Monday, February 20, 2017

பிஸ்னுவின் பஸந்தி..... ( நேபாள் பயணப்பதிவு 12)

நாம் பயணத்திட்டம் வகுக்கும்போது, நம்மவர் பல இடங்களில் தேடித்தேடித் தகவல்கள் சேர்த்துக்கிட்டு இருந்தார். எனக்கும் 'ஹோம் ஒர்க் ' செஞ்சுக்கிட்டுப் போறது பிடிக்கும். டீச்சர் பாருங்க.... நோட்ஸ் ஆஃப் லெஸன் எழுதிப் பழக்கம் இருக்கே:-)   'இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்' ன்னு செந்தில் சொன்னாலும் கூட  அந்த வெல்த்துக்கும் ஒரு அளவு இருக்குல்லே. கூடுதல் இன்ஃபர்மேஷன்  கடைசியில் நம்மை குழப்பத்தில் கொண்டு விட்டுருது பாருங்க....

 No குதிரை,  என்னால் முடியாதுன்னு நம்மவரிடம் சொன்னப்ப, மோட்டர்பைக்கில் கூடப் போகலாம். பில்லியனில் உக்கார்ந்து போகணும். அது பரவாயில்லையான்னார். நோ ஒர்ரீஸ்னு சொல்லி இருந்தேன். ஆளுக்கொரு பைக்!

இப்ப இங்கே நேரில் வந்து நின்னுக்கிட்டு இருக்கோம். பைக் ரைடுக்கு வழியே இல்லை. கொஞ்சநாள்  பைக்கில் கொண்டு விட்டுக் காசு சம்பாதிக்கும் வழி கண்டுபிடிச்சுருக்காங்க சிலர். அப்ப குதிரையை  வச்சுப் பிழைக்கும் மக்களுடைய வாழ்வாதாரம் போச்சேன்னு குதிரைக்காரர்கள் போராட ஆரம்பிச்சதும், வாயில்லா ஜீவனைப் பட்டினி போட முடியுமான்னு யோசிச்ச  பஞ்சாயத்து  நிர்வாகமோ என்னவோ....   மோட்டர்சைக்கிளைத் தடை பண்ணிருச்சு.
'என்னம்மா சொல்றே?' ன்ன நம்மவரிடம், 'நான் நடந்தெ வர்றேன்னு' சொல்லி நடக்க ஆரம்பிச்சேன். சரியா பாதையெல்லாம் கிடையாது. மக்கள் நடந்து நடந்து உண்டான பாதை.  ஆரம்பத்துலேயே     மெள்ள மெள்ள ஒரு மேட்டில் ஏறணும்....
முக்திநாத்துக்கு நுழைவு வாசல் ஒன்னு கட்டிவிட்டுருக்காங்க. அதன்வழியாத்தான் புது ரோடு வரப்போகுது.

அங்கங்கே   இங்கே  நியூஸியில் நம்ம வீட்டுலெ இருக்கும் செடிகளைப் பார்க்கும்போது  ஒரு க்ளிக்.  இங்கேயும் தங்கும் விடுதிகள்  இருக்கு. பேசாம இங்கே ஒருநாள் தங்கிட்டுக்கூடப் போகலாம்!  அதுக்கு  கீழேயே அனுமதி வாங்கி இருக்கணும்.  மேலே போன ஆட்கள்  இருட்டுனபிறகு(ம்) வரலைன்னா  'மேலே'யே போயிட்டாங்களோன்னு   தேடணுமே ........
நம்ம நியூஸியில் கூட  'மலையேறிப்பார்க்க, காட்டுக்குள் போக 'ன்னு வரும் மக்கள் உள்ளே போகுமுன் அங்கே வச்சுருக்கும் விஸிட்டர்ஸ்  நோட்டில்  பெயர் மற்ற விவரங்கள், என்றைக்கு உள்ளே போறோம். எப்போ திரும்பி வர்றோம் என்று பதிவு செஞ்சிட்டுப் போகணும். திரும்பி வந்தவுடன், நாம் ஏற்கெனவே எழுதிட்டுப்போன இடத்தில் 'வந்தாச்சு. திரும்பி வந்தாச்சு. வந்துட்டேன்'னு   சொல்லி,  வந்த நேரம், கையெழுத்து எல்லாம் பதிஞ்சுட்டுப் போகணும். தப்பித்தவறி எழுத மறந்துட்டால் அவ்ளோதான்.....    கான்ஸர்வெஷன் டிபார்ட்மென்ட் ஆட்கள் நம்மைத் தேட ஆரம்பிச்சுருவாங்க. இதுலே ஏகப்பட்ட தன்னார்வலர்கள் கூட்டமும் சேர்ந்தே தேடும்!  

அங்கங்கே சாளகிராம் விற்கும் கடைகள். சும்மாத் தெருவில் ஒரு பலகை போட்டு அதில் பரத்தி வச்சுருக்காங்க. கோலிகுண்டு சைஸ் முதல் கொஞ்சம் பெரிய கைப்பந்து சைஸ் வரை!  விலை அதுக்கேத்தாப்போல். எல்லாம் வர்றப்ப விசாரிக்கலாம்னு  லேசா உயர்ந்துபோகும் வழியில் ஏறிக்கிட்டு இருக்கோம். போலீஸ் செக் போஸ்ட் ஒன்னு. க்ளிக்:-)
கொஞ்சம் பெரிய (!)கிராமங்கள் போல சில இடங்களில் ரெண்டுபக்கமும் வீடுகள், சாலையும் அகலம்தான். மண்ணும் கல்லுமான சாலை.  அங்கே வசிக்கும்  மக்கள்  பைக்கில் போய் வந்துக்கிட்டு இருக்காங்க.

ஒல்லியான துர்கா விடுவிடுன்னு நடந்து போறார். அப்பப்ப ஞாபகம் வருது நாமும் கூடப் போறோம் என்பது:-) சட்னு நாம் போய்ச் சேரும்வரை காத்திருந்து கூடவே மெள்ள நடக்கறார். ஒரு அஞ்சாறு நிமிட்லே பழைய விடுவிடு நடை வந்துருது :-) நம்மவரும்  ஒரு நிதானத்துலே  துர்கா பின்னாடி போனாலும், அப்பப்ப நான் எந்த கதியில் இருக்கேன்னு பார்த்துக்கிட்டே அடி எடுத்து வைக்கிறார்.
ஒரு நாப்பது நிமிசமா நடக்கறேன்.... நம்ம ஆஸ்த்மா தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சது. அப்பப்ப இன்ஹேலரில் ஒரு இழுப்பு இழுத்துக்கறேன். இதைக் கவனிச்ச கோபாலும் துர்காவும் நான் நிக்கும் இடத்துக்குத் திரும்பி வந்தாங்க. 'இதுக்குத்தான் சொன்னேன்...பேசாம குதிரையில் வந்துருக்கலாமுல்லே'ன்னு நம்மவர் கடிஞ்சுக்கறார். அப்பப் பார்த்து எங்கிருந்தோ வந்தமாதிரி ஒரு குதிரை இறக்கத்தில் வருது.
குதிரைக்காரரை நிறுத்தி விசாரிச்ச துர்கா, 'பேசாம இதுலே ஏறிவாங்க'ன்னு சொல்றார். பரவாயில்லாம இருக்கு  குதிரை!  வெள்ளைக்குதிரை! கல்கியோ?

கொஞ்சம் தயங்குனதும், அதெல்லாம் பயமில்லை. பத்திரமாப் போயிடலாமுன்னு  குதிரைக்காரரும், கோபாலும் வற்புறுத்தவே  சரின்னு தலை ஆட்டினேன். பேச முடியாது. அதான் இழுக்குதுல்லே....  ஒரு சின்ன மேட்டுக்குப் பக்கம் குதிரையை நிறுத்தி அதில் ஏறிக்க  உதவி செஞ்சாங்க நம்மவரும் துர்காவும்.  முதல்முறை குதிரை சவாரி. என்னடா எனக்கு வந்த சோதனை? கையில் இருந்த கேமெரா, இடம் மாறி கோபாலின் கைக்குப் போயிருச்சு :-(
தடியா ஒரு மெத்தை போல இருக்கும் ஸீட்! அதுலே நடுவிலே ஒரு  மரக்கட்டைக் கைப்பிடி. கெட்டியாப் பிடிச்சுக்கணுமாம்.  பாதங்களை அதுக்கான  மிதி வளையத்துக்குள்  வச்சுக்கணும். எந்தப் பக்கமும் உடம்பைச் சரிக்காமல் நேரா நடுவா உக்காரணும். குதிரை கிளம்பிருச்சு.  கோபாலுக்கு டாடா காமிக்கக்கூட அவகாசமில்லை :-)


கோவிலுக்கான தோரண வாசலில் நுழையறோம். வெல்கம் டு த முக்திநாத் டெம்பிள்னு  வரவேற்பு. கூடவே இன்னொரு பெயரும் போட்டுருக்கு.

அந்தக் காலத்துலே ஒரு தமிழ்ப் படத்துலே வைஜயந்திமாலா பாடுன பாட்டு.... 'அகிலபாரத பெண்கள் திலகமாய் அவனியில் வாழ்வேன் நானே....' மாதிரி டொக்டொக்குன்னு போறேனா? ....  ஊஹூம்... :-) குதிரையின் கடிவாளத்தைப் பிடிச்சுக்கிட்டு பக்கத்துலேயே நடந்து வர்றார் குதிரைக்காரர்.  கொஞ்சம் மேடான பகுதி வரும்போதெல்லாம் நாம் தலையைக் குனிஞ்சுக்கிட்டுத் தரையைப் பார்க்கணுமாம்.  இல்லேன்னா தலை சுத்துமாம்.

  தரை எங்கே? குதிரை முதுகுதான் கண்ணுக்குத் தெரியுது.  காட்சிகளை வேடிக்கை பார்க்க முடியலை  கண்களால். அதுக்காக வாயைச் சும்மா வச்சுருக்கலாமா?

குதிரைக்காரரிடம் பேச்சுக் கொடுக்கறேன். பெயர் பிஸ்னு.
ஹைய்யோடா...... விஷ்ணு!  நாம் சென்னை மக்கள்னு  தெரிஞ்சுக்கிட்டதும் அவருக்கும் ரொம்பவே உற்சாகமாப் போயிருச்சு. ரெண்டு வருசம் சென்னையில் வேலை செஞ்சுருக்காராம். நல்ல சனம், நல்ல சாப்பாடுன்னு  புகழ்ந்து பேசுனார்.  குனிஞ்ச தலை நிமிராமல் பேச்சு நடக்குது.  கல்யாணத்துலே கூட தலை குனியாத என்னை...இப்படி தலை குனிய வச்சுட்டாரே  பிஸ்னு :-)
நம்ம குதிரைக்குப் பெயர் பஸந்தி!  சூப்பரூ.....
பக்கவாட்டில் படிகள் மேலேறிப்போகுது. முதலில் படிகளூடே குதிரை போகுமோன்னு திகிலா இருந்தது உண்மை.  சைடுலே இருக்கும்   சின்ன, குறுகிய பாதையில் தான் குதிரை கொஞ்சம் கஷ்டப்பட்டு காலை  மேலே எடுத்து வைக்குது. கரடும் முரடுமா கற்கள். அதுமேலேதான் நடக்கணும். ஸ்லிப் ஆனால் போச்சு.  பாவம்..... பஸந்தி..


மன்னிச்சுக்கோ பஸந்தி......   குண்டா இருக்கேன்... மன்னிச்சுக்கோ...

பிஸ்னுவிடமும் 'குண்டா இருக்கேன், மன்னிச்சுக்கோங்க'ன்னதுக்கு சத்தம் போட்டுச் சிரிச்சவர்.... 'நீங்க குண்டே  இல்லை. யார் சொன்னது?  உங்க மாதிரி டபுள் சைஸ் ஆட்களையெல்லாம் பஸந்தி சுமந்துருக்கு'ன்னார்!  அப்பாடா.... ஒரு மன ஆறுதல்தான்.  எப்படியாவது    கொஞ்சம் இளைக்கணும்.  பேலியோவுக்கு மாறியே ஆகணுமுன்னு மூளையில் ஒரு முடிச்சைப் போட்டேன்!
நம்ம பிஸ்னு நல்லாவே ஹிந்தி பேசறார்.  நாங்க ஜாலியாப் பேசிக்கிட்டே போனோமா... சட்னு ஒரு இடத்துலே  இதோ கோவில் வந்துருச்சுன்னார். தலை நிமிர்ந்து பார்த்தால்.....  கோவில் வாசல் கேட்டில் இருக்கோம்.   காலை இந்தப் பக்கம் போட்டு,  கழுத்தாண்டைக்  கையை அண்டைக்கொடுத்து  என் தோளைப் பிடிச்சுக்கிட்டு அப்படியே மெள்ள  இறங்கிடலாமுன்னு சொன்னதும் அப்படியே ஆச்சு.



(என்ன பஸந்தி.... இப்படிப்பண்ணிட்டே.... உன்னை நம்பித்தானே உன்னிடம் ஒப்படைச்சேன்.... நைஸா அப்படியே தள்ளி விட்டுருன்னு......    கோபாலின் மைண்ட் வாய்ஸ்......  )

இன்னும் இவுங்க வந்து சேரலை.  மெள்ள வரட்டும். இந்த பெஞ்சில் உக்கார்ந்துக்குங்கன்னு சொல்லிட்டு,  அங்கே ஒரு  இடத்தில் இருந்த பாத்திரத்தை எடுத்து, பக்கத்தில் இருந்தகுழாயில் தண்ணீர் பிடிச்சு பஸந்திக்குக் கொடுத்தார். அது தாகத்தோடு  இருக்கு போல. சட்னு குடிக்க ஆரம்பிச்சது.  சுத்திவர மலை. இந்தாண்டை பள்ளமாப்போகுது பாதாளம். கையில் கேமெரா இல்லையேன்னு நொந்துக்கிட்டு நின்னேன். ஜாக்கெட் பாக்கெட்டில் போட்டு வச்சுருந்துருக்கலாம்.... பதட்டத்திலே  தோணலை  :-(


தொடரும்........  :-)

PINகுறிப்பு:  நம்மவர் நமக்காக அங்கங்கே க்ளிக்கிட்டு வந்த படங்களை இங்கே போட்டுருக்கேன்:-)

21 comments:

said...

நாங்க நடந்தே போனோம். நல்ல அனுபவங்கள்!

said...

புறப்பட்ட இடத்திலிருந்து கோவில் வாசலுக்கு எவ்வளவு தூரம்னு எழுதலயே? ஒரு 20 நிமிடம் குதிரையில் போயிருப்பீங்களா? ஏற்கனவே 40 நிமிடம் நடந்தாச்சு. சாளக்ராம்ம் போன்றவைகளை போகும்போதே வழியில் வாங்கியிருக்கலாமே. வரும்போது பார்த்துக்கலாம்னு நினைச்சா, காலநிலை சரியில்லாமல் கடை காணாமல்போயிருந்தால்.

இன்னும் ஒரு வாரம் காத்திருக்கணும் பெருமாள் தரிசனத்துக்கு.

said...

//அந்தக் காலத்துலே ஒரு தமிழ்ப் படத்துலே வைஜயந்திமாலா பாடுன பாட்டு.... 'அகிலபாரத பெண்கள் திலகமாய் அவனியில் வாழ்வேன் நானே....' மாதிரி //

எப்போப்பாத்தாலும் என்ன சினிமா வேண்டிகெடக்கு - ங்கற லைன் இங்கே மிஸ்ஸிங் டீச்சர்.

// கல்யாணத்துலே கூட தலை குனியாத என்னை...இப்படி தலை குனிய வச்சுட்டாரே பிஸ்னு//
ஹிஹிஹி

// என்ன பஸந்தி.... இப்படிப்பண்ணிட்டே.... உன்னை நம்பித்தானே உன்னிடம் ஒப்படைச்சேன்.... நைஸா அப்படியே தள்ளி விட்டுருன்னு...... கோபாலின் மைண்ட் வாய்ஸ்......//

திரும்ப வர்றப்போ பாத்துக்கலாம் ன்னு பஸந்தி நெனச்சிருக்குமோ ?

said...

வாங்க கீதா.

நடந்தேவா? நீங்கதான் காத்மாண்டுவில் இருந்து ஹெலிக்காப்டரில் போனீங்களே.... ஹெலிபேட் கோவிலுக்குப் பக்கத்தில்தானே இருக்கு? அப்புறம் எப்படி? வாசல் கேட்டில் இருந்து சந்நிதிவரை நடந்தீங்களா? :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ரொம்ப தூரமில்லை. ஒரு மூணு கிமீ இருக்குமோ என்னவோ.... ஆனால் எல்லாமே மேலே ஏறிப்போகும் ஏத்தம் என்பதால் பத்தடி நடப்பதே சிரமமா இருந்தது.

நமக்கே நடக்கத் தகராறு.... இதில் கற்களையும் வாங்கி அதையும் சுமந்துக்கிட்டே போகணுமா? பாவமில்லையோ பஸந்தி :-)

said...

வாங்க விஸ்வநாத்.

ஆஹா.... பாய்ன்டை எடுத்துக் கொடுத்ததுக்கு டேங்கீஸ் :-)


அப்படியெல்லாம் பஸந்திக்குச் சான்ஸ் கொடுத்துருவோமா என்ன? இறக்கம் பிரச்சனையே இல்லையே எனக்கு :-)

said...

விவரங்கள் எழுதி வைத்துவிட்டுப் போவது நல்ல யோசனை. அதைவிட நல்லது, முக்கியமானது திரும்பி வந்துட்டேன்னு எழுதறது! வாட்சாப்ப்புல இப்பவும் பல வருஷங்களுக்கு முன்னால தொலைஞ்சுபோனவர்கள் பற்றிய செய்தியெல்லாம் புதுசு போலவே வரும்! ஜாலியான குதிரைச் சவாரி போல! எனக்கும் அதே வைஜயந்திமாலா பாடல்தான் நினைவுக்கு வந்தது. கூடவே நீலமலைத்திருடன் பாடல் (சத்தியமே...) பஸந்தி ஷோலேயில் ஹேமாமாலினி பெயர்!

said...

இந்த மாதிரி மலைப்பகுதிகள்ள ஆஸ்துமா இருக்குறவங்க கொஞ்சம் பாத்துதான் இருந்துக்கனும். நல்லவேள குதிர வந்தது. நீங்க கும்பிடும் விஷ்ணுதான் பிஸ்னு உருவத்துல வசந்தத்தை பசந்தியாக் கொண்டு வந்திருக்காரு.

சாளக்கிராமம்னு நம்ம மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் சொன்னாலும் அறிவியல் அதை ஃபாசில்னு சொல்லுது. எப்பவோ வாழ்ந்து இறந்து போய் உருவான ஃபாசில்கள் அவை. இமயமலைல நிறைய கிடைக்கக் காரணம் என்னவா இருக்கும்.....

said...

பேலியோ உள்ள குதிக்க இன்னுமா யோஜனை? டீச்சர்?

said...

நாங்கள் போன சமயம் பைக் மட்டும் தான். குதிரை கிடையாது.
நாங்கள் நடந்து தான் போனோம் . நிறைய பேர் எங்களுடன் நடந்து வந்தார்கள்.
ஐந்து வருடங்களுக்கு முன் இவ்வளவு கட்டிடங்கள் இல்லை . புதிதாக கட்டிடங்கள் வந்து இருக்கிறது.

முன்பே குதிரை வசதியை பயன்படுத்தி இருக்கலாம் நீங்கள். (கஷ்டபட்டு இருக்க வேண்டாம்)

said...

//ஹெலிபேட் கோவிலுக்குப் பக்கத்தில்தானே இருக்கு? அப்புறம் எப்படி? வாசல் கேட்டில் இருந்து சந்நிதிவரை நடந்தீங்களா? :-)//

grrrrrrrrrrrrrrrrrrநீங்க ஏறின படிகளுக்குக் கொஞ்சம் கீழே தான் நாங்க இறங்கிய ஹெலிபேட். அங்கிருந்து நாங்கள் இருபது பேர் நீங்கள் ஏறிய அதே படிகளில் ஏறித் தான் மேலே போனோம். :)) இப்போக் கோயிலுக்கு அருகே ஹெலிபேட் இருக்கலாம். நாங்க போயிட்டு வந்து பத்து வருஷத்துக்கும் மேல் ஆச்சு!

said...

கீதா சாம்பசிவம் மேடம்... துளசி டீச்சர் 3 கி.மீ தூரம்னு சொல்லியிருக்காங்க. 2008ல நான் பொகாராவிலிருந்து ஹெலிகாப்டர்லதான் போனேன். ஹெலிபேடிலிருந்து 100 படி இருக்கும் கோவில் வளாக நுழைவாசல் (படத்தில் போட்டுள்ளது) வருவதற்கு. அதையே கொஞ்சம் கஷ்டம்னு சொன்னதுனால நான் ட்ரெக் போவதுபோன்ற உடையில் சென்றேன்.

அடுத்த தடவை வாய்ப்பிருந்தால் ஜொம்சம்லேருந்து நடைல போகணும்னு நினைக்கிறேன் (கண்டகில நீராடமுடியும், கோவில்ல, வளாகத்துல 2 மணி நேரமாவது செலவிட முடியும் என்பதால்).

said...


அருமையான இடம்...


கல்யாணத்துலே கூட தலை குனியாத என்னை...இப்படி தலை குனிய வச்சுட்டாரே பிஸ்னு....செம்ம..

said...

வாங்க ஸ்ரீராம்.

அட ராமா.... பஸந்தி, ஷோலே படத்தில் ஹேமமாலினியின் குதிரையில்லையா!!!!

நீலமலைத்திருடன்..... பாட்டு.... ஆண்குரல் :-) நீங்க போகும்போது அதைப் பாடிக்கிட்டுப் போகணும்:-)

said...

வாங்க ஜிரா.

சாளக்ராமம் உண்மையில் fossilதான். நமக்குத்தான் தூணிலும் துரும்பிலும் இருக்கார் சாமி என்பதால் அந்தக் கல்லிலும் இருக்கார்!!!

இமயமலை ஒரு காலத்தில் கடலுக்குள் இருந்தது என்பதற்கு இவைகள்தான் சாட்சி.

கொஞ்சம் மிருதுவான கல்வகை.

சாளக்ராம் வளருதுன்னும் சொல்றாங்க..... புள்ளையார் பால்குடித்ததைப்போல :-)

said...

வாங்க குமார்.

அதெல்லாம் குதிச்சாச்சு :-) ஆனால் பயணத்திலும், வீட்டில்விருந்தினர் வருகையாலும் அப்பப்ப ச்சீட்டிங் செய்ய வேண்டியதாகப் போயிருது :-(

said...

வாங்க கோமதி அரசு.

ஆஹா.... குதிரை போய் பைக் வந்தது. இப்ப பைக் போய் குதிரை வந்துருக்கு! வாழ்க்கை ஒரு வட்டம் :-)

பாவம் ஒரு ஜீவன். நம்ம சுமை அதுக்கு பாரமுன்னு நினைச்சேன். ஆனால்.... பெருமாள் இப்படிப் பண்ணிட்டாரே.........

said...

கீதா.

அங்கே ஒரே ஒரு ஹெலிபேட்தான் கண்ணில் பட்டது. அது அந்த ஜ்வாலாமுகி போகும் வழியில் இருக்குப்பா.

நான் வாசக்கேட்டில் இருந்து படிகளில் ஏறினேன்:-)

said...

நெல்லைத் தமிழன்.

ஜொம்ஸொம்மிலிருந்து நடையா? அது கிட்டத்தட்ட 25 கிமீ தூரம்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றீஸ் :-)

said...

உங்கள் மூலமாக நானும் பயணிக்கிறேன். குதிரை சவாரி கொஞ்சம் கஷ்டம் தான்.