காங்க.  அங்கே வாழ்த்துகளைத் தெரிவித்த அன்புள்ளங்களுக்கு  மனம் நிறைந்த நன்றிகள்.


ஆங்.....  சொல்ல மறந்துட்டேனே.....  இன்றைக்கு  வேறொரு பிரபலத்திற்கும் பொறந்தநாள்.  கோபாலும் நம்ம பாரதிமணி ஐயாவும்  ஒரே நாளில் பிறந்துருக்காங்க!!!!!

மாமனாருக்கும் மருமகனுக்கும்  ஒரே நாளில்  பொறந்தநாள் :-)


என் வாழ்வில் முக்கியமான இந்த இருவருக்கும் துளசிதளத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளையும் சொல்லிக்கறேன்!

34 comments:

said...

வாழ்த்துகள் அம்மா...

அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபால் அங்கிள் .
துளசி தளத்திற்கும் வாழ்த்துக்கள் துளசிம்மா
-அபி

said...

இனிய வாழ்த்துகள்

said...

மீண்டும் என் இனிய வாழ்த்துகள்:)!

said...

துளசிதளத்துக்கும் உறுதுணையாயிருக்கும் கோபால் சாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டீச்சர். எழுத்துச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் உங்களை நினைத்துகொள்வேன். உடனே உற்சாகம் பிறந்துவிடும். அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி டீச்சர்.

said...

அபார சாதனைதான் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

said...

கோபாலுக்கு வாழ்த்துகள். (நம்ம வயசுதான்)
பாரதிமணி ஐயா உங்கள் சொந்தமா ?

said...

Great work.Hearty congratulations. May God Bless you with long life . good health and happiness

said...

மீண்டும் வாழ்த்துகள் அம்மா ....

உங்களுக்கும், துளசி தளத்திர்க்கும் ,கோபால் ஐயாவிர்க்கும் .....

said...


சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

said...

தளத்துக்கும் அண்ணாவுக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் துள்சிக்கா.

said...

பத்து வருட பதிவுல சேவைக்கும், கோபால் ஐயாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் 2009-ல் நேரிடையாகவே தமிழ்99-ல் தட்டச்சு பதிய ஆரம்பித்து விட்டேன். எனவே மற்ற எழுத்துருக்களைப் பற்றிய சானம் சிறிதுமில்லை.

said...

இனிய வாழ்த்துக்கள் அம்மா....

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க அபிநயா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க ராமல்க்ஷ்மி.

வாழ்த்துகளுக்கு மீண்டும் என் நன்றிகள்.

said...

வாங்க கீதமஞ்சரி..

எழுத்து.... புலிவால் பிடிச்ச கதையாப் போச்சு. எழுதாமல் இருந்தால் மனப்பிறாண்டல் !

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ரவியா!


ஆஹா.....ஆஹா...... வாழ்த்துகளுக்கு நன்றி.

பாரதிமணி ஐயா என்னுடைய அடாப்டட் அப்பா:-))))

ஊருலகத்துக்கே அவர் சொந்தம்தான்,இல்லையோ!!!!

said...

வாங்க பாபு.

வாழ்த்துகளுக்கு நன்றி.

லாங் லைஃப் வேணாம். ஆனால் இருக்கும்வரை எழுத்து என்னை நீங்காமல் இருக்கட்டும்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்

மீண்டும் நன்றிகள்.

said...

வாங்க ஜீவலிங்கம்.

மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க சாந்தி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க கவிப்ரியன்.


ஆரம்பகாலத்தில் எப்படி முட்டி மோதி இருந்துருக்கோம் பாருங்களேன்!

said...

வாங்க செந்தில் குமார்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாழ்த்துகள் டீச்சர். பன்னிரெண்டாம் வருடத்தில் அடி எடுத்து வைக்கும் துளசிதளம்.... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.....

கோபால் சாருக்கும் வாழ்த்துகள்.

said...

அன்பு துளசிக்கு அருமையான வாழ்த்துகள் எத்தனையோ பேருக்கு உற்சாக மருந்து உங்கள் பதிவுகள்.
மனம் நிறைந்த நன்றிகள். கோபாலுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள் இருவரும் அமோகமா இருக்கணும்..

பாரதி மணி ஐயா பிறந்த நாளா. கவனிக்காமல் விட்டேனே.
என் நமஸ்காரங்கள் அவருக்கு. துளசிதளம் எப்பவும் இனிமையா இயங்கிக்கொண்டு இருக்கணும்.

said...

துளசிதளத்திற்கு வாழ்த்துக்கள் !!Great going . கோபால் அவர்களுக்கு ,இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

said...

இந்தப் பதிவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிக முக்கியமானது. 1745. வியப்பாக உள்ளது. பாதிக்குப் பாதியைக்கூட தாண்ட வில்லை. உங்களில் பாதி வருட அனுபவம். இனிய வாழ்த்துகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றீஸ்ப்பா.

said...

வாங்க சசிகலா,

வாழ்த்துகளுக்கு நன்றீஸ்.

said...

வாங்க ஜோதிஜி.


முக்கியமுன்னு நினைப்பவர் நீங்க ஒருத்தர்தான்னு நினைக்கிறேன்:-)

வாழ்த்துகளுக்கு நன்றி.