Friday, July 01, 2016

திருமணிமாடக்கோவில், திருநாங்கூர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 54)

நம்ம குடமாடுகூத்தர் கோவிலில் இருந்து கூப்பிடு தூரம்தான். என்ன ஒன்னு ... கையில் மெகஃபோன் வச்சுக்கணும். ஜஸ்ட் 350 மீட்டர்.  பட்டர் ஸ்வாமிகள்  இருப்பதை  நிச்சயிச்சு,  குறுக்கும் நெடுக்குமாப் போய்க்கிட்டு இருக்கோம்.  எனக்கென்ன இப்பத் தோணுதுன்னா,  வேலையில் இருந்து ஓய்வு ஆன பிறகு  பேசாம திருநாங்கூர்லே போய் (திண்ணை வச்ச வீடுகள் கிடைக்கும்தானே?) செட்டில் ஆகிட்டோமுன்னா, தினமும் நடைப்பயிற்சி என்ற சாக்கில்  நாலு தெருவைச் சுத்தி வந்தால்  ஏழு கோவில்களைப் பார்த்தமாதிரியும் ஆச்சு இல்லையோ!  புண்ணியத்துக்குப் புண்ணியம்  போனஸ்!

இந்தத் திருநாங்கூர் பகுதியில்   சீர்காழிக்குப் பக்கமே பதினொரு    பெருமாள் கோவில்கள் இருக்குன்னு இப்பப் போய்க்கிட்டு இருக்கோம் பாருங்க.... அவை  எப்படி அங்கே ஒரே இடத்தில்னு சம்ஸயம் வருது இல்லையா?  அதுக்கே ஒரு கதை இருக்கு.

ஆணவம் கொண்ட ப்ரம்மாவின் தலையை சிவன் கொய்துட்டார்ன்னு  முந்தி  திருச்சி உத்தமர் கோவில் பகுதியில் சுத்துனபோது  சொன்னது யாருக்காவது நினைவிருக்கோ?  இல்லாதவங்க  இங்கே பார்க்கலாம்:-)


ப்ரம்மன் தலையைக் கொய்ததால்  ப்ரம்மஹத்தி தோஷம் வந்துருது சிவனுக்கு. போதாக்குறைக்கு கிள்ளுன தலை, கை விரலில் ஒட்டிக்கிட்டுக் கீழே விழமாட்டேங்குது.  நாளாக நாளாக தலை  உலர்ந்துபோய் மண்டை ஓடு ஆனதும், அதையே பிச்சைப் பாத்திரமா  வச்சுக்கிட்டு இரந்துண்டு வாழ்கிறார் சிவன்.

இந்த தோஷத்தில் இருந்து எப்படி விடுதலை ஆவதுன்னு   மச்சான் கிட்டக் கேக்கறார். நம்ம பெருமாளுக்கு ஐடியாவுக்குப் பஞ்சமா?  பூலோகத்துலே ஒரு நல்ல இடம் இருக்கு. அங்கே போய்       ஏகாதச (பதினொரு) யாகம் செய். ஆனால் ஒரே சமயத்துலே எல்லா யாகமும் நடக்கணும். அப்போ நான் அங்கே வந்து தோஷநிவர்த்தி செய்யறேன்னார்.

அப்ப நீரும் ஒரே சமயத்தில் பதினொரு இடத்தில் வந்து  தோஷநிவர்த்தி செய்யணும்தானேன்னு  கேட்டதுக்கு,  'நோ ஒர்ரீஸ். செஞ்சால் ஆச்சு'ன்னார் பெருமாள்.

சிவன் வந்து சேர்ந்த இடம்தான் இந்த நாங்கூர்.  தன்னுடைய அம்சமான ருத்திரரை, பதினொரு   ரூபங்களாக்கி ......

(மகாதேவன்,ருத்ரன்,சங்கரன்,நீலலோகிதன்,ஈசானன்,விஜயன்,வீமதேவன், சவும்யதேவன்,  பலோத்பவன், கபாலிகன், ஹரன் என்றவர்கள்.
அடுத்து இன்னொரு இடத்தில் பெயர்கள் இப்படி.   ஏகாதச ருத்திரர்கள்: அஜைகபாத், அஹிர்புத்னியன், விரூபாக்ஷ்தன், ரைவதன், ஹரன், பஹுரூபன், த்ரையம்பகன், சாவித்ரன், ஜயந்தன், பினாகி, அபராஜிதன். )

பதினொரு இடத்தில்   யாகம் நடத்த வச்சுட்டார் சிவன்.  யாகம் முடியும் நேரம் அங்கே எழுந்தருளிய  மஹாவிஷ்ணு, தானும் வெவ்வேற  உருவங்களா மாறி  ஒரே சமயத்தில் அந்தந்த யாகங்களில் கலந்துக்கிட்டு, சிவனுடைய தோஷத்தை நிவர்த்தி செஞ்சார்.

பொதுவாப் பெரியவர்கள் வேண்டிக் கேக்கறது போல, சிவனும்  இதே ரூபத்தில் இங்கே இந்த பதினொரு  இடங்களிலும்  தங்கி பக்தர்களைக் காக்க வேண்டும் என்று  கோரிக்கை வைக்க அப்படியே ஆச்சு.  அதான் இந்தப் பகுதியில் ஏகாதச பெருமாள் கோவில்களும்,  இதே ஏரியாவில் ஏகாதச சிவன் கோவில்களுமா,  சைவ, வைஷ்ணவ பக்தர்களுக்கு புண்ணியம் சேர்க்க உதவுது .

இந்த ஏகாதச உருவங்களுக்கு  இன்னொரு கதையும் உண்டு. சுருக்கமாச் சொல்லணுமுன்னா,  அசுரர்களை ஒழிக்க, சிவனும் விஷ்ணுவும் ஆளுக்கு பதினொன்னுன்னு  ரூபமெடுத்து, கூட்டமாப்போய் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்துவந்த  அசுரர்களை அழிச்சாங்களாம்.  இந்தக் கதை  தக்ஷன் செஞ்ச யாகத்துலே இருந்து ஆரம்பிக்குது. தாக்ஷாயிணி சம்பவம் இங்கே நம்ம துளசிதளத்துலேயே பார்க்கலாம். 

இப்ப நாம் பெருமாள் கோவில் யாத்திரை என்பதால்  இங்கே  இருக்கும் சிவன் கோவில்களுக்குப் போகவில்லை. உண்மையைச் சொன்னால் அப்போ இந்த  சிவன் கோவில்களைப்  பத்தித் தெரியாது.  நம்ம குமாரும் சொல்லலை.  இந்தப் பதிவுகள் எழுதுமுன் கொஞ்சம் ஆராய்ச்சி(!!!) செஞ்சதில் கிடைச்ச விவரம்தான் இது. போகட்டும், பின்னே எப்பயாவது போனால் மறக்காமல் தரிசிக்கணும்.

இந்தப் பதினொரு திவ்யதேசக் கோவில்களில், ரொம்பப் பிரதானமானது இப்போ நாம் நின்னுக்கிட்டு இருக்கும் இந்த மணிமாடக்கோவில்தான்.  திருமணிமாடக்கோவில். இங்கே பெருமாள் நாராயணனாக  காட்சி கொடுக்கிறார். பத்ரிநாராயணன். இருந்த கோலத்தில், பாதம் தாமரை மலரில் வைத்தபடி!
கோவில்வாசலில் ஸ்ரீ நாராயணன் பெருமாள் என்றுதான் இருக்கு.  சின்னதா ஒரு அஞ்சு நிலை ராஜகோபுரம். கோவிலுக்கு முன்னே நடுவில் நீராழி மண்டபமும், மூணு பக்கம் படிகளோடும் உள்ள அழகான திருக்குளம். பெருசுதான்!
கோபுரவாசலைக் கடந்து உள்ளே போறோம். பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடிக்கான சந்நிதின்னு பக்கா பெருமாள் கோவிலுக்கானவை எல்லாம் அமைஞ்சுருக்கு.  ஆனா ஒரு சின்ன மாற்றம்....   பெரிய திருவடியான கருடன் சந்நிதி, பூமிக்குள் அழுந்தி இருக்கறதைப்போல்  உள்ளே  இருக்கு.
நேர் எதிரில்  மூலவர் இருக்கும் கருவறைக்குப் போக மண்டபத்தைக் கடந்து ஒரு எட்டொம்பது படிகள் ஏறிப்போகணும்.  அதனால் பெருமாளுக்கும் கருடனும் ஐ கான்ட்டாக்ட் கிடையாது!


மூலவருக்கு  நந்தாவிளக்குப் பெருமாள், பத்ரிநாராயணர் என்று பெயர்கள். உற்சவர்தான்  நாராயணன். அளத்தற்கரியான் .

நந்தா விளக்கே அளத்தற் கரியாய் நரநா ரணனே! கருமா முகில்போல்
எந்தாய், எமக்கே யருளாய், எனநின்று இமையோர் பரவு மிடம்,எத் திசையும்
கந்தா ரமந்தே னிசைபாடமாடே களிவண் டுமிழற் றநிழல் துதைந்து,
மந்தா ரநின்று மணமல் குநாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே.


திருமங்கையாழ்வார் பாசுரம்.

இங்கேயும் வழக்கம்போல் பத்துப்பாசுரங்கள்!  இந்தப் பாசுரங்களை வச்சே திருமங்கை போன ரூட் கண்டுபிடிச்சுடலாம்!
தாயார் புண்டரீகவல்லி, தனிச்சந்நிதியில் !
வாஹனமண்டபத்தில் கருடர்,  தயாராகப் புதுப்பொலிவுடன் இருக்கார்.

காலை 8 முதல் 11.30.  மாலை 5.30 முதல் 7.30 ன்னு கோவில் திறந்திருக்கும்.
கோவில் முற்றத்தில் சவுக்கு, மூங்கில் கட்டைகள் வந்து இறங்கி இருக்கு. பெருசா பந்தல் போடும் வேலைகளும் நடக்குது.  அப்புறம் சின்னச்சின்ன பழுதுபார்த்து பூசும் வேலையும் இன்னொருபக்கம் நடக்குது.  வெளியே  கோபுரவாசலுக்கும் திருக்குளத்துக்கும் இடையில் உள்ள பகுதியிலும் பந்தல் போடப்போறாங்க.


என்ன விசேஷமாம்? திருநாங்கூர் கருட சேவைன்னு கேள்விப்பட்டுருக்கோமே  அந்த விழா நடக்கப்போகுது!  மேலே சொன்ன பதினொரு கோவில்களில் இருந்து  கருடவாகனத்தில் உற்சவர்கள் இங்கே இந்தக் கோவிலுக்குத்தான் வந்து சேருவாங்க. ஒரே சமயத்தில் பதினொரு பெருமாளுக்கும் பூஜை நடக்கும்!   தை அமாவாசைக்கு மறுநாள் தொடங்கும் இந்தவிழா மூணு நாள் கொண்டாட்டம்.


விழாவைப்பற்றிய விவரங்களை அடுத்து வரும் பதிவுகளில் எழுதறேன். இந்தப் பதிவிலே ஏகப்பட்ட கதைகள் வந்து பதிவு நீண்டு போய்க்கிட்டு இருக்கு பாருங்க. இன்னும் நம்ம திருநாங்கூர் கோவில்கள் பாக்கி இருக்கே.
நமக்கும் கோவில்திருவிழாவுக்கான  அழைப்பிதழ் கிடைச்சது.  ஆசையாத்தான் இருக்கு. ஆனால் இன்னும் 8 நாள் கழிச்சுத்தானே விழா!
கோவில் மடைப்பள்ளியில் ராஜன் என்றவரை சந்திச்சோம்.  ஓய்வு பெற்ற ஆசிரியர். கோவிலுக்கு  சேவை செய்து வர்றார். கருட சேவை காலங்களில் அவர் வீட்டுலேயே அன்னதானம், வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்க  வசதி இப்படித் தன்னாலான  பெருமாள் ஸேவை. ஒரு தொகை  எடுத்துக் கொடுத்தார் நம்மவர். நாலு பேருக்கு  நல்லது நடக்கட்டுமே!  இங்கேயும் ராஜன் ஸார்தான் பந்தல் வேலைகளை மேற்பார்வை பார்த்துக்கிட்டு வேண்டிய   உதவிகளைச் செஞ்சுக்கிட்டு இருந்தார்.
இந்த வருசம் நடக்கப்போவது 122 வது கருட சேவையாம்.விழா நல்லபடியா நடக்கட்டுமேன்னு அந்தப் பெருமாளையே வேண்டிக்கிட்டேன்.

தொடரும்..........  :-)



18 comments:

said...

நல்ல தகவல்கள், ராஜன் சார் கிட்ட பேங்க டீடெய்ஸ் வாங்கிப் போட்டுருந்தால் உற்சவத்துக்கு தொகை அனுப்ப வசதியாக இருக்கும். பரவாயில்லை.

said...

அருமை.நன்றி.
தொடர்கிறேன்.

said...


சிவனின் பிரும்மஹத்தி தோஷம் நீங்க வைத்தவர் பெருமாள் ஆகவே அவரே பெரியவர் என்று சைவ வைஷ்ணவ சண்டைகள் இல்லையா ஒரு வேளை நீங்களும் அதனால்தான் அவற்றைக் கண்டுகொள்ளவில்லையோ

said...

பதிவின் வழியாக வழக்கம்போல் உங்களுடன் பயணித்தேன். அருமை.

said...

திருநாங்கூர் கருட சேவை பிரபலமான ஒன்று. திருவரங்கத்திலும் இதன் அறிவிப்புகள் பார்த்ததுண்டு...

படங்கள் வழமை போல அருமை. உங்கள் காமிராக் கண்ணிலிருந்து ஒன்றும் தப்ப முடியாது! )

said...

அருமையான தொகுப்பு
தொடரட்டும்


கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

said...

கோயில் பழசாயிருக்கு. கருடன் மட்டும் பளிச்சின்னு இருக்காரு. 122ம் கருடசேவை நடக்கப் போகுதுன்னு போட்டிருக்கீங்களே. அப்போ 122 வருடங்களாத்தான் கருடசேவை நடக்குது போல.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

அவர் அக்கவுண்ட் நம்பர் வாங்கிக்கணுமுன்னு தோணலை. தர்மம் செய்ய நினைத்தால் அப்போதைக்கப்போதே கையில் உள்ளதைச் செஞ்சுடறதுதான் வழக்கம். அப்புறம் என்று நினைத்தால் அது நடப்பதே இல்லை :-(

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர் வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

மாமன் மச்சானுக்குள்ள உறவில் நாம் தலையிடக்கூடாது இல்லையோ :-) இவரை அவரும் அவரை இவரும் வணங்குவதெல்லாம் சகஜம்தான். இந்தக்கோவிலில் இப்படி. வேறொரு கோவிலில் வேற மாதிரி!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரோஷ்ணியம்மாவும் வேடுபறி பற்றிச் சொன்னாங்க. இந்த கருடசேவை வைபவங்கள் இப்பெல்லாம் ரொம்பவே பிரபலம். ஏகப்பட்ட பெருமாள்களை ஒரே இடத்தில் பார்க்கலாமே! காரைக்காலிலும் 7 கருட சேவை பிரஸித்தம்!

said...

வாங்க யாழ்பாவாணன்.

வருகைக்கும் நன்றி.

கருத்து மோதல் என்னன்னு போய்ப் பார்க்கிறேன்.

said...

வாங்க ஜிரா.

அப்பப்ப எதுக்கு மவுஸோ அதைச் சரிப்படுத்தி வச்சுடணும். இப்போ அது கருடருக்கு!

ஒழிஞ்சுபோன பழக்கங்களை இப்பதான் மெள்ள மெள்ள திரும்பவும் வழக்கத்துக்குக் கொண்டு வர்றாங்க. அதுலே இந்த 11 கருடசேவையும் ஒன்னு!

பரவாயில்லை. 122 வருசமாத் தொடர்ந்து நடக்குதே! நடத்தும் ஊர்மக்களைப் பாராட்டத்தான் வேணும்!

said...

EkAdasa Rudras are
1. Mahadeva, 2. Shiva , 3. Maha Rudra, 4. Shankara, 5. Neelalohita, 6. Eshana , 7. Vijaya , 8. Bheema Rudra, 9. Devadeva, 10. Bhavodbhava and 11. Adityatmaka Srirudra

For smartha's Sasthi AbDA Poorthy, on the prior day, we do Rudra ekAdasini - 11 priests chanting Sri Rudram 11 times. In parallel abhisekam to siva Lingam, Saligramam, spadikam (Surya) , Red stone form Sonabharda for Ganesa, Swarna mukhi stone for Amba. This is Panchayatana pooja enforced by Adi Sankara. Once can keep their favoite deity in the center.
After the Rudra Japam, the priests will do Rudra Homam.
The next day is for Mangalya Dharanam and other ceremony

said...

திருநாங்கூர் கருடசேவை பிரசித்தமானது...பதினோரு கோவில்களுக்கான காரணத்தை தெரிந்து கொண்டேன்...தொடர்கிறேன் டீச்சர்.

said...

வாங்க Strada Roseville.

11 ருத்ர நாமங்களுக்கு நன்றி.

பின்னூட்டங்களில் வரும் தகவல்களில்தான் எத்தனையோ தெரிஞ்சுக்க முடியுது!

நம்மில் பலருக்கும் இது பயன்படும்!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.


ஒரு கருடசேவை பார்த்தாலே புண்ணியமாம். அப்ப பதினொரு கருடசேவைன்னா!!!

அதான் நல்லாவே பிரசித்தமாகி இருக்கு!