Sunday, September 18, 2016

ஆதலினால் பயணம் செய்வீர் !

வகுப்புக்  கண்மணிகளே!

 பயணம் அமைஞ்சுருக்கு.  வரச்சொல்லி இருக்கார் பெரும் ஆள்.  இந்த முறை கொஞ்சம்  கடினமான பயணமாக இருக்கலாம்.  அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்படணும்?  எல்லா பாரத்தையும்  அவன் மேல் போட்டுட்டு இதோ  கிளம்பணும், இன்னும் சில மணி நேரங்களில்.

இந்தவாட்டி  கொஞ்சம் நீண்ட பயணமும் கூட ....   ஏற்கெனவே ஆரம்பிச்சுப் போய்க்கிட்டு இருக்கும் தொடர் முடிஞ்சபாட்டைக் காணோம்.  அதனால்  கொஞ்சம் எழுதி ட்ராஃப்டில் போட்டு வச்சுருக்கேன்.

அவைகளை வாரம் ஒரு பதிவு என்று வெளியிட உத்தேசம்.  அதுகூட போகும் இடத்தில் கிடைக்கும்  இணையத் தொடர்பைப் பொறுத்ததே!

நம்ம வகுப்புக் கண்மணிகள்,  'ஹைய்யா... லீவு'  என்று ரொம்பவே சந்தோஷப்பட்டுடக் கூடாது பாருங்க....  :-)

சேமிப்பில் இருப்பவை தீர்ந்து போவதற்குள் திரும்பி  வந்துடலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை,       இல்லையோ!

எல்லோரும் நல்லபிள்ளைகளா நடந்துக்குங்க.



என்றும் அன்புடன்,
துளசி டீச்சர்.

14 comments:

said...

நல்லபடியாக பயணம் அமைய வாழ்த்துகள் மா. பெருமாள் எப்பொழுதும் பக்கம் இருப்பார்.

said...

Tata.. have a safe trip

said...

தங்கள் பயணம் இனிதே அமைய வேண்டுகிறேன். ரங்கா ரங்கா.

said...

நாங்களும் உங்கள் பதிவு மூலமாக உங்களுடன் பயணிக்கக் காத்திருக்கிறோம்.

said...

திருப்பிரிதியா அல்லது சாள்க்ராம்மா? மலைநாட்டுத் திருப்பதி கடினம் என்று நினைக்கமுடியவில்லை

said...

காத்திருப்பதில் சுகமுண்டு,
கண்டுகொண்டேன் நானின்று.

said...

நல்லபடியா போய்ட்டு வாங்க டீச்சர் & கோபால் அண்ணா..வரும்போது லட்டு லட்டா பதிவுகளைக் கொண்டு வரணும்..மறக்காம ஒட்டியாணத்தையும்... கேட்டோ? :-)

said...

காலம் மாறினாலும் வயது ஏறாத தம்பதிகளுக்கு என் வாழ்த்துகள்

said...

மறுபடியும் இந்தியப் பயணமா ? பெங்களூர்ப்பக்கமில்லை என்று முன்பே கூறிய நினைவு.

said...

நல்லபடியாக பயணம் அமைய வாழ்த்துக்கள்.

said...

Have a nice ice trip. Hope to meet you two.😉

said...

பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்!!

said...

அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

தனித்தனியா வந்து நன்றி சொன்னதாக நினைச்சுக்குங்க ப்ளீஸ்.

said...

பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள் டீச்சர் + கோபால் சார்.

பயணங்கள் முடிவதில்லை :)