Wednesday, December 28, 2016

உள்ளே இளைஞன், வெளியே கிழவன் !!!! எல்லாம் வேஷம்................ :-) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 111)

கோல்டன்நெஸ்டைத் தேடி தெருவின் ரெண்டு பக்கமும் கண்ணை நட்டுக்கிட்டுப்போயிருக்கோம்..... கண்ணுலே அகப்படலை....  ஆனால் தெருமுழுக்க இவர் புகழ் பரவி இருப்பது கடைசி விநாடியில் தெருமுடியும் இடத்தில் இருந்த பெட்டிக்கடையில் தெரிஞ்சது....  பெயரைச் சொன்னவுடன்,  'அடடா.... தெரு ஆரம்பத்துலேயே   ரைட் எடுத்துருக்கணும்'    என்றதோடு விடாமல்....  'போங்க. மாடியில் உக்கார்ந்துருப்பார்'னும் சொன்னார்,  கடைக்கு எதோ வாங்க வந்த நபர்:-)

அதே மாதிரிப்போறோம். வாசலில் புள்ளையார்!  மாடியில்  தகப்பனார்!
வயசாச்சுன்னு சொல்றதெல்லாம் ச்சும்மா.....  ஒரு பாவ்லா!  இளைஞருக்குரிய.... இன்னும் சொல்லப்போனால் சின்னப் பையனுக்குரிய ஒரு லாகவத்தோடு சட்னு  நாற்காலியில்  உக்கார்ந்து காலை  மடிச்சுச் சம்மணம் போட்டுக்கறதைப் பார்த்து, இந்த மூட்டு வலிக்காரிக்கு மூச்சு நிக்காதது, உங்க பாக்கியம்!
சினிமாவிலும் நாடகத்திலும் வேஷம் போட்டுப்போட்டு.... இப்படிக் கிழவர் வேஷம் பழக்கமாகிருச்சு போல!!
ஒன் புக் ஒன்டர்ன்னு சொல்லிக்கிட்டு இருப்பவர் இப்ப டு புக் ஒன்டரா ஆகி இருக்கார். புள்ளிகள், கோடுகள், கோலங்கள்! நானும்  புத்தகத்தை வாங்கி வச்சுருந்து, அதைத் தூக்கிக்கிட்டுப் போயிருந்தேன்.... கையெழுத்து வாங்கிக்க:-)புத்தகம் வாங்குன கையோடு ஃபோன் செஞ்சு 'வரட்டா'ன்னு கேட்டதுக்கு,  'நான் இப்போ பெண்களூரில் இருக்கேன்.  அடுத்த வாரம் சென்னைக்கு வந்துருவேன். ஆனால்.... என்னப் பார்க்காம நீ ஊருக்குப் போயிடக்கூடாது'ன்னு ஒரு மிரட்டல் வேற :-)

விசுவாசம் என்ற மணிபாரதியின் குறும்படம் ஒன்றைத் தேடி எடுத்து நமக்காகப் போட்டுட்டு, அடுக்களைக்குப் போனார்.  அடுத்த பத்து நிமிசத்தில் சுடச்சுட அருமையான காஃபியுடன்,  கேஸரியும், மொறுமொறுன்னு வடாமும்!  சமையலில் மன்னனாக்கும்!  உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லப்போறேன் :-)
அந்தக் குறும்படத்தில் கூட இவர் சமையல்காரர்தான்!  எஜமான விசுவாசம்  சொல்லி மாளாது....  உடலைச் சாய்ச்சுக் காலைத்தாங்கி மகனோடு  கிராமத்துப் பாதையில் நடந்துபோகும்போது ஐயோன்னு இருந்துச்சு எனக்கு..........

இந்தக் குறும்படம், போட்டியில் முதலிடம் வந்து பதினைஞ்சாயிரம் ரூபாய் ரொக்கப்  பரிசைத் தட்டிக்கிட்டுப் போயிருக்கு என்பது  கூடுதல் தகவல்! அந்தக் குறுந்தகட்டைத் தேடி எடுக்க சட்னு தரையில் காலை மடிச்சுப்போட்டு அதே ஆஸனத்தில் (பத்மாஸனமோ?  இல்லை.....  இது ஸ்வஸ்திக் ஆஸனம் !!!)உக்காருவதைப் பாருங்க!   அதே மாதிரிதான் தரையில் இருந்து எழுந்துருக்கறதும்..... !!!

 நாந்தான் பக்கவாட்டில் உருண்டு புரண்டு,  ராமனை எல்லாம் துணைக்குக் கூப்பிட்டபடி எழுந்துருப்பேன் :-)

இன்றைக்கு இவ்ளோ மழையில் நனைஞ்சும்  எனக்கு ஒரு தோஷமும் பிடிக்கலை!  என்ன தவம், எந்த ஜென்மத்துலே செஞ்சேனோ.............
மாடிப்படிகள் இறங்கி ஏறக் கொஞ்சம் கஷ்டமோன்னு எனக்கொரு தோணல்.... ஹேய்.... அதெல்லாம் ஒன்னுமில்லையாக்கும்......... கேட்டோ!  
 நான்  ஆசைப் பட்டுக்  கேட்டதும் சட்னு ஊஞ்சலில் தாவி உக்கார்ந்து ஒரு போஸ்.....  அச்சனு கொள்ளாம்!  இதொக்க ஜூஜுபி...... யா :-)
எனக்கு  ஒரு அன்பளிப்பும் கிடைச்சது.......  ஈராக்.....
எல்லாம் அன்பே அன்புன்னு இருக்கும்போது........

கொஞ்சம் ஓரவஞ்சனை காட்டுனதுதான் எனக்குப் பிடிக்கலை. மகள் நான் குத்துக்கல்லு போல முன்னாடி நிக்கிறேன்..... மருமகனிடம் அப்படிப் பாசம் இழையோடிக்கிட்டு இருக்கு!!  இத்தைப் பார்றா..............

பேச உக்கார்ந்தோம்............. போச்சு....   நேரம் ஓடியே போச்சு!

சுவாரஸியமான சம்பவங்களின் சுரங்கம் ! பேச்சு வாக்கில் பல சமாச்சாரங்கள் வந்து விழுந்துக்கிட்டே இருக்கே!  பலதும் ஆஃப் த ரெக்கார்ட் என்பதால் நான் மனப்பெட்டகத்தில் போட்டுப் பூட்டி வச்சேன்.


மனசில்லா மனசோடு அங்கிருந்து கிளம்பி, வர்ற வழியில் ............. இன்னொரு இன்ப அதிர்ச்சி !!!!

தொடரும்............... :-)



18 comments:

said...

என்னால் கூட கையை ஊன்றாமல் உட்காரவோ எழவோ முடிவதில்லை. என்னைவிட வயதான என் மாமா மார்கள் அதைச் சர்வசாதாரணமாகச் செய்யும்போது பொறாமையாக இருக்கும்.

said...

பொது நிகழ்ச்சிகளில் அவர் மிகுந்த ஆர்வமுடன் கலந்துகொள்வதை சென்ற ஆண்டு நேரில் பார்த்தேன். தில்லி நாட்களில் பலமுறை சந்தித்ததுண்டு. (ஆனந்தம் கிருஷ்ணமுர்த்தி அவர்களுடன்). நலமோடு வாழ்க! - இராய செல்லப்பா (இப்போது நியுஜெர்சியில் இருந்து)

said...

தங்களின் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

இனிய சந்திப்பு.

said...

நன்றி

said...

இவரை முதலில் பார்த்தது பாபா படத்தில் என்று நினைவு. பல படங்களில் அதற்குப் பிறகு பார்த்துவிட்டோம். நலமோடு இருப்பது குறித்து மகிழ்ச்சி. அவருடைய குறும்படம் பரிசு பெற்றதுக்கும் வாழ்த்துகள்.

ஆண்கள் சமையல் தெரிந்து கொண்டால் பெண்களுக்குத்தான் திண்டாட்டம். :)

said...

இனியதோர் சந்திப்பு....

தொடர்கிறேன்.

said...

இவரை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் பெயர் நினைவுக்கு வரவில்லை. வீடு திரைப்படமா

said...

வாங்க ஸ்ரீராம்.

என்றைக்கு டைனிங் டேபிள் வாங்கினோமோ அன்றைக்கே உடம்பின் ஃப்ளெக்ஸிபிலிட்டி போயிருச்சு :-(

சங்கராபரணம் படத்துலே சங்கரசாஸ்த்திரி பொண்ணு கையில் பூக்கள் இருக்கும் தட்டோடு நின்னுக்கிட்டு இருக்கறவங்க, சட்னு அப்படியே தரையில் உக்காரும் ஸீன் என்னால் மறக்க முடியாதவைகளில் ஒன்னு!

said...

வாங்க இராய செல்லப்பா.

என்ன ஒரு அற்புதமான மனிதர், இல்லையோ!!!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நலமோடு இருக்கட்டும்!

வருகைக்கு நன்றி.

said...

வாங்க மாதேவி.

நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றீஸ்!

said...

வாங்க ஜிரா.

நெசமாவா திண்டாட்டம்? அடடா.... அது எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சுக்க எனக்குச் சான்ஸ் கிடைக்கலையே......

நம்மவர் 'சமையல் கத்துக்கப்போறேன்'னு பலவருசங்களாச் சொல்லிக்கிட்டு இருக்கார்தான் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சந்திப்புகளே பெரும்பாலும் இனிமைதான் :-)

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இவர் மஹாகவி பாரதியின் தகப்பனார்! பாரதி படத்தில் பார்த்த நினைவு இருக்கோ:-)

பாரதி மணி!

said...

மஹா மனிதர். மனதில் பதிந்துவிட்டவர்.

said...

அருமை..